எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 15

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. எங்க ஐயாமையோட தண்டட்டியை உருக்குவதற்கு, தங்க நகை செய்யும் ஆசாரி என்ன செய்தார் தெரியுமா…. மேலே சுற்றியிருந்த தகடை, chocolate paper மாதிரி உரித்து எடுத்து விட்டார். அப்பத்தான் எங்களுக்குத் தெரியும்…. தண்டட்டியில், தங்கம் கொஞ்சம், அரக்கு நிறைய என்று…

கிருஷ்ணர் : Oh……! உங்க ஐயாமை காலத்துக்குப் பிறகு, யாரும் தண்டட்டி அணியவில்லையோ….

மேகலா : எங்கள் உறவுகளில், எங்க ஐயாமா generation-க்குப் பிறகு வந்தவர்கள் யாரும் காது வளர்க்கவில்லை கிருஷ்ணா…. காது வளர்த்துக் கொடுப்பவர்கள் யாரையும் எனக்குத் தெரியவும் தெரியாது கிருஷ்ணா….. ஆனால், ‘தோடு’ போடும் இடத்தின் மேல் பகுதியில், ‘கொப்பு’ என்ற nut-screw type என்ற நகையை அணியத்தான் செய்தார்கள். உனக்குத் தெரியுமா கிருஷ்ணா…. ஒற்றைக்கல் கம்மலை, ‘கடுக்கன்’ என்பார்கள் கிருஷ்ணா…. இந்தக் கடுக்கனை பொதுவாக ஆண்கள்தான் பெரும்பாலும் அணிவார்கள் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Oh! ஆண்களுக்கு ‘கடுக்கன்’ என்றால், பெண்களுக்கு….

மேகலா : ஏழுகல் தோடு, தண்டட்டி, மூக்குத்தி, புல்லாக்கு….

கிருஷ்ணர் : மூக்குத்தி தெரியுது…. புல்லாக்குன்னா….

மேகலா : மூக்கின் துவாரங்களுக்கு நடுவில் மாட்டுவது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : முகத்தின் ஒரு பகுதியையும் விடுவதில்லை போல….

மேகலா : கிருஷ்ணா…. இந்த நகைகளெல்லாம், எளிய மக்கள் அணிவது… அந்தக் காலங்களில் வசதியானவர்களும் இருந்திருக்கிறார்கள் அல்லவா…. அவர்கள், ‘நெற்றிச்சுட்டி’…, இப்போ, ‘hair clip’… என்று சொல்கிறோமே…. அது மாதிரி, ‘நிலாப்பிறை’, ‘பில்லை’ என்ற நகைகள் அணிந்திருக்கிறார்கள்….

கிருஷ்ணர் : கழுத்து நகைகளை நீ சொல்லவில்லையே….

மேகலா : பொதுவாக, வசதியானவர்கள், எளிய மக்கள் எல்லோரும் ‘அட்டிகை’ வைத்திருப்பார்கள் கிருஷ்ணா. அதே மாதிரி, இப்போ ‘கடா’ என்று சொல்லப்படும் screw type வளையலாலான ‘காப்பு’ம் பொதுவாக எல்லோரிடமும் இருக்கும்…. இதற்கும் மேலே, ரெட்டை வடச் chain, காசு மாலை என்ற நகைகளெல்லாம் வசதியானவங்க வீட்டில் இருக்கத்தான் செய்யும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஏன் மேகலா…., எளிய வாழ்க்கை வாழுபவர்களிடமும் தங்க நகை இருக்கத்தான் செய்தது, இல்லையா…?

மேகலா : அந்தக் காலங்களில், பணப்புழக்கம் அதிகம் இல்லாவிட்டாலும், மக்கள் எல்லோரும் பாடுபட்டு, பண்ணையம் பார்த்து, தாங்கள் சம்பாதிக்கும் 1/4 துட்டு, முக்காத்துட்டைக் கூட செலவழிக்கத் தெரியாமல், ரொம்ப எளிமையாக வாழ்ந்தவர்கள். ஊருக்கு ஒண்ணு ரெண்டு பேர்தான் ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கிப் போட்டு, விவசாயம் பார்த்தவர்களாக இருப்பார்கள். மற்றப்பேரெல்லாம், காணி நிலத்தில், அவரவர்களே வேலை செய்து, கூலிக்கும் வேலை பார்த்து, ஆடு, மாடு வளர்த்து…. இப்படி சம்பாதித்த பணத்தில், ஒன்றிரண்டு நகைகளை வைத்திருக்கத்தான் செய்வார்கள். ஒரு காப்பு அணிந்தாலும், தங்கத்தை உருட்டி கனமாகப் போட்டிருப்பார்கள். தங்கமும் விலை கம்மியாகத்தான் இருக்கும்…. வருஷத்திற்கொரு நகை வாங்கணும், சேலைக்கு மேட்சாக ‘அட்டிகை’ போடணும் என்றெல்லாம் அவங்களுக்குத் தெரியாது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, கள்ளம் கபடம் இல்லாத எளிய வாழ்க்கை, எத்தனை அழகானது…. அவங்க அணியும் தண்டட்டி மாதிரி…, இல்லையா….?

மேகலா : ஆனா ஒண்ணு கிருஷ்ணா…. வெள்ளந்தியான, பாமரத்தனமான, எளிமையான நம்ம கிராமத்து முன்னோர்கள் அணிந்த நகைகளாகட்டும், உடைகளாகட்டும், அதை basic-ஆக வைத்துத்தான், இன்றும் புதிய புதிய நகைகளை, உடைகளை வடிவமைக்கிறார்கள் கிருஷ்ணா… கழுத்தில் close ஆக அணிந்த அட்டிகை, இன்று choker என்று அணிகிறார்கள். ’காப்பு’ தான் இன்று ‘கடா’வாகியிருக்கிறது. அதிலும், இன்றைய தலமுறையினரிடம் antique jewellery-க்கு பெரிய வரவேற்பே இருக்கு கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : எந்தக் காலங்களிலும் அப்படித்தானே மேகலா… நேற்றைய fashion, என்றும் தொலைந்து போவதில்லை. கொஞ்ச நாள் கழித்து, மறுபடியும் fashion ஆகும்…. இலக்கியங்களிலிருந்து ஒரு குறிப்பையும் சொல்லவில்லையே மேகலா….

மேகலா : பழைய fashion என்றும் மறைவதில்லை என்று நீ சொல்வது உண்மைதான் கிருஷ்ணா… ‘சிலப்பதிகாரம்’ என்ற இலக்கியம், காற்சிலம்பை வைத்து எழுதப்பட்ட கதைதானே கிருஷ்ணா…. சிலப்பதிகாரம் படிக்கும் போது, கண்ணகி அணிந்த நகைகளையெல்லாம் பார்க்கும் போது, இந்த உலகத்தில் மனிதர்கள் பிறப்பெடுத்த போதே, தன்னை அலங்கரித்துக் கொள்ளும் ஆசையும் அவர்களுக்கு இருந்திருக்கிறது என்று புரிகிறது. சிலம்பு ஒரு மாதிரி நடுவில் வளைந்து இருப்பது மாதிரி, ஓவியத்தில் வரைகிறார்கள் கிருஷ்ணா…. ‘தண்டை’ என்பது, வளையல் மாதிரி இருக்கும். இந்தத் தண்டை என்ற நகையைக் காலில் அணிந்திருக்கிறார்கள். இப்போ, இதெல்லாம் கிடையாது என்றுதான் நினைக்கிறேன். அழகழகான கொலுசுகளைத்தான் சின்னப் பிள்ளையிலிருந்து, பெரியவங்க வரைக்கும் அணிகிறார்கள்…..

கிருஷ்ணர் : ராமர் கூட தன்னுடைய அடையாளமாக மோதிரத்தைத்தானே ஆஞ்சநேயரிடம் கொடுத்தனுப்புகிறார். அதைப் பார்த்த சீதாப்பிராட்டியும் கண் கலங்கி, தன்னுடைய சூடாமணியைத் திருப்பிக் கொடுத்து, தன்னைப் பற்றிய நினைப்பால் வாடும் ராமரிடம் கொடுக்கச் சொல்லுவாரில்லையா…. எந்தக் காலமாக இருந்தாலும், நகைகள் மக்கள் மனதில் ஒரு தனியிடம் பிடித்திருக்கிறது என்பது உண்மைதான்…

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. அதனால்தான், மனுஷங்க, தனக்குப் பிடித்த நகைகளை கடவுளுக்கும் போட்டு அழகு பார்க்கிறார்கள்.

கிருஷ்ணர் : எப்படிச் சொல்ற….

மேகலா : நாம எந்தக் கோயிலுக்குப் போய்ப் பார்த்தாலும்…., அங்குள்ள மூர்த்தங்களையும், கடவுள் சிற்பங்களையும் பார்க்கும் போது, உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரைக்கும், நகைகளால் அலங்கரித்து, தங்கள் கற்பனையை வெளிப்படுத்தியிருப்பார்கள் கிருஷ்ணா… நடை, உடை, பாவனை என்று நீ கேட்டாயல்லவா… எளிய கிராமத்து மக்களின் dress, நகை, நகையார்வம் இதையெல்லாம் பற்றி ஓரளவு பார்த்து விட்டோம்…

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2