கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 7
கிருஷ்ணர் : Oh! நுணுக்கமான கைவேலையோடு சாமர்த்தியமும் இருந்தால் தானே பிரயோஜனம்… நுணுக்கமான இந்த வேலையை 2 நாளில் நீங்கள் கேட்ட design-ல் செய்து கொடுப்போம் என்று சொன்னால்…., அவர்கள் எத்தனை பேரை வைத்து வேலை வாங்கணும். அப்போ, கைவேலைக்காரர்களுக்கு வேலையும் கொடுக்கிறார்கள்…. தானும் வாழ்ந்து, இன்னும் சிலரையும் வாழ வைப்பதுதான், உழைப்பின் மகிமை…
மேகலா : நீ இவர்களையே இவ்வளவு பாராட்டுகிறாயே… எங்க tailor ஒரு commercial tailor….. அவருக்கு தீபாவளி time-ல், blouse தைத்த பின்பு, அதற்கு பட்டன் வைக்க நேரம் கிடைக்காது கிருஷ்ணா. சட்டைக்கு பட்டன் வைக்க மட்டும் ஒரு மாற்றுத்திறனாளி பையனிடம் சட்டைகளைக் கொடுத்து விடுவார். ஒரு சட்டைக்கு 10 ரூபாய் charge பண்ணி, அந்தப் பையனிடம் கொடுத்து, அவர் தைக்கும் சட்டைக்கெல்லாம் பட்டன் தைத்து விடுவார். Tailor-ஐ, tailor என்று கூப்பிடுவது போல, சட்டைக்கு பட்டன் தைப்பவரை ‘காஜா போடுபவர்’ என்றும் சொல்லுவோம் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : சின்ன tailor கடை வைத்திருக்கும் tailor, தனக்கு உதவியாகத்தான் காஜா போடுபவரை வைத்திருக்கிறார். ஆனால், அதுவே அவருக்கு வேலை வாய்ப்பாகவும் அமைந்து விட்டது… Very good.
மேகலா : இது என்ன பிரமாதம்…. நான் ஏற்கனவே உன்னிடம் சொல்லியிருக்கிறேன் கிருஷ்ணா… எங்கள் ஊரில், பெரிய கடை பஜாரில், மூர்த்தி நாயக்கர் பிரியாணி கடை பக்கத்தில் இரண்டு tailors இருப்பார்கள். இவர்கள் வேலை என்ன தெரியுமா… repair வேலை பார்ப்பது மட்டும் தான் கிருஷ்ணா.. பெரிய சட்டையை alter பண்ணுவது…, சிறிசாப் போச்சுனா, பிரித்து பெருசாக்கித் தைப்பது…., சேலை ஓரம் அடிப்பது…, சேலைக்கு falls தைப்பது…, என்று இப்படி வேலைகள் தான் செய்கிறார்கள். ஆனால், நாம் எப்பப் போனாலும், அந்தத் தையல் மெஷின் ஓயாது ஓடிக் கொண்டே இருக்கும் கிருஷ்ணா….. ஒவ்வொரு வேலைக்கும், தையலுக்குத் தகுந்தபடி, பத்து ரூபாய், இருபது ரூபாய் மட்டும் தான் charge பண்ணுவார்கள்….. இவர்கள் ஓடும் ஓட்டத்திற்கு, ஒரு நாளைக்கு 1000 ரூபாய் கூட சம்பாதிப்பார்கள் என்று நான் நினைக்கிறேன் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : வெறும் repair work மட்டும் பார்க்கிறார்கள்…., design பண்ணத் தேவையில்லை…, கட்டிங்ஸ் இல்லை…., measurement இல்லை…. வெறுமனே service வேலை மாத்திரமே…. சேராத ஒன்றை சேர வைப்பது…, லூசான ஒன்றை ‘சிக்’கென மாற்றுவது…. வாவ்! என்ன ஒரு ‘மேஜிக்’ வேலை. இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் மேகலா…..
மேகலா : இது மட்டுமல்ல கிருஷ்ணா…. repair வேலை பார்ப்பதற்காக மட்டுமே ஒரு tailor, கையால் machine-ஐச் சுத்தி தைக்க வருவார் கிருஷ்ணா…. அவர் பழைய சேலைகளைக் கொடுத்தால். 4 or 5 சேலைகளை விரித்து சேர்த்துத் தைத்து, துணிமெத்தை தைத்துக் கொடுப்பார்… அவரோட 80-வது வயதில் கூட machine-ஐத் தூக்கிக் கொண்டு, ஏதாவது தைக்க இருக்கிறதா என்று கேட்பார்… என்னோட எல்லா துணி மெத்தைகளும் அந்த tailor தான் தைத்துக் கொடுத்திருக்கிறார்.. அந்த சமயங்களில் எனக்கு ஏதாவெது repair வேலையென்றாலும் தைத்துக் கொடுப்பார். எண்பது வயதில் கூட, தன் கைத்தொழிலை விடாது பார்த்து வந்த அந்த tailor கொஞ்ச காலமாக வரவில்லை கிருஷ்ணா…..
கிருஷ்ணர் : கைத்தொழிலின் மகிமை அப்படிப்பட்டது மேகலா…. தன் கைகள் இயங்கும் வரையிலும் தன் தொழிலை விடாத கர்ம யோகிகள்.
மேகலா : தனக்குப் பிடித்த வேலையை இப்போ, passion என்கிறார்கள். உயிர் மூச்சாக, ஆத்மார்த்தமாக செய்பவர்கள், வயது. தள்ளாமை இதையெல்லாம் பார்ப்பதில்லை கிருஷ்ணா.. என் மாமியாரும் இப்படித்தான் கிருஷ்ணா…. தன்னை மரணம் அழைக்கும் சில தினங்களுக்கு முன்பு வரையிலும், அந்தக் கைகள் இயங்கிக் கொண்டேதான் இருந்தது….
கிருஷ்ணர் : நீ சொல்வது உண்மை…. கடனுக்காகவும், கடமைக்காகவும் வேலை செய்பவர்கள், அந்த வேலையைச் செய்யாமலிருக்க ஏதாவது காரணம் சொல்லுவார்கள். ஆனால், உயிர்மூச்சாக நினைத்து வேலை பார்ப்பவர்கள், தன்னை மறந்த நிலையிலும், தன் வேலையை நிறுத்த மாட்டார்கள்…
மேகலா : இந்த tailoring வேலையில் இன்னொரு சுவாரஸ்யமான வேலை ஒன்று இருக்கிறது கிருஷ்ணா……
(தொடரும்)
Comments
Post a Comment