கல்யாணங்களும், கலாட்டாக்களும் - பகுதி 12

மேகலா : கிருஷ்ணா…., நான் ஆரம்பத்துல என்ன சொன்னேன்…. கல்யாணத்தில் சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாம் அவரவர் மன விருப்பப்படிதான் நடக்கிறதுன்னு சொன்னேன்ல…. இப்ப எங்க பக்கத்துல, ‘மருதாணி இடுவது’ என்பது trending-ல இருக்கும் ஒரு கலாச்சாரம் என்பதைக் காட்டிலும், ‘கலாட்டா’ என்று சொன்னால், நீ easy-யாகப் புரிந்து கொள்வாய்….

கிருஷ்ணர் : Oh! ஏன் அப்படிச் சொல்லுற….

மேகலா : இந்த ‘மருதாணி இடுவது’ எல்லாம் எங்க பக்கத்துல function வைத்துக் கொண்டாடுவது கிடையாது. மணப்பெண் வீட்டில், கொல்லையில் வளர்ந்திருக்கும் மருதாணி இலையைப் பறித்து, சில கட்டெறும்புகளைச் சேர்த்துப் போட்டு, விழுதாக அரைத்து, வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மணப்பெண்ணுக்கு, ‘மருதாணி போட்டுக்கோ, கை நல்லா சிவக்கும்; கல்யாணத்தன்று மங்களகரமாக இருக்கும்’ என்று பரிந்துரை செய்து, இடச் சொல்லுவார்கள். இதற்கு function-லாம் நடத்த மாட்டார்கள். அரைத்ததில், மணப்பெண் இட்டது போக மிச்சமிருந்தால், மற்றவர்களும் அவர்களாகவே வைத்துக் கொள்வார்கள். மருதாணி இடுவது, சந்தோஷத்தின் அடையாளம். ஆனால், இதை function-ஆக நடத்தி, கல்யாணச் சடங்காகச் செய்தவர்கள் North Indians தான். ஆரம்பத்தில் மருதாணியை paste ஆக அரைத்து ஒரு குச்சியால் design வரைவார்கள். இப்போ, இந்த மருதாணியை powder ஆக்கி, paste செய்து, அதை ‘cone’-ல் நிரப்பி, மணப்பெண்ணின் கைகளில் easy-யாகப் போடுகிறார்கள். மருதாணி இடுவதில் திறமையானவர்கள், அழகான design-களில் போட்டு விடுகிறார்கள். இந்த function-க்கு உறவினர்கள் அழைக்கப்படுவார்கள். வந்திருக்கும் எல்லோருக்கும் மருதாணி இடத் தெரிந்தவர்கள், போட்டு விடுவார்கள். சந்தோஷமும், குதூகலமும் வீட்டையே நிறைத்து விடும். இன்று இந்தச் சடங்கினை, எங்கள் பக்கத்துக் கல்யாணங்களிலும், கடத்திக் கொண்டு வந்து விட்டார்கள் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : இதையும் கடத்திக் கொண்டு வந்துட்டாங்களா….. ஒரு சம்பிரதாயத்தை விட மாட்டார்கள் போல…. இதற்கும் விருந்து உண்டா…..?

மேகலா : நீ என்ன கிருஷ்ணா….., அப்பாவியா கேக்குற…. அவங்களுக்கு கொண்டாடுவதற்கு ஒரு காரணம் தான் தேவை. இந்த function வீட்டிலெல்லாம் நடைபெறுவது கிடையாது. ஊரிலேயே famous hotel reception hall-ல் நடக்கும் கிருஷ்ணா… ‘மெஹந்தி function’ – இதற்குத் தனி அழைப்பு; சென்னையிலிருந்து மெஹந்தி designers வரவழைக்கப்படுவார்கள். ஒவ்வொரு திறமையாளரிடமும், function-க்கு வந்திருக்கும் அனைவரும் மெஹந்தி போட்டுக் கொள்வார்கள். அவள், கையில் phone-ம், மெஹந்தி cone-ம் வைத்திருப்பாள்.

கிருஷ்ணர் : எதுக்கு….?

மேகலா : Cone – மெஹந்தி போட…., phone – யார் போட்டது என்று கணக்கெடுக்க…..

கிருஷ்ணர் : யப்பா….. extra ஒரு ஆளுக்குக் கூட, free-யா போட்டு விட முடியாது…. இங்க பக்கத்து கொண்டாட்டமும், கலாட்டாவும் பிரம்மாண்டமாகத்தான் இருக்கு மேகலா…. ஒவ்வொரு கைக்கும் இவ்வளவு என்று charge – ஆ…..

மேகலா : ஆமாம்…. இதில் bridal மெஹந்திக்கு தனி rate…. அந்தக் காலங்களில், எங்க வீட்டில் மருதாணிச் செடியெல்லாம் கிடையாது. எங்க வீட்டுக்கு எதிர் வீட்டில், ‘அவர்கள் முஸ்லீம்’… அந்த வீட்டுப் பெரியவரை ‘சிங்கப்பூர் காரர்’ என்று அழைப்போம். அந்த வீட்டு மருமகள், என் கல்யாணத்துக்கு எனக்கு மருதாணி பறித்து கொடுத்து விட்டார்கள். நான் தான் எனக்குப் போடப் பிடிக்கவில்லையென்று சொன்னேன்…. இப்படி அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களெல்லாம், கல்யாணப் பொண்ணு மீது பாசம் வைத்து செய்யும் சின்னச் சின்ன சந்தோஷம் தான், மருதாணி இடுவது…. அடுத்து என் தங்கை ராணிமா கல்யாணத்திற்கு, அவளோட friend, ‘அவங்க North Indians’ – அவள் தன் உறவினரைக் கூட்டி வந்து, எங்க ராணிமாக்கு மெஹந்தி இட்டு விட்டாள். அன்று எங்க வீட்டின் மொத்த உறுப்பினரும் கூடி இருந்ததால், கல்யாணக் கலகலப்பில் எங்கள் வீடு குதூகலமாகியது. விருந்தெல்லாம் கிடையாது கிருஷ்ணா…. மெஹந்தி போட்டு விட்டவர்கள், எலுமிச்சம்பழத்தால், அதை நனைத்து விட்டு, ’நன்றாகச் சிவக்கும், நல்லாச் சிவக்கச் சிவக்க உன் marriage life-ம் happy-யா இருக்கும் என்று’ வாழ்த்தினார்கள். ஆனால், இன்று இது வெறும் சடங்காகி, star hotel-ல் function; design-களை catalogue பார்த்து select பண்ணலாம். ஒவ்வொரு design-க்கும், இவ்வளவு என்று rate… மணப்பெண் சந்தோஷமாகத்தான் மெஹந்தி போடுகிறாள். ஆனால், இங்கு பாசம், missing, கிருஷ்ணா… இதையும் function-ஆக மாற்றி, ஒவ்வொருவரையும் phone-ல் அழைத்து, அதற்காக hotel book பண்ணி, சாப்பிட order பண்ணி,…. ‘யப்பா’…. ‘நான் எதைச் செய்தாலும் பிரம்மாண்டம் தான்’ என்பதே மேலோங்கி நிற்கிறது. இதில் பெரிய கலாட்டா என்னன்னா, function attend பண்ண வந்தவர்கள் யாரும், மணப்பெண்ணைக் கண்டு கொள்வதே இல்லை. அவங்களுக்கான table-ல் உட்கார்ந்து, தன் சுற்றத்தாருடன் அரட்டை அடித்து, மெஹந்தி போட்டு, சாப்பிட்டு, மெஹந்தி போட்டவுடன் எழுந்து சென்று விடுவார்கள்….

கிருஷ்ணர் : எல்லா கலாட்டாவையும், இயந்திரத்தனமாக, பிரம்மாண்டமாகச் செய்யணும் என்று நினைத்து செய்கிறார்கள். அன்றைய காலகட்டங்களில், ஒவ்வொரு குடும்பத்திலும் பிள்ளைகள், உறவினர்கள் என்று குடும்பமாய், குதூகலமாய், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஏதொ ஒரு காரணத்தை link பண்ணி, சம்பந்தப்பட்ட மணப்பெண்ணையோ, பையனையோ மனசார வாழ்த்துவதற்கு இந்தச் சடங்கைக் காரணமாக்குவார்கள். ஆனால், இன்று குடும்ப உறவினர்களே கம்மி….. அதனால் தான் எங்க வீட்டுக் கல்யாணத்துக்கு, ‘வாங்க, வாங்க’ என்று அழைப்பு விடுத்து, வந்தவர்களை பிரமிக்க வைக்க மட்டுமே யோசித்து, காசை இறைத்து, சடங்குகளையும், சம்பிரதாயங்களையும், ஏன் செய்கிறோம், எதற்குச் செய்கிறோம் என்று அர்த்தமே தெரியாமல் இயந்திரத்தனமாக இயங்குகிறார்கள். ஆனால், ஒன்றைப் பாராட்டியே தீர வேண்டும். பெருமைக்காகக் கல்யாணம் செய்தாலும், ஊர் கூடித் தேர் இழுப்பது போல, உறவினர் அனைவரும் கொண்டாடி மகிழ்வதற்காக, கல்யாண கலாட்டாக்கள் பயன்படுகிறதே…. அதை பாராட்டியே தீர வேண்டும். நீ இதுவரைக்கும், பல கலாட்டாக்களை, நீ ரசித்ததை, எல்லாக் கல்யாணங்களிலும் நடக்கக் கூடிய சடங்குகளை, சம்பிரதாயங்களை எல்லாம் ரொம்ப சுவாரஸ்யமாகச் சொன்னாய். நம்முடைய பாரதத்தில் ஏகதேசம் எல்லா மாநிலங்களிலும் சந்தோஷம், கொண்டாட்டம், கலாட்டாக்கள் என்று அவரவர்க்குப் பிடித்த மாதிரி enjoy பண்ணுகிறார்கள். அதே மாதிரி, சில திரைப்படப் பாடல்களும், இந்தக் கல்யாணங்களில் ரொம்ப famous ஆக வலம் வந்து, மக்களைக் குதூகலப்படுத்தி, நடனம் ஆடச் செய்வதை மறுக்க முடியுமா. வட மாநிலங்களில் இப்பவும் ஒரு பழைய பாடல், music troupe-னால் வாசிக்கப்பட்டு மக்களை நடனம் ஆடச் செய்கிறது. அது என்ன பாட்டு தெரியுமா….?

(தொடரும்)

(அடுத்த பகுதியுடன் நிறைவு பெறும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2