ஒரு selfie எடுக்கலாமா....? - பகுதி 2

கிருஷ்ணர் : உனக்கு அதில் (photography) கொஞ்சம் திறமை உண்டோ…..?

மேகலா : ஐயய்யோ…. அப்படியெல்லாம் இல்லை கிருஷ்ணா…. எனக்குப் பிடிக்கும் என்று சொன்னேன்….

கிருஷ்ணர் : சரி…., முதலில், ‘photos’-ஐப் பற்றிப் பேசலாம். உன்னைக் கவர்ந்த ‘photos’ ஏதாவது இருக்கா, மேகலா….?

மேகலா : இன்று technology விரிவடைந்த நிலையில், கண்ணெதிரே இருக்கும் காட்சியினை photo எடுக்கும் போது, சின்ன அசைவில், புல்லைக் கூட அற்புதமாய், அசையும் தோற்றத்திலேயே படமெடுக்கும் அற்புதமான கலைஞர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். சில ‘photos’ காட்சியை கண் முன்னே நடப்பது போல் கொண்டு வரும். சில ‘photos’ சில உணர்வுகளை நுணுக்கமாய் வெளிப்படுத்தும். சில ‘photos’ பல கதைகளை சொல்லாமல் சொல்லும். எனக்கு ‘black & white photos’ ரொம்பப் பிடிக்கும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Black & White photos-ஆ….! நீ, என்னமோ சொன்ன…. ’புது technology’, அசையும் புல்லைக் கூட அற்புதமாய்ப் படமெடுக்கும் என்றாயே…. பின்ன எப்படி….?

மேகலா : கிருஷ்ணா….. Photo-வோட clarity-க்காகச் சொல்லல கிருஷ்ணா….. Color photos வராத காலத்தில் எடுக்கப்பட்ட photos எல்லாம் நிறைய கதைகளைச் சொல்வதாக நான் நினைக்கிறேன் கிருஷ்ணா. நம்மைக் குழந்தைப் பருவத்துக்கு, அல்லது, அந்த photo எடுக்கப்பட்ட காலத்துக்கு நம்மை அழைத்துச் சென்று விடும் கிருஷ்ணா! அது மட்டுமல்லை, கிருஷ்ணா; அந்த phot தொடர்பான பல விஷயங்கள் நம் மனதில் தோன்றி, மகிழ்ச்சியால் நிறைத்து விடும் கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : Oh! நீ அப்படிச் சொல்கிறாயோ…. ஆமாம், இப்ப இருக்கிற ‘photo’ இது மாதிரி நினைவுகளை நம்மிடம் கொண்டு வராதா….?

மேகலா : கொண்டு வரும் கிருஷ்ணா….. Photo என்றாலே, சந்தோஷ தருணத்தை, நம் மனதில் தக்க வைத்துக் கொள்வதுதானே! இருந்தாலும், சிறு வயது நினைவுகளைக் கண்ணில் காட்டி, குழந்தையாக்கி, எந்த நிலையிலும் நம்மை மகிழ்ச்சியின் எல்லைக்கே கூட்டிச் செல்லும் ‘black & white photos’ என்பது, something special தானே, கிருஷ்ணா….!

கிருஷ்ணர் : வாஸ்தவம் தான் மேகலா! இருந்தாலும், நம்மை அசர வைக்கும் அழகு என்றால், அது ‘color photos’ தான்…. அதைப் பற்றி நீ ரசித்ததைத்தான் சொல்லேன்….

மேகலா : கிருஷ்ணா! உனக்குத் தெரியுமா…? என்னோட கல்யாணத்தின் போது, எடுத்த photo-வில், photographer இஷ்டத்துக்கு விளையாடி அவராக color கொடுத்திருக்கிறார் கிருஷ்ணா!

கிருஷ்ணர் : என்னது….. photographer, அவராக color கொடுத்திருக்கிறாரா…. அந்தக் காலத்தில் graphics-லாம் கிடையாதே….. ஏன், அப்ப color photo எடுக்கலியா மேகலா…?

மேகலா : இல்ல கிருஷ்ணா….. Black & White தான். அதனால் தான், நாங்கள் studio-வில் போய் எடுத்த photo-வை color போட்டு கொண்டு வந்தார். பார்த்தாலே அசிங்கமா இருக்கும் கிருஷ்ணா…!

கிருஷ்ணர் : அப்படியா…. அதை நான் பார்க்கலியே. சரி…. அந்தக் காலங்களில் studio-வில் போய் ‘photo’ எடுத்த சுவாரஸ்யமான சம்பவத்தை சொல்லேன், கேட்போம்…

மேகலா : கிருஷ்ணா! எங்க கல்யாணம் முடிந்து, மறுநாள், நாங்கள் Vasanth Studio-வுக்குப் போய் photo எடுத்தோம். அதற்கு யாரெல்லாம் studio-வுக்குப் போனோம் தெரியுமா…? எங்க மாமனார் தவிர, மொத்தக் குடும்பமும் studio-வுக்குப் போனோம்….!

கிருஷ்ணர் : Photo எடுக்க மொத்தக் குடும்பமுமா போனீங்க…. இது வேற level சுவாரஸ்யம் மேகலா. நீயும், உன் வீட்டுக்காரரும், photo studio-வில் photo எடுக்க உட்கார்ந்திருந்த போது, உன் குடும்பத்தார்கள் எங்கு நின்றார்கள்? என்ன செய்தார்கள்…?

மேகலா : அதையேன் கேக்குற கிருஷ்ணா…. Vasanth Studio இப்ப இருக்குற இடத்தில் கிடையாது கிருஷ்ணா…

கிருஷ்ணர் : அப்ப, வேற எங்க இருந்தது..?

மேகலா : வடக்கு ரத வீதியில், ‘சர்வோதயா’ கடைக்கு எதுத்தாப்ல, மாடியில் இருந்தது. மாடி ஏறுவதற்கு குறுகலான ஏணிப்படி. Studio என்று அழைக்கப்படும் room-ஓ, எட்டுக்கு எட்டு விஸ்தீரணமுள்ள room…. அதில் தான் போடப்பட்ட stool-ல் உட்கார்ந்து photo எடுக்கணும். ஒரு seat-ல், தலையணை எல்லாம் போட்டு உயரப்படுத்தியிருந்தார்கள்.

கிருஷ்ணர் : Oh! நீ கொஞ்சம் ‘short’ என்பதாலயா…?

மேகலா : இது மட்டுமல்ல கிருஷ்ணா! Photographer, ‘முகத்த இப்படித் திருப்புங்க…., இன்னும் கொஞ்சம்….’ என்று மாறி மாறி instruction வேற…! இதில் என்ன comedy தெரியுமா கிருஷ்ணா? Photographer, camera-வை ஒரு stand-ல் மாட்டி விட்டு, ஒரு கருப்பு போர்வைக்குள் தலையை நுழைத்து, lense வழியாக எங்களைப் பார்க்கிறார். நாம, கஷ்டப்பட்டு உட்கார்ந்து, ‘அசடு’ மாதிரி சிரித்து வழிஞ்சிக்கிட்டு இருப்போம். அந்தச் சமயத்துல, தலையை வெளியே எடுத்து, light-ஐ off பண்ணி, இன்னும் ஒரு திருத்தம் சொல்லுவார். நாம, நெளிஞ்சி, வளஞ்சி, சரி செய்து, மறுபடியும், camera-வை புன்னகைத்துப் பார்ப்போம். மறுபடியும் தலையை கருப்புப் போர்வைக்குள் நுழைத்து, ‘angle பார்ப்பாரா…., clarity பார்ப்பாரா’ தெரியல; ஒரு வழியாகத் தலையை வெளியே எடுத்து click பண்ணுவதற்குள் 3/4 மணி நேரம் ஓடி விடும். இப்படி எடுக்கும் photo, எல்லா வீடுகளிலும், எத்தனை உறுப்பினர் உண்டோ, அத்தனை photos இருக்கும் கிருஷ்ணா. இன்னும் நிறையப் பேர் வீடுகளில், இது மாதிரி ‘black & white photos’ இருக்கிறது கிருஷ்ணா! கழுத்து நிறைய நகையும், தலை நிறைய பூவும் சுமந்து கொண்டு, மெனக்கெட்டு studio சென்று ‘photo’ எடுப்பது ஒரு ‘சடங்காக’ இருந்த காலம் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ‘வாவ்’, ரொம்ப interesting ஆக இருக்கு மேகலா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2