கல்யாணங்களும், கலாட்டாக்களும் - பகுதி 11

மேகலா : கிருஷ்ணா, எங்கள் பக்கங்களில் ’கட்டு சாதம்’ என்ற சம்பிரதாயம் கிடையாது…. ஆனாலும், கல்யாணத்தன்றாவது, கறிச்சாப்பாடு அன்றைக்காவது…, கல்யாண வீட்டார், மிளகாய்க்குழம்பு, கத்தரிக்காய் முருங்கைக்காய் புளிக்குழம்பு, மாங்காய் ஊறுகாய் என்று மாஸ்டரிடம் வைத்துத் தரச் சொல்லுவார்கள். அதை எடுத்து வந்து, கல்யாணம் முடிந்த பின், குடும்பத்தார்கள் ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடுவார்கள். கட்டு சாதம் என்று தனியாகச் சமைப்பதில்லை கிருஷ்ணா. ஆனால், ஐயர் வீட்டுக் கல்யாணங்களில், கட்டு சாதம் என்பது, 3-வது நாள் நடக்கும் ஒரு சிறப்பான விருந்து கிருஷ்ணா…. கல்யாணத்தில், சடங்கு, சம்பிரதாயம், என்று அடுத்தடுத்து நிகழ்ச்சிகளை நடத்தி, அலுத்து களைச்சு போயிருப்பாங்கல்ல…, அதான் மூன்றாவது நாள் கட்டு சாதம் என்று, புளிசாதம், தயிர்சாதம், மிளகுக்குழம்பு, சிப்ஸ் என்று ஒரு சம்பிரதாயத்தை இரு வீட்டாரும் கோலாகலமாகக் கொண்டாடி சாப்பிடுவார்கள் போல…. சில chef, ‘கட்டு சாத’ மெனுவை பட்டியலிட்டு, தயாரித்துத் தருவதாக விளம்பரப்படுத்தியிருந்ததைப் பார்த்தேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Oh! விளம்பரமே செய்திருந்தார்களா…..! அதில் என்னென்ன மெனு இருக்கும் என்று உனக்குத் தெரியுமா…..

மேகலா : Google-ல் தேடினேன் கிருஷ்ணா…. கட்டு சாத கூடை சாப்பாடு என்று ஒரு catering service கொடுத்திருக்கும் மெனு…., ஸ்வீட், தயிர் வடை, சேமியா பால் பாயாசம், கதம்ப பொரியல், பொடிமாஸ் அல்லது காரகறி, தக்காளி கூட்டு, சேம்பு ரோஸ்ட் அல்லது மிளகாய் பஜ்ஜி, சாதம், மிளகு குழம்பு, பொரிச்ச கூட்டு, சீரக ரசம், தயிர், ஊறுகாய், பருப்பு துவையல், அப்பளம், பருப்பு, நேய், வெற்றிலை பாக்கு என்றும், இன்னொரு மெனு…… இட்லி, மிளகாய்ப்பொடி, புளி சாதம், வடாம், தயிர் சாதம், மோர் மிளகாய், பூசணிக்காய் அல்லது வாழைக்காய் கூட்டு, இலை, வாழைப்பழம் என்று போட்டு, இவையெல்லாம் தனித்தனியாக டப்பாவில் போட்டு, அழகாய் pack பண்ணித் தருகிறோம் என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள் கிருஷ்ணா…. அந்தக் காலங்களில், இதை எப்படி கொண்டாடுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இது ஒரு புறம் இருக்க…., நிறைய கல்யாண வீடுகளில், North India, South India, தமிழ் நாட்டில் கூட, buffet என்று சொல்லப்படும், தானே பரிமாறிக் கொள்ளும் விருந்து ரொம்ப பிரபலமாகி விட்டது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Oh! பந்தி பரிமாறுவதற்கு ஆள் இல்லையென்றா buffet முறை வந்தது….

மேகலா : Serve பண்ணுவதற்கும் ஆள் இருப்பாங்க கிருஷ்ணா. இந்த system பரவலாக பரவிய காலகட்டத்தில், கல்யாண வரவேற்பு பெரும்பாலும் hotel-லில் தான் நடைபெறும் கிருஷ்ணா. அங்கு buffet system என்பது எளிமையான வழிமுறையாக இருந்தது. இடையிடையே, சர்வர்களும் பரிமாறுவார்கள்… இன்று இதுவே develop ஆகி, பிரம்மாண்ட கல்யாண மண்டபத்தில், பிரம்மாண்டமான buffet-யும் நடைபெறுகிறது. பொதுவாக reception-க்குத்தான் buffet system நடக்கும். அதில் சாப்பிடும் உணவுகளை, board மாட்டி அறிவித்திருப்பார்கள். North Indian, South Indian, chat items, desserts – என்று board மாட்டியிருக்கும். நாம் அந்த counter-க்குச் சென்று தேவையானதை self service பண்ணிக் கொள்ளலாம். ஒரு side-ல், use and throw plate-ல் ஒருவர், ‘பானி பூரி’ வைத்துக் கொண்டே இருப்பார்…, இன்னொரு side-ல், தோசை ஊற்றிக் கொண்டே இருப்பார்கள். ஒருபுறம் ‘கட்லெட்’ போட்டுக் கொண்டே இருப்பார்கள்….

கிருஷ்ணர் : Oh! இப்படியும் தங்கள் பணக்காரத்தனத்தைக் காட்டுவார்களா… ஆனால், இதிலும் ஒரு நன்மை இருக்குல…. தனக்குத் தேவையானதை மட்டும் எடுத்து தட்டில் வைக்கலாமே….

மேகலா : நீ வேற கிருஷ்ணா…. அங்கு வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் அத்தனை உணவுகளையும் சாப்பிட்டுப் பார்க்கணும் என்ற ஆர்வம் தான் எல்லோரிடமும் இருக்கும் கிருஷ்ணா…. தோசை, ரொட்டி என்று வாங்கினால், பாதியாக வாங்க முடியாதுல…. முழுசா வாங்கி, பாதிய waste பண்ணலாம்ல….

கிருஷ்ணர் : இந்த விருந்தும், உணவு முறைகளையும் பற்றி மட்டுமே தனி கட்டுரையே எழுதலாம் போல…. மனுஷங்க…, இந்த கல்யாணங்களில் விருந்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் மலைப்பா இருக்கு மேகலா…. கல்யாண கலாட்டாக்களில் ஒன்று பாக்கியில்லாமல் எல்லாமும் சொல்லப்பட்டதா…. ‘விருந்தும் ருசியும்’, ‘பட்டும் பகட்டும்’, ‘நகையும் அலங்காரமும்’, ‘பூவும் மேக்கப்பும்’ என்று எல்லாமும் சொல்லப்பட்டதா…. ‘பூச்சூடல்’ என்று சொன்னாயே…, அதைச் சொன்னாயா….

மேகலா : கிருஷ்ணா…., நீ பார்க்கத்தான் கதை கேட்கும் அப்பாவி மாதிரி தெரிகிறாய்…., ஆனால், ஒண்ணு விடாமல் விவரமாய்க் கேட்கிறாய் கிருஷ்ணா…. எங்க பக்கங்களில், ‘பூச்சூடல்’ என்பது, பொண்ணு பார்க்கும் படலம் முடிந்த பின்பு, பெரியவர்களால் பேசி முடிக்கப்பட்ட கல்யாணத்தை, பொண்ணுக்கு பூச்சூட்டி உறுதிப்படுத்துவது தான் ‘பூச்சூடல் விழா’ கிருஷ்ணா….

கிருஷ்ணர் : நான் நினைத்தேன், கல்யாணத்தன்று, பொண்ணுக்கு பூச்சூடி விடுவார்களோ…., ‘காசி யாத்திரை’ மாதிரி இதையும் சடங்காக நடத்துவார்களோ என்று… அப்போ, இதை, ‘நிச்சயதார்த்தம்’ என்று அழைக்கலாமில்ல….

மேகலா : நிச்சயதார்த்தத்தன்று, உப்புப் பெட்டி மாத்தும் சடங்கு முக்கியமானதல்லவா கிருஷ்ணா…… இந்தச் சடங்கினை, கல்யாணத்துக்கு முந்தின நாள் நடத்துவார்கள். அதனால், இவள் தான் எங்கள் வீட்டுப் பொண்ணு; இவளை என் மகனுக்குக் கட்டி வைத்து மருமகளாக்கப் போகிறோம்…. இன்றைய தினத்திலிருந்து நாங்கள் உறவுக்காரர்கள் ஆகப் போகிறோம் என்று உறவினர் அனைவரையும் வரவழைத்து, அவர்கள் முன்னிலையில், பொண்ணுக்கு பூச்சூடி விட்டு உறுதிப் படுத்துவதுதான் ‘பூச்சூட்டல் விழா’ கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : Oh! இதற்கும் உறவினர்களையெல்லாம் அழைப்பீர்களா….

மேகலா : பின்ன…. அழைக்க வேண்டாமா…. மாப்பிள்ளை அழைப்புக்கு, எப்படி மாப்பிள்ளையை ஜானவாசக் காரில் ஊர்வலம் அழைத்துச் சென்று, ‘இவர் தான் எங்க வீட்டு மாப்பிள்ளை’ – ‘already engaged’ – என்று சொல்லாமல் சொல்கிறோமோ…., அது போலத்தான் பூச்சூடல் விழாவும்….. உற்றார், உறவினர், நண்பர்கள், photographer, catering…, என்று எல்லோரும் அழைக்கப்படுவார்கள். கல்யாணம் மாதிரியே, ‘தடபுடலாக’ நடக்கும்… அப்பத்தானே, அந்தப் பொண்ணை, வேறு யாரும் தங்கள் பையனுக்கு என்று கேட்க மாட்டார்கள்…

கிருஷ்ணர் : பட்டும் பதவிசும், வாழையிலையும் விருந்துமாகண்ணு சொல்லு…. இங்கிருந்து start ஆகுது, உங்கள் கோலாகலக் கலாட்டாக்கள்….

மேகலா : முதலில் இந்த விழாவை, பூ வைக்கப் போகிறோம் என்று அழைத்தவர்கள், கொஞ்சம் பணக்காரர்கள், பூவோடு நகையும் அணிவித்து அதைக் கட்டாயமாக்குகிறார்கள். அடுத்து வந்தவர்கள், நகையோடு, 9 தட்டு, 11, 15, 20 தட்டு என்று இஷ்டத்துக்கு சீர் வரிசைத் தட்டுக்களைத் தூக்கி வந்து, பிரம்மோத்சவத்துக்கு கொடியேறுவது போல…., கல்யாண கலாட்டாக்களை துவக்கி வைக்க ஆரம்பித்து விட்டார்கள்….

கிருஷ்ணர் : ஓஹோ…. கல்யாணத்துக்கு முன் வேறு ஏதாவது, பூச்சூடல் விழா மாதிரி functions இருக்கா மேகலா…. உங்கள் பக்கத்து சம்பிரதாயங்களின் போக்கைக் கேட்கவே பயமா இருக்கு மேகலா….

மேகலா : இப்போ, ஒரு கலாட்டா, trending-ல போய்க்கிட்டு இருக்கு கிருஷ்ணா…

கிருஷ்ணர் : என்ன நீ…. ‘கலாட்டா trending’-ல போய்க்கிட்டு இருக்குனு சாதாரணமா சொல்லுற…. கலாட்டாலாமா trending-ல போகும்…..

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1