கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 8

மேகலா : இந்த tailoring வேலையில், இன்னொரு சுவாரஸ்யமான வேலை ஒன்று இருக்கிறது கிருஷ்ணா…. Market-க்குக் கொண்டு போகப் பயன்படுத்தும் பை என்று social media-வில் கற்றுக் கொடுக்கிறார்கள். அதாவது, வீட்டில் இருக்கும் அரிசி bag-களை waste பண்ணாமல், அதனை ‘base’ ஆக வைத்து, மேலே பழைய nighty துணிகளை அழகாக விரித்து, strong ஆன பைகளை உருவாக்கக் கற்றுக் கொடுக்கிறார்கள். அது, கொஞ்சம் பெரிதாக தைத்து விட்டால், market போகும் போது எடுத்துச் செல்வதற்கு useful ஆக இருக்கும். இப்படி waste துணிகளை reuse பண்ணி bags தைப்பதற்கு நிறைய பெண்கள், வேற வேற size-களில் கற்றுத் தருகிறார்கள். என் தங்கச்சி ராணிமா கூட, எனக்கு ஒரு bag தைத்துக் கொடுத்திருக்கிறாள். புது dress வாங்கும் போது, கடையில் கொடுக்கும் big shopper bag-ஐ விட, இப்படித் தைக்கும் bag, சாமான்கள் வாங்குவதற்கு ரொம்ப useful ஆக இருக்கும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Oh! எந்த அளவுக்கு, சமையல் வேலை பெண்களுக்கு கை கொடுக்கிறதோ, அந்த அளவுக்கு, தையல் வேலையும், அதைச் சார்ந்த, reuse, repair வேலைகளும் கை கொடுப்பதாகத்தான் இருக்கிறது…

மேகலா : எனக்கு, மதனா, ஒரு ‘பிடி’ gloves தைத்துக் கொடுத்தாள் கிருஷ்ணா…. Baking oven-இல் tray-யை வைப்பதற்கும், எடுப்பதற்கும் gloves ஒன்று உபயோகிப்பார்கள். அந்த gloves, அடுப்பில் சமைக்கும் போது, அவ்வளவு easy-யாக handle பண்ண என்னால் முடியாது கிருஷ்ணா… அதற்கு, விரல்களில் மாட்டி பாத்திரத்தைப் பிடிப்பது மாதிரியான ‘பிடி gloves’ ஒன்று அமெரிக்காவில் இருக்கும் போது எனக்கு தைத்துக் கொடுத்தாள். அது ரொம்ப useful ஆக இருக்கு கிருஷ்ணா… இதனை, ராணிமாவிடம் காண்பித்து, ’இதே மாதிரி தைத்துக் கொடேன்’ என்று கேட்டேன். அதைப் பார்த்து, அதே மாதிரி தைத்துக் கொடுத்து விட்டாள் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Oh! கண்ணால் பார்த்து செய்து விட்டாளா…. சுலபமான வேலைதான் என்றாலும், நீ சொன்ன மாதிரி basic கற்றுக் கொண்டால், மற்றி மாற்றி தைத்துப் பார்த்து பழகிக் கொள்ளலாம். அடிப்படை interest இருந்தால் போதும்…. வாவ்…,! அற்புதமான கைத்தொழில்…..

மேகலா : கிருஷ்ணா…, இன்று ஒரு ‘baby naming ceremony’-க்குச் சென்றிருந்தேன். அங்கு, நிறையப் பேர் ‘jari work’ பண்ணிய அழகான design பண்ணிய blouse போட்டிருந்தார்கள். நான் ஒவ்வொன்றையும் ஒரு writer பார்வையில் பார்த்தேன்…. இதைப் பற்றி ஒரு interview எடுக்கலாம் என்று தோன்றியது… என்னுடைய அண்ணா மருமகள், simple ஆன அழகான ஒரு designer blouse போட்டிருந்தாள். அவளிடம், முதலில் நான், ‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுகிறேன் என்றவுடன், அவள், நான் என்ன கேட்க வருகிறேன் என்பதைப் புரிந்து கொண்டாள் கிருஷ்ணா.. நான், முதலில், ‘உன்னுடைய blouse-ன் stitching charge எவ்வளவு’ என்றுதான் கேட்டேன். கிருஷ்ணா, முதலில் உன்னிடம் ஒன்றை சொல்லி விடுகிறேன். கிரிக்கும், tailoring-ல் interest உண்டு; தைக்கவும் தெரியும். அதை விட, ‘மதுபனி painting’ என்று சொல்லப்படும் art…., அதாவது canvas துணியில், ‘மதுபனி painting’ வரைவதில் ‘கில்லி’. என்னுடைய passion எது என்பதைத் தெரிந்தவள். அதனால், தன்னுடைய opinion மட்டுமல்லாமல், ‘சுபா’, என் அக்கா மருமகளிடமும் இதைப் பற்றிக் கேட்டு, ஒரு சின்ன ‘press meet’-ஏ நடந்தது என்றால் பார்த்துக்கோயேன். அவள் சொன்னது இதுதான் கிருஷ்ணா…, designer blouse-க்கு stitching charge ரூபாய் 300-லிருந்து start ஆகுது சித்தி…. நாம கொடுக்கும் aari design-ஐப் பொறுத்து, ஒவ்வொரு கோடுக்கும் rate ஏறும்…. சும்மா வீட்டில் வைத்து தைப்பவர்கள் charge கேட்பது ஒரு ரகம்…., Boutique வைத்து தைத்துக் கொடுப்பவர்கள் charge பண்ணுவது ரூபாய் 1500-லிருந்து start ஆகும்’ என்று சொல்லி சுபாவிடம் கருத்துக் கேட்டாள்…. உனக்கு ஒண்ணு தெரியுமா கிருஷ்ணா… ‘சுபா’ தன்னுடைய blouse-ஐத் தானே தைப்பாள். அவளோட மகளுக்கு tops-ம் தைப்பாள். இன்று அவள் போட்டிருந்த blouse-ம் அவளே தைத்தது என்று சொன்னாள் கிருஷ்ணா…. ஆனால், வெளியில் யாருக்கும் தைத்துக் கொடுப்பதில்லை என்று சொல்லி விட்டு, stitching charge பற்றிச் சொல்லும் போது, designer blouse with aari work ரொம்ப costly-தான் அத்தை என்று சொன்னாள். அடுத்து, அங்கிருந்த துளசியிடம், (ராணிமா மருமகள்), கிரி, ‘நீ உன்னுடைய blouse-க்கு stitching charge எவ்வளவு கொடுத்தாய் என்று கேட்கும் போது, இன்று naming ceremony கொண்டாடிய baby-யின் அம்மா, அணிந்திருந்த blouse-ன் aari work design-ஐக் காட்டி, இந்த blouse-ன் stitching charge மட்டும் ரூபாய் 10,000 இருக்கும் அத்தை’ என்றாள். எனக்கு வியப்பாகவும் இருந்தது… நம்ம ஊரில் இப்படியெல்லாம் தைத்துக் கொடுப்பதற்கு தையல் கலைஞர்கள் இருக்கிறார்களா என்று ஆச்சர்யமாகவும் இருந்தது கிருஷ்ணா…

கிருஷ்ணர் : Oh! இந்த கட்டுரை எழுதும் நேரம், இந்த function நடந்தது உனக்கு ரொம்ப useful ஆகப் போயிருச்சி. உன்னுடைய family-யில் இத்தனை பேர் தையல் கில்லாடிகளா…, பரவாயில்லையே….

மேகலா : இன்னொரு கில்லாடியை இன்னும் சொல்லவே ஆரம்பிக்கல கிருஷ்ணா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2