அழகு - பகுதி 18

கிருஷ்ணர் : சரி…., விமானம் take-off ஆகும் போது எப்படி இருக்கும்? நீ எப்படி அதை enjoy பண்ணினாய்….?

மேகலா : கிருஷ்ணா…., நானெல்லாம் ஆகாய விமானத்தில் பறப்பேனா என்பதே என்னாலேயே நம்ப முடியாதது. நான் airport-க்குள் நுழைந்து, boarding pass எடுத்து, luggage-ஐ, belt- ல் ஏற்றி விட்டு, checking எல்லாம் முடித்து, விமானத்திற்குள் நுழைந்ததே அதிசயமான ஒன்று. அதிலும் முன்னப் பின்ன அறியாத ஒரு சூழலில் என்னைப் பொருத்திக் கொள்ளவே திணறிப் போனேன் கிருஷ்ணா…. அதிலும், U. S. A போன போது, Bangalore to Delhi, domestic plane-ல் சென்று, domestic airport-க்குள் நுழைந்து, அங்கிருந்து international airport-க்குப் போகணும். அங்கு, U. S. A – க்குச் செல்லும் விமானத்தின் பிரிவு பார்த்து செல்ல வேண்டும்…, அதுவும் தனியாக…. எப்படிப் போனேன்…., எப்படி வந்தேன் என்று…. இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை. இதெல்லாம் முடிந்த பின், விமானத்திற்குள், எனக்கான seat-ஐ சரி பார்த்து அமர்ந்தவுடன், ஒரு…, நிம்மதி, அதற்கும் மேல ஒரு குஷி வரும் கிருஷ்ணா…. அதை வார்த்தையால சொல்ல முடியாது….

கிருஷ்ணர் : விட்டால், seat-லேயே குதிச்சிருப்பயோ….

மேகலா : அப்படித்தான் தோணும் கிருஷ்ணா… அக்கம் பக்கம் பார்த்து…., நம்ம பாமரத்தனத்தை கட்டுப்படுத்தணும்…. ஆனாலும், காரணமே இல்லாமல் முகத்தில் பெருமை கலந்த சிரிப்பு வழியும்…. Air-hostess, நாம belt மாட்டிட்டோமா, hand bags-ஐ மேல cabin-ல போட help பண்ணணுமா என்று நோட்டமிட்டுக் கொண்டே வருவாளா…. அவளுடைய hair style, dressing, make-up-ஏ இல்லாத மாதிரி போடப்பட்டிருக்கும் make-up – இதையெல்லாம் பார்த்துக்கிட்டே என்னுடைய enjoyment, start ஆயிரும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : நல்லா ஜொள்ளு விட்டிருக்க….

மேகலா : இது ஜொள்ளு இல்ல கிருஷ்ணா…, ரசனை… அக்கம் பக்கம் உட்கார்ந்திருப்போரை நோட்டம் விட்டுக் கொண்டே, seat belt-ஐ மாட்டத் தெரியாமல் முழித்து, ஒரு வழியாக அசடு வழிந்து settle ஆவோம். மெள்ள, விமானம் தான் நின்றிருக்கும் இடத்திலிருந்து திரும்பும் இல்லையா… அப்போது மனசுக்குள் இருக்கும் நம்ம கவிதைப் புயல் மணிமேகலை, open பண்ணிய soda பாட்டில் மாதிரி உற்சாகமாகி விடுவாள் கிருஷ்ணா… நுரைத்துக் கொப்பளிக்கும் பரபரப்பை, சந்தோஷத்தை அடக்க முடியாமல், seat-ன் முனைக்கு வந்து விடுவோம். ஜன்னலின் வழியாக, தரையிலிருந்து விமானம் எப்பொழுது மேலெழும்பப் போகிறது…, நாமும் சாய்ந்து விடுவோமா என்று ஆர்வத்துடன் உன்னிப்பாக கவனித்தால், விமானம், take-off ஆகும் ஓடுதளத்திற்கு வந்து விடும். நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே…, விமானம் பேரிரைச்சலோடு தடதடவென்று வேகமெடுக்கும். அந்த நேரத்தில் ஓடுதளம் (runway), clean road ஆக இருக்கும். வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் விமானம், சற்றே சாய்ந்து மேலெழும்பிக் கொண்டிருக்கும். ஓடி வந்த ஓடுதளம், விமானத்தின் ஜன்னலிலிருந்து புல்தரையோடு சேர்ந்து தெரிய ஆரம்பிக்கும். நம் காதுக்குள் ஏதோ ஒன்று அடைத்துக் கொள்ளும். இப்படி, அப்படி அசைந்தால், விமானம் புரண்டு விடுமோ என்ற பயமும் கூடவே வரும். எதிரில், map-ல் விமானம் எத்தனை மீட்டர் உயரத்தில் சென்று கொண்டிருக்கிறது என்ற graph தெரியும். சிறிது நேரத்தில் அடைபட்ட காதுகள் விலகி விடும்….. air-hostess அவர்களுடைய பணிகளை தொடர ஆரம்பிப்பார்கள்…. ஒரே சீராக விமானம் பறக்க ஆரம்பிக்கும்…

விமானம் take-off ஆவது மட்டும் பரபரப்பான, அழகான தருணம் என்பதில்லை கிருஷ்ணா…. Land ஆவதும்…, பரபரப்பான நிமிடங்கள் தான் கிருஷ்ணா…. சிறகு விரித்துப் பறப்பதை அனுபவிச்ச நமக்கு, land ஆகும் போது…, மக்கள் றெக்கை கட்டி பறப்பதை பார்க்கணும் கிருஷ்ணா…. சீராக பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் தரையிறங்கப் போவதற்கான அறிவிப்பு வந்தவுடனேயே, பயணிகள் முகத்தில் ஒரு பரபரப்பு வரும் பாரு…. அட.., அடா…, seat belt-ஐ மாட்டுவதும், ஜன்னல் வழியே எட்டிப் பார்ப்பதுமாய்…, ஒரு அமைதியான பரபரப்பைப் பார்க்கலாம் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : அதென்ன அமைதியான பரபரப்பு….

மேகலா : விமானத்திற்குள் ஒரு பயம் கலந்த discipline இருக்கும் கிருஷ்ணா… பஸ்சுனா… இறங்கும் இடம் வருவதற்கு முன்னமேயே, எழுந்து நின்று, luggage-ஐ எடுத்து கால்களுக்கிடையில் வைத்துக் கொண்டு, பஸ்சின் மேலே இருக்கும் கம்பியைப் பிடித்துக் கொண்டு ஆடிக் கொண்டே வருவாங்க…. Flight-ல் அப்படிலாம் பண்ண முடியாதுல கிருஷ்ணா…. நாம எழுந்து நின்னா, விமானம் புரண்டு விடுமோ என்ற பயம் எல்லோர் முகத்திலும் அப்பட்டமாகத் தெரியும் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : முதல்ல… உன் முகத்தில் பயம் தெரியும் என்று சொல்லு…. சரி.., அப்புறம் என்ன ஆச்சு…. விமானம் land ஆனதா….

மேகலா : மக்கள் ரொம்ப அமைதியா இருக்கும் போதே, பறந்து வந்த விமானம் ஒரு jerk-ஓடு தரையைத் தொடும் கிருஷ்ணா…. தொட்ட வேகத்தில் மறுபடியும் runway-யில் தடதடவென ஓடி வரும்…. மக்களின் பொறுமையும் விலக ஆரம்பிக்கும். விமானம் பறந்து வந்த களைப்பே இல்லாமல், தனக்கான இடத்தில் நிற்கும். Airport-க்குள் செல்வதற்கான பாதையில் connect ஆகும்படிக்கு விமானம் நின்றவுடன்…. அடேயப்பா…. மக்களின் பரபரப்பு பல மடங்காகி விடும் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : எதற்கு இந்த பரபரப்பு….

மேகலா : என்ன கிருஷ்ணா…., இப்படிச் சொல்லிட்ட…. பயணிகள் மட்டும் தான வெளியேறியிருக்காங்க…. விமானம் ஏறுவதற்கு முன்னேயே நம்மை விட்டுப் பிரிந்து சென்ற luggage வரணும்ல… விமானத்திலிருந்து மொத்தமாக எடுத்து வரும் luggage-ஐ, round belt ஓடிக் கொண்டிருக்கும்…, அதில் போட்டு விடுவார்கள். அவரவர் luggage-ஐ அவரவர் பார்த்து எடுத்துக்கணும். அதற்குத்தான் இத்தனை பரபரப்பு….

கிருஷ்ணர் : சரி…, அதற்கு ஏன் பரபரப்பு…?

மேகலா : முதலில் வரும் luggage, நம்பளோடதா இருக்கணுங்கிற எதிர்பார்ப்புதான்…. ஒரு தடவை எடுக்காமல் miss பண்ணிட்டா…, அந்த round முழுக்க ஓடி…., மறுபடியும் நாம் நிற்கும் இடம் வரும் வரைக்கும் காத்திருக்கணும்… அதிலும், 2 or 3 luggage கொண்டு சென்றோமானால், ஒன்றை எடுத்து விடுவோம். அடுத்து வருவது, நம்மோடதா இருக்காது…. மேலும் காத்திருக்கணும்… அந்த இடமே, ஓடி, ஓடி, luggage எடுப்பதில் கவனமாக இருக்கும் passengers-இன் பரபரப்பால், அந்த இடமும் சுறுசுறுப்பாகவும், அழகாகவும் தெரியும் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : Oh! விமானத்தில் ஏறுவதிலிருந்து, இறங்கி உன் luggage-ஐ எடுக்கிற வரைக்கும் பரபரப்பாகத்தான் இருந்திருக்கிறாய்… பரவாயில்லை மேகலா…. நல்லாத்தான் ரசிக்கிறாய்….

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. சில situation ரொம்ப exciting-ஆ இருக்கும்… அந்த நாள் என்று வரும்ணு காத்திருந்து காத்திருந்து, அந்த நாள் வந்தவுடன், ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து மகிழ்வது ஒரு சுகம்… விமானம், train முதலான வாகனங்களில் பயணம் செய்வது சின்னப் புள்ளைகளுக்கு மட்டுமில்லை கிருஷ்ணா…. மனசுக்குள்ளே ரகசியமாக என்னைப் போன்றோரும் ரசிப்பதுதான் அந்தப் பயணத்தின் அழகே….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2