அழகு - பகுதி 19

மேகலா : இன்னும் ஒரு மறக்க முடியாத அனுபவம் உண்டு கிருஷ்ணா…. நான் U. S. A. சென்ற போது, ‘நயாகரா நீர்வீழ்ச்சி’ பார்க்க சென்றிருந்தோம் கிருஷ்ணா…. நயாகரா நீர்வீழ்ச்சி, Canada, U. S. A. என்ற இரண்டு நாடுகளின் எல்லைகளில், Buffalo என்ற ஊரில் அருவியாகக் கொட்டுகிறது கிருஷ்ணா…… அந்த அருவியை தூரத்தில் நின்று பார்ப்பதற்கே, கப்பல் மாதிரியான boat-ல் தான் சென்று பார்க்கப் போக வேண்டும். நாம் எட்ட நின்று பார்ப்பதற்கான இடத்தை அடைந்ததும், நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் சென்று பார்க்க விருப்பமுடையவர்கள் அதற்கான boat-ல் அனுமதி பெற்று செல்ல வேண்டும்.

கிருஷ்ணர் : பார்ரா…. பெரிய பெரிய அனுபவமெல்லாம் கை வசம் வச்சிருக்க போல…. Falls-அ கிட்ட போய் பார்த்தோம்னு சொல்றயே….. தண்ணீர் உங்களைத் தெறிக்க விடலயா….

மேகலா : கிருஷ்ணா, நாங்க சென்ற போது, மைனஸ் டிகிரி கிருஷ்ணா….. தண்ணீர் ஐஸ் கட்டியாக மாறல…., அவ்வளவுதான், கிருஷ்ணா…. எனக்கு உடம்பில விரல்நுனியை கூட வெளியில காட்ட முடியல….. ஸ்வெட்டர் போட்டு, அதுக்கு மேல ஜெர்க்கின்ஸ் போட்டு, கையை அதற்குள்ளே சுருக்கி கதகதப்பு ஏற்றினாலும்…., அதையும் மீறி உடம்பு உதறுது. ஷீத்தல் கூட கேட்டாள்…, ‘இந்தக் குளிரில் boat-ல் போய்ப் பார்க்கணுமா’ என்று….

கிருஷ்ணர் : ’குளிரில் உறைந்து போனாலும் பரவாயில்லை…. நான் chance-ஐ miss பண்ணவே மாட்டான்’ என்றாயா…

மேகலா : ஆம்மாம் கிருஷ்ணா….. நான் கிளம்பியவுடன், அதிலும் வீரவசனம் பேசி விட்டு கிளம்பினேனா, ஷீத்தலும், ‘Oh! miss பண்ணக் கூடாது’ என்று எங்களோடு கிளம்பி விட்டாள். கார்த்தி அப்போ 1 1/2 வயசு பேபி…. மதனா, ஏற்கனவே நீர்வீழ்ச்சியை அருகில் சென்று பார்த்திருப்பதால், அவர்கள் இருவரும் வரவில்லை. நாங்கள் அதற்கான ஆயத்த ஆடையை அணிந்து கொண்டு, boat-ல் ஏறி அமர்ந்து கொண்டோம் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : அப்பா…. மைனஸ் டிகிரி குளிரில் நீர்வீழ்ச்சியின் அருகில் எப்படி சென்றாய்….?

மேகலா : கிருஷ்ணா…., எனக்கு அந்த அனுபவத்தை miss பண்ணவே மனசில்லை கிருஷ்ணா…. அருவி விழுந்து பரவும் இடம் ஏரி மாதிரி இருக்கு கிருஷ்ணா…. அதில் தான் நாங்கள் சென்ற boat எங்களை அழைத்துச் சென்றது. நீர்வீழ்ச்சியின் வேகத்தில், அருவி, நீர்த்திவலைகளாக சிதறாமல் புகைமூட்டமாக சூழ்ந்து நின்றது…. என்னோட விரல் நுனிகளில், ஊசிமுனையால் குத்துவது போல இருந்தாலும், கைகளை சுருக்கிக் கொண்டு கட்டிக் கொண்டிருந்தாலும், என் கண்களில் ஒரு காட்சியைக் கூட miss பண்ணல கிருஷ்ணா… அதனால், நாங்கள் boat-ல் travel பண்ணுகிறோம் என்பதே மறந்து போனது கிருஷ்ணா… மாலத்தீவில், speed boat-ல் போகும் போதெல்லாம், boat நீரைக் கிழித்துக் கொண்டு போவதையும், நீர்த் திவலைகள் முகத்தில் தெறிக்க, கடற்பரப்பு அலம்புவதைப் பார்த்துக் கொண்டே, அங்கங்கே மீன்கள் துள்ளிக் குதிப்பதை சிலிர்ப்போடு பார்ப்பதும் ஒரு thrilling-ஆன அனுபவமாக இருக்கும் கிருஷ்ணா….. இங்கு, நீர்வீழ்ச்சியின் சூழலில் boat தந்த அனுபவத்தை விட, நீர்வீழ்ச்சியின் அழகும்…., ஏரியின் அழகும்…., ஏகாதிபத்தியக் குளிரும் தான் பெருசா இருந்தது கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : அதென்ன…, ஏகாதிபத்திய குளிர்…..

மேகலா : குளுரு, நம்மை சர்வாதிகாரம் பண்ணுச்சு கிருஷ்ணா…. சுதந்திரமாக, நம்மை மறந்து…, இயல்பாய், இயற்கையை ரசிக்க விடவேயில்லை…. அதனால் தான், ’ஏகாதிபத்திய குளிர்’ என்றேன். குளுரையும் மீறிய அழகு, அந்தப் பிரதேசத்தில் கோலோச்சுகிறது என்பது உண்மைதான் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : ஏன் மேகலா….. நீ பார்த்து ரசித்ததோ, உலகப் புகழ் பெற்ற ‘நயாகரா நீர்வீழ்ச்சி’. நாம பேசிக் கொண்டிருப்பதோ… ‘அழகு’ என்ற தலைப்பில்….. நீர்வீழ்ச்சியின் அழகு பற்றி சொல்லவேயில்லையே….

மேகலா : வாஸ்தவம் தான் கிருஷ்ணா…. boat-ல் செல்லும் போது, நீர்வீழ்ச்சியின் அழகை ரசித்ததை சொல்ல வந்தேன். உலகப் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி தான்…. ஆனால், அது நம்ம ‘கங்கோத்ரி’…, கங்கையின் பிறப்பிடத்தில் விழும் நீர்வீழ்ச்சி அளவுக்கு உயரம் கிடையாது. இருந்தாலும், அருவியின் அழகும் அதன் இருப்பிடமும், உலகப் புகழுக்குக் காரணமாகி விட்டதோ….! தியேட்டரில் திரை தொங்குமல்லவா…, அது மாதிரி தண்ணீரின் அடர்த்தி, ஒரு ‘நீர்த்திரை’ மாதிரி இருக்கிறது கிருஷ்ணா… U. S. A – க்கும் Canada நாட்டிற்கும் எல்லையாக உலகப் புகழ் பெற்ற நயாகரா இருந்தாலும், இரண்டு நாட்டிற்கிடையிலும், எந்த எல்லைத் தகராறும் கிடையாது! ‘விசா’ இல்லாமல், Canada-விலிருந்து U. S. A. பகுதி நீர்வீழ்ச்சிக்கு வரலாம். U. S. A – விலிருந்து Canada பகுதிக்கு வரலாம். இரு நாடுகளின் இந்த understanding, கேட்பதற்கு மட்டுமல்ல கிருஷ்ணா…. boat-லிருந்து இரு நாட்டையும் இணைக்கும் வானவில் மாதிரியான பாலத்தையும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் கிருஷ்ணா. Boat, நீர்வீழ்ச்சியின் ஏரியைச் சுற்றி வரும் போது, இரு நாட்டையும் இணைக்கும் பாலத்தைப் பார்க்கும் திசையில் பயணிக்கும் போது…, boat-ல் இருப்பவர்கள் எல்லோரும் கை காட்டி அந்த அதிசயத்தைக் காட்டுவார்கள். Road-ன் இந்தப் பக்கம் U. S. A….அந்தப் பக்கம் Canada….. உலகத்தில் வேறு எங்கும் இது மாதிரி அதிசயம் இருக்குமா…., தெரியவில்லை கிருஷ்ணா…. இயற்கை அழகும்…., நீர்த்திரை போன்ற நீவீழ்ச்சியின் பனிமூட்டமும்…, அருவி விழும் இடத்திற்கு மிக அருகில் பறந்து செல்லும் உரிமையை ‘பட்டா’ வாங்கியது மாதிரி பறந்து செல்லும் ஸீகல் பறவைகளும்’.…, இந்த நாட்டில் இருந்து கொண்டே, கண்ணுக்கெட்டிய தூரத்தில் அடுத்த நாட்டில் சுறுசுறுப்பாக நடமாடும் மக்களைப் பார்க்கும் வாய்ப்பும்…, வாவ்…, இது ஒரு தனித்துவமான அழகு கிருஷ்ணா….

கிருஷ்ணர் : வாவ்…. அருவி என்றாலே, அழகு. அதிலும், நீ சொல்லும் சூழலில் நீர்வீழ்ச்சி அமைந்து இருப்பது, கடவுளின் அற்புதப் படைப்பு தான்…. சூப்பர் மேகலா….

மேகலா : சில சூழல்கள் இயற்கையையே ஜெயிக்கும் அழகுடன் நம்மை சிலிர்க்க வைக்கும்…, அதிலும், அமெரிக்காவில் நயாகரா நீர்வீழ்ச்சியை, இயற்கை அழகைப் பத்திரமாகப் பாதுகாத்து, இன்னும் கொஞ்சம் அழகுபடுத்தி, மக்களின் கண்களுக்கு விருந்தாய் படைத்து விட்டார்கள் கிருஷ்ணா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2