Motivation - பகுதி 3

மேகலா : Dress பண்ணுவது மட்டும் கிடையாது கிருஷ்ணா…. hair style, mannerisms, பேசும் தன்மை…., நடை கூட style ஆக நடப்பது…, என்பது ஒருவரைப் பார்த்து, இவரைப் போல நாமும் style ஆக இருக்கணும் என்று நிறையப் பேர் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். நாங்க முதன் முதலில், college-க்குள் நுழைந்த போது, எங்களுக்கு முதலில் பிரமிப்பாக இருந்தது, lecturers, Principal இவர்களைப் பார்த்துத்தான். அவர்கள் அணிந்து வந்த கஞ்சி போட்ட cotton saree-யைப் பார்த்து, நானெல்லாம், இவர்கள் நடமாடும் தேவதைகளோ என்று மலைத்தேன். அவர்கள் நுனிநாக்கில் விளையாடும் ஆங்கிலத்தைப் பார்த்து…, நாம் சிவகாசியில்தான் இருக்கிறோமா என்று கிள்ளிப் பார்த்துக் கொண்டேன் என்றால் நீ நம்புவாயா கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : ஓஹ்ஹோ…. உங்க staff-ஐப் பார்த்து, நீ பட்டிக்காடாய் ஆயிட்டயா….

மேகலா : அவர்கள் மாதிரி dress பண்ணணும் என்று நினைத்தாலும், கஞ்சி போட்ட சேலைக்கு எங்கு போவது…. ஆனாலும், ஒரே கலரில், எங்க chemistry miss, Christy Devaraj மாதிரி dress பண்ணிச் சென்றிருந்தால், அசடு வழிந்து, friends-இடம் அலப்பறை பண்ணி ஒருவழியாகி விடுவேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : இப்படியெல்லாம் கூடவா அசடு வழிவாங்க….

மேகலா : என்ன கிருஷ்ணா இப்படிச் சொல்லிட்ட…. நம்ம மனசுக்குப் பிடிச்சவங்க என்ன செஞ்சாலும், அந்த வயசுப் புள்ளைங்க, அது ஆணானாலும், பெண்ணானாலும், அதை அப்படியே கடைப்பிடிப்பது தான் trend ஆக இருக்கும்…. ‘பாலும் பழமும்’ release ஆன உடனே, பசங்க, hair stylist-இடம் போய், ‘எனக்கு பாலும் பழமும் சிவாஜி கணேசன் மாதிரி ‘கர்லிங்’ வைத்து விடுங்க’ என்று கேட்டு, hair style-ஐ மாற்றுவார்கள். அரைக் கைச் சட்டையை இன்னும் மடித்து, தான் சிவாஜி கணேசனாகவே மாறிட்டதா நம்புவாங்க…. ‘அந்தக் காலத்தில் சிவாஜி style-லில், hair style பண்ணாதவர்களே இல்லை என்பது மாதிரி, அத்தனை பேரும் ‘கர்லிங்’ hair style வைத்திருப்பார்கள். ஆண்கள் இப்படின்னா…, பெண்கள், சரோஜாதேவி கட்டியிருந்த மாதிரி பனாரஸ் சேலை கட்டினேன்…, இரட்டைச் சடை போட்டேன் என்று ஒருவரின் style-ஐப் பார்த்து தன்னை உருவாக்கிக் கொள்ளும் பழக்கம், மக்களிடையே பரவலாக இருந்தது கிருஷ்ணா…. முக்கியமாக, சினிமா hero, herioine-ஐப் பார்த்து style ஆக இருப்பது trend கிருஷ்ணா…. இன்னும் ஒரு விஷயம், உங்கிட்ட சொல்லியே ஆகணும் கிருஷ்ணா…. எனக்கு, M. G. R – னா ரொம்பப் பிடிக்கும் என்று உனக்குத் தெரியும்….

கிருஷ்ணர் : ஏ….. யப்பா. ஒரு லட்சம் தடவையாவது சொல்லியிருப்பாய்…. M. G. R. பாட்டுக்களினால் தான் நீ தேசப்பற்றை வளர்த்துக் கொண்டாய்… ஒழுக்கம், நல்ல எண்ணங்களை M. G. R – உடைய பாட்டுக்களினாலும், தனிப்பட்ட குணங்களினாலும் நீ உன்னை shape பண்ணிக் கொண்டாய் என்று சொல்லிச் சொல்லி எனக்கு மனப்பாடம் ஆகிப் போச்சு….

மேகலா : ஏன் கிருஷ்ணா…, கிண்டல் பண்ணுகிறாய்….

கிருஷ்ணர் : சே…, சே…, நாம் ‘motivational’ subject-ல் அரட்டை அடிக்கிறோம். அதில், மனிதர்கள், ஒருவரைப் பார்த்து inspire ஆகி, தானும் அது போல, தம்மை உருவாக்கிக் கொள்பவதைப் பற்றி பேசும் பொழுது, M. G. R -ஐப் பற்றிச் சொல்லவில்லையென்றால் தான் தப்பு…, நானே கேட்டிருப்பேன்…. உனக்கு மட்டுமல்ல, M. G. R – ஐ ரசிப்பவர்கள், அவர் சொன்ன…, கடைப்பிடித்த ஒரு கருத்தையாவது கடைப்பிடித்தால் போதும். நல்ல மனிதனாக வாழலாம்….

மேகலா : இந்த முறை, நீயே M. G. R – ஐப் பாராட்டி விட்டாய் கிருஷ்ணா…. இந்த சினிமாவின் value அறிந்த பல இயக்குனர்கள், அந்தக் காலக்கட்டத்தில் தேசப்பற்று, உழைப்பின் முக்கியத்துவம், பெண் கல்வி என்று பல முக்கியமான சமுதாய விழிப்புணர்வுகளை மக்களிடையே விதைத்து, மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் கிருஷ்ணா…. பெருசா கல்விப் பின்னணி இல்லாத குடும்பத்தில் பிறந்த பிள்ளைகள், சினிமா பார்த்து, அழகாக dress பண்ணி college சென்று, hero மாதிரி படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்று நினைக்குமளவுக்கு சினிமா ஒரு ’காரணி’யாக இருந்தது என்றால், அது மிகையாகாது கிருஷ்ணா…. இன்னும் ஒரு விஷயம் கிருஷ்ணா…. நம்முடைய பாரதத்தின் தந்தை மகாத்மா காந்தி கூட, தன் உயிர்மூச்சு உள்ளவரைக்கும் உண்மையே…., உண்மை மட்டுமே பேச வேண்டும் என்று முடிவெடுத்தது, சிறு வயதில், ‘ஹரிச்சந்திரா’ நாடகம் பார்த்த பிறகு தான். நம் கண் முன்னே நடக்கும் காட்சிகளின் அழுத்தம், நம்முள் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்பது காந்திஜியின் சிறு வயதில் நடந்த இந்தச் சம்பவம் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறதா இல்லையா….

கிருஷ்ணர் : சந்தேகமில்லாமல்…. ஒருவரைப் பார்த்து, தன்னைத் தானே மாற்றிக் கொள்ளுதல், அலங்கரித்தல் என்பது அழகு மட்டுமல்ல மேகலா…. எதையும் நம்மால் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையையும் கொடுக்கும்.

மேகலா : நீ சொல்வது உண்மைதான் கிருஷ்ணா…. எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது கிருஷ்ணா… நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வியட்நாம் வீடு படத்தில், பத்மநாப ஐயர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் கிருஷ்ணா… அந்தப் படத்தில் நடித்த பிறகு, அவர், எல்லோரிடமும், ‘வாங்கோ, எப்போ வந்தேள்…, நன்னா இருக்கேளா’ என்றுதான் பேசுவாராம். அந்த time-ல brahmins வியட்நாம் வீடு பார்த்து, அவருடைய fan ஆகவே மாறிட்டாங்க. அதிலும் அவருடைய பேசும் பாணி கேள்விப்பட்டு, அவரைத் தங்களில் ஒருவராகவே மதிச்சாங்க கிருஷ்ணா…. தன்னுடைய பேசும் style-ஐ மாற்றியதால், அவரைப் பின்பற்றியவர்கள் பட்டாளம் கூடிப் போச்சு கிருஷ்ணா…. நம்மை உருவாக்கும் ஒரு பழக்கம், பலரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது என்பது நிஜம் கிருஷ்ணா…..

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2