அழகு - பகுதி 13
மேகலா : கிருஷ்ணா…. நான் சின்னப் புள்ளையா இருந்த போது, எங்க Cap factory-க்குப் போவோம்ல… அங்கு, cap factory building தனியா இருக்கும்…. அந்த இடத்துக்கு செல்வதற்கு முன்பே…, நமக்கு ‘டப்…குப்பு’னு வெடிக்கிற சப்தம் ‘ரிதமிக்கா’ கேட்கும்….
கிருஷ்ணர் : ஏன் அப்படி….
மேகலா : ‘பொட்டுக் கேப்’புன்னு சொல்லப்படுவது, ஒரு சின்ன பொட்டு size, paper-க்கு நடுவில் கொஞ்சமாக மருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். அதை பொம்மை துப்பாக்கியில் வைத்து சுட வேண்டும். சுடும் போது, ‘படார்’ என வெடி சப்தம் கேட்கும்… இந்த பொட்டுக் கேப்பை எப்படி தயாரிப்பாங்கன்னா, ஒரு பெரிய சிவப்பு கலர் sheet-ல் மருந்து ‘dot’, ‘dot’ ஆக வைத்து, இன்னொரு sheet-ஐ ஒட்டி விடுவார்கள். இதற்கு அச்சு இயந்திரம் மாதிரி இருக்கும் அந்த இயந்திரத்தின் மேஜை மாதிரியான பகுதியில் பெரிய sheet-ஐ வைப்பார்கள். ‘Dot’ போடும் இன்னொரு பகுதி move ஆகி, மருந்தால் ‘dot’ வைக்கும். அதன் மீது இன்னொரு sheet-ஆல் ஒட்டுவார்கள். அப்பொழுது அந்த மருந்துக்கு cutting machine-ஆல் கொஞ்சம் அழுத்தம் கிடைக்கும். அத்தோடு பொட்டு மாதிரி paper-ல் இருந்து cut ஆகி விழும். அப்படி அழுத்தம் கொடுக்கும் போது, சில ‘dots’ ’பட்டு பட்டு’னு வெடிக்கும். இது சாதாரணமாக நடைபெறும் நிகழ்ச்சிதான். ஆனால், அந்த வேலை மும்முரத்தில் பட்டாஸ் வெடிக்கும் நிகழ்ச்சி, பார்க்கச் செல்லும் நமக்கு பரவசமாக இருக்கும். வேலை செய்பவருக்கு இது அன்றாட நிகழ்ச்சி. இதைப் பார்த்து ரசிப்பதற்காகவே, அப்பா ’factory-க்குப் போகலாமா’ என்றவுடன் குதிச்சிக்கிட்டு ஓடுவோம் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : வாவ்! சாதாரண வேலையில் கூட, ‘உழைப்பு’ எத்தனை அழகாக உண்மையாக இருக்கிறது. மேகலா…., மனிதர்களின் உழைப்புதான் ‘அழகு’ன்னா, இந்த இயந்திரங்கள் உழைப்பும் என்ன நேர்த்தியாக இருக்கு….
மேகலா : ஐயோ கிருஷ்ணா…, நீயும் பார்த்தயா கிருஷ்ணா…
கிருஷ்ணர் : நீ எதைப் பார்த்த….
மேகலா : மெஷினே ‘கேக்’ செய்யும் அழகைப் பார்த்திருக்கிறாயா…. பெரிய லெவல்ல cake செய்பவர்கள், factory மாதிரி பெரிய இடத்துல, மாவு பிசைவதற்கு மெஷினு…, அதை cut பண்ணி shape பண்ணும் மெஷினு…, அப்புறம் oven-ல வைத்து எடுத்த cake-ஐ wrap பண்ணுவது மெஷினு…., அதை இன்னொரு இடத்துக்கு pass பண்ணுவது மெஷினு…., அப்புறம் பெரிய அட்டைப் பெட்டியில் pack பண்ணுவது வரையும் automatic-ஆக செய்கிறார்கள். இந்த cake மட்டுமல்ல கிருஷ்ணா… நிறைய eatables, biscuit, veg. bun, chocolate என்று இந்த மாதிரியான eatables தயார் பண்ணும் factory-யில் இந்த உணவுப் பொருட்கள் தயாராவதை எத்தனை முறை என்றாலும் அலுக்காமல் பார்க்கலாம் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : என்னதான் இயந்திரத்தனமான அழகை நீ சொன்னாலும்…, மனிதனின் வியர்வையின் அழகுதான் உன்னதம்… உண்மையா…, இல்லையா….?
மேகலா : அது என்னவோ உண்மைதான் கிருஷ்ணா… ‘கைசுத்து முறுக்கு’ நீ சாப்பிட்டிருக்கயா கிருஷ்ணா… அதைச் சுத்தித் தருவதற்கும் machine இருக்கு கிருஷ்ணா. ஆனாலும், கையால் சுத்தும் முறுக்கின் சுவையே அலாதிதான் கிருஷ்ணா… இந்த முறுக்கை கையாலேயே சுத்தி கொடுக்கணும்; அதுவும் பெரிய லெவல்ல செஞ்சி கொடுக்கணும் என்று நினைத்த ‘அடையார் ஆனந்த பவன்’ கடைக்காரர்கள், இதற்கென்றே பிரத்யேக முயற்சி எடுத்து, நிறைய கைமுறுக்கு சுத்தத் தெரிந்த பெண்களை வேலைக்கு அமர்த்தி, கையாலேயே சுத்தச் செய்கிறர்கள். மாவு பிசைவதை machine-ஆல் தான் செய்கிறார்கள் என்றாலும், முறுக்கு சுத்துவதற்கு, ஒரு building நிறைய பெண்கள் அமர்ந்து, கலந்து கொடுக்கும் மாவை ஒரு பெரிய plate-ல் சுத்தி வரிசையாக அடுக்கி வைக்கிறார்கள். ஒருவர், அந்த பெண்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு சுற்றி வருகிறார். முறுக்கு சுற்றிய plate நிறைந்தவுடன், அந்த plate-ஐ எடுத்து, சுற்றி வருபவரிடம் தருகிறார்கள். அவர் அதை எடுத்துக் கொண்டு போய், சுட்டு எடுப்பவரிடம் தருகிறார். முறுக்கு சுடப்பட்டு தயாராகிறது கிருஷ்ணா. ஒரு நாள் முழுக்க இந்த வேலை நடைபெறுகிறது. இதில் என்ன special என்றால், அந்தப் பெண்கள் கையில் எடுக்கப்பட்ட மாவு, நெளிந்து நெளிந்து, சுற்றி சுற்றி முறுக்காக உருமாறும் போது, ஒரு கைதேர்ந்த குயவன் கையில் ஈர மண் பானையாக உருவெடுக்கும் நேர்த்திதான் தெரியும் கிருஷ்ணா…. மார்கழி மாசக் கோலம் போல…, மழை வெறித்த மாலை நேரத்து வானவில் போல…., என்ன உதாரணம் சொன்னாலும் பொருந்திப் போகும் அழகு…. ஆஹா….
கிருஷ்ணர் : ஓஹ்ஹோ… ‘YouTube’-ல் ‘அடையார் ஆனந்த பவன்’ கைசுத்து முறுக்கு செய்வதைத்தான் பார்க்கிறாயோ….
மேகலா : Food products செய்யும் முறையை, அதிலும், mass level-ல் செய்வதைக் காட்டினால் பார்க்கத்தான் செய்வேன் கிருஷ்ணா…. இதெல்லாம் இருக்கட்டும் கிருஷ்ணா… உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும் கிருஷ்ணா…..
(தொடரும்)
Comments
Post a Comment