வாங்க, கொஞ்சம் ‘பொய்’ பேசுவோம் - பகுதி 2

மேகலா : கிருஷ்ணா! நீ சுவாரஸ்யம்ணு சொன்ன பிறகு தான், பொய் சொல்றத ஒத்துக்கிட்டன்னு எனக்கு சந்தோஷமா இருக்கு…

கிருஷ்ணர் : ஹலோ….ஹலோ…. என்ன….. நான், பொய் சொல்றத ஒத்துக்கிட்டனா. யாருகிட்ட பேசுறோம்னு தெரிஞ்சிதான் பேசறயா….

மேகலா : ஐயோ கிருஷ்ணா…. நான் topic-க தான் பேசினேன். நீ என்கிட்ட கோவிச்சுக்கிட்டனா…, நான் எங்க போவேன்….?

கிருஷ்ணர் : சரி…. சரி…. ரொம்ப நடிக்காத…

மேகலா : கிருஷ்ணா, நெஜம்மாவே ‘பொய்’ என்பது ஒரு சுவாரஸ்யம் தான். அதனால் தான் கவிஞர்கள், தங்கள் கவிதைகள் interesting ஆக இருப்பதற்கு பொய்யைத் துணைக்கு வைத்துக் கொள்கிறார்கள்.

கிருஷ்ணர் : கவிஞர்கள் பொய்யாய் எழுதினால், யார் நம்புவார்கள் மேகலா…?

மேகலா : Content உண்மையாகத்தான் இருக்கணும் கிருஷ்ணா…. அதைச் சொல்லும் போது, சில ‘பிட்’டுக்களைச் சேர்த்துச் சொல்வாங்க. அது தான் அழகான ’கற்பனை’யாக…, ஆம், பொய்யைக் கூட, கற்பனை என்று சொல்லி அழகு பார்ப்பார்கள். தமிழ்க்குடியையே எடுத்துக் கொள் கிருஷ்ணா. ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி’ என்று சொல்லுகிறார்கள். தமிழ்க்குடியின் பழமையை விவரிக்க வந்த புலவர், கொஞ்சம் முன்னா……டியே போயி, கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்னமேயே தமிழர்கள் தோன்றி விட்டார்கள் என்று ‘அழகான பொய்’ சொல்லி ஆனந்தப்படுகிறார்….

கிருஷ்ணர் : Oh! தமிழ்க்குடி மீது அவருக்குத்தான் எத்தனை பெருமை! ஆமா… இப்படிப் புலவர்கள் பேசியதைக் கேட்டாலே, ஜாலியா பொழுது போகும் போலயே….

மேகலா : இவராவது, தங்கள் குடிப் பெருமையை உயர்வாகக் கூறுகிறார். பலர், தங்கள் மனசுக்குப் பிடிச்சவங்களை பேசும் போது, ‘பொய்’ மடை திறந்த வெள்ளமாய் வரும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : அப்படியா….. எங்கே, ஒரு பாட்டுச் சொல்லேன்….

மேகலா : இளங்கோ அடிகள் என்ன சொல்றார் தெரியுமா?

‘மாசறு பொன்னே…., வலம்புரி முத்தே….

காசறு விரையே…. கரும்பே…., தேனே….’

இந்தப் பாட்டைக் கேட்டயா கிருஷ்ணா…. இதே மாதிரி, சினிமாப்பாட்டு எத்தனை இருக்கு கிருஷ்ணா….

‘செந்தமிழ்த்தேன் மொழியாள்

நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்’

என்றெல்லாம் பாட்டு எழுதுபவர்களுக்கு, தன் காதலியையோ, மனைவியையோ பார்க்கும் போது, கரும்பு, தேன், நிலா, மயில் என்றுதான் எழுதத் தோணும். அத்தனையும் ‘பொய்’யின்னு சொல்ல மாட்டேன். அழகான கற்பனை என்று சொல்லி நாமும் அதை ரசிச்சி அனுபவிக்கிறோம். இப்போ ஒரு situation சொல்றேன் கேளு கிருஷ்ணா…. ஒரு பெண் நடந்து வருகிறாள்ணு வச்சுக்குவோம். அவளை, ‘மெல்ல மெல்ல அன்னமென நடந்து வந்தாள்’ என்பார்கள். இதே பெண், ‘தட தட’வென்று நடந்து வந்தால், ‘அதிரடியாக நடந்து வந்து அதகளப்படுத்தினாள்’ என்பார்கள். ‘கல கல’வென சிரித்தால், ‘சதங்கையாய் சிரித்தாள்’…. என்று சொல்வார்கள். அல்லது ‘வெடிச்சிரிப்பைக் கொளுத்திப் போட்டாள்’ என்று சொல்லி, அந்தப் பெண்ணின் இயல்பை நாசூக்காய் சொல்லி விடுவார்கள் கிருஷ்ணா!

கிருஷ்ணர் : அப்போ, ‘நாசூக்காய்’ சொல்வதெல்லாம், என்ன சொல்கிறோமோ, அதை அழுத்தமாய் சொல்வதற்குத்தானோ….

மேகலா : இந்தப் பொய்யெல்லாம் ‘நாசூக்குப் பொய்’.

கிருஷ்ணர் : சரி! இதெல்லாம் கவிஞர்கள் கையாளும் technic. ஒரு பொய் பேசினதால், சூழ்நிலையே மாறிப் போச்சு – அப்படீன்னு ஏதாவது இருக்கா….?

மேகலா : எத்தனையோ இருக்கு கிருஷ்ணா. ஒரு பொய்யினால நின்னு போன கல்யாணம்…. ஒரு பொய்யால நடைபெற்ற கல்யாணம்…. பொய்யினால் உறவுகள் பிரிந்தது…. உறவுகள் சேர்ந்தது…. என்று எத்தனையோ இருந்தாலும், நமக்கெல்லாம் தெரிந்த ‘அபிராமி பட்டர்’ கதை, ஒரு பொய்யினால் சூழ்நிலையே மாறி போச்சுல்ல கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : அபிராமி பட்டர் சொன்னது பொய்யா மேகலா…?

மேகலா : தன்னை மறந்து சொன்ன அமுத வார்த்தை கிருஷ்ணா….

கிருஷ்ணர் : எங்க, அந்தக் கதையைச் சொல்லு மேகலா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1