வாழ்க்கையில் ஒருமுறையாவது... - பகுதி 7

கிருஷ்ணர் : கடவுளுடைய உருவத்தை, மனிதன் பிரத்யட்சம் பண்ண நினைத்து, இறைவனுடைய உருவத்தை வடிவமைக்கும் போது, விரதங்களைக் கடைப்பிடித்து, தவம் மேற்கொள்கிறான். அப்போது, சந்தர்ப்பத்தினாலோ, கனவுகளிலோ…, இறைவன் தன் மாயா உருவத்தைக் காட்டுகிறார்… சந்தர்ப்பம், இறைவனைக் காட்டும் போது, மனிதன் தான் கண்ட தோற்றத்தை உள்வாங்கி, அதன்படியே வடிவமைக்கிறான். இப்படித்தான் தெய்வ உருவங்கள் வடிவமைக்கப்படுகின்றன. அதன்படிதான் ‘பத்ரகாளியம்மனின்’ உருவமும்… கதைகளும் நம் பாரத தேசமெங்கும் பரவி இருப்பது… வேறு வேறு பெயர்களில்…. காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி என்று வடிவமைக்கும் போது… கையில் கரும்புடன், கிளியுடன்… என்று ‘கதை மூலமாக’ ஒரு signature கொடுக்கிறான். இருந்தாலும்…, நம் மனதுக்கு நெருக்கமான உருவத்தில் கடவுளை தரிசிப்பது சந்தோஷமாகத்தானே இருக்கும்… சரி…, நீ… என்ன, ஒரு கடை விடாமல் உன் அரைகுறை ஹிந்தி knowledge-ஐ தெறிக்க விட்டயா….

மேகலா : இன்னும் ஒரே ஒரு கடையில் தான் நின்றோம்… ஹரித்துவார் வந்ததன் நினைவாக, அன்னையின் ஸ்ரீபாதம்…, எல்லோருக்கும் கொடுப்பதற்காக வாங்கினோம் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : அன்னையின் ஞாபகமாக ‘ஸ்ரீபாதம் வாங்கி எல்லோருக்கும் கொடுத்தாயா…, very good…..

மேகலா : அதில் ஒரு ‘பாதம்’ 50 ரூபாய் என்று சிறிய தட்டில் வைக்கப்பட்டிருந்தது. இன்னொன்று 100 ரூபாய், ‘மஹாலக்ஷ்மி’, ‘ஸ்ரீசக்கரம்’, ‘ஸ்ரீபாதம்’, ‘ஆமை’… என்று ஒரு அட்டையில் வைத்திருந்தார்கள்… இதைப் பேரம் பேசும் போது, அந்தக் கடைக்காரன் என்ன செய்தான் தெரியுமா கிருஷ்ணா…

கிருஷ்ணர் நீ பேசும் ஹிந்தியைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டானா….

மேகலா : கேலி பேசாத கிருஷ்ணா…. நாங்கள் வாங்கியதற்கு bill போட்டவுடன் 100 ரூபாய் ஸ்ரீபாதம் ஒன்றை extra-வாகக் கொடுத்தான். அதிலிருக்கும் தாயார்…, ‘நான் உன்னுடனே வருகிறேன்…, என்னையும் கூட்டிச் செல்’ என்று சொல்வது போல இருந்தது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : யப்பா…., கேட்கவே சந்தோஷமாக இருக்கு… பரவாயில்லை மேகலா… உன்னுடைய எண்ணம் போல, அன்னை வாழ்த்தட்டும்…

மேகலா : Thanks கிருஷ்ணா…. நாங்கள் புனிதப் பயணம் சென்றதற்கான பயன் உன்னுடைய வாழ்த்தினால் பல மடங்காகி விட்டது கிருஷ்ணா…. அந்தத் தாயாரை, ராணிமாவிடம் கொடுத்து கொண்டு போகச் சொல்லி விட்டேன் கிருஷ்ணா… அன்னையை மலை மீது சென்று தரிசித்தது, மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது கிருஷ்ணா…. அப்படியே கீழிறங்கி வந்தோம்… ஹரி, ‘நாம் வந்த cab…., taxi stand-ல் இருக்கிறது…, நாம் அங்கு செல்லணும்னா, ‘auto’-ல தான் போகணும்… இங்கேயே ஏதாவது ஒரு hotel-ல் சாப்பிடுவோம்… அப்படியே சுற்றிக் கொண்டிருந்து விட்டு…, கங்கையின் அருகில் உட்கார்ந்து கொள்வோம்…. ‘கங்கா ஆர்த்தி’ பார்த்த பின்பு, ரிஷிகேஷ் திரும்பலாம்’ என்றான். அப்போ, நேரமும் 1.30 ஆகி விட்டது….

மேகலா : ‘சரி’ என்று சொல்லிஅருகில் இருந்த hotel-க்குச் சென்று சாப்பிட ‘order’ செய்தோம். ‘லஸ்ஸி’, ‘fruits’ என்று சாப்பிட்டிருந்ததால்பெருசா பசிக்கல கிருஷ்ணா…. அங்கு தணல் ‘oven’-ல் ‘roti’ சுடுகிறார்கள்அந்த roti-யை வாங்கிபனீர்
பட்டர் மசாலா வாங்கினோம்அந்த ‘roti’, ரொம்ப ‘soft’ ஆகசாப்பிடுவதற்கும் சுவையாக
இருந்தது கிருஷ்ணாஎன்னதான் நாம தீயில் வாட்டி சப்பாத்தி  சுட்டாலும்அவர்கள் செய்த roti-க்கு ஈடாகாது. ஹ ரி,‘பனீர் டிக்கா’, தந்தூரி வாசத்துடன் ரொம்ப சுவையாக இருந்தது என்றான்…. எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம்வருகிறது கிருஷ்ணா…. நானும்ஷீத்தல் அப்பாவும், ‘ஆக்ரா’ சென்றிருந்த போதுஅங்கு ஒரு சின்ன டீக்கடை
மாதிரியான கடையில், ‘roti’-யும், ‘கடி’ என்று சொல்லப்படும் மோர்க்குழம்பும்’ சாப்பிட்டோம் கிருஷ்ணா…. அத்தனை சுவை… நான் இன்று வரையில் அது மாதிரியான மோர்க்குழம்பு சாப்பிட்டதேயில்லை… அன்று, taxi driver தான் அந்தக் கடையை recommend
பண்ணினார்….அதே மாதிரி, ’காசியிலும்ரோட்டுக்கடைகளில்இதே மாதிரி பன்னீர்
food, தணல் roti என்று விற்றார்கள்

கிருஷ்ணர் வட இந்தியாவில், ‘தால்’, roti’, ’கடி’ என்பதெல்லாம் அவர்களுக்குகை வந்த கலை அசால்ட்டா செய்தா கூட, ‘சிவகாசி சமையல்’ chef செய்யும் சாம்பார்ரசம் மாதிரி சுவையாகத்தான் இருக்கும்….

மேகலா : என்ன சொன்ன…., என்ன சொன்ன…, ‘சிவகாசி சமையல்’ chef என்றாயா… எனக்கு இதை விட பெருமை வேற ஒண்ணும் இல்ல கிருஷ்ணா….

கிருஷ்ணர் : என்ன இது…, கங்கையையும்இமய மலையையும் பேச வேண்டிய நேரத்தில்சாப்பாட்டைப் பற்றிப் பேசுகிறாய்…., ‘கங்கா ஆர்த்தி’ பார்த்தாயா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2