வழிப்போக்கர்கள் - பகுதி 8

மேகலா : அந்தக் காலங்களில் எல்லாம், bus travel, train travel பண்ணும் போது bore அடிக்காமல் இருக்க புத்தகம் வாசிச்சிக்கிட்டே போவாங்க… ஆனா…, லேப்டாப்பும் கையோடு போகும் executives-ஐ சாதாரணமாக, train travel-லும், flight travel-லும் பார்க்கலாம் கிருஷ்ணா…. காலையில் சென்னையில் கிளம்பி, மதியம் டெல்லியில் meeting attend பண்ணப் போகும் executives, meeting-க்கான முக்கியமான points-களை travel-லில் தான் குறிப்பு எடுப்பார்கள். அப்படி ஒரு சமயம், தொழிலதிபர் லக்ஷ்மி மிட்டல் அவர்கள், இந்த மாதிரி business meeting attend பண்ணுவதற்காக, வெளிநாடு கிளம்புகிறார். Meeting-க்கான notes-களை எடுக்க வேண்டும். Emigration முடிந்ததும், flight-க்காக wait பண்ணும் நேரத்தில், தன்னுடைய லேப்டாப்பை open பண்ணி வேலை பார்க்கிறார். அப்போ, சில காரணங்களால், அவர் செல்ல வேண்டிய flight, ‘கால தாமதம்’ என்று announcement வருகிறது. லக்ஷ்மி மிட்டலோட assistant-கள் பரபரப்பாகிறார்கள். Meeting time-க்குள் போக வேண்டுமே…., என்று அவரிடம் பம்முகிறார்கள். அவர் ரொம்ப கூலாக….., ‘It’s okay….., எனக்கு points எடுக்க இன்னும் கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கிறது’ என்று சொல்லி, தன் வேலையைக் continue பண்ணுகிறார்….. தமக்கு ஏற்படக் கூடிய தடங்கல்களைக் கூட, புத்தி உள்ளவர்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்காக சொல்லப்பட்ட இந்த உண்மை நிகழ்ச்சி, நமக்கும் இப்படி ஒரு சூழ்நிலையில் எப்படி கூலாக இருக்கணும் என்று சொல்லிக் கொடுக்குதுல கிருஷ்ணா….

கிருஷ்ணர் : நீ சொல்லுவதும் வாஸ்தவம் தான்… Flight delay ஆகிருச்சே என்று டென்ஷன் ஆனால், meeting-ஐ சரியாக handle பண்ண முடியாமல் போகலாம். ஒரு வேலையை முடிப்பதற்காக, ஒரு இடத்தைக் கடந்து சென்று மற்றொரு இடத்திற்கு பயணம் செய்யும் வழிப்போக்கர்கள், பயணத்தில் எந்தத் தடங்கல் வந்தாலும், கூடுமானவரை தங்களைக் கூலாக வைத்துக் கொள்வது ரொம்ப முக்கியம்.

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. சில நேரங்களில், ரயில் பிரயாணத்தில், ரயில் நின்னு போயிரும்… என்ன ஏதுன்னே தெரியாம, காரணம் புரியாமல் உட்கார்ந்திருக்க வேண்டியதது தான். டென்ஷன் ஆனா, நம்மால் என்ன செய்ய முடியும்…. உனக்கு நினவிருக்கிறதா கிருஷ்ணா…. ஒரு வருடம் என்னுடைய திருமண நாளுக்கு, பிள்ளையார்பட்டிக்குச் சென்று, பிள்ளையாரிடம் ஆசிர்வாதம் வாங்கிய பின், ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கோம்… பிள்ளையார்பட்டியை அடுத்த ஊரில், நெடுஞ்சாலையில் வண்டிகளெல்லாம் நிறுத்தப்பட்டன. நாங்களும், போலீஸ் ஏதோ checking பண்ணுகிறார்கள்…, இதோ முடிஞ்சிரும் என்று நினைத்துக் கொண்டிருக்க, எங்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த வண்டிகளும் தொடர்ந்து அணி வகுத்து நிற்க ஆரம்பிக்கிறது. நேரம் செல்லச் செல்ல.., என்ன காரணம் என்று விசாரிக்கும் போது தான் ஒரு செய்தி தெரியுது…, விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள் என்றும், முதலமைச்சர் தலையிட்டு, அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றினால் தான், போராட்டம் கை விடப்படும் என்றும் சொன்னதும்…., அடப் பாவிகளா…, அதற்கு வழிப்பயணம் செய்யும் வழிப்போக்கர்கள் தான் உங்களுக்கு அடமானமாகக் கிடைத்தார்களா… என்று எல்லோரும் புலம்பினோம்….

கிருஷ்ணர் : சரி…, என்னதான் பிரச்னையாம்….

மேகலா : எல்லாம், விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடும் பிரச்னை தான் கிருஷ்ணா… அதிலும், முதலமைச்சர் தான் தலையிடணுமாம்…. 1/2 மணி நேரம்…., 1 மணி நேரம் இல்ல கிருஷ்ணா…. நாங்கள் 12-30 மணிவாக்கில் தான் மேலூர் வந்தோம்…. எங்களை release பண்ணியது கிட்டத்தட்ட 4 மணிக்கு….

கிருஷ்ணர் : அப்போ…., சாப்பாடு….

மேகலா : நாங்க சிறைபிடிக்கப்பட்டிருப்பதை அறிந்த பொரி கடலை விற்பவர்கள், டீ, காபி விற்பவர்கள், எங்களோட பாதையை முற்றுகையிட்டு, வழிப்போக்கர்களின் பசியை போக்க முயற்சி செய்தார்கள்….

கிருஷ்ணர் : அப்போ…., அந்த வருட திருமண விருந்து பொரி கடலை தானா…. பரவாயில்லை மேகலா; நீ பண்டவர்கள் மாதிரி…., வழியில் கிடைத்ததை வாங்கிச் சாப்பிட்டு திருமண நாளைக் கொண்டாடி விட்டாய்….

மேகலா : நான்கு மணிக்கு மேலே, Temple City-யில் சாப்பிட்டோம் கிருஷ்ணா

கிருஷ்ணர் : வழிப்போக்கர்களின் பிரச்னை சந்திப்பதற்கு கஷ்டமாக இருந்தாலும், பிரச்னை தீர்ந்த பின், அந்த அனுபவம், சுவாரஸ்யமாகத்தான் இருக்கு…. ஏன் மேகலா! வழிப்போக்கராக இத்தனை அனுபவங்களைப் பார்த்திருக்கிறாயே…., உனக்கு ஏதாவது பிரமிக்கத்தக்க…., வியக்கத்தக்க அனுபவம் தெரியுமா… இல்லை, நீ அனுபவப்பட்டிருக்கிறாயா….

மேகலா : கிருஷ்ணா…., வழிப்பயணங்களில் பல வித அனுபவங்களைப் பார்த்திருக்கிறேன் கிருஷ்ணா… பல இடங்களில், என்னை, ’நீங்கள் ‘Sivakasi Samayal chef’ தானே என்று கேட்டு திணற அடித்திருக்கிறார்கள். அதுவும், Bangalore Highways-ல, car-க்குப் petrol போட, ஓசூர் petrol bunk-ல் car-ஐ park பண்ணியிருந்த போது, எங்களுக்கு முன்னால், scooty-க்கு petrol போட்டுக் கொண்டிருந்த ஒரு பொண்ணு, என்னைப் பார்த்து, scooty-ஐ விட்டு இறங்கி வந்து, ‘நீங்கள் சிவகாசி சமையல் chef தான’ என்று கேட்டு மலைக்க வைத்து விட்டாள். இது கடவுள் எனக்குக் கொடுத்த வரம். நானே இவ்வளவு சந்தோஷப்படுகிறேன் என்றால், ஒரு மனிதர், கொள்ளையடிக்கப் போய், கடவுளின் திருப்பாதம் தொட்டு, மெய் சிலிர்த்துப் போன கதையில், நாம் தொடுவது, அந்த எம்பெருமானின் திருப்பாதம் என்று தெரிந்திருந்தால், எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாரோ…..

கிருஷ்ணர் : நீ, திருமங்கையாழ்வாரைச் சொல்லுகிறாயா…. ஆமாம்…., அவர், வழிப்போக்கர்களாக வருபவர்களிடம், வழிப்பறிக் கொள்ளை நடத்தி வந்தார். அவரை ஆட்கொள்ள வேண்டி, நானே பொருள்களைப் பறி கொடுத்தவன் போல் வர வேண்டியதாயிற்று…. திருமங்கையாழ்வாரின் கதையை நீயே சொல்லு மேகலா…

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1