வாகனங்கள் பலவிதம் - பகுதி 10 (நிறைவு)
மேகலா : என்ன கிருஷ்ணா….? ஹெலிகாப்டரில் பறந்திருக்கிறேனா என்றா கேட்டாய்….? கிண்டல் பண்ணுகிறாயா….? நான் என்ன மந்திரியா…., மகாராணியா…..? விமானத்தில் ticket எடுத்து பறப்பது போல ஹெலிகாப்டரில் எல்லாம் பறக்க முடியாது என்று உனக்குத் தெரியாதா…. முதலமைச்சர், பிரதம மந்திரி…., முக்கியமான delegates மட்டும் தானே ஹெலிகாப்டரில் பறக்க முடியும். வெள்ள காலங்களில் சேதமடைந்ததை பார்வையிடுவதற்காகவும், பேரிடர் சமயங்களில், ஆபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காகவும், ஹெலிகாப்டரில் பயணம் செய்வார்கள் கிருஷ்ணா. நானெல்லாம் எப்படி இதில் பயணம் செய்ய முடியும்?
கிருஷ்ணர் : சரி…! மேகலா, உன்னிடம் ஒரு கேள்வி. ‘ஹை-ஜாக்’ என்றால் என்ன….?
மேகலா : ஐயோ….. கிருஷ்ணா….. சும்மா, ஜாலியா பேசிக்கிட்டு இருக்கும் போது, பெரிய பெரிய வார்த்தையெல்லாம் ஏன் யோசிக்கிற….?
கிருஷ்ணர் : ஏண்ணா…., எனக்குத் தெரியாதே…..
மேகலா : சும்மா….. இந்த ‘உதார்’ வுடுற வேலையெல்லாம் பண்ணாத…. உனக்குத் தெரியலண்ணா, வேறு யாருக்குத் தெரியும்….? இருந்தாலும் சொல்றேன்…. உன் காதை கிட்ட கொண்டு வா….. உன் தலைப்பாகையைக் கொஞ்சம் விலக்கேன். நல்லா…. காது ரெண்டையும் மூடிக்கிட்டு இருந்தா, நான் எப்படிச் சொல்றதாம்….
கிருஷ்ணர் : ஏன்…. சும்மா சத்தமாகத்தான் சொல்லேன்….
மேகலா : ஐயோ…. கிருஷ்ணா…. இதெல்லாம் ரகசியமாகச் சொல்ல வேண்டியது. ‘ஹை-ஜாக்’ என்றால், ஆகாய விமானத்தைக் கடத்துவது…
கிருஷ்ணர் : ஹேங்….! ஆகாயத்தில் பறக்கும் விமானத்தை எப்படிக் கடத்துவார்கள்…?
மேகலா : ம்….. வலை போட்டுப் பிடிப்பாங்க….. என்ன கிருஷ்ணா…. ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி கேட்கிறாய்….. பயணிகளோடு பயணியாக பயணிக்கும் ஒருவன் எழுந்துதான் துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவான்…..
கிருஷ்ணர் : அதான்…., விமான நிலையத்தில், பெட்டியை scan பண்ணிப் பார்க்கிறார்கள்; உடம்பைத் தடவி, detector மூலமாக சோதனை செய்கிறார்களே….! பின் எப்படி துப்பாக்கியைக் கொண்டு செல்ல முடியும்….?
மேகலா : அதிலும், இப்போ, கத்தரிக்கோல், ‘blade’ – லாம் கூட கொண்டு செல்ல முடியாது கிருஷ்ணா…. அத்தனை checking….
கிருஷ்ணர் : ம்….. அப்புறம்…. எப்படி கடத்துதல் நடக்கிறது….?
மேகலா : அது…., தீவிரவாதிகளின் சாமர்த்தியம் கிருஷ்ணா. எங்கு loophole கிடைக்கும் என்று தெரியாது. ஆனால், இப்போ கொஞ்ச காலமாக தீவிரவாதிகள் விமானத்தைக் கடத்துவது என்பது கிடையாது கிருஷ்ணா…..
கிருஷ்ணர் : O.K. நாம கொஞ்சம் தரையிறங்குவோமா? ஆமா…. நீ பஸ்ஸுலயெல்லாம் travel பண்ணியதில்லையா மேகலா….?
மேகலா : கிருஷ்ணா…. நீ எப்பத்துல இருந்து என்னோட friend….?
கிருஷ்ணர் : அது ரொம்ப வருஷமா தொடருது….. நான் கேட்ட கேள்வி என்ன…., நீ சொல்லும் பதில் என்ன….?
மேகலா : அதான் சொல்ல வரேன். Sheethal அப்பா….., மால்தீவ்ஸுல இருந்து இங்கு வந்து 3 வருஷம் தான ஆகுது… அதற்கு முந்தி, Bangalore-க்கு எப்படிப் போனோம்….? இப்பவாவது sleeper bus ஓடுது. ஆரம்ப காலத்தில் Parveen Travels-ல் push-back seated bus-ல் உட்கார்ந்துதானே போனோம்….?!
கிருஷ்ணர் : ஆமால்ல…. நீ மதுரைக்கு bus-ல் சென்றிருக்கிறாயா….?
மேகலா : இதென்ன கேள்வி கிருஷ்ணா…. Car வாங்கும் முன்பு bus-ல் தான் எல்லா இடத்திற்கும் சென்றிருக்கிறேன். மறந்துட்டயா….?
கிருஷ்ணர் : Oh! வாகனங்களைப் பற்றி நீ தெரிந்ததெல்லாம் சொல்லிட்டயா…?
மேகலா : இன்னும், விண்வெளிபயணம் செய்யும் rocket, இந்த நூற்றாண்டின் அதிவேக வாகனம் கிருஷ்ணா…. இதைப் பற்றி நீ தெரிந்திருக்கும் அளவுக்கு எனக்குத் தெரிய வாய்ப்பில்லை கிருஷ்ணா….
கிருஷ்ணர் : ஏன்…, சந்திரனில் கால் பதித்தவர்கள், விண்வெளிப்பயணம் செய்த வீரர்கள், இவர்களை உனக்குத் தெரியாதா…? இவர்களுக்கென்று பிரத்யேக உடை, சுவாசிக்க Oxygen, பூமிக்குத் திரும்பும் வரைக்கும் இவர்களுக்குப் போதுமான வலுவைத் தரக்கூடிய உணவு வகைகள் என்றெல்லாம் இதற்காக பிரத்யேகமாக வரையறுக்கப்பட்டதுதான் என்பது தெரியுமல்லவா? அப்புறம் என்ன….. இன்னும் வரும் காலங்களில், வாகனங்கள் புதிதாய் உருவெடுக்குமா, இல்லை, பழைய வடிவம் மறுபடியும் சீரமைத்து வடிவமைக்கப்படுமா என்றெல்லாம் காலம் தான் கூற வேண்டும். இருந்தாலும், அந்த அந்தக் காலங்களில் வாழ்ந்த மனிதர்கள், தங்களுக்கு சௌகரியமான வாகனங்களிலேயே தான் பயணித்தார்கள் என்பது மட்டும் உண்மை….
மேகலா : மனிதர்கள், காலத்தோடும், நேரத்தோடும் போட்டியிட்ட போது, வாகனத்தின் வேகத்தைக் கூட்டினார்கள். அவர்களே, இப்போது காற்றோடு போட்டி போடுகிறார்களா என்று சந்தேகிக்குமளவுக்கு பறக்கிறார்கள் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : சரி…. நிறையத் தகவல்களைத் தெரிந்து கொண்டேன்…. வர்ட்டா…..
மேகலா : தகவல்களைத் தந்தவன் நீ…. Bye கிருஷ்ணா….
(முற்றும்)
Comments
Post a Comment