அழகு - பகுதி 21

கிருஷ்ணர் : ஆம்மாம்……, பூக்களை….., பூக்களாகப் பார்ப்பதை விட, photo-வாகப் பார்க்கும் போது, அதற்கு அழகு மேலும் கூடி விடுகிறது மாதிரி இருக்கும் இல்லையா….

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. என்னுடைய தோட்டத்தில், சின்னதாக 1 ரூபாய் size-ல் ஒரு பூ இருக்கிறது. அது செடியிலிருந்து வால் மாதிரி புறப்பட்டு அதன் உச்சியில் சின்ன பஃப் மாதிரி இருக்கும்…. சும்மா பார்க்கும் போது சாதாரணமாக இருக்கும் அந்தப் பூ, close-up-ல் photo எடுத்து பார்க்கும் போது, தோட்டத்தின் சூழலில் பூ ஒய்யாரமாகத் தெரியும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஸ்….ஸ்….. ஆமாம்ல; photography-யில interest இருப்பவங்க, ரசிச்சு photo எடுக்கும் போது…., காற்றில் அலையும் கூந்தலின் ஒரு முடி அசைவதைக் கூட மிக அழகாக எடுத்து விடுவார்கள். அதிலும், இயற்கையான சூழலில் photo எடுக்கும் போது, photo மட்டுமே ஆயிரம் கதை சொல்லுமே….

மேகலா : கிருஷ்ணா…., எனக்கு ஒரு photo ஞாபகத்துக்கு வருது கிருஷ்ணா….. நடிகர் சிவாஜி கணேசன், ஒரு முறை காசி சென்றிருந்த சமயம்…., shooting கிடையாது…., கங்கையில் நின்று கொண்டு, கைகளை உயரே தூக்கி, இருள் விலகாத வைகறை விடியலில் ‘சூரிய நமஸ்காரம்’ செய்யும் photo…., மேனியில் ஈரத்துண்டு போர்த்தியிருக்கிறார்; நெற்றியில் திருநீறு பூசியிருக்கிறார்; கழுத்தில் ருத்ராட்சம் அலங்கரிக்கிறது; முகத்தில், கருப்பு வெள்ளையாக குறுந்தாடி; கண் மூடி தியானம் செய்யும் பாவனை – அந்த photo-வைப் பார்க்கும் போதே, நமக்கும் பக்தி தொற்றிக் கொள்கிறது….. அத்தனை அழகு! Pose கொடுக்காத பக்தி அழகு. அந்த photo அங்கிருக்கும் ‘அகோரி’ ஒருவரிடம் இருந்திருக்கிறது. அந்த ‘அகோரி’யிடமிருந்து அவருடைய மகன் பிரபு கெஞ்சிக் கூத்தாடி, அந்த photo-வை வாங்கி வந்து, பத்திரிகையில் publish பண்ணியிருக்கிறார். மெய் சிலிர்க்கச் செய்யும் photo….

கிருஷ்ணர் : வாவ்! நீ சொல்லும் போதே, எனக்கும் அந்த photo-வைப் பார்க்கணும் போல இருக்கு மேகலா….

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. இன்னும் சில photos, காட்சியின் வழியாக ஒரு வரலாறையே எடுத்துச் சொல்வதாக இருக்கும் கிருஷ்ணா….. முதன் முதலில் புகைவண்டியை சோதனை ஓட்டம் ஓட்டிப் பார்க்கும் போது எடுத்த புகைப்படம். ஆங்கிலேயர்களுடன் மகாத்மா காந்தி ‘round table conference’ பேசும் போது, எடுத்த படம், ஹிரோஷிமா, நாகசாக்கி மீது hydrogen bomb வீசப்பட்ட போது, அது வெடித்து எழும்பிய தீ மூட்டத்தின் புகைப்படம் என்று, இந்த photo-க்களின் அழகு…., அன்று நடந்த கதையை, இன்றும் தெளிவாக எடுத்துச் சொல்லும்…. வாவ்….! அந்த photo-வின் அழகே, பின்னணியின் கதையைச் சொல்லுவதுதான்….

கிருஷ்ணர் : Photo-வில் இருக்கும் இந்தக் கதை சொல்லும் அழகு…., இன்னும் ஒன்றிலும் இருக்கு…. அது என்னண்ணு சொல்லு பார்ப்போம்….

மேகலா : வீடியோவா….

கிருஷ்ணர் : மக்கு….. வீடியோதான் கதையைச் சொல்லுமே….. இது பேசாமல் பேசும்…., நம்மை பரவசப் படுத்தும்…..

மேகலா : பரவசப் படுத்துமா….. அது என்ன…… oh! கோயிலில் இருக்கும் சிற்பங்கள்….

கிருஷ்ணர் : கோயிலில் மட்டும் தானே சிற்பங்களைப் பார்க்க முடியும்….. இது கோயில் இல்லாமல் வேற இடங்களிலும் இருக்கும்…..

மேகலா : ஓவியமா, கிருஷ்ணா….

கிருஷ்ணர் : யப்பா…. இதைக் கண்டுபிடிக்க இத்தனை நேரமா….. சில ஓவியங்கள் நம்மை பிரமிக்க வைக்கும்…., திகைக்க வைக்கும்…., ஆச்சரியமூட்டும்…..

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. நீ சொல்லுவது உண்மைதான். சின்னச் சின்ன நுணுக்கங்களைக் கூட பென்சிலால் அல்லது brush-ஆல் அழகாய் வெளிப்படுத்துவது என்பது தனித் திறமைதான் கிருஷ்ணா…. வெறும் பென்சிலை மட்டுமே கொண்டு கோடு வரைபடமாக வரைவது ஒரு ரகம்….. Outline வரைந்து, வண்ணங்களால் உணர்வுகளைத் தீட்டுவது இன்னொரு ரகம்….. எந்த ஓவியமாக இருந்தாலும், காட்சியை…, image-ஐ உள்வாங்கிக் கொண்டு ஒரு ஓவியன் வரைவது என்பது, கடவுள் தந்த வரம் என்றே சொல்வேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : எந்தத் திறமையாக இருந்தாலும், அது கடவுள் தந்த வரம் தான்…. உனக்கு, drawing பற்றி ஏதாவது தெரியுமா மேகலா….

மேகலா : கிருஷ்ணா….. நான், ’மாயா சித்ராலயா’ institute-ஓட student ஆக்கும். நான் college-ல படிக்கும் போது, இந்த institute-ல join பண்ணி, postal-ல drawing கத்துக்கிட்டேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Is it….? நீ drawing கத்துக்கிட்டயா…. painting-ம் தெரியுமா….? ஏதாவது show நடத்தியிருக்கயா… நீ ‘ரவி வர்மா’ மாதிரி artist-ஆ…. இல்ல, pencil drawing-ல கில்லியா…. சொல்லு…. சொல்லு…..

(தொடரும்)

(அடுத்த பதிவுடன் நிறைவு பெறும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2