வாங்க, கொஞ்சம் ‘பொய்’ பேசுவோம் - பகுதி 4

கிருஷ்ணர் : நீ, திருக்கடையூர் அபிராமி கோயிலுக்குச் சென்றிருக்கிறாயா மேகலா?

மேகலா : ஒரு ரெண்டு மூணு வருஷத்திற்கு முந்தி, ஹரிக்காகவும், எல்லோருடைய ஆயுளுக்காகவும், எமனைக் காலால் உதைத்த இறையனாரைத் தரிசிக்க வேண்டி சென்று வந்தேன் கிருஷ்ணா.

கிருஷ்ணர் : நெய் விளக்கு ஏற்றினாயா…?

மேகலா : நெய் விளக்கு ஏற்றி, பிரார்த்தனையை நிறைவு செய்து, என் அன்னையை வழிபட்டு வந்தேன் கிருஷ்ணா.

கிருஷ்ணர் : Good…. Good…. உன் வேண்டுதல் பலிக்கும். உன் அன்னையும், அப்பனும் துணை நிற்பார்கள்.

மேகலா : ரொம்ப thanks கிருஷ்ணா. சர்வ காலங்களையும் அளந்து பார்த்தவன் நீ. கண் பார்வைக்குள் கட்டுப்படுத்தி வைத்திருப்பவன் நீ….. நீ சொன்னால், அது உண்மை மட்டுமல்ல, அதுவே எனக்கு கவசமாகவும் இருக்கும் கிருஷ்ணா.

கிருஷ்ணர் : ஏன் மேகலா…. ‘பொய் சொன்னாலும், பொருந்தச் சொல்லணும்’ என்று நிறைய பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதைப் பற்றி நீ என்ன சொல்லப் போகிறாய்…?

மேகலா : என்ன கிருஷ்ணா…. என்னை சீண்டிப் பாக்குறியா….? நாங்கல்லாம் அப்படித்தான். ஒரு படம் பாத்திருக்கியா கிருஷ்ணா…. ‘லிவிங்ஸ்டன்’ என்ற நடிகர் நடந்து வரும் போது…., அங்கிருப்போரெல்லாம், ‘வருங்கால முதல்வரே…., வாழ்க’ என்று கூவுவார்கள். அதில் ஒருவன் மட்டும், ‘வருங்கால அமெரிக்க ஜனாதிபதியே’ என்று கூவுவான். அதைக் கேட்டு அந்த நடிகர் புளகாங்கிதம் அடைந்து, ‘என்னமா கூவுறாண்டா’ என்று சொல்லிக் கொண்டே, பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுப்பார்….. கொடுக்கிற காசுக்காக கூவுவதெல்லாம் இப்படித்தான். அண்டப்புளுகு, ஆகாசப் புளுகாக இருக்கும். மேடையில் உட்கார்ந்திருக்கும் தலைவரைப் பார்த்து, ‘இந்திரன், சந்திரன்’ என்று மட்டுமல்ல கிருஷ்ணா….. ‘ஆட்டைப் பிடிப்பார், மாட்டைப் பிடிப்பார்’ என்று சொன்னால் கூட பரவாயில்லை….; ‘இதைச் செய்வார், அதைச் செய்வார்’ என்று வண்டி வண்டியாக அளந்து விடுவார்கள். ‘கேட்பவன் கேணையனாக இருந்தால், எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டும்’ என்ற range-க்கு அளப்பார்கள்.

கிருஷ்ணர் : இது என்ன பழமொழி? சூப்பரா இருக்கு…!

மேகலா : இது மட்டுமில்லை…., ‘கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன், வைகுந்தத்துக்கு வழி கேட்டானாம்’. பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும் என்று யாரைப் பார்த்துச் சொல்லியிருப்பார்கள்; தெரியுதா கிருஷ்ணா….

கிருஷ்ணர் : உண்மைக்குத் தொடர்பே இல்லாதவர்களை வேறு என்ன சொல்வது? சரளமாக பொய் பேசத் தெரிந்த யாரையாவது உனக்குத் தெரியுமா மேகலா…?

மேகலா : ஏன் தெரியாது…., நிறையப் பேரைத் தெரியும் கிருஷ்ணா! In fact, இப்பல்லாம், அந்த மாதிரி ஆட்கள் தகவல்களாகச் சொன்னால் கூட, நான் நிச்சயமாக நம்புவது கிடையாது. அத்தனையும் பொய் என்று 100% நம்புவேன். எந்தத் தகவலும் எனக்கு நம்பகத் தன்மை உடையவர்கள் மூலம் மட்டுமே ஏற்றுக் கொள்வேன்.

கிருஷ்ணர் : சரி, அப்படி யாரையாவது சொல்லேன் கேட்போம்…

மேகலா : கிருஷ்ணா! ‘கல்யாணப் பரிசு’ தங்கவேலு காமெடியை யாராவது மறக்க முடியுமா கிருஷ்ணா….? ‘ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் செஞ்சுக்கலாம்’ என்ற பழமொழி இருக்குல்ல…. ஆனா, தங்கவேலு, ஒரே ஒரு பொய்யச் சொல்லி கல்யாணம் பண்ணிக்குவாரு…..

கிருஷ்ணர் : நீ சொன்ன பிறகுதான் ஞாபகம் வருது மேகலா…. ஆமாம், அது என்ன பொய்?

மேகலா : ‘மான்னாரென் கம்பெனில sales manager-ஆக இருக்கேன்’ என்றார்….

கிருஷ்ணர் : ‘டூப்பு’….

மேகலா : டூப் மாஸ்டர் வேற என்ன சொல்லப் போறாரு. அத உண்மைன்னு நம்பி, தினமும் அவர் பொண்டாட்டி ‘டிபன் பாக்ஸ்ல’ சாப்பாடு, flask-ல காபி கொடுத்து, ‘ஆஹா, நம்ம புருஷன் வேலைக்குப் போறாரு என்று சந்தோஷமா வழியனுப்பி வைப்பாரு…. அவரோ, park-ல போய் உட்கார்ந்து, time-க்கு சாப்பிட்டு, 5 மணியானதும் வீட்டுக்குத் திரும்பிப் போவாரு. வேலை பார்த்து களைப்பா வீட்டுகுத் திரும்பும் புருஷனுக்கு, coffee கொடுத்து உபசரிப்பார். அப்பவும், அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு என்று புளுகிப் புளுகியே கலகலப்பாய் வலம் வருவார்.

கிருஷ்ணர் : புருஷன் மேல இவ்வளவு பிரியமா இருக்கிற பொண்டாட்டியிடம் உண்மையைச் சொல்லலாம்ல….

மேகலா : உண்மையைச் சொல்லி, அந்த அம்மா வீட்டை விட்டு விரட்டி விட்ருச்சுன்னா….

கிருஷ்ணர் : Oh! அப்புறம் அந்தக் கதை எப்படிப் போகும்….?

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2