விருதினைத் திருப்பித் தருகிறேன் - பகுதி 1

மேகலா : கிருஷ்ணா! நான் உங்கிட்ட ஒண்ணு பேசணும்….

கிருஷ்ணர் : என்னமோ இத்தனை நாள் பேசாம இருந்துட்டு, இன்னைக்கு permission கேட்டு பேசுவது போல பம்முற…. என்ன பேசணும்…. உன் முகத்தையெல்லாம் பார்த்தா, அவ்வளவு நல்லாத் தெரியலியே… என்ன, ‘கேரள விருது’ சமாச்சாரமா….

மேகலா : எப்படி…. எப்படி கிருஷ்ணா… முகம் காட்டும் கண்ணாடி மாதிரி, என் முகத்தைப் பார்த்தவுடன் அப்படியே என் உணர்வுகளை கண்டு விட்டாய்….?

கிருஷ்ணர் : உன்னைத் தெரியாதா மேகலா, எனக்கு….? In fact, இன்னும் இந்த விருது சமாச்சாரத்தை நீ என்னிடம் share பண்ணலியே என்று எதிர்பார்த்து காத்திருந்தேன். இன்று நீ வரும் போதே உன் முகத்தைப் பார்த்து விட்டேன். உன் முகத்தில் வெளிப்படையாகக் கொப்பளித்தது கேலியும் கிண்டலும். அதற்குப் பின்னால், அக்னியின் ஜ்வாலை கூட தெரிந்தது….. போதாதா…. நீ என்ன பேசப் போகிறாய் என்று தெரியாதா…. சொல்லு… நீ என்ன பேசப் போகிறாய்….?

மேகலா : என் முகத்தில், அக்னியின் ஜ்வாலை தெரிந்தது என்று நீ சொன்னது, என் மனதில் எத்தனை கோபம் இருக்கும் என்று நீயும் தெரிந்து கொண்டாயல்லவா….

கிருஷ்ணர் : சரி…. கேரள விருது என்கிறார்களே…, அது என்ன விருது….. கவிஞருக்குக் கொடுக்கப்பட்டது என்பதால், அது இலக்கிய விருது என்று நினைக்கிறேன்.

மேகலா : கிருஷ்ணா….. அந்த ஆளை ‘கவிஞர்’ என்று சொல்லாதே கிருஷ்ணா…. இங்கு எல்லோரும், கேரளாவின் ‘உயரிய விருது’ என்கிறார்கள்…. அது எந்த அள்வுக்கு ‘உயரிய விருது’ என்று எனக்குத் தெரியாது. ஆனால், தேசிய அளவில் இலக்கியத்திற்கான உயரிய விருதாகிய ‘ஞானபீட விருதை’ வாங்கிய ஒரு உயர்ந்த இலக்கியவாதியின் பெயரால், ‘O. N. V. Kurup’ என்ற Cultural Academy வழங்கும் ‘ONV விருது’…. நிச்சயம் மதிப்பு மிக்கதுதான். நம் தமிழில் இருக்கும் ‘ராஜ ராஜ சோழன்’ விருது மாதிரி…. இந்த விருதினை, ‘வைரமுத்து’வுக்குத் தருவதாக அறிவிக்கப்பட்டவுடன், தமிழக முதலமைச்சர், அவசர அவசரமாக, ‘வைரமுத்துவின் மகுடத்திற்கு மேலும் ஒரு வைரம் சேர்ந்தது’ – என்று பாராட்டு வழங்க, இரண்டு வருடத்திற்கு முன்னால் நடந்த, பாலியல் குற்றச்சாட்டுக்களை மறைத்து, அவரவர்கள் பாராட்டு என்ற ‘ப்ளாஸ்டரை’ ஒட்ட வைத்து, முகத்தை அழகாக்க முயன்றார்கள் கிருஷ்ணா…. அப்பத்தான் கிருஷ்ணா, யாரும் எதிர்பாராத விதமாக, ப்ளாஸ்டரைக் கிழித்தெறிந்து வரிசையாக ‘கும்மு கும்மு’ணு கும்மியெடுத்தார்கள்…..

கிருஷ்ணர் : யார் இதைச் செய்தது…. இத்தனை துணிச்சலாக…

மேகலா நம்ம தமிழ்நாட்டில் ‘me too’ என்று சொன்ன சின்மயியை கேள்விகளால் கற்பழித்து சின்னாபின்னமாக்கினார்கள் அல்லவா… இந்த முறை, தமிழகப் பெண்கள், பாதிக்கப்பட்டவர்கள் வேடிக்கை தான் பார்த்தார்கள். அதிலும் சின்மயி, ‘ONV விருதுக்குப் பெருமை’ என்ற கேலி ‘ட்வீட்டுடன்’ நிறுத்திக் கொண்டார். தாக்குதல் வந்தது அழகான கேரளத்துப் பெண்களிடமிருந்து… அதிலும், பார்வதி என்ற நிஜ super star மலையாளி நடிகை, ‘ONV’ நம்முடைய பெருமைக்குரிய, நம் கலாச்சாரத்தின் பெருமைக்குரியவர். அவர் பெயரால் வழங்கப்படும் விருதினை, 17 பெண்களிடமிருந்து, பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட ஒருவருக்கு இந்த விருதை வழங்கி, ‘ONV’-யை அவமானப்படுத்த வேண்டாம் – என்று ‘ட்வீட்’ பண்ணியிருக்கிறார்.

கிருஷ்ணர் : இதே வாசகமா மேகலா…. என்ன ஒரு நிமிர்ந்த நேர் கொண்ட பார்வை…!

மேகலா : கிருஷ்ணா…. ‘நிமிர்ந்த நேர் கொண்ட பார்வை’ – இதை நீ சொல்லும் போது, எத்தனை ஜொலிப்பாக, வலிமையாக இருக்கிறது கிருஷ்ணா…. இவர் மட்டும் தனியாக இருந்து கூவியிருந்தால் கூட, புறந்தள்ளியிருப்பார்களோ என்னவோ…. அடுத்து ‘அஞ்சலி மேனன்’ என்னும் பெண் டைரக்டர் ஒருவரும் இதை எதிர்த்து ‘ட்வீட்’ பண்ண…., இங்குள்ள தன்மானத் தமிழர்கள், திகைத்து விட்டார்கள். இதே தமிழகத்தில், பெண்களிடமிருந்து எதிர்ப்புக்குரல் வந்திருந்தால், அதற்கு யாராவது ஒருவனை விட்டு, நம் தமிழிலேயே கீழ்த்தரமான வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து பேசச் செய்து, அந்தப் பெண்ணை முடங்கச் செய்திருப்பார்கள். இன்னொரு பக்கம், ராஜாஜி மண்டபத்தில், சிவப்புக்கம்பளம் விரித்து, வைரமுத்துவை வரவழைத்து, மலர்மகுடம் அணிவித்து, பாராட்டு வழங்கியிருப்பார்கள். சம்பந்தப்பட்டவரும், கூச்சமேயில்லாமல், பெண்களை ஒருபொருட்டாக மதிக்காமல் நடந்து வந்து விருதினைப் பெற்றுச் சென்றிருப்பார். எதிர்ப்பு வந்தது, கேரளப் பெண்களிடமிருந்து; ஒருவர் இருவரிடமிருந்து மட்டுமல்ல கிருஷ்ணா…, நிறையப் பேர், எத்தனை பேர் என்று தெரியவில்லை. ஆனால், எதிர்ப்புகள் வலுக்க ஆரம்பித்து விட்டது. அந்த அகாடமியின் மெம்பரான ஒரு டைரக்டர், அடூர் கோபாலகிருஷ்ணன் என்பவர், ‘கவிஞரின் படைப்புக்குத்தான் விருது வழங்கப்படுகிறது’ என்று சொல்லிப் பார்த்தார். ஆனால்,எதிர்ப்புத் தெரிவித்த பெண்கள், ‘விருது வழங்குவதற்கு வேறு படைப்பாளியே உங்களுக்குக் கிடைக்கவில்லையா….. ஒருத்தர், இரண்டு பேரில்லை, பதினேழு பெண்களை, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஒருவருக்குத்தான் விருது வழங்க வேண்டுமா’ – என்று கேட்டனர். வேறு வழியில்லாமல், அகாடமி, விருது வழங்குவதை நிறுத்தி வைத்து, மறுபரிசீலனை செய்வதாகச் சொன்னது.

கிருஷ்ணர் : Oh! பரவாயில்லையே மேகலா. இதற்கு, மகுடத்தில் வைரம் பதித்தவர் என்ன பதில் சொன்னார்….?

மேகலா : தமிழே வெறுக்கும் குரலில் பேசுகிறார். ‘சிலர், உண்மையை உரசிப் பார்க்கிறார்கள்’ என்கிறார் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : எந்த உண்மையை…?

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2