கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 6

கிருஷ்ணர் : ஏன் மேகலா…., சமையல் தவிர்த்து, வேற தொழில் கைத்தொழிலாகச் செய்வதற்கு, குறிப்பாக பெண்களுக்கென்ற கைத்தொழில் வேற எதுவும் இருக்கா மேகலா….?

மேகலா : இருக்கு கிருஷ்ணா…. Tailoring வேலையில் இன்று பெண்கள் கலக்குகிறார்கள் கிருஷ்ணா… இந்த தையல் வேலையிலேயே embroidery work செய்தல்…., dress design பண்ணுதல்…., bridal design blouse stitch பண்ணுதல் என்று இந்தத் துறையில் கூட, exclusive masters கூட இருக்காங்க கிருஷ்ணா….

கிருஷ்ணர் : பொதுவாக ஒரு பட்டன் பிஞ்சி போனால் கூட, tailor-இடம் போகாமல், நாமே stitch பண்ணுவது நல்லதுதானே…. இந்தத் தையல் வேலையைக் கற்றுக் கொடுப்பதற்கு institute இருக்கா மேகலா…

மேகலா : இருக்கு கிருஷ்ணா…. சட்டைக்கு பட்டன் repair பண்ணுவதை யார் வேண்டுமானாலும் செய்யலாம் கிருஷ்ணா. ஆனால், ஒரு blouse-ஐ வெட்டி தைப்பதற்கு, institute சென்று கற்றுக் கொள்ளத்தான் செய்யணும் கிருஷ்ணா… சமையல் வேலை பலருக்கு ரொம்பப் பிடிக்கும் என்பது போல், சிலருக்கு தையல் வேலை மீது, சிறு வயது முதலே ஒரு பிடிப்பு இருக்கும். எங்களுக்கு school படிக்கும் போதே தையல் class உண்டு. அதில் basic, அதாவது தையல் கலையை, ஊசியில் நூல் கோர்த்து நேர்கோடாகத் தைப்பதைக் கற்றுக் கொடுப்பார்கள் கிருஷ்ணா. கையால் தைக்கும் முறையை சின்ன வயதிலேயே அறிமுகப்படுத்துகிறார்கள். அதில் interest உள்ளவர்கள், college சென்று படிக்க முடியாதவர்கள், பள்ளிப் படிப்பு முடிந்தவுடன், தையலைக் கற்றுக் கொடுக்கும் தனியார் institute சென்று, blouse தைக்க, தலையணை உறை தைக்க, சின்ன frock, பாவாடை என்று அவர்களுக்குத் தேவையானதை கற்றுக் கொள்கிறார்கள் கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : தேவையானது என்றால்….? Institute சென்று படிக்கணும்னா, A to Z சொல்லிக் கொடுப்பாங்கல்ல….

மேகலா : இது அப்படியில்ல கிருஷ்ணா…. 3 மாச course என்று இருக்கும். அதில் சிலருக்கு embroidery பழகப் பிடிக்கும்; சிலருக்கு blouse தைக்கப் பிடிக்கும். இதிலேயே design blouse தைப்பதற்கு, இன்னும் சில மாசம் ஆகலாம்…. சிலருக்கு travel bag, pouch என்று மட்டும் பழகப் பிடிக்கும்…, சிலருக்கு nighty தைக்கப் பிடிக்கும்…. மூன்று மாதத்தில், cut பண்ணுவது, design பண்ணுவது, தைப்பது என்று கற்றுக் கொள்வது சிரமம். அதனால், select பண்ணுவார்கள்…. Blouse-ம், nighty-யும் என்று… இப்படி அவரவர்க்கு விருப்பப்பட்ட சில தையல் வேலைகளைக் கற்றுக் கொண்டு, மேலும் விருப்பமானால், course-ஐ நீட்டிச்சிக்குவாங்க. ஆனா, பொதுவாக பெண்கள், மூன்று மாதம் படித்து விட்டு, பின்பு பயிற்சியாலும், தொடர்ந்து பழகுவதாலும் கற்றுக் கொள்வதுதான் அதிகமாக இருக்கும். உனக்கு ஒண்ணு தெரியுமா கிருஷ்ணா… தையல் வேலையில் விருப்பம் உள்ளவருக்கு கொஞ்சம் யோசிக்கும் knowledge இருக்கும் கிருஷ்ணா. அதனால், இப்போ, இந்த தையல் வேலை, online class-லும் சொல்லித் தராங்க கிருஷ்ணா. Bridal blouse design மட்டுமே தனி class கூட உண்டு கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Oh! நீ சொன்ன மாதிரி, நமக்கு பிடித்த design மட்டும் கற்றுக் கொள்ளணும்னு நினைத்தால், online-லேயே கற்றுக் கொள்ளலாம். ரொம்ப easy-யாப் போயிரும்… வாவ்….

மேகலா : 1 வாரம் class attend பண்ணினால் போதும் கிருஷ்ணா…. ஆனால், ரொம்ப costly கிருஷ்ணா…

கிருஷ்ணர் : இருக்கட்டுமே… ‘தொழிலில்’ ஈடுபடும் போது, நிறைய சம்பாதிக்கலாமே…. ’கைத்தொழில் ஒன்றை, என்ன விலை கொடுத்தாவது கற்றுக் கொள், கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்’….

மேகலா : நிச்சயமா கிருஷ்ணா…. எவ்வளவு costly-யானாலும் கற்றுக் கொள்வதுதான் சிறப்பு… இன்றைக்கு கல்யாணப் பொண்ணுகள் தன்னுடைய wedding blouse-ஐ என்ன விலை கொடுத்துனாலும் தைக்க தயாராகி விட்டார்கள் கிருஷ்ணா…. இதற்கான design-க்கு catalogue-ஏ வந்து விட்டது கிருஷ்ணா….. Local tailor-இடம் திருப்தி இல்லையென்றால், சென்னைக்கு அனுப்பி, அங்கு famous ஆன boutique – க்கு அனுப்பி தைத்து வாங்குகிறார்கள் கிருஷ்ணா… இது designer blouse மட்டுமில்லை…., aari work என்று சொல்லப்படும் embroidery work தான் special. இந்த embroidery work செய்வதற்கான boutique இன்று, பிரியாணிக் கடை மாதிரி பெருத்து விட்டது கிருஷ்ணா…. ’Order கொடுத்த நாளிலிருந்து 2 நாளில் தைத்துக் கொடுப்போம்’ என்று விளம்பரம் கூட செய்கிறார்கள் கிருஷ்ணா. பெரும்பாலும் இந்த boutique-ஐ பெண்கள்தான் நடத்துகிறார்கள் என்பது சிறப்பான விஷயம்.

கிருஷ்ணர் : நீ சொல்லுவதைப் பார்த்தால், ஒருவராக இருந்து, customers கொடுக்கும் Order-ஐ திருப்தியாகக் குறித்த நேரத்தில் செய்து கொடுக்க முடியும் என்று தோணலயே….

மேகலா : கிருஷ்ணா…., பெரிய unit ஆக நடத்துபவர்கள், இந்த வேலை தெரிந்தவர்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்கிறார்கள் கிருஷ்ணா….. Orders இல்லையென்றாலும், பட்டுச்சேலைக்குப் பொருந்தக் கூடிய colors-ல் materials வைத்திருப்பார்கள்…., அதில் அழகான embroidery work, aari work என்று எந்த நேரமும் தைத்துக் கொண்டிருப்பார்கள். கடைக்குச் சென்று வாங்குபவர்கள், design பிடித்து, தங்கள் துணியில் தைக்கச் சொல்லி Order-ம் கொடுப்பார்கள். ஏற்கனவே work பண்ணிய blouse material பிடித்திருந்தால், அதையும் வாங்கிக் கொள்வார்கள். இது தவிர, சில standard size-களில் blouse ஆகவும் தைத்து வைத்திருப்பார்கள். அது பொருந்தக் கூடியவர்களுக்கு சுலபமாய் வேலை முடிந்து விடும் கிருஷ்ணா…. இதன் ஒரு blouse என்ன rate இருக்கும் என்று நினைக்கிறாய்…..?

கிருஷ்ணர் : என்ன ஒரு 2000 இருக்குமா….

மேகலா : நீ நம்பவே மாட்டாய் கிருஷ்ணா…. Order-க்குத் தைக்கும் wedding blouse 1 லட்சம் வரைக்கும் rate சொல்வார்களாம் கிருஷ்ணா…. நீ சொன்ன மாதிரி 2000 ரூபாய்க்கும் கிடைக்கும்…. ஆனால், இந்த 1 லட்சம் ரூபாய் blouse-லாம்…., அது ஒன்றே போதும், மணமகளின் அழகை பல மடங்காக்கி விடும். ஒரு விஷயம் தெரியுமா கிருஷ்ணா…. Ready-made blouse ஆக stitch பண்ணி விற்கும் கடை, nighty கடை மாதிரி நிறைய இருக்கிறது. இங்கு நம்ம மதுரையில் கூட இருக்கிறது கிருஷ்ணா. இவர்கள் 300 ரூபாயிலிருந்து blouse விற்கிறார்கள். அதில் ஆச்சர்யமான விஷயம்…., 500 ரூபாய்க்குக் கூட, aari work பண்ணிய blouse வைத்திருப்பார்கள் கிருஷ்ணா…. Budget கல்யாணம் பண்ணும் brides, இங்கு வந்து வாங்கிக் கொள்ளலாம். அத்தனை அழகாயும் இருக்கும் கிருஷ்ணா…

கிருஷ்ணர் Budget கல்யாணம் பண்ணுபவர்களும், தங்களின் கல்யாண அலங்கார உடைகளை, தங்கள் budget-க்குள் மனமகிழ்ச்சியுடன் வாங்குவதற்கான இந்த கைத்தொழில் எத்தனை சிறப்பானது….

மேகலா : அதில் ஒரு முக்கியமான விஷயம் தெரியுமா கிருஷ்ணா…. Aari work கற்றுக் கொள்ளணும்னு ஆசைப்படுபவர்களுக்கும், தங்கள் unit-ல் கற்றுக் கொடுக்கும் வேலையும் செய்கிறார்கள் கிருஷ்ணா…. சின்னச் சின்ன வேலைகளை, அவர்களைக் கொண்டே செய்யவும் வைத்து, அவர்களுக்கும் பயிற்சி கொடுத்து, தானும் பயனடைந்து, ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிப்பார்கள் கிருஷ்ணா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1