கொரோனா படுத்தும் பாடு - பாகம் 3 (நிறைவு)

மேகலா : நான் ‘மெஹெந்தி’ function-க்கு சிவகாசி போனதைப் பற்றி ஏன் ஷீத்தலிடம் சொல்லவில்லை என்று கேட்டிருந்தாயல்லவா? கிருஷ்ணா…, எனக்கு கொரோனா தொற்று பரவாமல் அவள் தான் பாதுகாக்கிறாள் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : அதான் சொல்லாமல் கிளம்பினாயா….

மேகலா : ஹரியிடம் inform பண்ணி விட்டு, ‘ஷீத்தலிடம் சொல்லாத’ என்றும் சொன்னேன் கிருஷ்ணா.

கிருஷ்ணர் : பயப்படுறவங்க, function-க்குப் போக மாட்டாங்க…. போறவங்க, யார் தடுத்தாலும் போகத்தான் செய்வாங்க…. இதுல எதுக்கு பயப்படுற மாதிரி நடிப்பு….!

மேகலா : இது நடிப்பு இல்ல கிருஷ்ணா…

கிருஷ்ணர் : உன் பொண்ணு, உன் மேல காட்டுற அக்கறைக்கு, நீ கொடுக்கும் மரியாதை என்பாய்….. Function-க்குப் போவது, வெங்கடேஸ்வரியின் பாசத்திற்குக் காட்டும் மரியாதை…., அப்புறம், உனக்காக, ‘போகலாம்’…. ‘பாதுகாப்பு’, ’போக வேண்டாம்’ என்பதெல்லாம் கிடையாதாக்கும்….. நான் நினைக்கிறேன், ‘யார் நம்மைக் கூப்பிடுவார்…., நாமும் ‘கச்சேரி’க்குப் போகலாம்’ என்று நீ ஏங்கிப் போயிருந்தாய் என்பது மட்டும் தான் நிஜம்…. நடிப்புல, நீ ‘செவாலியே award’ வாங்கிருவ மேகலா…… சரி, மெஹந்தி போட்டாயா….? நல்லா…. செவந்துச்சா….?

மேகலா : நான் முதலில், மெஹந்தி போடணும்னு நினைக்கவேயில்லை கிருஷ்ணா….. மெஹந்தி function, குமரேசன் வீட்டில் தான் நடக்கப் போகிறது என்று நினைத்தேன் கிருஷ்ணா. நீ என்னயவே, ‘செவாலியே’ range நடிப்பு என்கிறாய்; ராணிமா, என்னிடம் நடிச்ச over-acting இருக்கே…! Function-க்கு வரப் போவதில்லை என்று சொல்லி விட்டு, நான் கிளம்பியதும், எனக்கு phone பண்ணி, ‘என்னைக் கூப்பிட வாங்க’ என்றாள். ‘நான் தான் கூப்பிட்டேன்ல, அப்ப வர மாட்டேன்னு சொன்ன’ என்றதற்கு, ‘மேகலா அண்ணி கூப்பிட்டாங்க, தட்ட முடியல’ என்றாள். இதற்கு என்ன பட்டம் குடுக்கப் போற கிருஷ்ணா…?

நான் அவளைக் கூப்பிடச் சென்றேன். அவள் தான் மெஹந்தி function, ஹோட்டலில் நடக்குது என்று சொல்லி, என்னை அங்கு கூட்டிச் சென்றாள். அங்கு reception hall-ல், tables போடப்பட்டு, ஒரு table-க்கு 5 chairs போடப்பட்டிருந்தது. ஒரு table-க்கு ஒரு மெஹந்தி போடும் பெண் என்ற கணக்கில் அமர்ந்திருந்தார்கள். மணமகளுக்கு, ஒரு பெண் மெஹந்தி போட்டுக் கொண்டிருந்தாள். நாங்கள் அங்கு ஒரு table-ஐச் சுற்றிப் போட்டிருந்த chair-ல் அமர்ந்தோம். எங்க table-க்கும் மெஹந்தி போடும் பெண் வந்தாள். என் கையை நீட்டச் சொன்னாள். ’எல்லோரும் மெஹந்தி போடுங்க’ என்று சொல்லவும், கொஞ்சம் ஜாலியாக இருந்ததா…., உடனே கையை நீட்டினேன். என் பெயரைக் கேட்டு, குறித்துக் கொண்டாள்…

கிருஷ்ணர் : எதற்கு….?

மேகலா : மெஹந்தி போட வந்தவள்….., தொழில்முறை மெஹந்தி போடுபவள்….. நானோ, அவளுக்கு எண்ணிக்கை…. எத்தனை பேருக்கு மெஹந்தி போட்டிருக்கிறாள் என்று கணக்கு காட்டினால் தானே, அதற்கான பணத்தைப் பெற முடியும்…. அதனால் தான்….

கிருஷ்ணர் : ஓஹோ….!

மேகலா : நான் எனக்கு simple ஆகத்தான் போடச் சொன்னேன் கிருஷ்ணா….. ஆனால், அவள் எனக்கு சுமாராகப் போட்டு விட்டாள் கிருஷ்ணா…!

கிருஷ்ணர் : நீ பெரிய மனுஷி மாதிரி ‘பந்தாவா’ இருக்கணும்னு நெனச்சிருக்க…. அவள்…. செமய உன்ன deal பண்ணிட்டா….

மேகலா : கிண்டல் பண்ணாத கிருஷ்ணா… அது ஹோட்டல் தான… அதனால், சாப்பிடுவதற்கு எங்களிடம் order கேட்டார்கள். எங்க table-ல் fried rice-ம், curd rice-ம் order பண்ணினோம். இதற்கிடையில், நாங்கள் நடத்திய ‘சமையல் போட்டி’க்கான பரிசுப் பொருட்களை பங்கு பெற்றோருக்குக் கொடுத்துக் கொண்டே வந்தேன் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : பாத்தயா… நீ இந்த சமையல் போட்டி நடத்துனயே…. அதில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசு ஏதாவது கொடுத்தயா…. கொடுக்காமல் ‘டகால்டி’ பண்ணிட்டயா…. என்று கேட்கணும் என்று நினைத்தேன்; கொடுத்து விட்டாயா…..

மேகலா : என்ன கிருஷ்ணா….! என்னென்னவோ பேசுறயே…. ‘டகால்டி’யா….., அப்படீன்னா…. ‘கர்ம பலன்’, ‘கர்ம வினை’, ‘பிரம்மம்’, ‘சந்நியாசம்’, ‘தியாகம்’ என்றெல்லாம் வார்த்தைகளைப் பிரயோகித்து, கர்ம பலன் மீதான பற்றுக்களை விட்டு விடச் சொல்கிற ‘கால நாயகனா’ நீ….

கிருஷ்ணர் : என்னம்மா செய்யுறது…. நீ கல்யாண வீட்டுக்குப் போனதையும், camera-வை ரசிச்சதையும் பேசினா…. நான் ‘டகால்டி’ தமிழில்தான் பேசணும்….

மேகலா : சரி, அப்போ வேற என்ன பேசுவது கிருஷ்ணா…?

கிருஷ்ணர் : நீ சொல்லுவதை சுருக்கமாகச் சொல்லி முடி. உனக்கு ஒரு topic தருகிறேன். நான் கேள்வி கேட்க கேட்க, பதில் சொல்லி வா…

மேகலா : கிருஷ்ணா…, புது topic, ready பண்ணிட்டயா….?

கிருஷ்ணர் : உனக்கு சிந்திக்க வைக்கிற சில கேள்விகளைக் கேட்டு, நீ என்ன பதில் சொல்லப் போகிறாய் என்று பார்க்கப் போகிறேன். ‘டகால்டி’ என்ற வார்த்தைக்கு உனக்கு அர்த்தம் தெரியாதா…. நீ உன் கதையைச் சொல்லி முடி….

மேகலா : நான் எல்லோருக்கும் பரிசுகளைக் கொடுத்து விட்டேன். எதற்கும் இருக்கட்டும் என்று மேலும் 2 water bottle வாங்கியிருந்தது நல்லதாகப் போச்சு கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஏன்….? போட்டியில் கல்ந்துக்காத உன் தங்கச்சி தனக்கும் வேண்டும் என்று கேட்டாளா….? கொடுக்க வேண்டியதாகப் போச்சா….?

மேகலா : அவள் மட்டும் கேட்டால் பரவாயில்லை… பிரியாவிடமும் சொல்லி, அவள் தனக்கும் வேண்டும் என்று சொல்லி, ’தரையில் உருண்டு உருண்டு அழுது கேட்கட்டுமா?’ என்று கேட்கிறாள்…..

கிருஷ்ணர் : அவளுக்குத்தான் 2 பரிசு கிடைத்திருக்குமே…

மேகலா : அவை, அவள் பிள்ளைகளுக்குத்தானே…

கிருஷ்ணர் : Oh! இது நால்லாயிருக்கே….

மேகலா : அவள் பிள்ளைகளை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி, போட்டியில் கலந்து கொள்ளச் சொன்னாளாம்; அதற்காக வேண்டுமாம்….

கிருஷ்ணர் : ஆக…. மெஹந்தி function-ஐ நன்றாக enjoy பண்ணியிருக்கிறாய்… சரி, இதை இப்படியே நிறுத்தி வைப்போமா….?

மேகலா : Okay, கிருஷ்ணா….

(முற்றும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1