நீங்க..., நல்லவரா..., கெட்டவரா...? - பகுதி 3
கிருஷ்ணர் : மேகலா, ‘நல்லவர்கள்’ யார் என்று வேறு ஒரு கோணத்தில் பார்க்கலாமா….?
மேகலா : கிருஷ்ணா! ‘உலகத்திலேயே இவர் ஒருவர் தான் நல்லவர்’ என்று கண்ணை மூடிக் கொண்டே சொல்லலாம் என்று சொல்லக்கூடிய ஒருவரை உதாரணமாய் எடுத்துச் சொல்லலாமா, கிருஷ்ணா?
கிருஷ்ணர் : நீ யாரைச் சொல்லுகிறாய்….? இரு…, இரு… உன் முகம் காரணம் இல்லாமலேயே bright ஆகுதே…. யாரைப் பற்றிச் சொல்லப் போகிறாய் என்று தெரிஞ்சி போச்…., இருந்தாலும் நீயே சொல்லு….
மேகலா : ஆம் கிருஷ்ணா…! ஒரு விளக்கத்தை யார் சொன்னால், இந்த உலகத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை நம்புவார்களோ…., அவர் தான்….. யார் பெயரைக் கேட்டால், கேட்டவர்க்கு தன்னம்பிக்கையும், திருப்தியும் வருமோ….., அவர் தான்…..
கிருஷ்ணர் : The great ’அப்துல் கலாம்’ தானே….. மதங்களைத் தாண்டி, மனங்களை வென்றவர். ‘எளிமையில் மிகப் பெரிய பணக்காரன்’. உலகமே எழுந்து நின்று salute பண்ணும் ‘மேதை’…
மேகலா : என்ன கிருஷ்ணா…. என் முகம் bright’ ஆகுதே என்று கிண்டல் பண்ணி விட்டு, நீ bright ஆகி விட்டாய்! ஆம்! அப்துல் கலாமின் நடவடிக்கைகளின் மூலமாக, ‘நல்லவர்’ என்பவர் இப்படியும் இருப்பார் என்று பார்க்கலாம் கிருஷ்ணா. நீ சொன்னாயே கிருஷ்ணா, ‘எளிமையில் மிகப் பெரிய பணக்காரன்’ என்று. ரொம்ப உண்மை கிருஷ்ணா. இந்தியாவின் முதல் குடிமகனாய் இருந்தும், அந்தப் பதவியை சொந்த லாபத்திற்காக உபயோகித்தது கிடையாது. ஜனாதிபதி பதவி முடிவுற்ற நிலையில், 2 suit-case-ல் தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு, Anna University வளாகத்தில் தனக்கான இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொண்டு, மாணவர்களுக்கு விஞ்ஞானத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை ஏற்றுக் கொண்டார் கிருஷ்ணா. அவருக்காக பல நாடுகளிலும் கொடுத்த பரிசுப் பொருட்களை, தன்னுடைய உடமையாக வைத்துக் கொள்ளாமல், தன்னுடைய பரிசுப் பொருட்கள், இந்நாட்டு மக்களுடையது என்று நினைத்தாரோ என்னவோ; எல்லோரும் பார்க்கும் படிக்கு museum-த்தில் வைத்து விட்டார். நான் நினைக்கிறேன், அவர் முற்றும் துறந்த ‘ஞானி’யோ; எந்த வேலையாக இருந்தாலும், எந்தப் பொருள் மீதும் பற்று இல்லாமல், இந்த நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு ஒருவரால் செய்ய முடியுமா கிருஷ்ணா….! இறை பக்தி மிகுந்தவர். மதங்களைக் காரணம் சொல்லி மனிதனை இனம் பார்க்கத் தெரியாதவர். எளிமையானவ்ர்; ஆனாலும் வலிமையை ஆதரித்தவர். தீவிரவாதத்தை வலிமையுடன் ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். ‘ஏவுகணை பலம்’ நம் நாட்டிற்கு எவ்வளவு முக்கியம் என்று எடுத்துரைத்தவர். அதனால் தானே, இந்த உலகமே அவரை ‘ஏவுகணைகளின் தந்தை’ என்று பிரியமுடன் அழைத்தது. இத்தனை உயரத்தில் இருந்தாலும், ஒரு சின்ன மாணவன் கேட்கும் அறிவுப்பூர்வமான கேள்விக்கும், அதற்குரிய பதிலை, அவனுக்கும் புரியும் வகையில் எடுத்துச் சொன்னவர். விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கேள்வி மட்டுமல்ல கிருஷ்ணா, விவசாயம், நிலத்தடி நீர்தேக்கம், நிலநடுக்கம் என்று பிரச்னையாய்ப் பார்க்கப்படும் கேள்விகளுக்குக் கூட அறிவுப்பூர்வமாய், நமக்குத் திருப்தியளிக்கும் பதிலைக் கூறுவது, அவருடைய மதிநுட்பத்தைக் காட்டுகிறது கிருஷ்ணா…. இவர் ‘நல்லவர்’ தான் என்பதற்கு யாருடைய ‘வாக்குமூலத்தையும்’ கேட்க வேண்டியதில்லை கிருஷ்ணா…..
கிருஷ்ணர் : ஆமாம்…., ஆமாம்… இந்தியாவின் மிக உயர்ந்த பதவி, விஞ்ஞானியான அவருக்கு, தானாகத் தேடி வந்தது. அரசியல் சித்து விளையாட்டின் விளைவாக, அவர் ஜனாதிபதி பதவியில் அமர்த்தப்பட்டாலும், தன்னுடைய career-ல் அரசியலை, கலாம் அவர்கள் நுழைக்கவேயில்லை. எந்த அரசியல் கட்சியுடனும் அவர் சார்ந்து நிற்கவும் இல்லை. எளிமையான விஞ்ஞானியாக தன் பயணத்தை ஆரம்பித்தார். அர்ப்பணிப்பு உணர்வோடு உழைக்கும் உழைப்பினால், உலக மக்களை, இவர் மாதிரி வாழ்வது, மனிதனுக்கு மேன்மையைத் தரும் என்று உணர்த்தினாரே…, இவரல்லவா, ‘நல்லவர்’களுக்கு ‘role model’…! என்ன மேகலா…. ‘சிலை’ மாதிரி, வச்ச கண்ணு வாங்காம பார்க்கிறாய்….
மேகலா : சிலுக்குது கிருஷ்ணா…. இப்படிக் கூட ஒரு மனுஷனா…. என்று, Dr. கலாமைப் பற்றி நான் பெருமையாக நினைப்பதுண்டு. எம் பெருமான், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ‘நீ’ அவரைப் பற்றி சிலாகித்துப் பேசும் போது, மெய் சிலுத்துப் போச்சி கிருஷ்ணா….
கிருஷ்ணர் : சரி…. அடுத்து யாரைப் பற்றிப் பேசப் போகிறாய்….?
Comments
Post a Comment