கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 15 (நிறைவுப் பகுதி)

மேகலா : கிருஷ்ணா…, இன்னொரு பாட்டும் இருக்கு கிருஷ்ணா….

“சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும்

சித்திரக் கைத்தறிச் சேலையடி

நம்ம தென்னாட்டில் எந்நாளும்

கொண்டாடும் வேலையடி

தையா தைய தந்தத்தானா

தையா தைய தந்தத்தானா

அன்னையர் தந்தையர் வண்ணக் குழந்தைகள்

புன்னகை மங்கையர் போற்றிப் புனைந்திடும்

ஆடையடி செய்துமடி போடுங்கடி

சிந்தனைச் சிற்பிகள் தேசத்தறிஞர்கள்

செந்தமிழ் சோலையில் பூத்த கலைஞர்கள்

எங்கள் மங்கல மாநிலம்

காக்கும் மறவர் யாவரும்

புவிவாழ்வில் உயரும் மக்கள் எல்லோரும்

வாங்கி மகிழும் பொன்னாடையடி” —- என்ற

இந்தப் பாடலை கேட்டாயா கிருஷ்ணா…. கைத்தறிச் சேலை நெய்யும் நெசவாளர்கள் பாடுவதாக வரும் பாட்டு… ஒரு பழமொழி உண்டு…. ‘காஞ்சிக்குச் சென்றால், காலாட்டிப் பிழைக்கலாம்’ என்ற சொலவடை, எத்தனை உண்மையானது…. கைத்தறிச் சேலையை நெய்யும் வேலையை போற்றிப் பாடும் பாட்டு… நெசவுத் தொழிலின் மகிமையை உணர்த்தும் பாட்டு….

கிருஷ்ணர் : நம்ம நாட்டுக்கு ஏற்ற பாட்டு. நெசவாளர்களும், உழவர்கள் போல்தான் மேகலா. உழவர்கள் பசிக்கு உணவூட்டுகிறார்கள்…, நெசவாளர்கள் மானம் காக்க ஆடை நெய்கிறார்கள். ‘சித்திரக் கைத்தறிச் சேலை’ என்று எத்தனை அழகான தமிழ் வார்த்தை… கைத்தொழிலைக் கையில் வைத்திருப்பவர் எங்கு சென்றாலும், மாடி மனை வீடு கட்டி பிழைக்கலாம்… இந்த நெசவாளர்கள் எந்தெந்த ஊர்களில் வசிக்கிறார்கள் என்று தெரியுமா மேகலா….

மேகலா : அந்தக் காலத்திலிருந்தே, காஞ்சிபுரம், பட்டுச் சேலை நெய்வதற்கும், ‘காஞ்சி காட்டன்’ என்று பெருமையாய் சொல்லப்படும் கைத்தறிக் காட்டன் சேலை நெய்வதற்கும் புகழ் பெற்றது கிருஷ்ணா…. அதனால்தான், ’காஞ்சிக்குச் சென்றால் காலாட்டிப் பிழைக்கலாம்’ என்ற பழமொழி கூட உருவானது. இன்று social media-க்கள், சேலை தறியில் நெய்வதை, அந்த இடத்திற்கே சென்று காட்டுகிறார்கள் கிருஷ்ணா…. கைத்தறியில் நூலைக் கோர்த்து, சேலை உருவாகும் வேலையை, தறியில் உட்காரும் ஒருவர்தான் செய்வார் கிருஷ்ணா… நெசவாளரின் கைகளின் இயக்கத்திற்கும், கால்களின் இயக்கத்திற்கும் இடையிடையே தறி இயங்கும் சப்தமும் இளையராஜாவின் ‘சிம்பொனி’ இசை எழுவது போலவே தோணும் கிருஷ்ணா… கைத்தறிக் காட்டன் சேலை இன்று தமிழ்நாட்டில், நெகமம், சக்கம்பட்டி, சின்னாளப்பட்டி, அருப்புக்கோட்டை, சங்கரன்கோவில் என்று நிறைய இடங்களில் நெய்யப்படுகிறது கிருஷ்ணா…. சின்னாளப்பட்டியில் தடுக்கி விழுந்தால் தறி இயங்கும் நெசவுக் கூடத்தில் தான் விழுவோம்… இதே நெசவுக் கூடத்தில், ‘Tie & Dye’ என்று ஒரு process இருக்கு கிருஷ்ணா… சேலைக்கு கலர் கொடுப்பது, இதுவும் கைகளால் செய்வதுதான். சேலை material-ல் design போல முடிச்சு போட்டு, மெழுகில் முக்கி விடுவார்கள். அப்புறம், சேலைக்குத் தேவையான கலர் சாயத்தில் முக்கி, முடிச்சை எடுத்து விட்டு, வெந்நீரில் முக்குவார்கள். மெழுகு உருகி விடும்… கட்டி வைத்த இடம், வெள்ளையான கலரில், design ஆக இருக்கும். இந்த process-க்கு ‘பத்திக்’ design என்று சொல்வார்கள். Summer collection-ல் 90% மக்களுக்கு பத்திக் design சேலை ரொம்பப் பிடிக்கும். இப்படி, கைத்தறிச் சேலையை நம்பி, நிறைய நெசவாளர்கள் இன்று தமிழ்நாட்டில் உருவாகியிருக்கிறார்கள் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : தமிழ்நாடு, பருத்தி ஆடை உடுத்துவதற்கான climate… மக்களும் அதைத்தான் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். மக்களின் தேவையைப் பொறுத்து நெசவுத் தொழிலும் பெருகத்தானே செய்யும்….

மேகலா : மதுரை, ‘சுங்குடிச் சேலை’க்குப் பெயர் போனது. மதுரைச் சுங்குடி இன்று உலகளவில் தனக்கென தனி market-ஐப் பிடித்திருக்கிறது…. இவையெல்லாம், மனிதனின் கைவண்ணத்தால், பஞ்சிலிருந்து நூலாகி, நூல்களைத் தறியில் கோர்த்து சேலையாக்கி, அந்தச் சேலையில் சாயம் ஏற்றி, வண்ணச் சேலைகளாய் நமக்குக் கொடுக்கின்றனர் கிருஷ்ணா… நெசவாளர்களுக்கென்றே அரசாங்கம், கூட்டுறவுப் பண்டகசாலை அமைத்து, அதன் மூலம் மூலப்பொருட்களை வாங்கச் செய்கிறார்கள்…. கைத்தறி, கைத்தொழில், கைவேலைப்பாடு இவைகளையெல்லாம் அரசாங்கம், தனி கவனத்துடனும் மரியாதையுடனும் அணுகுகிறது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : இது அரசாங்கத்தின் கடமையல்லவா… ’கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள், கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்’ என்று ‘யாரோ’ ஒருவர் அனுபவிச்சுப் பாடிய பழம் மொழி, sorry, sorry, ‘பொன்மொழி’, நம்ம நாட்டுக்கு தேசிய கீதம் மாதிரி மேகலா…

மேகலா : என்ன கிருஷ்ணா சொல்லுற….

கிருஷ்ணர் : ஆமாம்…. பிற நாடுகளில், மண்வளம் இருக்கலாம்…, பணவளம் இருக்கலாம்…, மழை வளம் கூட இருக்கலாம்…., ஆனால், மனித முயற்சி வளம்…, உழைப்பு வளம் எங்க அதிகம் தெரியுமா… நம்ம பாரத நாட்டுலதான்… ‘கரசேவை’ என்னும் சக்தி மிகுந்த manual work நிறைய இருக்கிறது… Chocolate, biscuit கூட இயந்திரம் மூலமாக, எந்திரத்தனமாக செய்யும் நாடுகளுக்கு மத்தியில், நம்ம நாட்டில் மட்டும் தான், ‘கைமணம்’, ‘கைப்பக்குவம்’, ‘கைவலிமை’, ‘கலை நயம்’ என்பதைக் கடவுளாகப் பாவிக்கும் திறமையான மக்கள் இருக்கிறார்கள். கையால்தான் செய்ய வேண்டும் என்ற எந்த வேலையானாலும், எந்த உணவுப் பொருளானாலும், கைப்பக்குவத்தில் செய்வதுதான் சுவை இருக்கும்…. உலோகச் சிற்பமானால், ‘நகாசு வேலை’, அதாவது கைகளால் செதுக்குவது மட்டுமே சிற்பத்திற்கு உயிர் கொடுக்க முடியும்…. கையால் வடிக்கும் சிற்பம் மட்டுமே கதை பேசும்…, என்று தனக்குள் உறுதி எடுத்துக் கொண்டு, அதில் எந்த compromise-ம் பண்ணாத உழைப்பாளிகள்…. நம்ம நாடு, பல சுவாரஸ்யமான வரலாறுகளை உள்ளடக்கிய நாடு… அதில் மிகச் சிறந்த இடத்தைப் பிடிப்பது, manual work என்று சொல்லப்படும், மனித முயற்சியால் செய்யப்படும் கைத்தொழில் என்று சொன்னால், அது மிகையாகாது…. காஷ்மீரத்துக் கம்பளம்…, ராஜஸ்தான் நகை ஆபரணங்கள்…, எல்லா மாநிலத்திலும் நெய்யப்படும் காதி ஆடைகள்…, மண்பானைகள்…, டெரக்கோட்டா பொம்மைகள்…, நாம் விரித்துப் படுக்கும் பத்தமடைப் பாய்…, காஞ்சி நெசவாளர்கள் செய்யும் பட்டுத் துணிகள், நார்ப்பெட்டி, கூடை, இமயம் முதல் குமரி வரை செய்யப்படும் சுவையான உணவு வகைகள்…, embroidery-யும். ஆரி ஒர்க் என்று சொல்லப்படும் தையல் கலையும், ஹைதராபாத் கண்ணாடி வளையல்கள் கூட, நம்ம பாரதத்தின் வலிமை மிக்க கரங்களால் செய்யப்படுவது…. இன்று பெரிய பெரிய industries நம்ம நாட்டின் வளத்தைப் பெருக்குவதாக இருந்தாலும், இந்த கைத்தொழிலையே விரிவு படுத்தி, ‘குடிசைத் தொழில்’ என்ற அழகான தமிழ்ச்சொல்லால் இந்தக் கைத்தொழிலுக்கு மேலும் மெருகூட்டியிருக்கிறார்களே.. அட…, அடா…., அதுதான் சாதனை….

மேகலா : கைத்தொழிலும், குடிசைத் தொழிலும் என்ன வேறுபாடு கிருஷ்ணா….

கிருஷ்ணர் : உனக்கான dress-ஐ நீயே தைத்தால், அது கைத்தொழில்… 2, மூன்று பேரைச் சேர்த்துக் கொண்டு நீ நடத்தினால், அது boutique. உன்னுடைய வளர்ச்சி பார்த்து, இன்னும் கொஞ்சம் பேர் அங்கொண்ணும் இங்கொண்ணும்மாக ஆரம்பித்து, அந்த நகரமே மேற்கண்ட தொழிலால் வளம் பெற்றால், அது அந்த ஊரின் ‘குடிசைத் தொழில்’… ‘ஊறுகாய்’ செய்வது, ‘தீப்பெட்டி’ செய்வது, ‘வற்றல், வடகம்’…., ‘டெரக்கோட்டா பொம்மை’…., ‘மண்பானை’ என்று குடிசைத்தொழில் பெருகி, பெரிய பெரிய industries-க்கு சவால் விடும் அளவுக்கு நிமிர்ந்து நிற்கிறது. அதனால்,

‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்

கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்’

முதலில், நாம் நலம் பெற கைத்தொழில்…, அடுத்து, பிறருக்கும் வாழ்வு கொடுக்க, குடிசைத்தொழில்… இதனால், ஊர் ஒன்றுபடும்… நாடே மக்களின் உழைப்பினால் வளம் பெறும்.

மேகலா : கிருஷ்ணா…., நீ பேசுவதைப் பார்த்தால் கைத்தொழிலின் மகத்துவம் தெரிகிறது…. ஆமாம், கட்டுரையை முடிக்கப் போகிறாயா….

கிருஷ்ணர் : அதை அப்புறம் பேசுவோம்…. நீ என்ன கைத்தொழில் கற்றுக் கொண்டாய்….

மேகலா : என்ன கிருஷ்ணா…., ‘பொசுக்குனு’ கேட்டுட்ட…. நாங்கதான் எங்களுக்குத் தெரிந்த சமையைல் கலையை…, பிறருக்கு கற்றுக் கொடுக்கும்படிக்கு channel ஆரம்பித்து கற்றுக் கொடுக்கிறோமே….

கிருஷ்ணர் : இது service தானே… கைத்தொழில் என்ன தெரியும் உனக்கு… tailoring…, embroidery…., bag செய்தல் என்று என்ன தெரியும் உனக்கு…. என்ன, ஒரேயடியா முழிக்கிற…. சரி…, சரி…., கைத்தொழில் தெரிந்தவர்களை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறாயே…, அதுவே சிறந்த பணிதானே… அதற்காக உன்னைப் பாராட்டுகிறேன்… இனி வரும் காலங்களில், கைத்தொழிலைக் கற்றுக் கொள்ள முனைவோரையும், கைத்தொழில் தெரிந்தும் செயல்படுத்தத் தெரியாதவரையும் motivate பண்ணி உற்சாகப்படுத்துவாய்…. அடுத்த விவாதத்தில் பார்க்கலாம்…

மேகலா : கிருஷ்ணா…, அவ்வளவுதானா….

(நிறைவு பெறுகிறது)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2