நீங்க..., நல்லவரா..., கெட்டவரா...? - பகுதி 6 (நிறைவு)

 மேகலா : கிருஷ்ணா…! எனக்கு ஒரே குழப்பமா இருக்கு கிருஷ்ணா….

கிருஷ்ணர் : என்ன குழப்பம்…? நல்லவங்களைத் தேடுவது உனக்கு அவ்வளவு கஷ்டமாப் போச்சா….?

மேகலா : பிரபலங்களில், நல்லவங்களைத் தேடும் போது, குறைகளை ஒதுக்கி விட்டு, நிறைகளை மட்டும் எடை போடலாம்… குறைகளை விட, நிறைகளை அதிகம் பார்த்து, நல்லவர்களை அடையாளம் காணலாம். ஆனால், எங்களை மாதிரி சாதாரண மக்களிடையே நல்லவர்களைத் தேடுவதில் தான் குழப்பமே வருகிறது கிருஷ்ணா. நல்லவர்களை எப்படி அடையாளம் பார்ப்பது கிருஷ்ணா…?

கிருஷ்ணர் : பொறுமையாய் இரு…. பொறுமையான கண்களுடன் பார் மேகலா….. சில சமயங்களில், நல்லவர்களாக இருப்பவர்கள், பல சமயங்களில் நம் மனதுக்குப் பிடிக்காத மாதிரி நடந்து கொள்வார்கள். பொது இடங்களில், நம் மனதுக்குப் பிடித்த மாதிரி நடந்து கொள்பவர்கள், personal-ஆக நல்ல attitude இல்லாமல் இருக்கலாம். இப்படி ஒவ்வொரு விஷயமாக யோசித்துப் பார்க்கும் பொழுது, கொஞ்சம் கொஞ்சமாக நல்லவர்களை அடையாளம் காணலாம் மேகலா. எப்படியிருந்தாலும், குறைகளோ, நிறைகளோ; நம் மனதுக்குப் பிடிக்குது, பிடிக்கவில்லை என்ற கண்ணாடியைக் கழட்டி வைத்து விட்டுப் பார்க்கணும் மேகலா….

மேகலா : Correct boss….! என்னுடைய விவாதம், உன்னுடைய ஆலோசனையின்படியே நடக்கும் கிருஷ்ணா! பொதுவாக, நல்லவர்கள் என்பதற்கு, basic-க்கலாக சில நல்ல குணங்கள் இருக்க வேண்டும். முதலில், நல்லவர்கள் கடவுள் பக்தியாக இருப்பார்கள். இல்லையா கிருஷ்ணா…?

கிருஷ்ணர் : மேலே சொல்லு….. அடுத்தடுத்து சொன்னாத்தானே ஒரு வடிவம் கிடைக்கும்….

மேகலா : தனக்கென்று ஒரு idea இருந்தாலும், பெரியவங்க சொன்னா, ‘என்ன சொல்றாங்க, ஏது சொல்றாங்க’ என்று உன்னிப்பாய் கவனிப்பார்கள். அவர்கள் சொல்வது, நமக்கு உதவும் என்றால், அதன்படி நடக்கவும் தயங்க மாட்டார்கள்.

கிருஷ்ணர் : பெரியவர்களிடம் மரியாதையாக இருப்பவர்கள். சரி, வேற…..

மேகலா : நிறைய படிச்சிருப்பாங்க…. ‘டாக்டரேட்’ பட்டம் கூட வாங்கியிருப்பார்கள். பார்த்தால் ரொம்ப எளிமையாக இருப்பார்கள். ஒரு கூட்டத்தில் இருக்கும் போது கூட, ரொம்ப அலப்பரையைக் கூட்டாமல், ‘இவ்வளவு ஏன்…!’, மண்டைக் கர்வமே இல்லாமல் இருப்பாங்க…. சொல்லப் போனால், நமக்கு ஏதாவது தெரியவில்லை என்று கேட்டால் கூட, அவங்களுக்கு அதன் விளக்கம் தெரிந்திருந்தால், அதையும் மிக அழகாக விளக்கிச் சொல்லி, நமக்குப் புரிய வைப்பார்கள். முக்கியமாக, தனக்குத்தான் இந்த விளக்கம் தெரியும் என்று அவர்கள் பெருமையாக நினைக்கக் கூட மாட்டார்கள்.

கிருஷ்ணர் : சரி, எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும், கர்வப்பட மாட்டார்கள்; அதாவது, அகம்பாவம் இல்லாதவர்கள்…

மேகலா : சிலர் இருக்காங்க கிருஷ்ணா…, அவங்க எங்கெல்லாம் போறாங்களோ, அங்கே கிடைக்கும் நல்ல பொருட்களை வாங்கி வந்து, தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பார்கள். இவ்வளவு ஏன்…? நாம் ஒரு பொருளை வாங்கி வரச் சொல்லியிருந்து, மறந்தும் கூடப் போயிருப்போம். ஆனால், அவர்களோ……, ஒரு வருஷம் ஆனாலும் கூட, அதை ஞாபகம் வைத்திருந்து, அந்தப் பொருளைப் பார்த்த பொழுது, வாங்கி, கேட்டவர்களுக்கு கொடுத்து உதவுவார்கள். அப்படி வாங்கி வருவதில், கொஞ்சம் கூட தயக்கமேயிருக்காது. ‘உங்களுக்குப் பிடிக்கும் என்று யோசித்தேன்…., அதனால் வாங்கி வந்தேன்’ என்று ரொம்ப நாள் பழகியது போல பேசுவார்கள். இவர்களைப் பார்த்தவுடன் நமக்கு மனம் நிறையும். நாமும் பேசும் போது, சுலபமாக பேசக் கூடிய மனநிலை நமக்கும் வந்து விடும்…

கிருஷ்ணர் : ஓஹோ…. பழகுவதற்கு எளிமையானவர்…. அடுத்து…..

மேகலா : சிலர் இருக்காங்க கிருஷ்ணா! எப்ப நம்மைப் பார்த்தாலும், நாம் செய்த சின்ன உதவியோ, அல்லது நம்முடைய special திறமையோ, நாமே மறந்து போயிருப்பதைக் கூட நினைவுபடுத்தி, positive ஆகப் பேசும் போது, நமக்கே, நாம் இதற்காகத்தான் பிறந்தோம் என்று தோன்றும். இன்னும் நம்மை refine பண்ணிக்கத் தூண்டும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஆம் மேகலா! சிலர் பேசுவது, இன்னும் சிலரை உருவாக்கும் உளியாக மாறுகிறது.

மேகலா : அப்படிப் பேசுபவர்கள், எல்லோரிடமும் அப்படித்தானே பேசுவார்கள்…

கிருஷ்ணர் : Yes….! சொல்லும் திறனறிந்து பேசுபவர்கள்.

மேகலா : இன்னும் சிலர் இருக்காங்க கிருஷ்ணா. எந்த உதவி என்று நாம் கேட்டாலும், அந்த உதவி நமக்கு மிகவும் அவசியம் என்றறிந்தால், வீட்டில் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், அதை அப்படியே போட்டு விட்டு, நம்முடன் கிளம்பி விடுவார்கள். அதிலும், நமக்கு அவர்கள் வந்துதான், அந்த வேலையை, ‘மல்லுக்கட்டி நின்றாவது’ செஞ்சி கொடுக்கணும் என்ற நிலை இருந்தால், அவங்க ‘லெவலே’ வேற கிருஷ்ணா! ஏதோ, ‘தனக்குத்தான் அந்த வேலையைச் செய்யணும் போல’ என்கிற மாதிரி, அவ்வளவு முனைப்போட செஞ்சி, அந்த வேலையை 100% செய்து முடிச்சிட்டுத்தான் நம்மை அனுப்புவார்கள் கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : பிறருக்கு உதவும் நல்ல மனம் கொண்டவர்கள். அடுத்தது யார்…..?

மேகலா : கிருஷ்ணா…., உதவி செய்வதிலேயே இன்னும் ஒரு வகை சுவாரஸ்யமான மனிதர்கள் இருக்காங்க கிருஷ்ணா! யாருக்கு உடம்பு சரியில்லை என்றாலும், அடுத்தவர்கள் வருவதற்கு முன்னாடி, அவர்கள் சென்று, வேண்டிய உதவிகளை மனமுவந்து செய்வார்கள். மனதில் எத்தனை மனச்சலிப்பு இருந்தாலும், உடம்பு சரியில்லாதவர்களுக்கு தேவையான உதவியைச் செய்வதில் எந்தக் குறையும் வைக்க மாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால், டாக்டரிடம் ஒண்ணும் தெரியாத அப்பாவி மாதிரி நடித்து என்றாலும், பிரச்னை என்ன என்று துருவித் துருவிக் கேட்டு, அதற்கான நடவடிக்கைகளை துணிந்து எடுப்பார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால், நோயாளியால் அவர்களுக்கு பைசா பிரயோஜனம் இருக்காது. என்றாலும், treatment முடிந்த பின், டாக்டரிடம், ‘உங்களால்தான் டாக்டர், நல்லபடியாக முடிந்தது; ரொம்ப thanks டாக்டர்’ என்று ’வாலண்டியராக’ thanks சொல்லுவார்கள். இவர்கள் காட்டும் நன்றி உணர்வில், சம்பந்தப்பட்டவர்கள், டாக்டரைக் கடவுளைப் பார்ப்பது போலப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் என்றால் பார்த்துக்கோயேன்…!

கிருஷ்ணர் : Oh! பரவாயில்லையே மேகலா…. நான் எதிர்பார்த்ததை விட, ‘நல்லவங்க’ என்றதில் நிறைய variation இருக்கும் போலயே…. interesting….. சரி…, இன்னும் வேற route-ல யோசி மேகலா…. நாளை பார்க்கலாம்…..

(நிறைவு பெறுகிறது)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2