ஒரு selfie எடுக்கலாமா....? - பகுதி 3

மேகலா : இப்ப பரவாயில்லை கிருஷ்ணா…. கல்யாணத்தில் எடுக்கும் ‘still photos’ – ஐயே, laminate பண்ணி வச்சிக்கிறாங்க… அதனால், photo-வில் ஒரு ‘உயிர்’ இருக்கிறது, கிருஷ்ணா…

கிருஷ்ணர் : நீ என்னவோ, அந்தக் காலத்து photos கதை சொல்லுது என்றாயே….

மேகலா : ஆமாம்…. அதான் கதை சொன்னேன்ல…. அந்தக் காலத்து photos, பொம்மை போல் நின்று, அன்று நடந்த நிகழ்வுகளை ‘கதையாய்’ சொல்லுது. இன்றைய photos, உயிர்ப்பாக இருந்து, கல்யாணத்தையே கண் முன் காட்டுது…

கிருஷ்ணர் : வாவ்! வாவ்! Very good! சரி, B & W photos உயிர்ப்புடன் இருக்கும் still photos கிடையவே கிடையாதா மேகலா… எல்லாமே பொம்மை போல நிக்க வச்சி எடுத்தது தானா…?

மேகலா : இல்ல கிருஷ்ணா…. கருப்பு வெள்ளை காலத்தில் கூட கல்யாணங்களில், photos எடுப்பதுண்டு கிருஷ்ணா…. அதிலும், பல photos, சந்தோஷத்தையும், நிறைவையும், உறவுகளையும், பந்தங்களையும் வெளிப்படுத்துவதாக இருக்கும் கிருஷ்ணா. என் கல்யாணத்தையே எடுத்துக்கோயேன். எங்க அப்பா, ‘still photo’ எடுக்கும் போது இருக்கும் தோற்றம், சாதாரணமாக இருக்கும் கிருஷ்ணா…. எங்க அப்போவோட friend-ஐ வரவேற்க, அவர் கழுத்தில் மாலை போடும் போது, எங்க அப்பா ஒரு ’வெடிச் சிரிப்பு’ சிரிப்பார். Photographer கண்களுக்கு, அந்த சிரிப்பு என்ன கதை சொல்லியதோ, உடனே அதை camera-வுக்குள் சிறை பிடித்து விட்டார் கிருஷ்ணா…. நீ அந்த photo-வை பார்த்திருக்கிறாயா கிருஷ்ணா…. இன்னும் அந்த photo-வைப் பார்த்தால், எங்க அப்பா, பக்கத்தில் நின்று சிரிப்பது போல இருக்கும் கிருஷ்ணா…. அத்தனை ‘உயிரோட்டம்’ கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஆமாம் மேகலா… சில அரிதான புகைப்படங்கள், பழைய நினைவுகளை மட்டுமல்லாமல், அந்தக் காலத்து வாழ்க்கை முறைகளைக் கூட நமக்கு evidence ஆகக் காட்டும். உதாரணத்திற்கு, 1950-களில், நம் சென்னை அல்லது மதுரை நகரத்தின் photo-வைப் பார்க்கும் பொழுது, சைக்கிளில் செல்வோரும், போக்குவரத்து நெரிசல் இல்லாத தெருக்களும், நெருக்கடியில்லாத கட்டிடங்களும், உழைக்கும் மக்களும், நம்மை ‘இப்படி ஒரு சொர்க்கம் திரும்ப வராதா’ என்று நினைக்கத் தோன்றும் மேகலா…. நீ சொன்ன மாதிரி பழைய photos என்பது, பழைய வரலாறினை நமக்கு எடுத்துச் சொல்லத்தான் செய்யும் மேகலா….. உன்னோட கல்யாண photo ஆல்பத்தையே பாரேன். உன் கல்யாணம் நடந்த மண்டபம், இப்போ எப்படி மாறியிருக்கு…! அன்றைய மனிதர்களின் hair style, make-up, dressing sense, bell-bottom pants — இதையெல்லாம் photo-வில் பார்க்கும் போது, எவ்வளவு change ஆகியிருக்கு என்று பார்க்கிறோம். இது மாறாத சாட்சியாக இருந்து, நமக்கு எத்தனை கதை சொல்லுது பார்த்தியா மேகலா….?

மேகலா : அது மட்டுமில்லை கிருஷ்ணா… இளமையான அப்பா…. அழகான அம்மா…. எங்க ஐயாப்பா…. பெரியக்கா…. சந்தோஷச் சிரிப்பில் சின்னையா, சித்தி, அக்கா, மச்சான்…. குஞ்சும் குளுமானுமாக அக்கா பிள்ளைகள் – இதையெல்லாம் பார்க்கும் போது, அந்தக் காலத்திற்கே போகத் தோணுகிறது….

கிருஷ்ணர் : இதுதான் ‘photos’ கொடுக்கும் ஒரு வரப் பிரசாதம்…. சரி, நான் ஒண்ணு கேட்கிறேன்…. உனக்குப் பிடித்த ‘photographer’ என்று special ஆக யாராவது உண்டா….? சொல்லேன்…

மேகலா : Special…. photographer – ஆ…… அப்படீன்னு பார்த்தால்….., கல்யாண வீட்ல photos எடுக்கும் எல்லா photographers-ம், ஒரு காட்சியைக் கூட விடாமல் எடுக்கும் அழகு இருக்கே…., அதுக்கே, ’Oscar Award’-ஏ கொடுக்கலாம் கிருஷ்ணா. கல்யாண மேடையில், சடங்குகளும், சம்பிரதாயங்களும், கல்யாணமும், கலகலப்பும் நடந்தேறும் வரையில், சளைக்காமல் photo எடுக்கிறார்களே…. அதற்கே ‘தனி award’ கொடுக்கணும் கிருஷ்ணா….. கல்யாண வீட்டில் சிரிக்கும் சிரிப்பு…., அசைவின் அதிர்வு…., மாலை மாற்றும் தருணம்…., குழந்தைகளின் அழுகை… என்று மனம் கவர்ந்த காட்சிகளை, பார்த்துப் பார்த்து photo பிடிக்கும் லாவகம்; இதற்கெல்லாம் ‘பத்மஸ்ரீ award’ – ஏ கொடுக்கலாம் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : அப்படீன்னா…., எல்லா photographers-ம் திறமைசாலி என்கிறாய்….

மேகலா : திறமைசாலிகள் தான் இந்தக் கலையில் ஈடுபடுவார்கள் என்கிறேன் கிருஷ்ணா…. சினிமா photo கலைஞர்கள், இன்னும் கொஞ்சம் better என்று நினைக்கிறேன் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : ஏன் அப்படிச் சொல்லுகிறாய்…?

மேகலா : அதிலும் ‘பாலு மகேந்திரா’ – இவர் ‘ஒளிப்பதிவாளர்’ கிருஷ்ணா…. இவர் படத்தில், ஊட்டியையும், மழையையும் காட்டாமல் இருக்கவே மாட்டார்….!

கிருஷ்ணர் : மழையில் என்ன விசேஷம்…?

மேகலா : அவர் படங்களில், மழை கூட பேசும் கிருஷ்ணா… வசனமேயில்லாமல், துளித் துளியாக ஒழுகி ஓடும் மழை நீர் கூட கவிதையாய்ப் பேசும் கிருஷ்ணா. அது எப்படி அவர் camera மட்டும் மழையைப் பேச வைக்கும் என்று தெரியாது கிருஷ்ணா…! Summer-ல படம் பார்த்தாக் கூட, ஊட்டியின் குளிர் நம்மையும் சிலிர்க்க வைக்கும் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : சரி…., visual-ஆ காண்பிப்பதனாலயோ என்னவோ….

மேகலா : இல்ல கிருஷ்ணா…. அவர் still photo எடுத்தால் கூட, காற்றில் விசிறிச் சிதறும் முடிக் கற்றையின், ஒற்றை முடியின் அசைவு கூட அழகாய் சிறகடித்து நிற்குமாறு தெரியும் கிருஷ்ணா. அதிலும், ஒளிச் சிதறலின் back-ground-ல் எடுக்கப்பட்ட படமென்றால், கேட்கவே வேண்டாம் கிருஷ்ணா. அத்தனை அழகாய்த் தெரியும் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : ஏன், இது மாதிரி வேற photographer எடுப்பதில்லையா..?

மேகலா : எடுக்கிறாங்க கிருஷ்ணா…. ஒரு படத்துல heroine, குளத்துல குளிப்பாங்க…, தலையை நனைத்து, அப்படியே சிலிர்த்து, கேசத்தை வாரிப் போடும் போது, தண்ணீர் சிதறி, நீர்த்திவலைகள், துளித் துளியாய் பறக்கும்; அத்தனை அழகாக இருக்கும்! இதெல்லாம் பாலு மகேந்திரா என்ற cameraman வரவுக்குப் பிறகு எடுத்ததாகத்தான் இருக்கும்….

கிருஷ்ணர் : Oh! அவருடைய camera அத்தனை கவிதை பேசுமா….!

மேகலா : ஆம்மாம் கிருஷ்ணா! அதற்கு முன்னாலெல்லாம், கலர் படம் ‘colorful”-ஆக இருக்கும்; Black & White சிறப்பாக இருக்கும். ஏதாவது ஒரு படத்தில், ஏதாவதொரு scene-ல், சிகரெட் புகை, மங்கிய வெளிச்சத்தில் இதமாய்ப் பரவுவதாகக் காட்டுவார்கள், ‘கட்டோடு குழலாட…, ஆட’ என்ற பாட்டில், கிராமீயம் மிளிர அழகாய் எடுத்திருப்பார்கள். சிலர், பறவைகள் ‘கொல்’லென்று பறப்பதை படம் பிடித்திருப்பார்கள். இதெல்லாம், இங்கொன்றும், அங்கொன்றுமாய் வரும் காட்சிகளாக இருக்கும். பாலு மகேந்திரா படம் என்றால், படத்துக்குப் படம், காட்சிக்குக் காட்சி, கதைக்குப் போட்டியாக camera-வும் கதை பேசும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : அப்போ…. உனக்குப் பிடித்த ‘photographer’….

மேகலா : ‘ஒளிப்பதிவாளர்’…..

கிருஷ்ணர் : வாவ்…! Yes…. ’ஒளி’யைப் பதிவு செய்யும் ‘ஒளிப்பதிவாளர்’ ‘பாலு மகேந்திரா’…, உனக்குப் பிடித்தவர்…, அப்படியா….!

மேகலா : Ye…. எஸ்’…. கிருஷ்ணா…..

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2