ஒரு selfie எடுக்கலாமா....? - பகுதி 5
மேகலா : அப்படிப்பட்ட ‘photos’ தானே trend ஆகுது கிருஷ்ணா! இன்னும் ஒரு விஷயம் தெரியுமா, கிருஷ்ணா? எங்களுடைய channel-ல் இன்று ஒரு recipe, upload பண்ணுகிறோம் என்றால், அந்த recipe-யைச் சாப்பிடத் தூண்டும் வகையில் photo எடுத்து upload பண்ணும் போது தான், அந்த still-ஐப் பார்த்து recipe பார்க்கும் views அதிகரிக்கும். இன்னும் சொல்லப் போனால், இந்த photos தான் எங்களுடைய one of the marketing tricks. சிலர், photos எடுப்பதில் அதிகம் மெனக்கெடுவார்கள் கிருஷ்ணா! சில சமயம், நம்முடைய பதார்த்தங்களை display பண்றதுக்கான plates-ஐ வாங்கும் செலவு, நாம் செய்யும் பலகாரத்தின் cost-ஐ விட அதிகமாயிருக்கும் கிருஷ்ணா…. அந்த அளவுக்கு மெனக்கெட்டு photo எடுக்கும் போது, ‘photo’-வைப் பார்த்தாலே, நாக்கில் எச்சில் ஊறும் கிருஷ்ணா!
கிருஷ்ணர் : சரி…., நீ எடுத்த ‘photos’-லயே உனக்குத் திருப்தியான photo எது என்று சொல் பார்க்கலாம்…..
மேகலா : சமீபத்தில் நான் எடுத்த ‘பால்கோவா’வின் photo, அதன் இனிப்பு, சுவை, வாசம் அனைத்தையும் சொல்லுவதாய் இருந்தது கிருஷ்ணா….
கிருஷ்ணர் : என்ன…. photo-வில் வாசம் கூட தெரிந்ததா….?
மேகலா : ஆம்மாம் கிருஷ்ணா! பால் பக்குவமாய்த் திரண்டதும், அதை bowl-ல் transfer பண்ணும் போது, வழிந்து விழும் அல்லவா; அழகாய் விழுந்த மடிப்போடு இருந்த பால்கோவாவின் பக்குவம், அப்படியே photo-வில் பதிவாகி, அதன் சுவையைக் கூட்டிக் காட்டியது. ஒரு விரலால் நெகிழ்த்தியெடுத்து நக்கிப் பார்த்த சுவை தெரிந்தது. சமீபத்தில் நான் எடுத்த recipe photos-களில், பால்கோவா photo நல்லாயிருந்தது கிருஷ்ணா…..
கிருஷ்ணர் : இப்ப எனக்கு ஒரு விஷயம் clear-ஆகப் புரியுது மேகலா….. Hotel-க்கு வெளியில், சங்கீதா ஹோட்டல், கதிரவன் ஹோட்டல் என்ற பெயர்ப் பலகையில், ‘இட்லி சாம்பார்’, ‘மசால் தோசை’ என்று வரிசையாக photo எடுத்து, அதிலும் ஆவி பறக்கும் படியாக photo எடுத்து வைத்திருப்பது ஏன் என்று தெரிகிறது. சுவை மட்டும் கிடையாதாம்; சூடாகவும் கிடைக்குமாம். Photo மூலமாக சொல்லுவதெல்லாம் ஒரு வியாபாரத் தந்திரம் தானே….. இந்த சமையல் சம்பந்தமான புத்தகங்களில், சமையல் குறிப்புகள் வரும் போது, அதற்கான photo வெளியிடுவதே அதனுடைய சுவைக்கான அறிவிப்புதான் என்று இப்போதான் தெளிவாகப் புரிகிறது….
மேகலா : நெய்யின் மினுமினுப்பில் சிவப்பாய், roast-ஆய், மசாலை உள்ளே வைத்து சுருட்டி வைத்த தோசையை, வாழை இலையில் அழகாய் display பண்ணி, அருகில் ஒரு கிண்ணத்தில் சாம்பாரும், இன்னொரு கிண்ணத்தில் தேங்காய் சட்னியுமாக வைத்து photo எடுத்து, நம்மை banner மாட்டி சாப்பிட வரவழைக்கும் தந்திரம், காலம் காலமாக உள்ளது தானே கிருஷ்ணா….
கிருஷ்ணர் : நீ சொல்லும் போதே, எனக்கும் ‘மசால் தோசை’ சாப்பிடணுமிண்ணு தோணுது மேகலா!
மேகலா : ஐயோ கிருஷ்ணா….! மசால் தோசையா… வா…, வா…, சாப்பிடப் போலாம் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : பக்கி….. வந்த வேலையைப் பார்ப்போம். இந்த ‘topic’ முடியட்டும்…. அப்புறம் சாப்பிடப் போகலாம். சாப்பிடும் பொருட்களை photo எடுக்கும் போது, அது நம் நாவில் எச்சில் ஊற வைப்பது உண்மைதான். சில சமயங்களில், உன் photo கூட ‘tempt’ அடிக்குது மேகலா…!
மேகலா : Thanks கிருஷ்ணா….
கிருஷ்ணர் : ஆமாம்…, photo எடுக்கும் camera-க்களைப் பற்றி உனக்கு ஏதாவது கதை தெரியுமா…. இப்போ, சமீபத்தில் குமரேசன் வீட்டு கல்யாணத்திற்கு சென்று வந்து, camera-வைப் பார்த்துப் பார்த்து அதிசயப்பட்டு கதை கதையாய் அளந்தாயே….. Camera-வைப் பற்றித் தெரியுமா….?
மேகலா : கிருஷ்ணா…. என்னிடம் அறுபது வருஷப் பழமையான camera ஒன்று உள்ளது. ‘German’ make…. தெரியுமா உனக்கு….!
கிருஷ்ணர் : என்னது…. 60 வருஷப் பழமையான camera…..-வா….. நெசம்மாவா மேகலா…. நான் உன்ன என்னவோன்னு நெனச்சேன்…. Camera மேல உனக்கு நெசம்மாவே interest இருக்கு போலயே…
மேகலா : Interest-ஆ என்று எனக்குத் தெரியல கிருஷ்ணா…. சொல்லப் போனா…, photo-வை ரசிப்பேன் என்ற அளவில் தான் என்னோட interest. Camera-வைப் பற்றி விவரமெல்லாம் எனக்கு ரொம்பத் தெரியாது கிருஷ்ணா. இந்தப் பழைய camera என் அப்பாவோடது. அதைப் பற்றிய சுவாரஸ்யமான கதை இருக்கு கிருஷ்ணா! நாங்க சின்னப் புள்ளைகளா இருந்தப்ப, எங்களையெல்லாம் இந்த camera-வில் தான் photo எடுப்பார் கிருஷ்ணா…. என் அப்பா அந்த camera-வை என்னிடம் கொடுத்து, ’பத்திரமாக வைத்துக் கொள்’ என்று சொன்னார் கிருஷ்ணா…..
கிருஷ்ணர் : அப்படியா… ஆச்சரியமா இருக்கே…. எந்த நிகழ்ச்சி என்றாலும், க்…., ச்…. விடாமல் என்னிடம் கொட்டி விடுவாய்…. இதை எப்படி சொல்லாமல் விட்டாய்…. நான் அந்த camera-வைப் பார்த்திருக்கிறேனா….?
மேகலா : இப்போ….. கார்த்தி வந்த போது கூட, அவனிடம் காட்டினேன் கிருஷ்ணா! உன்னிடம் இதைப் பற்றிச் சொல்லாமல் விட்டேனா… என் அப்பா இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னால், அவரிடமிருந்த photos எல்லாவற்றையும் எடுத்து, யார் யாருக்கு எந்த photo தேவையோ, அதை எடுத்துச் செல்லுமாறு கூறினார். அப்போதான், இந்த camera-வைக் காட்டி, தன் ‘flash back’-ஐ எங்களிடம் பகிர்ந்தார். அதன் பின் camera-வை என்னிடம் கொடுத்து, ‘பத்திரமாக வைத்துக் கொள்’ என்றார்.
(தொடரும்)
Comments
Post a Comment