கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 11

கிருஷ்ணர் : ரங்கோலி…, கோலம்…, நம்ம பாரத நாட்டிற்கு மட்டுமே சொந்தமாகும். அதிலும், குறிப்பாக, பெண்கள் மட்டுமே கொண்டாடும் அற்புதமான கலை….

மேகலா : கிருஷ்ணா…, இதை நீ இவ்வளவு சிலாகித்துப் பேசும் போதுதான், இதன் தனிப்பட்ட மேன்மை எனக்கும் புரியுது கிருஷ்ணா….. உனக்கு ஒன்று தெரியுமா கிருஷ்ணா…. இன்று கல்யாண வீடுகளிலோ…., மற்ற விழாக்களிலோ, வரவேற்பு இடங்களில், பெரிய பெரிய கோலங்களை, அதில் கைதேர்ந்தவர்களை வைத்து வரைகிறார்கள் கிருஷ்ணா…. மண்டபத்திற்குள் enter பண்ணுவதற்கு முன்பாக, ஒரு 5 நிமிடம் கோலத்தை ரசிக்காமல் செல்ல முடியாது கிருஷ்ணா… பெரும்பாலும், இந்த மாதிரி வண்ணக்கோலங்களில், ‘ராதா கிருஷ்ணர்’, சோலையின் நடுவில் ஆனந்தமாய் நின்று புல்லாங்குழல் வாசிப்பது மாதிரியான கோலம் தான் வரையப்பட்டிருக்கும். வெறும் காசுக்காக மட்டுமே கோலம் வரைந்திருந்தால், இவ்வளவு உயிரோட்டமாக இருக்குமா என்று யோசிக்குமளவுக்கு இருக்கும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Oh! கோலம் போடத் தெரியாதவர்கள், திறமையாளர்களைப் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள்…. எப்படியோ…, நமக்கான தனித்துவமான கலை. பெண்களின் கைகளில் லட்சுமிகரமாய் விளங்க வேண்டும்…. ஆமாம்…., நீ ‘டெரகோட்டா’ கலையைப் பற்றிச் சொன்னாயே… அதைப் பற்றிச் சொல்லு… அந்தக் காலங்களில், அய்யனார் சிலைக்கருகில் இருக்கும் குதிரைகள், இந்த டெரகோட்டா கலைக்கு முன்னோடி என்று நினைக்கிறேன்…..

மேகலா : இருக்கலாம் கிருஷ்ணா… இந்த டெரகோட்டா பொம்மைகள், மனிதர்களின் கைவண்ணத்தாலேயே உருவாவது. மண்பானைகள் செய்யும் அதே களிமண் வைத்துத்தான் இந்தப் பொம்மைகள் செய்யப்படுகின்றன…. எங்கெல்லாம் இதற்கான சிறந்த மண் கிடைக்கிறதோ…, அங்கெல்லாம் மண்பானையும் செய்யப்படுகிறது. டெரகோட்டா பொம்மைகளும் செய்யப்படுகிறது….. நாகர்கோவில் பக்கம், கேரளாவில் நிறைய இடங்களில்…, Bangalore to Mysore செல்லும் வழிகளில், சாலையோரம் இந்த பொம்மைகள் குவிக்கப்பட்டிருக்கும் கிருஷ்ணா…. குதிரையும், யானையும் தான் அதிகமாக செய்யப்படுகின்றன… Miniature-லிருந்து பெரிய size வரைக்கும் செய்து விற்கிறார்கள் கிருஷ்ணா…. பரவலாக எல்லாத் தரப்பு மக்களும், இதன் அழகில் மயங்கி வாங்க ஆசைப்படுகிறார்கள். சில காலங்களுக்கு முன்பாக, மண்பானையை மக்கள் வாங்க மறந்ததால், பானை செய்யும் கலையே அழிந்து விடுமோ என்ற அச்சம் இருந்தது கிருஷ்ணா…. அப்பத்தான், தெய்வ அருளால் மக்களிடையே டெரகோட்டா கலை நல்ல வரவேற்பைப் பெற்றது… இப்போ, இளைய தலைமுறையினருக்கு, ‘மண்பானை சமையல்’, ‘மண்பானை குடிநீர்’ என்று ஒரு awareness வந்திருக்கிறது. ஆங்காங்கே பானைக் கடையும் பரப்பி வைக்கப்பட்டு விற்பனையாகிறது கிருஷ்ணா… உனக்குத் தெரியுமா…., டெரகோட்டா பொம்மையில், ‘பிள்ளையார்’ பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறார் கிருஷ்ணா…. ‘புத்தகம் படிக்கும் பிள்ளையார்’, ‘மரத்தில் ஏறும் பிள்ளையார்’, ‘கணக்கு எழுதும் பிள்ளையார்’, ‘ஜாலியாகப் படுத்து விளையாடும் பிள்ளையார்’…, என்று ஏகப்பட்ட pose-களில், கண்ணையும், மனதையும் ஒருசேரக் கவர்ந்து விடுகிறார் கிருஷ்ணா…. என்னிடம் படுத்துக் கொண்டு, கன்னத்தில் கை வைத்திருக்கும் டெரகோட்டா பிள்ளையார் இருக்கிறார் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : பார்த்திருக்கிறேன்…. இந்த கைவினைஞர்கள் தங்கள் இஷ்டத்துக்கு பிள்ளையாரை வளைத்து விடுகிறார்கள். இருந்தாலும், அவர்கள் கையில் பிள்ளையார் அழகாகத்தான் விளையாடுகிறார்….. ஆமாம், நீ எப்பவாவது இந்த பொம்மைகள் செய்யும் இடத்திற்கு போயிருக்காயா மேகலா… at least பானை செய்வதையாவது பார்த்திருக்கயா….

மேகலா : பானை செய்வதை சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன் கிருஷ்ணா… ஆனால், டெரகோட்டா பொம்மைகள் செய்யப்படும் பட்டறைக்கு, Bangalore-ல் ஒரு முறை சென்றிருக்கிறேன் கிருஷ்ணா…. Sheethal, இந்திராநகரில் இருந்த போது கூட்டிச் சென்றிருக்கிறாள். ஒரு பெண் நடத்தி வந்த சிற்பப்பட்டறை… நான் செல்லும் போது, எந்த பொம்மையும் செய்யல…. ஆனால், பொம்மையை வேக வைக்கும் இடத்தைப் பார்த்தேன். அங்கிருந்து ஒரு குதிரையின் தலை மட்டும் வாங்கி வந்தேன். இதோ, என் எதிரில் நிற்பது அதுதான் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ரொம்ப அழகா இருக்கு மேகலா….

மேகலா : இப்போ, வெளிநாடுகளில் இந்தக் கலைக்கு நிறைய வரவேற்பு இருக்கு கிருஷ்ணா…. ஏற்றுமதியும் செய்யப்படுகிறது……

கிருஷ்ணர் : கைத்தொழில்கள், பாரதத்தின் மிகப் பெரிய வலிமை என்பது உண்மையாகிறது மேகலா…. டெரகோட்டா சிற்பங்கள் மட்டுமல்ல…. மேகலா…., சுதையென்று சொல்லப்படும் சுண்ணாம்பினால் செய்யப்படும் சிற்பங்கள், கல்லினாலும், மரத்தினாலும் செய்யப்படும் சிற்பங்களுமே, மனிதனின் கைவண்ணத்தினால் உருவாவதுதானே…

‘கல்லிலே கலை வண்ணம் கண்டான்’ – என்ற கா. மு. ஷெரிஃப் எழுதிய பாடல் எத்தனை அர்த்தமுள்ளது…

மேகலா : உண்மைதான் கிருஷ்ணா… சிற்பங்கள் வடிப்பதற்கு மனிதனுக்கு exclusive திறமை வேண்டும் கிருஷ்ணா…. பானை செய்பவர்களுக்கு, இது வாழ்வாதாரம். தன் கையையே நம்பும் இவர்களுக்கு, இது சோறு போடும் ‘குலச் சாமி’ மாதிரி கிருஷ்ணா. கொஞ்ச காலத்திற்கு முன்பு, இந்தத் தொழில் நசிந்து போகக் கூடிய நிலை இருந்தது உண்மைதானே…. அந்தச் சமயம் அரசாங்கம், கைத்தொழில்களுக்காக தனி effort எடுத்து, கைத்தொழில்களில் சிறந்த வல்லுனர்களை வைத்து, தொழில் கற்றுக் கொள்ள விருப்பமுள்ளவர்களுக்கு கற்றுக் கொடுத்து, கடனுதவியும் அளித்து, நசிந்து போகும் நிலையில் இருந்த கைத்தொழில்களைப் பாதுகாக்க முனைந்தனர். நாணல் புற்களினால் பாய் நெய்தல், மூங்கில் நார்களினால், பனை ஓலைகளினால் கூடை, சுளவு, பெட்டி முதலியன செய்தல், களிமண் பானை, ஜாடி, டெரகோட்டா பொம்மை செய்தல், மூங்கில் chair மற்றும் மூங்கில் பொருட்கள் செய்தல் என்று கைத்தொழில்களைக் கற்றுக் கொடுப்பது மட்டுமல்லாமல், செய்த கைவினைப்பொருட்களை வெளிநாட்டில் விற்பனை செய்வதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தனர். அது ‘சூப்பர் டூப்பர்’ ஹிட் ஆயிருச்சி கிருஷ்ணா… அதுல நம்பர் ஒன்னாக click ஆனது மண்பானை சம்பந்தப்பட்ட பொருட்கள், டெரகோட்டா பொம்மைகள்….

கிருஷ்ணர் : இது அரசாங்கத்தின் கடமையல்லவா….

மேகலா : அதிலும், fur toys, கூடை முடைதல் போன்ற கைவினைப் பொருட்களை பெண்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்குத்தான் priority தந்தார்கள். அப்போ உருவானதுதான், ‘மகளிர் சுய உதவிக் குழு’…. எனக்குத் தெரிந்த ‘மீனா’ என்ற பெண் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கைவினைப் பொருட்களைக் கற்றுக் கொடுத்தார்கள் கிருஷ்ணா. பானை செய்வதற்கெல்லாம், ஆறு ஓடும் பகுதியாக இருப்பது உத்தமம் கிருஷ்ணா… நீரோடும் பகுதியெல்லாம் வளச்சிப் போட்டு, engineering college, medical college என்று கட்டியதும் இந்த தொழில் காணாமல் போனதற்கு ஒரு முக்கிய காரணம் கிருஷ்ணா…..

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2