ஒரு selfie எடுக்கலாமா....? - பகுதி 1
கிருஷ்ணர் : என்னம்மா….. இந்தப் பக்கம் உன்னைக் காணவேயில்லையே…. எங்க போன….. நவராத்திரி கொலு முடிஞ்சி கூட, 2 நாள் ஆகி விட்டது. நீ ‘கொலு’ வச்சயா….. ரொம்ப tired-ஓ….?!
மேகலா : கிண்டல் பண்றயா கிருஷ்ணா…. நவராத்திரி கொலு என்று வைக்காவிட்டாலும், எங்க வீட்டில் இருக்கும் அம்மன்….
கிருஷ்ணர் : ’கோலாகலமாய்’ கொலு இருந்தார்கள் என்று தானே சொல்லப் போகிறாய். அதைத்தான் நானும் பார்த்தேனே…., அதற்காக அரட்டையைக் கூட மறந்துட்டயா….?
மேகலா : கிருஷ்ணா! கொஞ்சம் tired-ஆகத்தான் இருந்தது கிருஷ்ணா….. என்னால, புதுசா ஒரு subject-அ கூட யோசிக்க முடியல கிருஷ்ணா…!
கிருஷ்ணர் : புது….சா…வா….! நாம தான் நல்லவங்கள எப்படி அடையாளம் பார்ப்பது என்று பார்த்துக் கொண்டிருந்தோமே….
மேகலா : ஆமாம் கிருஷ்ணா! ‘நல்லவங்க’ subject-அ மட்டும் யோசிக்கும் போது, நம்மைக் கடந்து செல்லும் நிறைய சம்பவங்களை விட்டு விடுகிறோமோ என்று தோணுது கிருஷ்ணா… மேற்படி சமாச்சாரத்தை ஆராயும் போது, நம்மருகில் இருக்கும் நல்லவங்களைக் காட்டிலும், தேசத்திற்காகப் பாடுபடும் நல்லவங்களைப் பற்றியே யோசிக்கத் தோன்றுகிறது. இன்னும் சொல்லப் போனால், ‘கெட்டவர்கள்’ என்ற தலைப்பில் யோசிக்கும் போது, அது இன்னும் critical-ஆகப் போகும்.
கிருஷ்ணர் : என்ன செய்வது மேகலா! ராமாயண காலத்திலிருந்தே, ‘நல்லவங்க’, ‘கெட்டவங்க’ என்பவர்கள், அதற்கான அடையாளங்களோடதான் இருக்கிறார்கள். என்ன…, ஒவ்வொருவருக்கான சம்பவங்கள் வேற வேறயாக இருப்பதால், நாமும் அவர்களை, புதுசு புதுசாக அடையாளம் பார்க்கிறோம். சரி…., நீ கொஞ்சம் இந்த subject-லிருந்து விலகி வா…. casual-ஆக இரு…. நீ casual ஆக இருந்தால் தான், free-யாகப் பேசுவாய்… சரி…., நாம வேற ‘topic’ யோசிப்போம்…. ஏன் மேகலா, நீ மறுபடியும் ‘மகாபாரதம்’ கதை சொல்லுகிறாயா….?
மேகலா : நான் மகாபாரதம் கதையைத் திரும்பவும் சொல்கிறேன் என்றா நினைத்தாய் கிருஷ்ணா…. நான் வெறென்ன சொல்கிறேன் என்று சொல்லு பார்க்கலாம்….
கிருஷ்ணர் : மகாபாரதத்தினைப் பற்றிய ஒரு ‘review’ பார்க்கிறாய்…. நான் சொல்வது சரிதானா….?
மேகலா : Correct கிருஷ்ணா….. ஒவ்வொரு கதாபாத்திரமாக திரும்பவும் ஊடுருவிப் பார்க்கிறோம்…..
கிருஷ்ணர் : அதெல்லாம் ச்சும்மா…. பீஷ்மர், துரோணரைத் திரும்பவும் படிக்கும் போது, 2 நாளில் முடித்து விட்டு, கிருஷ்ணரைப் பற்றி 20 நாளாகப் படித்துக் கொண்டே இருக்கிறாயே…..
மேகலா : அவர்களெல்லாம் மகாபாரதத்தின் கதாபாத்திரங்கள் கிருஷ்ணா! ஆனால், கிருஷ்ணரோ, out of story-யாக ஒரு கதாபாத்திரம் என்ற ரீதியில் entry கொடுத்து, எல்லா கதாபாத்திரத்தையும் இயக்குகின்ற இயக்குநராக…., இன்னும் சொல்லப் போனால், இன்றைய காலம் வரை பொருந்தக் கூடிய வாழ்க்கைத் தத்துவங்களை எடுத்துக் கூறி, உலக இயக்கத்திற்கே உயிர் இயக்கமாக இருக்கிறார். ஸ்ரீ கிருஷ்ணரை எனக்கு ரொம்பப் பிடிக்கும் கிருஷ்ணா! அதிலும், ராஜசூய யாகம் நடத்த தருமபுத்திரர் உத்தேசித்ததிலிருந்து கிருஷ்ணரின் பங்களிப்பும், அவர் பாண்டவர்களை ஊக்குவிக்கும் விதமும், இடித்துரைக்கும் தைரியமும், அரவணைக்கும் கருணையும், தந்திரம் செய்துனாலும் வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்ற பரிதவிப்பும்…., ஐயோ…, அப்பா…, எனக்கு எத்தனை முறை வாசித்தாலும், எத்தனை முறை கதையாகச் சொல்வதென்றாலும், அலுப்பே வராது கிருஷ்ணா…!
கிருஷ்ணர் : தெரியுது….. யப்பா…. எத்தனை நாளாச்சு மேகலா, இப்படி வாய் ஓயாமல் பேசும் மேகலாவைப் பார்த்து…..! சரி…., நாம பேசுவதற்கு ஒரு topic எடுப்போமா? நீ என்ன, தினமும் உன் garden-ஐ camera-வோடு சுற்றிச் சுற்றி வருகிறாயே; என்ன விஷயம்….?
மேகலா : செடியில் பூப்பூத்திருக்கும். நான் தண்ணி ஊற்றியதும், பூவிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருக்கும். அதைப் பார்த்தவுடன், கை பரபரக்கும் கிருஷ்ணா…. என்ன தான் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றாலும், என் கண்கள் என்னவோ, பூக்களைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டேயிருக்கும். Camera-வை எடுத்து வந்து, photo எடுத்த பின்பு தான் பரபரப்பு அடங்கும் கிருஷ்ணா….. அன்று ஒரு நாள், வீட்டிற்கு முன்னால், மயில் ஒன்று வந்து நின்றதல்லவா…. மயிலைப் பார்த்தவுடன், மயில் பறந்து போயிரக் கூடாதே என்ற பயத்தோடயே, camera-வைத் தூக்க ஓடினேன். மயிலை screen shot எடுக்கவும், video எடுக்கவும், ஒரே பரபரப்பாயிருச்சி கிருஷ்ணா! மயில் என் வீட்டை cross பண்ணி, காட்டுக்குள் செல்லும் வரை என் கண்களும், camera-வும் ஓயவேயில்லை கிருஷ்ணா….. ஆமாம், ஏன் கேக்குற….?
கிருஷ்ணர் : Photography….. இதைப் பற்றித்தான் பேசப் போகிறோம். ‘Photography’, ‘camera’, ‘photo’….. இதுதான் ‘topic’.
மேகலா : Wow! கிருஷ்ணா! என்ன அருமையான தலைப்பு….
(தொடரும்)
Comments
Post a Comment