அழகு - பகுதி 17

கிருஷ்ணர் : நீ sea plane-ல் போயிருக்கிறாயா மேகலா….?

மேகலா : பார்த்து ரசிச்சிருக்கேன் கிருஷ்ணா. கார்த்தி, ஆதியெல்லாம் கூட்டிக் கொண்டு ‘மால்தீவ்ஸ்’ போயிருந்தோமில்ல கிருஷ்ணா. அப்போ நாங்க resorts-க்குப் போயிருந்தோமில்ல…. அப்போ, resorts-க்கு tourists-களைச் சுமந்து கொண்டு sea plane வரும். அதைப் பார்ப்பதற்காக, என்னைப் போல சிலரும் கரையோரம் நின்றிருந்தோம். தன் சிறகை விரித்து பறந்து வந்த விமானம், தாழ்ந்து பறந்து, கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கி சரேலென தண்ணீரில் சீறிப் பாய்ந்து கொண்டு ஓடி வந்து கடலில் மிதக்கிறது. அப்பொழுது boat-க்கு நங்கூரம் போடுவது போல, விமானத்தை நிறுத்துவதற்கு, ஒரு பெரிய கயிற்றால், அருகிலிருக்கும் நடைபாதையில் உள்ள தூணில் கட்டி நிறுத்திய பிறகு, பயணிகளும், தள்ளாடிக் கொண்டு, நிற்கும் விமானத்திலிருந்து, மிகக் கவனமாக வெளியே வருகிறார்கள். அவர்களை pick-up பண்ணுவதற்காக ஒரு மிதவை platform காத்திருக்கிறது. அந்த platform-ல் கட்டப்பட்டிருக்கும் ஒரு கயிறை விமானத்தோடு சேர்த்து கட்டுகிறார்கள். பயணிகளை, platform-ல் இறக்கி விடுகிறார்கள் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : இறக்கி விடுகிறார்களா….

மேகலா : ஆம் கிருஷ்ணா…. அந்த நேரத்தில் விமானம் கூட, மிதவைக் கப்பல் தான் கிருஷ்ணா….. அங்கிருந்து platform-க்குள் வருவது என்பது thrilling-கான சமாச்சாரம் இல்லையா…. என்னைப் போல பயந்தாங்கொள்ளிகளை இறக்கிதான் விடுகிறார்கள் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Oh…..! ரொம்ப adventurous தானோ….. ஆனாலும், இந்த thrilling-ஐ அனுபவிக்கத்தானே பயணிகளும் விரும்புகிறார்கள்….

மேகலா : நான் சொன்னது resorts-ல் land ஆகும் plane பற்றி…. take-off என்பது பார்ப்பதற்கு ரொம்ப அழகாய் இருக்கும் கிருஷ்ணா…. நாங்கள் மாலை நேரத்தில், கரையோரம் கூட்டமாய் நண்டுகள் ஒதுங்குவதைப் பார்த்து அதிசயப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஹரி, ‘அம்மா, ஒரு plane, take-off ஆகப் போகிறது. வாங்க, போய்ப் பார்க்கலாம்’ என்றான். அவன் சொல்லி விட்டு, வேகமாக, plane, take-off ஆகும் இடம் நோக்கி சென்று விட்டான். நான் மெதுவாக, கடற்கரை மணலில் கால் புதைய நடந்து சென்று கொண்டிருந்த போது, தண்ணீரில் இடமிருந்து வலமாக விமானம், சற்று வேகமெடுத்து திரும்பி, நான் நடந்து வரும் திசை நோக்கி, ஒரு speed boat மாதிரி சீறிப் பாய்ந்து வந்து கொண்டிருந்தது. நான் camera-வைக் கையில் எடுத்து பரபரப்பாக, on பண்ணி, video mode-க்கு கொண்டு வந்து கொண்டிருக்கும் போதே, என்னை cross பண்ணி விமானம் வேகமாய்ப் பாய்ந்து வந்து மேலெழும்பத் தொடங்கியது….

கிருஷ்ணர் : படமெடுத்தாயா….? இல்லையா….?

மேகலா : Camera வழியாகவே பார்த்து விட்டேன் கிருஷ்ணா…. படமும் எடுத்து விட்டேன். அமைதியான கடல், விமானத்தின் சீண்டலால் ஆக்ரோஷமாகி, நீர்த் திவலைகளை அள்ளித் தெளித்த அற்புதமான காட்சியை படமெடுத்தும் விட்டேன்….. ‘சிவகாசி சமையலில்’ upload-ம் பண்ணி விட்டேன்….

கிருஷ்ணர் : வாவ்…., விமானப் பயணமே அற்புதமானது…., ஒரு பருந்து பறப்பது மாதிரியான தோற்றத்தில் அண்ணாந்து பார்ப்பதே அழகு…. அதிலும், கடலின் மேல் தளத்தில் மிதந்து வந்து, சீறிப் பாய்ந்து பறப்பது என்பது, கண்கொள்ளாக் காட்சி…. சரி…, கடல் பயணமும் நன்றாயிருக்குமோ…. நீ ஏதாவது கப்பலில் travel பண்ணியிருக்கயா மேகலா….?

மேகலா : நான் கப்பலுக்குள் ஏறிக்கூடப் பார்த்ததில்லை கிருஷ்ணா…. ஆனால், speed boat-ல் travel பண்ணியிருக்கிறேன் கிருஷ்ணா….. மால்தீவ்ஸில், airport-லிருந்து ‘மாலே’க்கு செல்வதற்கே speed boat-ல் தான் போக வேண்டும்….. resorts-க்கு போவதற்கு ஒரு மணி நேரம் speed boat-ல் பயணம் செய்த அனுபவம் உண்டு….. submarine என்று சொல்லப்படும் நீர்மூழ்கிக் கப்பலில், கடலின் ஆழத்திற்குள்ளும் சென்ற அனுபவம் இருக்கு கிருஷ்ணா….

(தொடரும்)


Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1