Motivation - பகுதி 9 (நிறைவுப் பகுதி)

கிருஷ்ணர் : கனவுகளை விதைப்பதும் motivation தான். நியாயமான கனவுகளை, சம்பந்தப்பட்டவரை, ‘இது தான் என் கனவு’ என்று நம்புமளவுக்கு உருவாக்குபவர்களை, அதிலும், அப்துல் கலாம் மாதிரி வரணும்; பெரிய scientist ஆக வரணும், doctor ஆக வரணும் என்று சொல்லிச் சொல்லி செதுக்கும் சிற்பிகளை, உருவாகிய பின், கோயில் கட்டி கும்பிடணும்…. motivation-ல் உன்னதமான motivation இது தான் என்று நான் சொல்லுவேன்…..

மேகலா : இக்கட்டான சூழலில், சிக்கலில் மாட்டியிருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுப்பதுதானே தலை சிறந்த motivation…..

கிருஷ்ணர் : Motivation என்றாலே, தன்னம்பிக்கை கொடுப்பதுதானே…. தன் திறமையை அறிய வைப்பதுதானே…., கதை சொல்லி விளங்க வைத்தாலும், இடித்துரைத்து எடுத்துச் சொன்னாலும், சிக்கலில் மாட்டிய பின், வழி சொல்லி ஊக்குவித்தாலும், எல்லாமே தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுப்பதுதான்…. இதில் எது சிறந்தது என்று ஆராய்வதை விட, நம்முடைய அக்கறை, ஆறுதல் இன்னொருவரை முன்னேறச் செய்ய வேண்டும்….

மேகலா : You are correct கிருஷ்ணா…. நான் ஒரு சம்பவத்தை உன்னிடம் சொல்கிறேன்… நம்மிடம் வந்து ஒருவர் தங்கள் மன அழுத்தத்தை பகிர்கிறார்கள். நாம, அவர்களுக்கு ஆறுதலாக, ‘சரி, சரி….., விட்டுத் தள்ளு’ என்கிறோம்…. அப்புறம், ‘எனக்கு மட்டும் கடவுள் ஏன் இத்தனை கஷ்டங்களைத் தருகிறார்’ என்று கேட்கிறாங்க…. நாம என்ன சொல்றோம்…. ‘கெட்டவங்களுக்கு கடவுள் நிறைய கொடுக்கிறார்…, ஆனால், கை விட்டு விடுவார். நல்லவங்களுக்கு நிறைய கஷ்டங்களைக் கொடுத்தாலும், கை விட மாட்டார்’ என்ற ‘சினிமா டயலாக்’கை சொல்லி, ஆறுதலாகப் பேசுகிறோம்…. ’கடவுள், கஷ்டத்தை மட்டுமல்ல, சில திறமையையும், நமக்குக் கொடுத்திருக்கிறார். அதைப் பற்றி யோசி… உன் கவனத்தை, உன் திறமையை வளர்ப்பதில் செலுத்து…. கடவுள், ஒரு கதவை மூடினால், இன்னொரு கதவைத் திறப்பார்….’ என்று நமக்குத் தெரிந்த தன்னம்பிக்கை வார்த்தைகள் அத்தனையையும் சொல்லி, stress-ல் இருந்து மெள்ள விடுவிக்க முயற்சிக்கிறோம். அவர்களும், கொஞ்ச நாளுக்கு, தன் கவலையை மறக்கிறார்கள்…. மறுபடியும் பிரச்னை, stress என்று மாறி மாறி வருகிறது… இப்படியே போகும் போது, யாரோ ஒருவரின் விடாமுயற்சி, சுயமரியாதை, சுறுசுறுப்பு, அவர்களுக்குள் ஒரு chemical reaction ஏற்பட்டு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது…. ‘இத்தனை நாள் waste பண்ணிட்டோமே…, நாமும் நம் வேலையை சுறுசுறுப்பாக, கச்சிதமாக செய்ய வேண்டும்…. பிரச்னை பாட்டுக்கு வரட்டும்… நாம, நம்ம வேலையைச் செய்வோம்’ என்று யோசிச்சி, அந்த inspiring person-ஐ role model-ஆக ஏற்றுக் கொண்டு மனம் மாறுகிறார்கள். இதில் யார் motivate பண்ணினார்கள் என்று உனக்குப் புரிகிறதா கிருஷ்ணா….

கிருஷ்ணர் : நான் உனக்கு ஒன்று தெளிவாகச் சொல்கிறேன் கேள்… ‘யார் stress-க்கு உட்பட்டிருந்தாலும் சரி…, அவர்களை அந்த மன அழுத்தத்திலிருந்து வெளியே கொண்டு வர வேண்டும். அது first-aid மாதிரி…. இதில், முழுவதுமாக தங்களை மாற்றிக் கொள்ள அவர்களுக்கு யார் வேண்டுமானாலும் காரணமாக இருந்து விட்டுப் போகட்டும். யார் motivator என்பதல்ல பிரச்னை…. ஒருவரின் மனச் சுளுக்கு விடுவிக்கப்பட்டதா என்பதுதான் முக்கியம்…. Motivation என்பது ஒரு அற்புதமான செயல்…. ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு, அம்மா முக்கியம்… வெளியில் கூட்டிச் செல்ல, அப்பா முக்கியம்…., ஓடி விளையாட அண்ணா முக்கியம்; நண்பர்களும் முக்கியம்…., கதை சொல்ல, பாட்டியும் முக்கியம் தான்… இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்…, குழந்தை முறையாக வளர்க்கப்பட வேண்டும்….

மேகலா : Yes, கிருஷ்ணா…., நல்லாப் புரிஞ்சிச்சி கிருஷ்ணா…. நான், இதுவரையில் பலதரப்பட்ட motivation-களைப் பார்த்துக் கொண்டே வந்திருக்கிறேன். ஒவ்வொன்றின் அணுகுமுறையும் வெவ்வேறாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால், நீ சொல்வது போல, அதன் முடிவு, நிச்சயம் சம்பந்தப்பட்டவர்களுக்கு, மன தைரியத்தைத் தருவதாயும், குழப்பங்களை விலக்குவதாயும், ஆறுதல் சொல்லுவதாயும், வெற்றி அடைவதாயும் மட்டுமே இருக்க வேண்டும்…. கதை கேட்டாலும், நாடகம் பார்த்தாலும், inspire ஆனாலும், புத்தகம் வாசித்தாலும், மனிதர்கள் நிச்சயம் தன் திறமையை வளர்த்துக் கொண்டு நிமிர்ந்து நிற்க வேண்டும்… நான் அறிந்த கதை என்றாலும், தெரிந்த தகவல்களையும், தகுந்த இடத்தில் எடுத்துக் கூறி, என்னாலும் motivate பண்ணி எழுதத் தூண்டிய பரம்பொருளே…, தமிழையும், பேனாவையும் கையில் கொடுத்து, தலைப்பையும் எடுத்துக் கொடுத்து, இப்படி சரிசமமாக நான் வாயாடுவதையும் சகித்துக் கொண்டிருக்கும் என் இனிய கிருஷ்ணா…, motivation என்ற வார்த்தையின் அர்த்தமே… ‘கிருஷ்ணா’ என்று நான் மனம் நிறைந்து கூப்பிடும் போது, என்னையும் ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி, கிண்டல் பண்ணியும் கூட என்னை எழுதத் தூண்டும் கிருஷ்ணா…, என் விரல்களின் இயக்கமே நீதானே கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : விட்டால், நீ பக்கம் பக்கமாய் பேசுவ… Motivation என்ற தலைப்பில், நல்ல விஷயங்களை எடுத்துப் பேசியிருக்கிறோம். இன்னும் ஒரு தலைப்பில் சந்திக்கலாம்.. இப்போ, அடுத்து என்ன தலைப்பு என்று யோசித்து வை… நான்…, வரட்டா….

மேகலா : கிருஷ்ணா…., அதற்குள் முடித்து விட்டாயா….

கிருஷ்ணர் : ம்…, ம்…, நான் கிளம்பிட்டேன்…..

(நிறைவு பெறுகிறது)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1