எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 6

கிருஷ்ணர் : சரி…, அந்தக் காலங்களில் பொழுது போக்கு என்று என்ன இருந்திருக்கும்…?

மேகலா : கிருஷ்ணா…. காலையில் இருந்து மாலை வரை, எல்லா வேலைகளுமே மனித உழைப்பால் மட்டுமே செய்து முடிக்கப்படும் வேலைகள். இரவு கிணற்றில் தண்ணீரை வாரி வாரி இறைத்து (note பண்ண வேண்டிய விஷயம், current, motor இது எதுவுமே பரபரப்பாக புழக்கத்தில் இல்லாத காலம்) குளித்து, சாப்பிட்டு படுத்தால், காலை சேவல் கூவும் பொழுதுதான், கண்ணு முழிப்பே வரும். இதில் ‘பொழுது போக்க’ என்று தனியாக நேரம் கிடைக்குமா கிருஷ்ணா…. உனக்கு ஒண்ணு தெரியுமா கிருஷ்ணா…. வண்டி மாடு கட்டி, சந்தைக்கு வியாபாரத்திற்கு வெளியூருக்குச் செல்பவர்கள், ஊருக்குத் திரும்பும் போது, அலுப்பில் வாண்டியோட்டுபவர்கள் தூங்கி விடுவார்கள். வண்டி மாடுகள், சென்ற பாதையை உணர்ந்து தானே திரும்பி வருமாம் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : வீடு வந்து சேர்ந்திடுமா….?

மேகலா : அதெல்லாம் கரெக்டா வந்துரும் கிருஷ்ணா… அந்தக் காலங்களில், traffic-லாம் பெருசா கிடையாதுல கிருஷ்ணா…. அதனால, மாடுகளும், அசை போட்டுக் கொண்டே வீடு வந்து சேந்துரும். குறட்டை விட்டவரும் பாதுகாப்பா வந்துருவார்….

கிருஷ்ணர் : சரி…, இப்படியேவா நாளும் பொழுதும் ஓடும்….?

மேகலா : கிருஷ்ணா…. எங்க அப்பா சொல்லியிருக்காரு…, அவரு friends கூட, காளியம்மன் கோயிலுக்கு முன்னாடி விளையாடுவாங்களாம். அப்போ, தேங்காயைக் கையில் வைத்து, ஒரே அடியில் உடைக்க வேண்டும் என்று போட்டி போடுவார்களாம். எங்க அப்பா, கூடுமானவரைக்கும் முதல் அடியிலேயே உடைத்து விடுவாராம். கிணற்றில் குளிக்கும் போது, உயரமான இடத்தில் இருந்து ‘டைவ்’ அடிப்பது…. யார், ரொம்ப உயரத்திலிருந்து ‘டைவ்’ அடிக்கிறார்கள் என்பதில் போட்டி நடக்குமாம். இதெல்லாம் அப்பப்போ நடக்கும் விளையாட்டுக்கள். ‘இளவட்டக்கல்’ என்று சொல்லப்படும் கல்லைத் தூக்கி, தன் பலத்தை நிரூபிப்பவர்களும் உண்டாம்…

கிருஷ்ணர் : எல்லாம் பலத்தை நிரூபிக்கும் விளையாட்டுக்கள் தான் விளையாடுவார்கள். ஆனால், ஒண்ணு தெரியுமா மேகலா…. நாள் தோறும் உழைக்கும் மக்கள், தங்கள் தினப்படி வேலையிலிருந்து சற்று மாறுபடுவதற்கும், புதுத்துணி உடுத்துவதற்கும், கிடா வெட்டி சாப்பிடுவதற்காகத்தான், காளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில்களில் கொடியேற்றி திருவிழா கொண்டாடும் முறையை உருவாக்கியிருக்கிறார்கள். அங்கு மக்கள், ராட்டினம் சுற்றுதல், பஞ்சு மிட்டாய், ஜவ்வு மிட்டாய் சாப்பிடுதல் என்று வருடத்திற்கு ஒரு முறை ஊரே கூடி கொண்டாடுவதும், தங்கள் நிலங்களின் விளைச்சலுக்கு நன்றி சொல்லுவதும் – இதையெல்லாம் முன்னோர்கள் உருவாக்கியதே, மக்களின் மனதின் அலுப்பிற்கு மருந்தாகத்தானே மேகலா…

மேகலா : தைப்பொங்கலை மறந்து விட்டாயே கிருஷ்ணா. பொங்கலுக்கு தங்கள் வாழ்க்கைக்கு ஆதாரமான மாடுகளைக் கூட குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு என்று கொண்டாடி மகிழ்ந்து போவார்கள் கிருஷ்ணா. தன்னுடைய விளைநிலத்தில் விளைந்த நெல்பயிரைக் கதிரறுத்து, அரிசியாக்கி, தங்கள் நிலத்து கரும்பைச் சாறு பிழிந்து, தங்கள் பசுவின் பாலைக் கறந்து, தன் வீட்டு முற்றத்தில், இந்த மூன்றையும் கலந்து பொங்கலாக்கி, அன்று பறித்த காய்கறியில் குழம்பு வைத்து, சூரியனுக்குப் படைத்து, குடும்பமாக புது dress அணிந்து, சாப்பிடுவது, அந்த வருடம் முழுவதும் உழைத்த உழைப்பிற்கு கைமேல் பலன் கண்ட திருப்தி கிருஷ்ணா… யப்பா…, ஒரு 100 வருஷத்திற்கு முன் நம் இந்தியா இப்படித்தான் இருந்தது. இப்பல்லாம், வீட்டு கிச்சனில், குக்கரில் பொங்கல் வைத்து…

கிருஷ்ணர் : அதுவும் கடையில் வாங்கிய pocket அரிசி, pocket வெல்லம், pocket பால்….

மேகலா : Yes…..Yes…. பலர், சூரியனுக்குக் காட்டவே மறந்து போவார்கள்…

கிருஷ்ணர் ; நீ… உட்பட….! சரி.., பங்குனி, சித்திரையில் நடக்கும் கோவில் கொடையும், தையில் நடக்கும் உழவர் திருநாளும் வருடத்திற்கு ஒரு முறை வருவதுதானே… தினமுமா, ராத்திரி 7 மணிக்கெல்லாம் மக்கள் தூங்கி விடுவார்கள்? தூக்கம் வராத நாட்களும் இருக்கலாம்ல…. Bore அடிக்கும் நாட்களில் மக்கள் என்ன செய்வார்கள்…?

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2