கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 12

மேகலா : நீரோடும் பகுதியெல்லாம் engineering college, medical college என்று கட்டியதும், இந்த தொழில் காணாமல் போனதற்கு ஒரு முக்கிய காரணம் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : போனதெல்லாம் போகட்டும்…. எந்த ஒரு வேலையோ (work)…, செயலோ (action), பொதுமக்கள் விழிப்படைந்தால் அதற்கு விமோசனம் கிடைக்கும்…. நாம கைத்தொழிலைப் பற்றிப் பேசுவோம்….

மேகலா : இந்த மாதிரி சின்னச் சின்ன கைத்தொழில்களை அரசாங்கம் ஊக்குவிக்கும் போது தான், ஊரில் இருக்கும் பெண்கள் ஒன்றுபட்டு, கடனுதவி பெற்று, தங்களுக்குள் உதவி செய்து கொண்டு, கிராமம் முழுவதிலும் குடிசைத் தொழில் செய்வது மாதிரி, வத்தல், வடகம் செய்வது, அல்லது கைச்சுத்து முறுக்கு செய்வது என்று, ஏதாவது ஒரு தொழிலை பிரதானமாகக் கொண்டு பாடுபடுகிறார்கள் கிருஷ்ணா…. இதில், சேலத்துக்குப் பக்கத்திலே, ‘ஆட்டையாம்பட்டி’ என்ற கிராமத்தில், வீட்டுக்கு வீடு கைச்சுத்து முறுக்கு செய்து தமிழ்நாடு முழுக்க, ஏன் உலகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்புகிறார்கள். அதே மாதிரி, சேலத்தில் ஒரு சந்தையில் ஒரு தெரு முழுக்க ‘ஜிலேபி’ என்ற ‘ஜாங்கிரி’ விற்பனை செய்யப்படுகிறது. ஆயாக்கடை இட்லி மாதிரி, எல்லாக் கடையிலும் ஒரே விலை…, ஒரே taste என்று….; நம்ப முடியாத அதிசயம்…..

கிருஷ்ணர் : சிவகாசி, அதைச் சுற்றியிருக்கும் பகுதி முழுக்க, பட்டாசுத் தொழிலும், தீப்பெட்டித் தொழிலும் மக்களை வாழ வைப்பது போல…, எங்கு சென்றாலும், கைத்தொழிலை நம்புபவர்கள் ஏமாறவே மாட்டார்கள் மேகலா…. கைத்தொழில் அவர்களை உலகறியச் செய்யும். இதே மாதிரி, ஊர் முழுக்க…, ஒரே கைத்தொழிலைச் செய்யும் கைத்தொழில் ஏதாவது உனக்குத் தெரியுமா மேகலா…..

மேகலா : அப்படிப்பட்ட தொழில்…, அந்த ஊரின் பெயர் கொண்டே அழைக்கப்படுகிறது கிருஷ்ணா… கர்நாடகாவில், பெங்களூரிலிருந்து மைசூர் செல்லும் வழியில் ‘சென்னப்பட்டணம்’ என்ற ஊர் வரும்…. அங்கு, மரத்தாலான சின்னச் சின்ன பொம்மைகள்…., உலகப் பிரசித்தம் கிருஷ்ணா…. அதன் பெயரே ‘சென்னப்பட்டணா toys’…. அந்தக் காலங்களில் சின்னப் பிள்ளைகள் விளையாடும் செப்புச் சாமான்கள், தமிழ்நாடு வரையிலும், mostly பிரசித்தி பெற்ற கோயில் இருக்கும் எல்லா ஊர்களிலும் கிடைக்கும்… இப்போ, இந்த மரவேலையில் பொம்மை, கிராமத்து வீடு, கிராமத்து பெண்கள், குழந்தைகள், கிணறு, மாவாட்டும் உரல், அவர்கள் செய்யும் வேலையென அழகழகான பொம்மைகள்…, மதுரை ஹரீஸ் hotel-ல் கூட கிடைக்குது கிருஷ்ணா… என்னிடம் நிறைய பொம்மைகள் இருக்கின்றன…. அந்த ஊர் முழுக்க சென்று நான் பார்க்கவில்லை…. ஆனாலும், சென்னப்பட்டணத்தில், ‘தவழும் கிருஷ்ணர்’ கோயிலுக்குச் செல்லும் போது, அந்த நகரத்தை வரவேற்பதே பொம்மைக்கடைகள் தான். கோயிலைச் சுற்றிலும் நிறைய கடைகள் இருக்கும். கோயிலுக்குள், தவழும் கிருஷ்ணரைப் பார்த்து, மனதைப் பறிகொடுத்தவர்களுக்கு, சென்னப்பட்டணம் பொம்மைகளைப் பார்க்கும் போது தான், அவர்கள் மனசு அவர்களிடத்தில் வரும்…, ரசிக்கணுமில்ல… நீ சொன்னது மாதிரி, கைத்தொழில் என்பது, செய்பவரை வாழ வைப்பது மட்டுமில்ல கிருஷ்ணா…, அவர்களை உலகறியவும் செய்யும் என்பது உண்மைதான்…. அதே மாதிரி, குற்றாலம் தாண்டி செங்கோட்டை வரையிலும், குறிப்பாக செங்கோட்டையில் மூங்கிலால் செய்யப்படும் furniture பட்டறைகள் நிறைய இருக்கும். தடுக்கி விழுந்தால், பட்டறையில் உள்ள sofa-வில் தான் விழுவோம் என்பது மாதிரி இருக்கும் கிருஷ்ணா. மலை சார்ந்த சூழலும், செம்மண் கலந்த பூமியும், நியாயமான மக்கள் கூட்டமும், அமைதியாக வேலை பார்க்கும் தச்சர்களும், நம்மை அந்த வேலையைப் பார்த்துக் கொண்டு, அங்கேயே உட்கார்ந்து விடலாமா என்று சின்னப் புள்ளைத்தனமாக யோசிக்க வைக்கும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Oh! நீ அங்கெல்லாம் போயிருக்கயா மேகலா…. மூங்கில் சோபாக்களில், ‘தச்சு வேலை’ பெரிதாக இருக்காது…, அப்படித்தானே…

மேகலா : கிருஷ்ணா…., பெருசா இல்லாவிட்டாலும், மூங்கில் மரங்களை நம்ம சௌகரியத்துக்கு வளைக்கணுமே… அப்படிப்பட்ட வேலைகளை நான் பார்க்கவில்லை. மூங்கில்களை வளைத்து, வளைத்து செய்த சோஃபாக்களாகட்டும், சாய்ந்து உட்காரும் chair ஆகட்டும், corner table, sofa-க்கு முன்னால் வைக்கப்படும், teapoy, dining table, பூக்கூடை, travel கூடை என்று எதைப் பார்த்தாலும் அழகாக இருக்கிறது. அந்த office-ல் இருந்த dust bin கூட, மூங்கிலால் செய்யப்பட்ட கூடைதான் இருந்தது கிருஷ்ணா… ராணிமா அந்த dust bin-ஐ கேட்டு வாங்கிக் கொண்டாள். நான் சாய்ந்து உட்காரும் ஒரு sofa-chair வாங்கினேன் கிருஷ்ணா. என் வீட்டில், sofa எல்லாமே மூங்கிலால் செய்யப்பட்டதுதான் கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : பொதுவாக மரச் சாமான்கள் எல்லாமே, அதாவது கட்டில், table, chair, dining table எல்லாமே manual work தானே மேகலா… மரத்தினை slice பண்ணுவது வேண்டுமானால், machine ஆக இருக்கலாம். ஆனால், பொருட்களை வடிவமைப்பது மனித முயற்சிதானே….

மேகலா : உண்மைதான் கிருஷ்ணா… இது ஆண்களுக்கான கைத்தொழில் கிருஷ்ணா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2