அரசியல் அதகளம் - பகுதி 6

கிருஷ்ணர் : ரஜினிகாந்த் matter’-ஆ மேகலா….? ஆமாம், என்ன தான் நடந்தது? எனக்கு, அவர் கட்டாயம் கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்று நல்லாவே தெரியும்…. அதனால், அந்த news-அ ரொம்ப கண்டுக்கல…. ஆமாம், என்ன நடந்துச்சி…..

மேகலா : கிருஷ்ணா…. அவருக்கு மக்கள் மீது பெருசா அக்கறையெல்லாம் கிடையாது. அப்பப்போ… அவர் படம் release ஆவதற்கு முன்னால்….’,’நான் எப்போ வருவேண்ணு தெரியாது…. ஆனா வர வேண்டிய நேரத்துல கட்டாயம் வருவேன்’னு டயலாக்கெல்லாம் பேசி, அவரோட ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்து விடுவார். படம் release ஆனவுடன், போஸ்டருக்கு ‘பாலாபிஷேகம்’ என்ன…., ‘தலைவா, வருங்கால முதலமைச்சரே!’ என்ற அலப்பறை என்ன…., படம் release ஆகி, collection கோடி கோடியாய் கொட்டும். அத்தோட, அந்த ‘டயலாக்’க மறந்துட்டு, அடுத்த படத்திற்கு ’commit’ ஆகி, ‘சிங்கம், சிங்கிளாத்தான் வரும்’ என்ற அடுத்த ’பன்ச் டயலாக்’குக்கு மாறிருவார்….

கிருஷ்ணர் : ம்…. அப்படியா…. பரவாயில்லையே…. பார்த்தியா…. மேகலா…..marketing-ல இது புது மாதிரி technic-ஆ இருக்கே….! மக்களோட அபிமானத்தை எவ்வளவு சாதாரணமா use பண்ணியிருக்காங்க….

மேகலா : கிருஷ்ணா….. இந்த drama கடந்த 25 வருஷமாக தொடருது கிருஷ்ணா…. அதனால்தான் நான் அழுத்தமா சொல்றேன்…., அவருக்கு மக்கள் மீது அக்கறையெல்லாம் கிடையாது என்று. இந்த election-ல பெரிய தலைகளோட ஆளுமையெல்லாம் கிடையாதல்லவா… அதனால், அவரோட ரசிகர்கள் கொடுத்த நெருக்கடி காரணமாகவோ, அவருக்கு ஆலோசனை வழங்கி, ‘கோதா’வில் இறக்கி விடத் துடித்த, ‘kitchen cabinet’ காரணமாகவோ, புதிய பன்ச் டயலாக்குடன், ‘இப்ப இல்லேன்னா எப்பவும் இல்லை’, ‘ஆன்மீக அரசியல்னு சொன்னதால, எனக்கு காவிய கட்டி விட்றாதீங்க’ என்ற வழக்கம் போல பூடகமான பேச்சுடன், அரசியல் பிரவேசத்திற்கு ‘பிள்ளையார் சுழி’ போட்டே விட்டார் என்று தமிழ்நாடு முழுக்க அமளிதுமளியாகியது……

கிருஷ்ணர் : கொஞ்சம் இரு…. கொஞ்சம் இரு…..’காவிய கட்டி விட்றாதீங்க’ன்னா, என்ன அர்த்தம்…?

மேகலா : BJP கட்சியில சேர மாட்டாராம்….. அதாவது, அவர் மதச் சார்புடையவர் கிடையாதாம்…. கூட்டணி கூடக் கிடையாதாம்…. 234 தொகுதிகளிலும், தனித்து நிற்பாராம். தமிழ்நாட்டின் 8 கோடி மக்களும் மாற்றம் வேண்டும் என்று நினைத்து வாக்களிப்பார்களாம். தமிழ்நாட்டில், தலைமையிடம் வெற்றிடமாய் இருக்கிறதாம்; அதற்கு ஒரு மாற்றம் தேவையாம். அந்த மாற்றத்தைத் தரத் தயாராகி விட்டதாகவும்…., அதற்கான அறிவிப்பை ஜனவரி முதல் வாரத்தில் சொல்லுவதாகச் சொல்லி, ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாரா…..

கிருஷ்ணர் : ம்….. தமிழ்நாடே குலுங்கிப் போச்சா… இந்த சூறாவளியில் சிக்குனவங்க எல்லாம் சின்னாபின்னமாகிப் போனாங்களா….?

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. அரசியலில் இருந்து தான் விலகி விடப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவிக்கும் வரையில், social media-க்கள், தங்கள் தங்கள் யூகங்களை வைத்து தீபாவளியே கொண்டாடினார்கள் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : சரி…. நெசம்மாவே…. அவர், கட்சி ஆரம்பிக்கும் எண்ணத்துடன் தான், அறிவிப்பை வெளியிட்டாரா…. இல்ல…., வழக்கம் போல, film காட்டியது தானா…?

மேகலா : நான் சொன்னது தான் கிருஷ்ணா…. அவர் பாட்டுக்கு, தன் படம் உண்டு….; தன் collection உண்டு என்றிருந்தவருக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள் போல…. இடையில் ஒரு நாள், யாரோ ஒருவர் மருத்துவ report ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த report-ஐ வைத்து, ‘இது ரஜினிகாந்த் வெளியிட்டதல்ல, fake news; யாரும் இதை நம்ப வேண்டாம்’ என்று, ரஜினிகாந்த்தை வெறித்தனமாக நம்பும் social media-க்கள், சப்பை கட்டு கட்டியது; மறு நாள், இந்த report-ஐ வைத்து, ரஜினிகாந்த் ஒரு அதிர்ச்சிகரமான தகவலை தன் twitter-ல் tweet பண்ணியிருந்தார்.

கிருஷ்ணர் : ஏன்….? அவருக்கு ஏதாவது உடம்பு அசௌகர்யமா; அதனால் மருத்துவர்கள் அலைச்சல் கூடாது என்று ஆலோசனை கூறியுள்ளார்களாமா…?

மேகலா : உடம்பு அசௌகர்யம் என்பது சாதாரணமாக இல்லை கிருஷ்ணா…. அவர் சொன்ன கூற்று இதுதான்: ’என்னைப் பற்றி ஒரு மருத்துவ report-ஐ வெளியிட்டிருக்கிறார்கள். அது முற்றிலும் உண்மை. சென்ற 2016-ம் ஆண்டு, எனக்கு சிங்கப்பூரில் வைத்து, kidney transplant operation பண்ணப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று போன்ற ‘வைரஸ்கள்’ எளிதில் பாதிக்கக் கூடிய health condition இருப்பதால், மருத்துவர்கள், அதிக அலைச்சல் கூடாது என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். இருந்தாலும், தமிழக மக்களுக்காக, என் உடம்பில் உயிர் உள்ளவரை பாடுபடுவேன். மாற்றங்களைக் கொண்டு வருவேன்’ என்று எழுதியிருந்தாரா….

கிருஷ்ணர் : உடனே, அவரைச் சுற்றியிருந்தவர்கள்…., ‘தலைவா…! உன் உயிர் தான் எங்களுக்கு முக்கியம்’ என்றார்களா….?

மேகலா : இந்த tweet வெளியானதும், அவரைச் சுற்றியிருந்தவர்கள், ரசிகர்கள், ‘தலைவா! நீ அலையவே வேண்டாம்… நீ கை காட்டும் வேலையை நாங்கள் செய்வோம்’ என்றார்கள்….. ’எங்களை மாதிரி இந்த தொடர் நிகழ்ச்சிகளை சினிமாவாகப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள்’, ‘ரஜினிகாந்த் பெரும் மாற்றத்தைத் தரப் போகிறார் என்று ஜோஸ்யம் சொன்ன social media-க்கள் தான் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

கிருஷ்ணர் : 2016 என்பது, just 5 வருஷத்திற்கு முன்னாடி; அப்போ நடந்த ஒரு operation-ஐ, யாரிடமும் share பண்ணாமல், ‘இதோ அரசியலுக்கு வரப் போகிறேன்….. பட்டம் விடப் போகிறேன்’ என்று அலப்பறை பண்ணியதை நினைத்தா அதிர்ச்சியானாய்….?

மேகலா : பின்ன…. இருக்காதா கிருஷ்ணா…. இவர் அரசியலுக்கு வருவதாகச் சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை…. ஒரு படம் வெளி வரும்…. ‘கண்ணா, பன்னிகள் தான் கூட்டமா வரும்; சிங்கம் சிங்கிளாத்தான் வரும்’ என்று டயலாக் பேசுவார். பட release-க்கு முந்தி, ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து சிதற விடுவார். அப்புறம் அடங்கிப் போவார். அவர் பேசியதெல்லாம், காற்றிலே பிசுபிசுத்துப் போகும். அடுத்த படத்திலும், இந்த மாதிரி drama தான் தொடரும். இதில், 2017-ல் தமிழக மக்களிடம், ‘நான் அரசியலுக்கு வரப் போவது உறுதி’ என்று வாக்குறுதி வேற…. இப்ப, ‘கூலா’, kidney transplant பண்ணின உடம்பு, செத்தாலும் பரவாயில்லை’ என்று டயலாக் பேசினால், நமக்கு அதிர்ச்சியாகவும் இருந்தது. வெளிப்படையான நேர்மை இல்லாத இதெல்லாம் என்னத்த தேறப் போகுது என்று வெறுப்பாகவும் இருந்தது…

கிருஷ்ணர் : சரி…. அவரோட ரசிகர்களின் மனநிலை எப்படி இருந்தது….?

மேகலா : ரசிகர்களுக்கு அவர் மேல் அபிமானம் இருந்திருக்கலாம். அதை விட, அவர்கள் கனவுலகில் ஒரு ராஜாங்கமே அமைத்து விட்டார்கள் கிருஷ்ணா… எந்த ஒரு கட்சியின் அடையாளமும் இல்லாத ஒரு சாதாரண ரசிகன், அமைச்சராகி விடுவோம் என்ற நிலைக்கு வந்ததனால், அவர் தலைமை மட்டும் ஏற்கட்டும்; மற்றப்படி சும்மா இருந்தாலே போதும் என்று புலம்ப ஆரம்பித்தார்கள். நீ சொன்னது தான்… அரசியல் என்பது, ‘சம்பாதிக்க’ என்ற எண்ணம், தமிழ்நாட்டில் வலுத்து விட்டது. Kitchen cabinet அவரை பிரச்சாரத்திற்கெல்லாம் தலைவர் செல்ல மாட்டார். வீட்டிலேயே ‘தர்பார்’ பட shooting மாதிரி shooting எடுத்து, வீதி வீதியாகத் திரையிட்டுக் காட்டி, ஆட்சியைப் பிடிக்கலாம் என்று சப்பைக்கட்டு கட்டினார்கள். இதற்கிடையில், ஒப்புக் கொண்ட படத்தின் shooting-ஐ முடித்து விட்டு, முழுநேர அரசியலில் வேலையை ஆரம்பிக்கப் போவதாக தலைவர் announce பண்ணி விட்டு, தனி விமானத்தில் பறந்து, Hyderabad சென்றார்….

(தொடரும்)

(அடுத்த பகுதியுடன் நிறைவு பெறும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2