கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 2

மேகலா : நிச்சயமாக கிருஷ்ணா…. இன்றைய பெரிய பெரிய branded மசாலா பொடிகள் எல்லாம், முதன் முதலில் வீட்டிலிருக்கும் பெண்கள், சிறு முதலீடுகளில் ஆரம்பித்ததுதான் கிருஷ்ணா… சென்னையில், கபாலீஸ்வரர் கோயிலுக்கு எதிரில் ஒரு அப்பளக்கடை இருக்கும் கிருஷ்ணா… அந்தக் கடையில் இன்று வித விதமான size-களில், வித விதமான சுவைகளில் அப்பளம், வத்தல், கூழ்வடகம்…., இன்னும் ஊறுகாய், தக்காளித் தொக்கு, வத்தக் குழம்பு என்று பலவிதமான உணவுப்பண்டங்கள் இருக்கின்றன கிருஷ்ணா. இந்தக் கடை உரிமையாளர்கள், ஆரம்பத்தில் சின்ன லெவலில் அப்பளம், வடகம் தயாரித்து விற்கும் தொழில்தான் செய்தார்கள். அவர்களுடைய அப்பளம் பொரியும் போதே, அதன் வாசம் நம்மை சாப்பிடத் தூண்டும்… அந்த சுவைதான், இன்று பெரிய கடை நிறுவி, கைகளால் செய்யும் வத்தல், வடகம், ஊறுகாய் என்று பல உணவுப் பொருட்களும் மக்களின் பாராட்டைப் பெற்று வருகிறது கிருஷ்ணா. இவர்களுடைய products தமிழ்நாடு முழுக்க supply-யும் பண்ணப்படுகிறது கிருஷ்ணா. முதலில் அப்பளம் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தது…. இன்று இங்கு பல வித instant உணவுப் பொருட்கள் மட்டுமல்ல…., சாம்பார் பொடி, இட்லிப் பொடி, ரசப் பொடிகளும் விற்கப்படுகின்றன…. கிருஷ்ணா, இந்தக் கடைக்கான மிகப் பெரிய certificate என்ன தெரியுமா…? நம்முடைய தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி Honorable R. வெங்கட்ராமன் அவர்களுக்கான மதிய உணவு தயார் செய்யும் பொழுது, அவர் சொன்ன ஒரு மெனு…., ‘அம்பிகா அப்பளம்’ மெனுவில் இருக்க வேண்டும் என்பதுதான். அத்தனைக்கு இந்தக் கைத்தொழில் அவர்களுக்கு பேர் வாங்கிக் கொடுத்திருக்கிறது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஒருவருடைய கைச்சுவை, மக்களின் மனதைத் தொட்டு விட்டது…. அப்படித்தானே…. வாவ்! மேகலா…, எனக்கு ஒரு கேள்வி… இப்படி home products-ஐ பண்ணி sales பண்றவங்க…, எப்படி இதை நடைமுறைப்படுத்தியிருப்பாங்க… ஆரம்ப காலத்தில் இதை வியாபாரமாக எப்படி செய்திருப்பாங்க…..

மேகலா : கிருஷ்ணா…. பொதுவாக பெண்களிடமிருந்துதான் இந்தத் தொழில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் கிருஷ்ணா…. அந்தக் காலங்களில், வேலைக்காக வெளியே செல்லாத பெண்கள், தங்கள் சமையல் வேலை முடிந்தவுடன், அதிக நேரம் சும்மாவே இருக்க நேரிடும்… இப்ப மாதிரி T. V. பார்க்கவும் வழியில்லாத காலகட்டங்களில்…, தன்னுடைய ’சும்மா’ இருக்கும் காலத்தை பயனுள்ளதாக மாற்ற, தங்கள் வீடுகளிலேயே, தங்களுக்குத் தேவையான அப்பளம், வத்தல், வடகம் முதலியவைகளைச் செய்கிறார்கள். யாரோ சிலர், தங்களுடைய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் share பண்ணும் போதுதான், இதன் ருசி மெல்ல spread ஆகிறது. ‘உங்க இட்லிப் பொடியும், தக்காளித் தொக்கும் செம டேஸ்ட்; அடுத்த முறை செய்யும் போது எனக்கும் சேர்த்து செய்றீங்களா…’ என்று யாரோ ஒருவர் கேட்டிருக்கலாம். இன்றைய காலகட்டத்தில் புதுசா ஆரம்பிக்கிறவங்களே, ‘whatsapp’ மூலம் marketing பண்ணிரலாம்…. ஆனால், அந்தக் காலங்களில் நண்பர்கள் மூலமாகவும், உறவுகள் மூலமாகவும் மெள்ள பரவி, அதன் பிறகு சிறிய அளவில் business ஆரம்பித்து, வீட்டிலுள்ள அண்ணாச்சிமார்களும் support பண்ணினால் ‘மளமள’ன்னு spread ஆகி விடுகிறது… எனக்குத் தெரிஞ்ச ஒரு பார்வைத் திறன் குறைந்த மாற்றுத் திறனாளி ஒருவர், கைச்சுமையாக 2 bags நிறைய வத்தல், அப்பளம், வடாம், ஊறுகாய், வேப்பிலைக்கட்டி என்று பல வகையான home-made products-ஐ எடுத்து வந்து, நான் regular ஆக வாங்குவேன் என்று தெரிந்து மாதம் மாதம் correct-ஆ விற்பனைக்கு வந்து விடுவார். அவங்க வீட்ல செய்தது என்று சொல்லி விற்பார் கிருஷ்ணா. நானும் தவறாமல் வாங்கிருவேன் கிருஷ்ணா…. மாற்றுத் திறனாளியைக் கூட நம்பிக்கையோடு வாழ வைப்பது இந்த அருமையான கைத்தொழில் தான் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : அருமை…, அருமை…., சரி…, இந்த மாதிரி அப்பளம் தவிர்த்து, home-made products ஆகச் செய்வது வேற என்னென்ன இருக்கு….

மேகலா : பலகாரங்கள் கிருஷ்ணா…. இந்த பலகாரங்கள் செய்வதில் மட்டும் எத்தனை சுவாரஸ்யங்கள் இருக்கு… இன்று social media பலருடைய கைப்பக்குவத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தாலும், இந்த modern technology மக்களிடம் பரவுவதற்கு முன்னமேயே இந்த பலகாரம் செய்து, தங்கள் வாழ்வாதாரத்தை சிறப்பாக்கியவர்கள் என்று, அந்தந்த ஊர்களில் famous ஆகியிருக்கிறார்கள் கிருஷ்ணா…. அதிலும், ‘சிறுவாடு’ பணம் சேர்ப்பதற்காக மட்டுமல்ல…., கணவனை இழந்த பெண்கள், தொழிலில் நஷ்டத்தை சந்தித்தவருடைய மனைவிகள், இப்படி பல பெண்களுக்கு ஆபத்பாந்தவனாகக் கை கொடுத்தது, இந்த பலகாரம் செய்வதுதான் கிருஷ்ணா… நான் social media-வில் பார்த்த ஒரு பெண்மணி, காரைக்குடியைச் சேர்ந்தவர், அவருடைய கணவருக்கு தொழிலில் கொஞ்சம் சறுக்கல் வந்ததும், வாழ்க்கையை நடத்துவதே போராட்டமான சூழ்நிலையில் கை கொடுத்தது, அவருடைய கைப்பக்குவம் தான்… முதலில், விருப்பப்பட்டவர்களுக்கு பலகாரம் செய்து கொடுத்து வந்திருக்கிறார். அவருடைய கைமணம், bank manager ஒருவருக்கும் வாசமடித்திருக்கிறது. இந்தத் தொழிலை சிறப்பாகச் செய்வதற்கும், விரிவுபடுத்துவதற்கும் தன்னால் கடனுதவி செய்ய முடியும் என்று நம்பிக்கை கொடுக்கவும்…., அந்த நம்பிக்கை இன்று கடல் கடந்து, தன் கைப்பக்குவத்தை ‘பார்சல்’ பண்ணி அனுப்புமளவுக்கு விரிவு பெற்றிருக்கிறது. செட்டிநாடு special கைச்சுத்து முறுக்கு, சீப்பு சீடை, தேன்குழல் முறுக்கு, அதிரசம் என்று ஆச்சியின் கைப்பக்குவத்தில், மேற்பார்வையில் சுவை மாறாமல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய தன்னம்பிக்கை லெவலைப் பார்த்து எத்தனை பேர் இந்தத் தொழிலை ஆரம்பித்திருக்கிறார்களோ…. எனக்கே கொஞ்சம் பொறாமையாக இருக்கும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : இருக்காதா…, பின்ன…, ஒரு பெண், தன் கைப்பக்குவத்தினால் தலை நிமிர்ந்து நிற்பதோடு, இன்னும் சிலருக்கு வாழும் வழி காட்டுகிறாரே… அது எவ்வளவு பெரிய விஷயம்….

மேகலா : இன்னும் ஒருவர்…, ‘ராஜம் மாமி’ என்பவர்…, திருச்சியைச் சேர்ந்தவர்… இவரும் சிறிய முதலீட்டில், தன் கைப்பக்குவத்தை மட்டுமே நம்பி, கைச்சுத்து முறுக்கு, அதிரசம் என்று செய்து கொடுத்து, இன்று பெரிய factory மாதிரி run பண்ணுகிறார்…. அவர் பேசுவதைக் கேட்டால், நீ பாராட்டாமல் இருக்க மாட்டாய் கிருஷ்ணா… அவருடைய factory-யில், 80% பெண்களே வேலை பார்க்கிறார்கள்… அவருடைய உழைப்பையும், கைப்பக்குவத்தையும் கேள்விப்பட்டு, அதை நேரில் கண்டு வர வேண்டும் என்று ஆசைப்பட்ட chef Deena-விடம், அவர் என்ன சொன்னார் தெரியுமா கிருஷ்ணா…? ‘ஒவ்வொரு பெண்களிடமும் ஏதாவது ஒரு திறமை இருக்கும். அது என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். வெறும் சமையல்தானே நமக்குத் தெரியும் என்று சும்மா இருக்காதீர்கள்… அதையும் நான்கு பேருக்கு பயன்படும்படி செய்யும் போது, மனதும் நிறைவாய் இருக்கும்…., வேலை செய்தோம் என்ற திருப்தியும் இருக்கும்’ என்று. ‘பெண்கள் சமையல் மட்டுமே தெரிந்தவர்கள் என யாரும் மதிப்புக் குறைவாய் பேசக் கூடச் செய்யக் கூடாது’ என்று கெத்தாய் சொல்கிறார் கிருஷ்ணா…. சமையல்கலையைத் தொழிலாகச் செய்ய வேண்டும் என்று catering course படித்த Chef Deena, ராஜம் மாமியின் traditional கைப்பக்குவத்தில் பிரமித்துத்தான் போனார் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : சுவை…, சுவை…, சுவையான விஷயம் மேகலா…. உழைப்பு…., திறமை…., என்று யார் சொன்னாலும், காதுக்கு குளிர்ச்சியாய் இருக்கு…. எங்கள் கோபர்கள் கூட, பாலும்…, பால் சார்ந்த தயிர்…., பாலாடைக்கட்டி…., வெண்ணெய்…, நெய்…, என்று கைப்பக்குவத்தால் மட்டுமே செய்யும் பொருட்களை விற்பனை செய்து மகிழ்ச்சியாய் வாழ்ந்தார்கள்…

மேகலா : கிருஷ்ணா…, நீ கோபர்களைப் பற்றிப் பேசும் போது, எனக்கும் கூட பொறாமையாக இருக்கு கிருஷ்ணா….

கிருஷ்ணர் : பொறாமைப்பட்டுட்டயா… கைத்தொழில், கைப்பக்குவத்தைப் பற்றிச் சொல்லு… அதைக் கேட்போம்….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2