கல்யாணங்களும், கலாட்டாக்களும் - பகுதி 9
கிருஷ்ணர் : விருந்தின் மூலமாக, தன் சந்தோஷத்தை வெளிப்படுத்துவதைக் காட்டிலும், பெருமையை வெளிப்படுத்துவதே பெருசா இருக்குமோ….
மேகலா : பொதுவாக…., ஒரு தோசைக்கு இரண்டு சட்னி வச்சாலே…., நம்மால் தொட்டுச் சாப்பிட முடியாது என்றிருக்க…., காலை breakfast விருந்துக்கு, பலகாரமே, இட்லி, தோசை, ஊத்தப்பம், பொங்கல், வடை, பூரி என்று மத்தியானம் மூன்று மணி வரைக்கும் பசிக்கக் கூடாது என்பது போல, இலை நிறைய படையலாகப் படைத்து விடுவார்கள் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : Oh! அப்ப காலையில் sweet கிடையாது, அப்படித்தானே….
மேகலா : என்ன கிருஷ்ணா…., பச்சப்புள்ள மாதிரி பேசுற…. ஒருத்தர் அவங்க வீட்டுக் கல்யாணத்தில் கேசரி போட்டா…. இன்னொருத்தர் fruit கேசரி என்று போட்டு ‘கெத்து’ காட்டுவாங்க கிருஷ்ணா….
கிருஷ்ணர் : இந்த, ‘சர்க்கரைப் பொங்கல்’, ‘கல்கண்டு சாதம்’…..
மேகலா : அதெல்லாம் ரொம்ப rare கிருஷ்ணா…. இப்போ…., ஒரு புது trend ஒண்ணு ஓடுது கிருஷ்ணா…. ‘செட்டிநாடு சமையல்’ என்று ஆரம்பித்து, பணியாரம், ஆப்பம், தேங்காய்ப்பால் என்று chef-களின் வேலையை கடுமையாக்கிருவாங்க கிருஷ்ணா…
கிருஷ்ணர் : அப்போ…., இவங்க கல்யாணத்துக்கு வந்திருக்கவங்களுக்கு விருந்து போடல…. விருந்து போடுவதற்காகவே, கல்யாணம் நடத்துறாங்களோ….
மேகலா : பெருமைக்காக விருந்து போடுறாங்க கிருஷ்ணா…..
கிருஷ்ணர் : Lunch விருந்தும் இப்படித்தான், செட்டிநாடு சமையல், ராஜஸ்தானி சமையல் என்றிருக்குமா மேகலா….
மேகலா : அவங்கவங்க மனசுல விரும்புவதை போட்டாக்கூட பரவாயில்லை கிருஷ்ணா… வயித்துக்குத்தான சாப்பிடப் போகிறோம். ஆனால், இங்கு, நம்ம வீட்டு விருந்துனா…., யாருமே இது மாதிரி செய்திருக்கக் கூடாது என்ற நினைப்புத்தான் விருந்தின் highlight-ஆக இருக்கும் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : என்ன…., Arab countries-ல இருந்து ‘தம் பிரியாணி’ கொண்டு வருவாங்களா….
மேகலா : ‘கறி விருந்து’ அன்று பிரியாணி உண்டு கிருஷ்ணா….. ஆனா, அதுவும் ‘Arab பிரியாணி’ கிடையாது….. ‘எங்க பிரியாணி’….. ஆனாலும், சாம்பார், ரசம், உருளைக்கிழங்கு மசால், முட்டைக்கோஸ் பொரியல், பாயாசம், அப்பளம் என்று traditional சாப்பாடு என்று போய்க் கொண்டிருந்த கல்யாண விருந்து, இன்று Veg. பிரியாணி…, Veg, குருமா…., Veg. மீன் ரோஸ்ட் என்று இலையை நிறைத்து விடுகிறார்கள் கிருஷ்ணா…. இன்னும் சிலர், சப்பாத்தி, பன்னீர் பட்டர் மசாலா, ‘நான்’ ரொட்டி என்றும் இப்போ போடுகிறார்கள் கிருஷ்ணா…. Sweet என்றால், மூன்று variety; பாயாசம், பாஸந்தியோடு; roast என்றால், சேப்பங்கிழங்கு, cauliflower. veg. மீன் ரோஸ்ட் என்று எதை ருசிப்பது, எதை விடுவதுன்னு நமக்கு திணறிப் போகும். ஒரு பதார்த்தத்தை எடுத்து வாயில் வைத்தால், அதன் ருசியை அனுபவிக்கவே முடியாமல் அடுத்த item….. இதில் என்ன சங்கடம் என்றால், இலையில் பரிமாறிய பதார்த்தத்தில் பாதிக்கு மேலே, இலையிலேயே ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். வேணும் என்பதைக் கேட்டு தேவைக்கு மட்டும் வாங்குவோம் என்ற மனப்பக்குவம் யாருக்கும் கிடையாது.
கிருஷ்ணர் : மொத்தத்தில், எதன் ருசியும் மனதில் நிற்பதில்லை….
மேகலா : ஆம் கிருஷ்ணா…. காலை breakfast சாப்பிட்டே இன்னும் வயிறு house full ஆக இருக்கும்…, அதற்குள் மதியம் lunch….. ஒண்ணு தெரியுமா கிருஷ்ணா…. கல்யாண முஹூர்த்தம் 9 to 10 1/2 என்றால், lunch 11 மணிக்கெல்லாம், பந்தி start ஆகிரும்….
கிருஷ்ணர் : என்ன கொடுமடா சாமி…. எப்படித்தான் சாப்பிடுவீங்க….
மேகலா : தூரத்து சொந்தமென்றால்…., ஏதாவது ஒரு நேரத்து விருந்தை ‘skip’ பண்ணிருவோம். எங்க வீட்டுக் கல்யாணம் என்றால், lunch-ஐ நேரம் கழித்து சாப்பிடுவோம் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : அப்போ…., என்ன, சாயந்திரம் சாப்பிடுவாயா….
மேகலா : ம்…., அதெப்படி…. கல்யாணம்னா கலாட்டாவை எப்படி கொண்டாடுகிறோமோ…, அதே மாதிரி, இன்று ஒரு நாள் adjust பண்ணிக்கலாம் என்று, சொந்தங்களோடு அமர்ந்து விருந்தையும் சாப்பிட்டிருவோம் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : எனக்குப் பிடிச்ச கல்யாண கலாட்டாவே இதுதான் மேகலா…. நீ எப்படி….’கல்யாண சமையல் சாதம்; காய்கறிகளும் பிரமாதம்’ என்று பாட்டுப் பாடுவியா….
மேகலா : என்னைப் பொறுத்த வரையில், உணவுப் பொருளில் ஒவ்வொரு பருக்கையும், கறிவேப்பிலை, கொத்தமல்லி உட்பட, அனைத்தும் ‘அன்னலட்சுமி’ கிருஷ்ணா…. உணவை waste பண்ணுவது, அந்த அன்னலட்சுமியையே அலட்சியம் செய்வது போல…. என்று நினைப்பேன். அதனால், என்னால் சாப்பிட முடியாததை, இலையில் வைக்க விட மாட்டேன். பரிமாறும் போது, தேவைக்கு மட்டும், அளவாக வாங்கி ரசித்துச் சாப்பிடுவேன் கிருஷ்ணா…. அதிலும், உணவு waste பண்ணுவதை, சமுதாயக் குற்றமாகவும் பார்ப்பேன் கிருஷ்ணா…. அதிலும் சிலர், இலையில் பரிமாறும் பதார்த்தத்தை ஒதுக்கி வைத்துச் சாப்பிடுவதே style என்று நினைப்பார்கள் கிருஷ்ணா. சிலர் சில காய்கறிகளைத் தொடவே மாட்டார்கள்….. பார்க்கும் எனக்கு செம டென்ஷனாகி விடும் கிருஷ்ணா…. ‘சாப்பிடப் பிடிக்கலன்னா, வேண்டாம்னு சொல்ல வேண்டியதுதானே’ன்னு…. சொல்லிப் பார்ப்பேன்; யார் கேட்பாங்க கிருஷ்ணா…. ஆனால், கல்யாண வீட்டில், பந்தியில் பரிமாறும் உணவுப் பதார்த்தங்களையோ, stall-ல் கொடுக்கும் ice cream, பீடா, இனிப்பு வகைகளையோ யாரும் வேண்டாம் என்று சொல்வதேயில்லை….
கிருஷ்ணர் : கல்யாணத்தை நடத்துபவர்கள், அளவு கடந்த மெனுவைக் கொடுத்து, ‘waste’ பண்ணுகிறார்கள். விருந்து உண்பவர்கள், இலையில் வைத்ததை உண்ணாமலேயே ‘waste’ பண்ணுகிறார்கள். என்னத்த சொல்ல…..
(தொடரும்)
Comments
Post a Comment