அரசியல் அதகளம் - பகுதி 5

கிருஷ்ணர் : மக்களிடம், தான் ஒரு விவசாயி அல்லது சாமான்யன் என்று பெயர் வாங்கணும் என்ற நல்ல எண்ணம் தானே…. இதிலென்ன தப்பிருக்கு…..

மேகலா : தப்பேயில்லை கிருஷ்ணா….. கர்மவீரர் காமராஜர் தன்னுடைய எளிய உடையாலும், தேசத்தின் மீது கொண்ட அக்கறையாலும், மக்களிடம் குறை கேட்கும் எளிமையாலும், அவரை, ‘சாமான்யன்’, ‘சாணக்கியன்’ என்று சொல்ல நான் தயாராக இருக்கிறேன். எனக்கு ஒரு நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வருகிறது கிருஷ்ணா. 1964-ஆம் ஆண்டு, சைனா போர் நடந்த சமயம், முதலமைச்சராக இருந்த கர்மவீரர், ஊர் ஊராகச் சென்று நிதி வசூலித்து வந்தார்; எங்க ஊருக்கும் வந்தார். எங்கள் பள்ளி வளாகத்தில் வைத்துத்தான் இந்த நிகழ்ச்சி நடந்தது. நாங்க ஒவ்வொருவரும் ஒரு கிராம் எடையுள்ள தங்க மோதிரத்தை, முதலமைச்சர் கையில் கொடுத்து, ‘photo’ எடுத்துக் கொண்டோம். அப்போ எனக்கு 10 வயசு. மேடையில் எப்படி நடப்பது என்று கூடத் தெரியாது. முதலமைச்சர் ‘டவாலி’யை மேடையின் கீழே இறங்கச் சொல்லி விட்டார். அரசாங்கப் பாதுகாப்புத் தேவையில்லை. ஊர்ப் பெரியவர்கள்தான் மேடையில் முதலமைச்சருடன் அமர்ந்திருந்தனர். வரும் சின்னக் குழந்தைகளை, முதலமைச்சரே கையைப் பிடித்து, தன் பக்கம் அழைத்து, ‘ரொம்பச் சின்னப் பிள்ளையாக இருந்தால்’, தன் மடியில் அமர்த்தி, photo எடுக்கச் சொன்னார். இதெல்லாம் வேற ‘லெவல்’ கிருஷ்ணா! இது election stunt கூடக் கிடையாது. நாட்டின் மீது கொண்ட அக்கறை, இயற்கையாக இருக்கணும். ‘நான் இந்த மக்களுக்கு ஏதாவது செய்யணும்’ என்று நெனச்சா கூட, மக்களை விட நாம் superior என்ற நெனப்பு வந்துரும். இது அந்த நெனப்பே இல்லாத, ‘இது என் கடமை’ என்ற உணர்வு…. ஆனா…., இப்படிப்பட்ட நெனப்பையெல்லாம் இன்று யாரிடமும் எதிர்பார்க்க முடியாது. இருக்கும் தலைவர்களிடையே, மக்களுக்கு யார் நெறய நல்லது செய்றாங்க…. என்று தான் பார்க்கணும் கிருஷ்ணா… ‘சாமான்யன்’ என்ற வார்த்தைய வச்சி, இந்த election நேரத்தில் நாங்கள் பார்க்கும் comedy…. எங்களுக்கு தினம் தினம் திருவிழாதான் கிருஷ்ணா… என்ன கிருஷ்ணா, வாயடைச்சுப் போயி பாக்குற….

கிருஷ்ணர் : வாவ்! நீ ரொம்ப கொடுத்து வச்சவ மேகலா… எப்பேர்ப்பட்ட முதலமைச்சரையெல்லாம் நீ பார்த்திருக்கிறாய்….

மேகலா : ஆனாலும் என்ன கிருஷ்ணா…. காமராஜரை மாதிரி ஒரு எளிமையான தேசபக்தரை இதுவரை என்ன…. இனிமேலும் பார்க்க முடியாது போல கிருஷ்ணா…

கிருஷ்ணர் : நீ சொல்றத வச்சு பார்த்தா, காமராஜர் மாதிரி ஒரு சாமான்யன், nomination கூட file பண்ண முடியாது போல இருக்கே…. காமராஜருக்கு சுதந்திரப் போராட்டம் என்ற பின்புலம் இருந்தது…. சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள், தங்களை அன்றிருந்த காங்கிரஸில் இணைத்துக் கொண்டார்கள். மக்கள் கண் முன்னாடியே, போராட்டம் நடத்தினார்கள்; சிறை சென்றார்கள்; உப்புச் சத்தியாக்கிரகம் பண்ணினார்கள். சிலர் அடிபட்டார்கள்; சிலர் உயிரை இழந்தார்கள்; இரத்தம் சிந்தினார்கள்; மக்கள் அவர்களை நம்பினார்கள். நாடு சுதந்திரம் பெற்றது. மக்கள் சுதந்திரம் வாங்கித் தந்தவர்கள் கையில் நாட்டைக் கொடுத்தார்கள். இன்றைய கட்சிக்காரர்கள், nomination file பண்ணுவதற்குக் கூட, கட்சித்தலைமைக்கு பணம் அள்ளிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. இன்னும், சாமான்யன், எளிய வாழ்க்கையை வாழ்வதற்குக் கூட போராடும் நிலையில் தான் இருக்கிறான். பணத்தை அள்ளிக் கொடுத்து வேட்பாளராகிறவன், பணத்தைத் திரும்ப அடையும் முயற்சியில் தானே இருப்பான். இது இன்று சாதாரணமாகப் போயிற்று.

மேகலா : நீ சொன்னது ரொம்ப correct கிருஷ்ணா…. கிரிக்கெட் விளையாட்டைப் பார்க்கும் போது வரும் தேசிய உணர்வு கூட, இன்றுநாட்டுக்கு நல்லது செய்யும் அரசியல் பிரமுகர்களை தெரிந்து கொள்ளத் தெரியாத அப்பாவிகள் தான் இன்றைய வாக்காளர்கள். அதனால் தான், கட்சித் தலைவர்கள், ‘நான் விவசாயி’, ‘நான் சாமான்யன்’, ‘நான் இந்துக்களுக்கு எதிரானவன் இல்லை’ என்று எதை எதையோ சொல்லி மக்களின் கவனைத்தை ஈர்க்கப் பார்க்கிறார்கள். இன்றைய election-ல ஒரு புது trend என்ன தெரியுமா கிருஷ்ணா…?

கிருஷ்ணர் : என்ன…… நான் ‘M. G. R.’ மாதிரி, அல்லது நான் தான் M. G. R. வாரிசு என்கிறார்களா….?

மேகலா : ஐயோ…. எப்படி…. எப்படி, இப்படி பளிச்சினு சொல்லிட்ட……. என் கண்ணே பட்ரும் போல இருக்கு கிருஷ்ணா..! ‘M. G. R. மாதிரி’ என்று தான் சொல்லல…. ஒருவர், ‘நான் M. G. R. தோளில் வளர்ந்தவன்’ என்கிறார்….. ஒருவர், ‘M. G. R. என் பெரியப்பா’; M. G. R. என்னை நல்லா படிக்கணும், அரசியல்ல நல்லா வளரணும் என்றார்’ என்கிறார். ஒருத்தர், ‘கறுப்பு M. G. R.’ என்கிறார்.

கிருஷ்ணர் : So, M. G. R. ஒரு பிரச்சாரப் பொருளாகி விட்டார். M. G. R. மட்டும் தான், பிரச்சாரத்தில் வலம் வருகிறாரா….?

மேகலா : உனக்கு ஒண்ணு தெரியுமா…? இந்த election-ல மற்றொரு பிரச்சார trending என்ன தெரியுமா…?

கிருஷ்ணர் : பன்னிரு கை வேல…வனே… ‘ரைட்டா…? நம்ம முருகன் கை வேல் தானே…!

மேகலா : வாவ்! கிருஷ்ணா…. உனக்கும் இந்தக் கூத்து தெரிஞ்சி போச்சா… அதுலயும், கோயிலில் இருக்கும் பூசாரி மாதிரி ‘make-up’ போட்ட கட்சிக்காரங்க, கோயில் சார்பா, அதுவும் யாருக்கு…., இந்து மத உணர்வுகளை, நம்பிக்கையை கொச்சைப்படுத்துபவர்களுக்கு, வெள்ளி வேல் பரிசளிப்பதாக…. ‘பிலிம்’ காட்டுறாங்க. வேலை வாங்கியோர், என்னவோ…., முருகன் மாதிரி நின்னுக்கிட்டு, ‘pose’ வேற குடுக்கிறாங்க…. நீ என்னவோ இதையெல்லாம் பார்த்துக்கிட்டு பாட்டுப் பாடற….

கிருஷ்ணர் : நீ தான இதைக் ’கூத்து’ என்று சொன்ன… அதான்…. பாட்டுப் பாடினேன்…. சரி… இதெல்லாம் ஒரு கூத்தா…? வேற ‘comedy’ இருந்தா சொல்லு மேகலா….

மேகலா : இன்னொரு புது technology கண்டு பிடிச்சிருக்காங்க கிருஷ்ணா… மக்களிடையே நெருங்கி வந்து பேச முடியாதவங்க, வீட்டிலிருந்தபடியே, பேசுவது போல shooting எடுத்து, மக்களிடையே போட்டுக் காண்பித்து, மக்களை ஈர்ப்பதற்கு முயற்சிப்பார்கள். ஆனால், இதெல்லாம் ரொம்ப rare கிருஷ்ணா…. சென்ற election-ல், அம்மாவோட speech-அ இப்படியும் ஒளி பரப்பினார்கள். ஆனா, இந்த election-ல, ‘தான் ஒரு சாமான்யன்’ என்று காட்டுவது தான், கட்சிக்காரங்களோட agenda. தனி விமானத்தில் பறப்பாங்க…. வீட்டையே ‘caravan’ ஆக்கி, சொகுசாய் வலம் வருவார்கள். மக்கள் கூட்டத்தைப் பார்த்ததும், ஒரு ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு, சைக்கிளில் ‘டீக்கடைக்கு’ விரைவார்கள். இதெல்லாம் பெரிய comedy இல்ல கிருஷ்ணா…. இதெல்லாம் நாங்க வழக்கமா பாக்குறதுதான். இந்த election time-ல December மாசம் ஒரு கூத்து நடந்தது… அதை நீ கவனிச்சயா….?

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2