ஒரு selfie எடுக்கலாமா....? - பகுதி 4

மேகலா : Ye……’எஸ்’…… கிருஷ்ணா…. இன்னும் சிலர், கோவிலின் கோபுரத்தையும், கோவிலுக்குள் இருக்கும் சிற்பங்களையும் photo எடுத்திருப்பார்கள் கிருஷ்ணா. அதற்குப் பிறகு தான், கோவிலின் சரித்திரத்தைப் பற்றி அறிந்து கொள்ளவே நமக்குத் தோணும். சிற்பங்களைப் படமெடுத்திருப்பதைப் பார்க்கும் போது, அந்த சிற்பத்தின் தெளிவும், அழகும், அதைச் செதுக்கிய ஸ்தபதியின் வரலாறையே சொல்வதாக இருக்கும் கிருஷ்ணா…. ஆடை அலங்காரமும், நகைகளின் நுணுக்கமும் தெளிவாக படமெடுக்கப்பட்டிருக்கும். சிற்பக்கலையின் அருமை தெரியாதவங்க கூட, வியந்து பார்க்குமளவுக்கு, photographer தெளிவாய்ப் படமெடுத்திருப்பார் கிருஷ்ணா….. இன்னும் சிலர் இருக்காங்க கிருஷ்ணா, தான் எதிர்பார்க்கும் காட்சியைப் படமெடுக்க, விடிய விடியக் காத்திருந்து, குறிப்பிட்ட தருணம் வந்தவுடன், கண நேரம் கூடத் தாமதிக்காமல் photo எடுப்பார்கள். அதிலும், மொட்டு மலர்வது மாதிரியான காட்சியை, visual-ஆக எடுக்கணுமென்று நினைச்சா, camera-வை பூவின் அருகில், சரியான angle-ல் set பண்ணி காத்திருந்து, பூ மலர்வதை எடுப்பார்கள். இதில், photo-வில் காட்சியின் அழகை விட, cameraman-ன் காத்திருத்தல் ரொம்ப அழகா இருக்கும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : வாவ்! அதனால் தான் அவர்களை ‘புகைப்பட கலைஞர்கள்’ என்று சொல்கிறோம். ஏன் மேகலா, நீ சொல்லச் சொல்ல, photo, photography, camera என்ற இந்த விஷயங்களைப் பேசப் பேச, இன்னும் சுவாரஸ்யமான விஷயங்கள் நம் ஞாபகத்திற்கு வந்து கொண்டே இருக்கும் போலயே….

மேகலா : ஆம் கிருஷ்ணா…. உனக்கு ஒரு interesting-ஆன விஷயம் தெரியுமா…..? யாராவது ஒரு celebrity-யை சிலை வடிக்கணும் என்று வைத்துக் கொள்வோம். உதாரணத்திற்கு, ஜவஹர்லால் நேருவின் சிலையை வடிக்க, நேருஜி வந்து ‘மாடலிங்காக’ நிற்க மாட்டாரில்லையா… அன்றைய காலகட்டத்தில், சுதந்திர தினத்தன்று, நேருஜி புறாக்களைப் பறக்க விடுவார்…… அதை அழகாக படமெடுக்கும் photographer-ன் திறமையை என்னவென்று சொல்வது…! அவர் கைகளில், சிறகை விரித்துக் கொண்டு பறக்கும் நிலையில் புறா இருக்கும் ‘photo’ அந்தக் காலத்தில் ரொம்ப famous. அதைப் பார்த்து, சிற்ப வல்லுனர்கள்…., அந்த photo-வையே ‘model’ ஆக வைத்து சிலை வடித்திருக்கிறார்கள் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ’வாவ்’…. அந்த சிற்பத்தை நானும் பார்த்திருக்கிறேன். ‘சமாதானத்தின்’ அடையாளமாக புறாவையும், நேசத்தின் அடையாளமாக நேருவின் சிரிப்பையும் அதில் காணலாம். சில ‘photos’ இப்படி ஒரு அற்புதமான தருணத்தை ‘click’ பண்ணி விடுவதுண்டு…

மேகலா : இன்னும் ஒரு photo ரொம்ப famous கிருஷ்ணா. இந்த photo-வை உதாரணமாக வைத்து இன்னும் நிறைய பேர் ‘photos’ புதிதாக எடுக்கிறார்கள். எரியும் தீபம், காற்றில் அசையாதிருக்க கைகளால் அணை கொடுத்து, அந்த வெளிச்சத்தில் முகம் காட்டும் பெண் photo, எல்லா தீபாவளியன்றும் ஏதாவது ஒரு பத்திரிக்கையில் வந்து விடும். அந்த photo-வில் என்ன special என்றால், விளக்கின் ஒளி, பெண்ணின் முகத்தில் பட்டு, பெண்ணின் முகம் பிரகாசமாகத் தெரியும். அந்த photo இருளை விலக்கி, வெளிச்சம் தரும் தீப ஒளி என்று சொல்லாமல் சொல்லும் விளக்கமாக இருக்கும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : நிஜம் தான் மேகலா! நீ விரிச்சி விரிச்சி ஒரு விஷயத்தைச் சொல்லுவதை ஒரு photo, ஒரே ‘shot’-ல் சொல்லுகிறது பார்….

மேகலா : நான் ரொம்ப ‘வளவள’ன்னு பேசுகிறேன்னு சொல்றயா கிருஷ்ணா….

கிருஷ்ணர் : இல்லம்மா….. ‘பேசும் படம்’ என்று சொல்கிறார்களே…, அதச் சொன்னேன். ஒரு photo பல கதைகளைச் சொல்லுது என்று சொல்கிறோமே…., அது உண்மை தான். அன்பைச் சொல்வதற்கு, தாய்மையைப் பரிபூரணமாகக் காட்டுவதற்கு, குட்டிக் குழந்தையின் கரத்தைப் பிடித்திருக்கும் அம்மாவின் கரம், ‘பாதுகாப்பு’ என்ற ரீதியில் photo கதை சொல்லும்; அது கவிதையாகி விடும்!

மேகலா : இன்னும் ஒரு photo இருக்கு கிருஷ்ணா….. தூரத்தில் தெரியும் building….ஏன், நிலாவைக் கூட இரண்டு விரல்களுக்கிடையில் பிடிப்பது மாதிரி ‘photo’ எடுப்பது ஒரு சுவாரஸ்யமான view…. பெரிய building-ஐ கீழே இருந்தபடிக்கே அளப்பது, வானத்து நிலாவை பூமியில் இருந்தே எட்டிப் பிடிப்பது, வாயைப் பிளக்கும் முதலை வயிற்றில் கையை விடுவது போன்ற ‘funny photos’…..

கிருஷ்ணர் : முதலை வயிற்றில் கையை விடுவதா….?

மேகலா : இதுவும் ‘trick shot’ தான் கிருஷ்ணா! தூரத்தில் இருக்கும் முதலையை zoom பண்ணி, ‘இங்கிருந்த படிக்கே கையை வாய்க்குள் விடுவது போல’ photo எடுப்பது…..

கிருஷ்ணர் : ஒரு சின்ன கற்பனை இருந்தால் போதும்…., எந்தத் துறையிலும், ‘creative’ ஆக பண்ண முடியும், இல்லையா….?

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2