வாழ்க்கையில் ஒருமுறையாவது... - பகுதி 16

கிருஷ்ணர் : நான், ‘இன்னும் ஒரு முறை நீ இமயமலையின் அடிவாரத்திற்கு சென்றிருக்கலாம் என்ற ஆதங்கத்தில் சொன்னேன். நீ, உன் மனதில் உள்ளதையும், அங்கேயே சுற்றிக் கொண்டிருப்பதையும் சொல்லி, என்னையும் அங்கேயே அழைத்துச் சென்று விட்டாயே…. கொஞ்சம் இரு… இதோ, காற்றாக விரைந்து ‘ரிஷிகேஷ்’ சென்று, கங்கையைப் பார்த்து வருகிறேன்….

மேகலா : கிருஷ்ணா…, ராமர் கடந்து சென்ற கங்கையை நீயும் கடக்கப் போகிறாயா… நீ செல்லலாம்… காற்றிலே மிதந்து செல்லுவாய்…. flight ticket கிடையாது… நினைத்த மாத்திரத்தில், மலையின் வளைவுகளில் நடந்து கூடச் செல்லுவாய்….

கிருஷ்ணர் : நான் நடக்கிறேனோ…. மிதந்து செல்லுகிறேனோ… நீ உன் உணர்வுகளைக் கொட்டும் போது…, ’அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறேன்’ என்னும் போது…, நாமும், வெக்கையான இந்தப் பிரதேசத்தை விட்டு, கங்கையின் அருகில் சென்று விடலாமோ என்று தோன்றுகிறது….

மேகலா : தூணிலும், துரும்பிலும், உயிர்களின் ஒவ்வொரு அணுக்களிலும் குடியிருக்கும் பரம்பொருள் ஸ்ரீகிருஷ்ணரா…, இந்தப் பிரதேசத்தை விட்டு போகிறேன் என்று சொல்வது… முடியுமா…, சரி…, எங்களை விடு…. ஆண்டாளம்மாவை விட்டு சென்று விடுவாயா….

கிருஷ்ணர் : அடா… டா… டா…., ஒரு பேச்சுக்கு சொன்னால்…, சரி…., இப்போ rafting சென்றவர்கள் திரும்பி விட்டார்களா…. அவர்களுடைய experience-ஐ உன்னிடம் சொன்னார்களா… எப்படி enjoy பண்ணினார்களாம்….?

மேகலா : ஹரி group திரும்பியதுமே, ‘அம்மா, வாங்க…, கடைக்குப் போகலாம்… உங்களுக்கு bag வாங்குவோம்’ என்று பரபரப்பாக, driver-ஐ car எடுக்கச் சொன்னான். நான், bag-லாம் வேண்டாம் என்று கூறினேன். அதற்குள் driver முந்திக் கொண்டு, அம்மாவும், அப்பாவும் room-லேயே இருக்கட்டும்… இங்கு just 5 நிமிட walking-ல் கடைகள் வந்து விடும். நீங்கள் shopping பண்ணிரலாம் என்றிருக்கிறார்… அதற்கு, shopping பண்ணப் போவதே ‘மாதாஜி’ தான் என்று இவர்கள் கூறியிருக்கிறார்கள்… இதெல்லாம் நக்கல் தானே கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : இல்ல…, நீ சொல்லியிருப்ப….

மேகலா : சமயம் பார்த்து நீயும் வாரி விடுவாயா…. மதனா, என்னிடம், ‘ஆதி என்ன செய்தான் அத்தை’ என்று கேட்க…., நான், ‘ஆதி free – யாக இருந்தான்மா… நான் 1/2 மணி நேரம் தான் phone விளையாடக் கொடுப்பேன் என்றதற்கு, ‘சரி’ என்று சொல்லி, சமத்தாக phone-ஐத் திருப்பிக் கொடுத்து விட்டான். பிறகு, T. V – யில் cartoon – ‘peppa pig’ பார்க்க ஆரம்பித்து விட்டான். இடையில் கொரிப்பதற்கு, ஐயாப்பாவுடன் சென்று chips வாங்கி வந்தான்’ என்றதும்…, ஆதியும், ‘அம்மா, நான் games விளையாடவில்லை’ – சமத்துப் பிள்ளையாகச் சொன்னான். அதற்குள் நாங்க shopping கிளம்பி விட்டோம் கிருஷ்ணா… கார்த்தி, ‘நான் வரல’ என்றதும்…., ஆதி, கார்த்தியை, ஐயாப்பாவிடம் விட்டு விட்டு, அவர்களிடம் rafting experience எப்படி இருந்தது என்று கேட்டேன். ராணிமா, ‘செமயா இருந்ததுகா’ என்றாள். அவர்களுடன், வேற ஒரு group-ஐயும் சேர்த்து கூட்டிச் சென்றார்களாம்… Boat-ஐ செலுத்துபவர், photo எடுக்க ஒருவர் என்று மேலும் இருவர் சென்றிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர், photo எடுத்துக் கொண்டே இருக்கிறார். இன்னொருவர், கங்கையில் மிதந்து செல்லும் போது, ஓரிடத்தில், ‘இங்கே முழுகி எழுங்கள்’ என்று சொல்ல, முங்கத் தயங்கியவர்களை, எதிர்பாராமல் அவர்களே முங்க வைத்தார்கள்…. Thrilling-ஆக இருந்தது – என்று கலகலப்பாகத் தங்கள் அனுபவத்தை சொல்லிக் கொண்டே வர, கடைவீதியை நெருங்கி விட்டோம் கிருஷ்ணா. முதலில் வந்த கடைகளில், நம்மை வாங்கத் தூண்டும் அளவுக்கு எதுவும் இல்லை… சரி, இப்படியேதான் இருக்கும்…. கொஞ்ச நேரத்தில் திரும்பி விடலாம் என்று நினைத்து மெதுவாக நடந்து சென்றோம்…. அடுத்தடுத்து, bags கடைகளும், jewellery கடைகளும் வர ஆரம்பித்தன…. ஒரு கடையில், bag விலையை விசாரித்தால், 400 ரூபாய் என்று சொன்னார்களா…, நான், ‘ஹரி, வேண்டாம்ப்பா… அம்மாட்ட நிறைய bags இருக்கிறது’ – என்று சொல்லிக் கொண்டே அண்ணாந்து, bags-ஐப் பார்க்கிறேன்….

கிருஷ்ணர் : என்னா…, நடிப்பு….

மேகலா : நடிப்புலாம் இல்ல கிருஷ்ணா…. 400 ரூபாய் கொடுத்து வாங்க நான் தயாராக இல்லை…. ராணிமா சொன்னாள், ‘ரிஷிகேஷ் வந்ததிலிருந்து, bag, bag – ன்னு இது ஒன்னத்தான் கேட்டுக்கிட்டே வாராங்க ஹரி…, வாங்கிக் கொடுத்திரு’ என்றாள்… அதற்குள் வேறு கடை சமீபத்தில் வந்து விட்டோம்….

கிருஷ்ணர் : இதுல…., support வேறயா….

மேகலா : நாங்கள் நின்ற கடை, ஒரு fashion jewellery கடை… அந்த owner எங்களை உள்ளே அழைத்ததும், ‘பொசுக்குனு’ கடைக்குள் சென்று விட்டோம். அவர் எங்களை, ‘ஆந்திராவா….’ என்று கேட்க, நாங்கள், ‘தமிழ்நாடு’ என்று சொல்லவும், ‘நம்மள மாதிரி எத்தனை பேர பார்த்திருக்கிறார்’…. உடனே அவர், ‘which place’ என்று கேட்க, நான், ‘சிவகாசி’ என்றேன்… அவர், ‘oh!, famous பட்டாஸ்’ என்றவுடன், ஹரி, ’her father also famous பட்டாஸ்வாலா’ என்றானா…, அந்த இடமே கலகலத்துப் போச்சு கிருஷ்ணா… அதன் பின், அவர் எடுத்துக் காட்டிய bracelet, மாலைகள் எல்லாம் 100 ரூபாய்தான் என்றதும், ஷீத்தலுக்கு, மதனாக்கு, சந்தியாக்கு, ராணிமாக்கு என்று ஆளாளுக்கு வாங்கிய பின், நான் உட்கார்ந்து கொண்டேன். மதனாவும், ராணிமாவும் அவர்களுக்குப் பிடித்ததை select பண்ணினார்கள்…. அப்போ ஹரி, ‘உங்களுக்குத்தான் bag வாங்க முடியல’ என்றதும், கடைக்காரர், எதுத்தாப்பில இருந்த கடையைக் காட்டி, ‘இங்கு உங்களுக்குப் பிடித்தது கிடைக்கும்’ என்றார்….

கிருஷ்ணர் : Oh! அதுவும் அவரோட கடையாக இருக்கும்….

மேகலா : நாங்களும் அப்படித்தான் நினைத்தோம் கிருஷ்ணா… அந்தக் கடை ரொம்ப குட்டிக் கடைதான் கிருஷ்ணா…. அதில்நான் வீதியில் செல்லும் போது பார்த்து ஆசைப்பட்ட அதே bag இருந்ததுகடையில் ஒரு owner-ம்அவருடைய மகன்
போல ஒரு பையனும் இருந்தார்கள்ஹரிஅந்த bag-ஐக் காட்டி, ‘how much’ என்றான்அவரும் 400 ரூபாய் என்றார்நாங்கள்ஆளாளுக்கு ஒரு விலையைச் சொல்லி
பேரம் பேசினோம்ஹரி, ‘no’ 200 தான் என்கிறான்நான், ‘முந்நூறு’ என்றேன்…. ராணிமா ஒரு விலைமதனாவும் சிரித்துக் கொண்டே ஒரு விலை சொல்லவும்,
அந்த சின்னப் பையன், only 400 என்கிறான்மதனாகழுத்தில் தொங்க விடும் இன்னொரு sling bag-ஐக் காட்டிஅது என்ன விலை என்றதும், ‘அதுவும்
400 ரூபாய்’ என்றான்அப்படியிப்படி பேரம் பேசிஇரண்டு bags-களையும், ‘300, 300’ என்று பேசி முடித்துஷீத்தலுக்கும்ராணிமாக்கும் வேண்டுமா என்று கேட்கக் கூட மறந்து போய்விட்டால் போதும் என்று அவசர அவசரமாக, shopping முடித்து திரும்பினோம்
கிருஷ்ணா….

கிருஷ்ணர் : உனக்கு மட்டும் வாங்கினால் போதும்…, என்று நினைத்து விட்டாய்ஷீத்தலுக்கு வாங்கணும்னு உனக்குத் தோணல…. இப்படிஆசைப்பட்ட இடத்திற்கு வந்ததன் நினைவாக ஒரு bag வாங்கிச் சென்றிருக்கலாம்…. சரி…, அடுத்து என்ன…, pack-up தானா….

(தொடரும்)

(அடுத்த பகுதியுடன் நிறைவு பெறும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2