வாழ்க்கையில் ஒருமுறையாவது... - பகுதி 6

மேகலா : பிரார்த்தனை முடிந்து, rope car-ல் ஏறி, கீழே வந்து விட்டோம். இங்குதான் ஹரி நினைத்தான், ‘அவர்களே, அங்கேயே நம்மை இன்னொரு car-ல் ஏற்றி விடுவார்கள்’ என்று…. ஆனால், rope car land ஆகும் இடத்தில், அடுத்து வரும் car-க்கு இடஞ்சலாக யாரும் அங்கே நிற்கக் கூடாது… அப்படியானால், வெளியேறத்தான் செய்யணும். அங்கே வேற ஒரு rope car station-ம் இல்லை… அடுத்ததுக்கு எப்படிச் செல்வது… நாங்கள் வெளியேறி, taxi இருக்கும் இடத்திற்கே வந்து விட்டோம்… ஹரி, driver-இடம் கேட்டான்… அவர், taxiயில் இன்னொரு வாசலுக்குக் கொண்டு வந்து நிறுத்தினார். அங்கிருந்து சிறிது தொலைவு நடக்க வேண்டும். அதற்கு auto-வை வரச் சொல்லி, எங்களை அதில் போகச் சொன்னார். அதன்படி சென்று, இன்னொரு முறை rope car-க்கு டிக்கெட் எடுக்கணுமோ என்று கேட்க, டிக்கெட் பரிசோதகர் பார்த்து விட்டு, எங்களை வேறு ஒரு rope car கிளம்புமிடத்திற்கு கூட்டிச் சென்றார் கிருஷ்ணா…. இதற்கு நடுவில், அரைகுறை இந்தியிலும், தெரியாத பழக்க வழக்கங்களாலும் கொஞ்ச நேரம் தான் என்றாலும் அல்லாடித்தான் போனோம்… எனக்கு நடந்த களைப்பு வேற அயர்ச்சியாக்கியது…

கிருஷ்ணர் : Oh! அப்பாடி… இது மொழி புரியாததனால் வந்த பிரச்னை இல்லை… Rope car ஒரே இடத்தில் இருந்து இரண்டு திசைக்கும் செல்லும் என்று புரிந்ததால் வந்த குழப்பம்… சரி…, எப்படி மேலே போனீர்கள்? அன்னை தரிசனம் எப்படி இருந்தது….

மேகலா : கிருஷ்ணா…, ஏறுவதற்கும்…, நடப்பதற்கும் தான் களைப்பாக இருந்ததே தவிர, அங்கு அன்னையின் சன்னிதானத்தில், அன்னை எங்களைத் தன்னோட கருணை வெள்ளத்தில் திக்கு முக்காடச் செய்து விட்டாள். எங்களுக்கு, மேலே சென்றவுடன், அங்கிருந்தே blessing start ஆயிருச்சி கிருஷ்ணா…. கோயிலின் முன்பகுதிக்கு வந்து, எந்தப் பக்கம் செல்வது என்று பார்த்துக் கொண்டிருந்த பொழுது, ஹரியைப் பார்த்து ஒருவர் ஏதோ பேசினார்…

கிருஷ்ணர் : அதென்ன…. particular ஆக ஹரியைப் பார்த்து….

மேகலா : அவன் தான் organizer என்று தெரிந்து கொண்டார் போல…. அவனுடைய ‘get-up’ அப்படியிருந்தது கிருஷ்ணா…

கிருஷ்ணர் : என்ன ‘get-up’…. ’ருத்ராட்ச மாலை’ அணிந்திருந்தானா….

மேகலா : இல்ல கிருஷ்ணா… காவி வேஷ்டியும், வெள்ளைச்சட்டையும் அணிந்திருந்தான். கண்களில், கிட்டத்தட்ட சாமியார் போல, சாமியை நல்லா பார்க்க வேண்டும் என்ற பாவனை இருந்தது போல… ‘என்ன பேசினான்’ என்று நாங்கள் கேட்கவில்லை. ஆனால், ‘அவர் நம்மைக் கூட்டிச் செல்வார்’ என்று சொன்னான்… ‘பாதுகாப்பான’, ‘விரைவு பாதை’ மூலமாக… ‘மானஸ தேவியை’ தரிசித்தோம் கிருஷ்ணா… இதற்கு முன்பு, இந்த அன்னையின் கதையை நான் அறியவில்லை… ஆனால், நாகர்கோயிலில், ஒரு ‘இடுக்கி’ கோயில் இருக்குமே…, அங்கு ‘கண்களே’ பிரதானமாக, அம்மன் அமர்ந்திருப்பார். அது போல, இங்கும் கண் நிறைந்த காட்சியாக, காவி நிறத்தில் அம்மன் அமர்ந்திருந்தார்… தம்பதியினராக அம்மன் முன் அமர்ந்து தரிசிக்கச் சொன்னார். அன்னையிடம் என்ன வேண்டுவது என்று ஒண்ணுமே புரியவில்லை… இத்தனை தூரம் வந்து, தெரியாத ஊரில், நம்மை ஒருவர் பிரத்யேகமாக அழைத்து வந்து, அமரச் செய்து, குங்குமப் பிரசாதம் கொடுத்து, ‘அருள் தருகிறேன்’, ‘என்ன வேண்டும்’ என்று அன்னை கேட்பாள் என்று கொஞ்சமும் நான் நினைக்கவில்லை. இவையெல்லாம் எதிர்பாராமல், அடுத்தடுத்து நடந்து விட்டது… பூசாரி, பிரசாதமாக குங்குமத்தை வைத்து, கையில் பால்கோவா கொடுத்தார்… பிள்ளைகளுக்கும் கொடுப்போம் என்று கூடத் தோன்றவில்லை… தனித்தனியாக எல்லோருக்கும் வேறு வேறு பிரசாதம் கிடைத்தது. வெளியே வந்ததும்…, அங்கிருந்தவர், திகைத்துப் போயிருந்த என் முகத்தைப் பார்த்து, குங்கும டப்பா ஒன்று கொடுத்தார். அங்கிருந்த தேங்காய் மூடியைக் கேட்டு வாங்கினேன்…. கருவறையை விட்டு வெளியே வந்து விட்டோம். திகைப்பு கொஞ்சம் கூட விலகவில்லை. சிறு ‘ரூம்’ மாதிரி இன்னொரு சன்னிதிக்கு கூட்டிச் சென்றார்கள். அங்கும் தம்பதியராகச் செல்ல வேண்டும் என்றார்கள். சென்று அம்மன் முன் அமர்ந்தோம். முகத்தில் தண்ணீர் தெளித்து, நெற்றியில் குங்குமம் வைத்து விட்டார்கள். அன்னையைப் பார்த்ததினாலா… இல்லை தண்ணீர் தெளித்ததினாலா… எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் தெரிந்தது. இதற்குத்தான் இத்தனை நாள் காத்திருந்தோமா…. அன்னை, என்னைத் தன் கருணையால் முழுக்காட்டினாளா…, மனசுக்குள் மந்திரத்தைத் தெளித்தாளா….., எனக்கு ஒன்றுமே புரியவில்லை… வெளியே வந்தேன். பரவசத்தில் கண்ணில் நீர் நிரம்பியது கிருஷ்ணா… இந்த திகைப்பு எப்படி அடங்குச்சு தெரியுமா….

கிருஷ்ணர் : என்னம்மா…. இது…, நீ சொல்லச் சொல்ல…, எனக்கும் திகைப்பாக இருக்கு… இதோ, இப்பவே ஹரித்துவார் கிளம்பிப் போகலாம் என்றிருக்கிறேன்… அன்னையை, ஹரி ‘get-up’-ல் போய்ப் பார்க்கப் போகிறேன். அன்னை என்னையும் special ஆக நீர் தெளித்து பிரசாதம் தருவாள்…

மேகலா : மாயக் கண்ணா…, நீ என்னிடம் பேசிக் கொண்டே, உன் தங்கையைப் பார்க்கச் செல்வாய்… அங்கிருந்து கொண்டே என்னிடம் வம்பளப்பாய்….

கிருஷ்ணர் : சரி…, உன் திகைப்பு எப்படி அடங்குச்சு….

மேகலா : அங்கு ஒரு வளையல் கடை பார்த்தேன் கிருஷ்ணா…. அதைப் பார்த்ததும்…, என் திகைப்புசிலிர்ப்பு அடங்கிவளையலைப் பேரம் பேச ஆரம்பித்து விட்டோம்
கிருஷ்ணா….

கிருஷ்ணர் : நீ தெரிந்து செய்தாயோ…, தெரியாமல் செய்தாயோ…, அன்னையைப் பார்த்து வந்ததும்உன் கைகளுக்கு வளையல் வாங்கினாயே… அது அன்னை தந்த
சீதனமாக நினைத்துக் கொள்… எல்லோருக்கும் வாங்கினாயா…..

மேகலா கிருஷ்ணா…, நான் வாங்கியதை விடஉன்னோட blessing தான் என்னை சிலிர்க்க வைத்து விட்டது கிருஷ்ணா…. வளையல் கடையில் நான் பேரம் பேசி
ஒரு நூறு ரூபாய் குறைத்தேன் என்றால்உன்னால் நம்ப முடிகிறதா கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : சத்தியமாக நம்ப முடியவில்லை….. என்ன…, வளையல் கடைக்காரன் தமிழ்க்காரனா….

மேகலா : எனக்கு ஹிந்தி, ‘தோடா தோடா மாலும்’ கிருஷ்ணா… கடைக்காரரிடம், ‘கித்னா’ என்று கேட்டேன்… அவன் ‘சௌ’ ருபீஸ் என்பான்… ‘Ninety rupees’ தான் என்றேன்… இப்படித்தான் பேரம் பேசி வாங்கினேன்… அப்புறம்இன்னொரு கடையில் ராணிமா ஏதோ சில பொருட்கள் வாங்கினாள்உனக்கு ஒண்ணு தெரியுமா கிருஷ்ணா… இந்த shopping செல்வதற்கு முன்னாடிசின்னச் சின்ன சன்னிதானங்கள் இந்தக் கோயிலில் இருந்தது கிருஷ்ணா… அதில் முக்கியமானது…, ‘பத்ரகாளி அம்மன்’ சன்னிதானம்… நம்ம ஊரு காளி படத்தைப் பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது கிருஷ்ணா….

(தொடரும்)


Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2