வாழ்க்கையில் ஒருமுறையாவது... - பகுதி 8

மேகலா : கிருஷ்ணா…., அப்போ time 2, 2 1/2 தான் ஆகியிருந்தது. நாங்க hotel-லிலிருந்து வெளியேறி, கலகலப்பான அந்தக் கடைவீதியில் சுற்றிக் கொண்டிருந்தோம். எல்லா ஊர்களிலும் மாதிரி ஹரித்துவாரிலும், கோயிலிருக்கும் பகுதியைச் சுற்றித்தான் shopping center இருக்கு கிருஷ்ணா… அதிலும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பொருட்கள் விற்கும் கடைகள் தான் அதிகம் இருந்தது… அங்கு ஒரு platform கடையில், travel bags-ஐப் பார்த்ததும் ராணிமா விலை கேட்க, வேறொரு customer-இடம் பேரம் பேசிக் கொண்டிருந்த கடைக்காரன், நாங்கள் பேரம் பேசுவோம் என்று, ‘ஏக் சௌ ருப்யா’ என்று கறாராகப் பேசினான். அந்த bag-ன் capacity, color, design என்று பார்த்ததும், பேரமே பேசாமல் 5 bags வாங்கினோம்….

கிருஷ்ணர் : ஐந்து bags-ஆ… எதுக்கு…., இங்கு வந்து கடை போடவா….

மேகலா : இல்ல கிருஷ்ணா…. நாம் துணி எடுத்து தைத்தாலும், 100 ரூபாய்க்குள்ள தைக்க முடியாது. ஹரித்துவார் வந்து சென்றதன் ஞாபகமாக யாருக்காவது கொடுக்கலாம் என்று ‘ராணிமா’ சொல்லி, அவள்தான் வாங்கினாள்… எனக்கு ஒரு bag கொடுத்தாள் கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : வேற என்னென்ன வாங்குனீங்க….

மேகலா : ஆதி, ஒரு M. G. R. கண்ணாடி…, ஒரு தொப்பி என்று வாங்கியதும்…, மெள்ள நடந்து…, கங்கைக்கருகில் வந்து விட்டோம் கிருஷ்ணா… அப்போ…, மணி 3.30 தான் ஆகியது. அதனால், கங்கைக்கருகில் இருந்த படித்துறையில் அமர்ந்திருந்தோம்… ஹரியும், மதனாவும் இன்னும் கொஞ்ச தூரம் நடந்து, மறுகரைக்குச் சென்றார்கள்… என் கண் முன்னே, இமவானின் செல்ல மகள் கங்கை பாய்ந்து வருகிறாள்… எனக்கு நடந்து வந்த களைப்பு, ஒரு அயர்ச்சியைக் கொடுக்க…, நதியில் கால் நனைக்கவும் மறந்து போய் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போதான், நான் ராணிமாக்கு கங்கை பிறந்த கதையையும், கங்கையில் முழுகினால் பாவம் விலகும் என்ற நம்பிக்கையை எப்படிக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் கதையையும் சொல்லிக் கொண்டே இருக்க, அவள் அப்படியே, தன் தாயைத் தேடி ஓடும் பசுவின் கன்று போல ஓடி, கங்கையில் குதித்தாள்…

கிருஷ்ணர் : இத்தனை கதை பேசும் நீ கங்கையில் முழுகவில்லையா…. நீ பாவம் செய்யாதவளாகவே இருந்து விட்டுப் போ… கங்கையின் நீர்க்கரங்களைப் பற்றிக் கொள்ள உனக்குத் தோணலையா…..

மேகலா : கிருஷ்ணா…, ராணிமா மேலே ஏறி வந்ததும், ‘என் பாவங்களையெல்லாம் கழுவி விடு என்று குதித்து முங்கினேன்’ என்று சொன்னதும் தான், சொரேலென என் நம்பிக்கையில், பக்தியில் ஒரு அடி விழுந்தது… ஏற்கனவே taxi driver, ‘கங்கையில் முழுகுவதற்கு நான் நல்ல இடம் கூட்டிச் செல்கிறேன்’ என்று சொன்னது வேற ஞாபகத்தில் இருந்ததால, எனக்கு முங்கத் தோணலை கிருஷ்ணா…. ஆனால், ராணிமா முங்கி எழுந்து வந்தவுடன், மெள்ள இறங்கி, கங்கையின் நீரைத் தலையில் தெளித்து வருவோம் என்று நினைத்து இறங்கினேன் கிருஷ்ணா… நான் இறங்கிய இடத்தில் ஒரு ‘முகடு’ இருந்தது.. அதில் இருந்த வளைவினில் ஒரு ’மார்பிள்’ லிங்க மூர்த்தம் ஒன்றும், கருங்கல்லால் செய்யப்பட்ட லிங்க மூர்த்தம் ஒன்றும் இருந்தது….. மக்கள் நீராட, நீராட, கங்கை, நெளிந்தும், தவழ்ந்தும், பாய்ந்தும் போக்குக் காட்டுகிறாள். அப்பொழுதெல்லாம், கங்கையின் கரங்கள் மேலெழும்பி, ததும்பி, இறையனாரை அணைப்பது போல நனைக்கிறது. இந்தக் காட்சியைக் கண்டு விட்டேன் கிருஷ்ணா…. என் மெய்யெல்லாம் ஒரு முறை குலுங்கி விட்டது கிருஷ்ணா…. மெள்ள நதியில் இறங்கினேன்… கங்கை என்னையும் நனைத்து, எம்பெருமானையும் நனைக்க…, என் சிலிர்ப்பு அடங்குவதற்கே ஒரு நாளாகியது கிருஷ்ணா… அப்படியே நீரை என் தலையில் தெளித்து விட்டுக் கொண்டு…, கங்கையை வணங்கி, நான் இருந்த இடத்திற்குத் திரும்பினேன். என்னைப் போலவே, ஷீத்தல் அப்பாவும், காலை மட்டும் நனைத்து விட்டு வந்தார். அப்ப வரைக்கும் ‘கங்கா ஆர்த்தி’ நிகழ்ச்சி நடப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. மக்கள், ’ஆர்த்தி’யை எதிர்பார்த்து, ஆங்காங்கே அமர்வதும், கங்கையில் நீராடுவதுமாக இருந்தார்கள்…. அப்போ, ஹரியிடமிருந்து phone வந்தது…..

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1