’வலிமை’ என்பதா...? 'Strong personality' என்பதா...? - பகுதி 1

கிருஷ்ணர் : வா…. வா…. மேகலா…. எப்படி இருக்கிற….?

மேகலா : பிள்ளையார் சதுர்த்தியிலிருந்து, busy-யாக இருக்கேன் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : அப்போ…. நல்லாதான் இருக்க…. சரி…, அடுத்து என்ன topic-அ எடுத்திட்டு வந்திருக்க…..?

மேகலா : ‘வலிமை’ என்ற topic-ல பேசலாம் என்று நினைக்கிறேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : என்ன மேகலா… ‘அடிதடி’ ரகளை…. பயில்வானோட சகவாசம் என்று ஏதாவது ஆரம்பிச்சிட்டயா… ‘வலிமை’ என்ற தலைப்பில் பேசலாம் என்கிறாய்…!

மேகலா : ஒண்ணுமே தெரியாதவர்களுக்கு விளக்கம் கொடுக்கலாம். எல்லாம் தெரிஞ்ச குசும்புக்காரன் நீ…. வலிமை என்றால், ஆழம் பார்த்து அம்பு எய்பவன் என்பது தெரியாமலா நீ விளக்கம் கேட்கிறாய்…

கிருஷ்ணர் : Oh! நீ, ‘strong personality’-யப் பத்தி பேசப் போகிறாயா…. சரி…. பேசலாம்….. நீ என்ன சொல்லப் போகிறாய் என்று நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

மேகலா : கிருஷ்ணா….. ‘வலிமை’ என்ற சொல்லே மந்திரம் மாதிரி எனக்குள்ளே ஒரு strength கூடுது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Strength கூடுதா…… இன்னும் ஒரு முறை உச்சரித்துப் பார்…. உன் பலம் என்னன்னு உனக்கே தெரியும்…. நீ எத்தனை தடைகளைத் தாண்டி ஜெயித்திருக்கிறாய் என்று புரியும். இங்க பாரு மேகலா…. ஒவ்வொரு மனிதனும், ஏதாவது ஒரு சமயத்தில், தான் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்க வேண்டும். அப்பத்தான், தான் எவ்வளவு வலிமையானவர் என்று அவருக்கே புரியும்….

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. நீ சொல்றது correct….. வலிமை பற்றிப் பேசும் போதெல்லாம்…., நம்மை விடுத்து யார் யாரெல்லாம் வலிமையானவர்கள் என்று நாம் நினைக்கிறோமோ, அவர்களைப் பற்றி நினைப்போமே தவிர, அவரவர்கள் தன்னை வலிமையானவர் என்று யோசிப்பதே இல்லை….

கிருஷ்ணர் : எப்படி…. வலிமை என்றவுடன், காந்தியை நினைப்பாய்….., கலாமை நினைப்பாய்…., காமராஜரை நினைப்பாய்…., M. G. R -ஐ நினைப்பாய்…. உங்க அப்பாவை, உங்க அம்மாவை நினைப்பாய்…. ஆனால், உன்னை நினைக்கவே மாட்டாயோ….

மேகலா : கிருஷ்ணா…. அவங்கெல்லாம் சரித்திரம் படைத்தவங்க…. நானெல்லாம் அப்படியா…. அவங்க எங்கே…. நான் எங்கே…..

கிருஷ்ணர் : ஸ்…. ஸ்டாப்…. ஸ்டாப்….. ஆமாம், ’வலிமை’யுள்ளவர்கள், சாதாரண மனுஷங்களுக்கு அப்பாற்பட்டவங்கன்னு நினச்சியா… நம்மோடு சேர்ந்து நடப்பவர்கள்தான்; வேற உலகத்தில் இருந்து வந்தவர்கள் கிடையாது….. சரி…. சரி….. பேச்சு சீரியஸாகவே போகிறது…. இப்படியே பேசினால், சுவாரஸ்யமான தகவல்கள் வராது…. சரி…, உண்மையிலேயே உன் மனதில் மிகவும் உறுதியாக, இவர்கள்தான் வலிமையானவர் என்று சொல்ல வைப்பவர் யார்….?

மேகலா : கிருஷ்ணா…. இதற்கு ஒரு சம்பவம் சொல்லவா….

கிருஷ்ணர் : இதென்ன கேள்வி…. சொல்லு….

மேகலா : கிருஷ்ணா….புறநானூற்றுப் பாடலில் வரும் சம்பவம் ஒன்று என் நினைவுக்கு வருது. காட்டில் விறகு பொறுக்கப் போகும் பெண், தன் இடுப்பில் குழந்தையைக் கொண்டு செல்கிறாள். அங்கு உணவுக்குத் தேவையான பொருள் கிடைத்தால் எடுத்து வரலாம் என்று முறத்தையும் கையில் எடுத்துச் செல்கிறாள். விறகு பொறுக்கும் இடத்தில், குழந்தைக்கு தூளி கட்டி தூங்கச் செய்கிறாள். அப்போ பாத்து, புலி உறுமும் சப்தம் கேட்டது….. திரும்பிப் பார்த்தால்…., பாயத் தயாராய் நிற்கிறது புலி…. ஐயோ…. அப்பா…. பூவாய் நிற்கும் அந்தப் பெண்ணுக்குள் எங்கிருந்துதான் அத்தனை வீரம் வந்ததோ….. கையில் எதுவும் ஆயுதம் கிடையாது; பிள்ளையைக் காப்பாற்றணும் என்ற நினைப்பு மட்டும் தான். சரேலென கொண்டு வந்த முறத்தாலேயே புலியை விரட்டியடித்தாள்….

கிருஷ்ணர் : Yes….! யாராயிருந்தாலும்…. ‘அவர் பலசாலியாய் இருக்கணும் என்று அவசியமில்லை….’ ஆபத்தோ…, நெருக்கடியோ தன்னை பயமுறுத்தும் நேரத்தில் வரும் துணிச்சலை அளவிடவே முடியாது. இது ஆபத்தில் கை கொடுக்கும் ‘வலிமை’. ஏன் மேகலா…, ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ – என்கிறார்களே…. அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லேன்…..

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2