எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 7
மேகலா : கிருஷ்ணா…. நம்ம நாட்டில், இராமாயணமும், மகாபாரதமும் இன்றுவரை மக்களால் மிகவும் மதிக்கப்படும் புராணங்கள். வேதங்களும், புராணங்களும், புலவர்களால் ஓலைச்சுவடியில்தானே எழுதி வைக்கப்பட்டிருந்தது. அச்சு இயந்திரம் இல்லாத காலத்தில், ஓலைச்சுவடிகளை பிரதி எடுக்க முடியாதல்லவா…. மகாபாரதத்தை, வைசம்பாயனார் எடுத்துரைத்தார். ‘சுகர்’ அதைக் கேட்டு வந்து, மற்றுள்ளோருக்கு மகாபாரதத்தைச் சொன்னார் என்று படித்தோமல்லவா… இது மாதிரி, கதை சொல்வதில் விருப்பமுள்ளவர்கள், மகாபாரதம், இராமாயணம், பாகவதம் என்று கதையை பிறருக்குச் சொல்லிச் சொல்லியே, நாடு முழுவதும் பரவியது. இப்படிக் கதை சொல்வதிலேயே விருப்பமுள்ளவர்களும் உருவாகி, புராணங்களின் தன்மை மாறாமல் பாதுகாத்து வந்திருக்கிறார்கள் இல்லையா….
கிருஷ்ணர் : ஆமாம்…., கதை சொல்வதில் விருப்பமுள்ளவர்களால் தான், நம்முடைய புராணம் நிலைத்து இருக்கிறது என்பது உண்மைதான். இதெல்லாம், இந்தப் புராணத்தைக் கேட்கப் பிரியப்படுபவர்களுக்கு மட்டும் தானே சொல்ல முடியும்….
மேகலா : இல்ல கிருஷ்ணா…. ‘சுகர்’ சொல்வது மாதிரியோ….. லவனும், குசனும் பாடியது மாதிரியோ இலக்கியமாகப் பேசினால் தானே மக்கள் கூட்டம் கம்மியாக இருக்கும். தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, நாடகம் என்ற ரீதியில், ஜனரஞ்சகமாக, அல்லி அரசாணி மாலை, சத்யவான் சாவித்திரி…., மகாபாரதம்…., ராமாயணக் கதைகள், மக்கள் மத்தியில் நடத்தப்பட்டிருக்கிறது. மக்களும் இந்தக் கதைகளைக் கேட்டு இன்றுவரை உயிரோட்டமாக அந்தக் கதைகள் இருந்திருக்கிறது கிருஷ்ணா….
கிருஷ்ணர் : Oh! தெருக்கூத்து…., absolute கிராமீயக் கலை தான்…. இது regular-ஆக நடக்குமா மேகலா…?
மேகலா : கூத்து…, வில்லுப்பாட்டு… நாடகம் இதெல்லாம், பங்குனிப் பொங்கலோடு நடைபெறும் உற்சவங்கள் தான்…. Drama troupe வைத்திருப்பவர்கள், ஊர் ஊராகச் சென்று, திருவிழா அல்லாத காலங்களில் கூட, ஊர்ப்பெரியவர்களிடம் கேட்டு, அவர்கள் போடும் சாப்பாட்டைச் சாப்பிட்டு, drama போடுவார்கள் போல… உனக்குத் தெரியுமா கிருஷ்ணா….. கிராமத்தில் ஒரு பழக்கம் கிருஷ்ணா…. வீடுகள் நெருக்கிக் கட்டப்பட்டிருக்கும். எல்லா வீடுகளுக்கும் பொதுவாக ஒரு பெரிய மரம்…., அதைச் சுற்றி மேடை அமைக்கப்பட்டிருக்கும். அதுதான் பஞ்சாயத்து office…., court-ம் கூட. பொழுது போகாத மக்கள் அங்கு அரட்டையடிக்கப் போவாங்கல்ல; அப்போ, கதை சொல்லத் தெரிந்தவர் கதை சொல்லுவார். நகைச்சுவையாகப் பேசுபவர் comedy பண்ணுவார்…. தகவல் சொல்லுபவர், தகவல் சொல்லுவார்…. புறணி பேசுவார்கள்….. கப்பலோட்டிய தமிழன், பாரதியாரின் சுதந்திர தாகம் கூட பேசப்பட்டிருக்கிறது….
கிருஷ்ணர் : Oh! ஒரு seminar மாதிரி…, அல்லது ஒரு club மாதிரி….!
மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. அப்பத்தான் radio இந்தியாவுக்குள் நுழைந்தது. பஞ்சாயத்து office-ல் மட்டும் radio வைக்கப்பட்டிருக்கும். ஊர் மக்கள் எல்லோரும் உட்கார்ந்து, news-களைக் கேட்பது…, விவசாயத் தகவல்களைக் கூடக் கேட்பார்கள். இப்படித்தான் radio-வில், entertainment பகுதியும் ஆரம்பிக்கப்பட்டு, அதிலும் கதைகள் சொல்லப்பட்டது. இந்த கதை சொல்பவர்கள், அவரவர் வீட்டு முற்றத்தில் அமர்ந்து கூட கதை சொல்லுவார்கள் கிருஷ்ணா…. அப்படிச் சொல்லுபவர்கள், வழி வழியாக, கதை போடுபவர் குடும்பமாக அறியப்படுவார்கள்.
கிருஷ்ணர் : Radio வந்துருச்சா…..
மேகலா : வெள்ளக்காரங்க period-லயே radio வந்திருச்சில்ல…. தமிழ்நாட்டில், இந்தியா சுதந்திரமடைந்தது என்ற news-ஐ All India Radio-வில், ‘பூர்ணம்’ விஸ்வநாதன் என்ற நடிகர் தான் வாசித்திருக்கிறார்.
கிருஷ்ணர் : வாவ்! Radio வந்திருச்சின்னா….,சினிமாவும் வந்து விட்டது…, இல்லையா….?
மேகலா : ஆமாம் கிருஷ்ணா… M. K. தியாகராஜ பாகவதர்….. P. U. சின்னப்பா…. உனக்கு ஒன்று தெரியுமா கிருஷ்ணா….. M. S. சுப்புலக்ஷ்மியம்மா, ‘பக்த மீரா’ படத்துல நடிச்சிருக்காங்க….
கிருஷ்ணர் : அப்படியா….. இப்போ, பேச்சு சினிமாவப் பத்தியில்ல…. கிராமத்து entertainment பத்திதான். பேச்சுக்கு கடிவாளம் போடு….
(தொடரும்)
Comments
Post a Comment