Maturity - பாகம் 3

கிருஷ்ணர் : ஒரு செயலைச் செய்யச் சொல்லி, அனுபவமோ, நிதானமோ இல்லாதவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கும் போது…, அந்தச் செயல், பக்குவம் இல்லாதவர்களால் திருப்தியாய் செய்ய முடியாது என்பது மட்டுமில்லை…., உருப்படியாகவும் செய்ய முடியாது என்பதனால்தான், இந்த பழமொழியே சொல்லப்பட்டிருக்கு…. இதற்கு ஏதாவது உதாரணம் சொல்லேன் மேகலா…

மேகலா : பக்குவம் இல்லாதவர்களால், எந்த ஒரு காரியத்தையும் உருப்படியாகச் செய்ய முடியாது – என்று நீ சொன்னாயே கிருஷ்ணா…, அது எவ்வளவு உண்மை கிருஷ்ணா…. நாம இப்போ சமீபத்தில் வாசித்த ஸகர மன்னன் புதல்வர்களின் கதை இதற்குப் பொருத்தமாக இருக்கும் கிருஷ்ணா…. ஸகர மன்னனின் யாகக் குதிரையை, தேவேந்திரன் திருடிச் சென்று விட்டான். யாகக் குதிரை இருந்தால் மட்டுமே, யாகத்தை தொடர்ந்து நடத்த முடியும். ஸகர மன்னனே குதிரையைத் தேடிச் சென்றிருக்கலாம்… அல்லது, நற்குணங்கள் நிறைந்த, எல்லோரையும் மதிக்கத் தெரிந்த பேரன் அம்சுமானை அனுப்பியிருக்கலாம். எந்த சேதாரமும் இல்லாமல் யாகக் குதிரை மீட்கப்பட்டிருக்கும். ஸகர மன்னனின் 60,000 புதல்வர்களும் யாகக் குதிரையைத் தேடி, பூமியெங்கும் சுற்றி வந்தார்கள். எங்கேயும் குதிரை காணவில்லையென்றதும், பூமியைக் குடைந்து, பாதாள உலகத்தை அடைந்தார்கள்… அங்கு, பூமியைத் தாங்கும் வாசுதேவராகிய நாராயணன், கபில முனிவர் உருவில் தவம் செய்து கொண்டிருந்தார். அவர் அருகில் யாகக் குதிரை மேய்ந்து கொண்டிருந்தது… இதைப் பார்த்த ஸகரனின் புதல்வர்கள், கடும் கோபமடைந்து, கபில முனிவரைத் தாக்க முயன்றார்கள். அதனால் முனிவர், அவர்களை கோபத்தோடு பார்த்தார். ஸகரனின் புதல்வர்கள், முனிவரின் பார்வையால் எரிந்து சாம்பலானார்கள்… அவர்கள், யாகக் குதிரையைப் பார்த்ததும், முனிவரிடம், குதிரை எப்படி இங்கு வந்தது என்று பணிவாகக் கேட்டிருக்கலாம்… சட்டென்று கோபப்படுவது…, தீர விசாரிக்காமல் தண்டனை தர முற்படுவது…, தாம் நினைப்பதுதான் சரி என்று அகம்பாவமாய் நினைப்பது… என்ற இந்த குணங்கள் மேலோங்கி நிற்பதால், என்ன வேலையாக வந்தோமோ, அது நடக்காமல் நின்று போனது…

‘சின்னப் புள்ளைங்க வெள்ளாம, வீடு வந்து சேராது’ – என்ற பழமொழியைச் சொன்னவர்…, இப்படிப்பட்ட அறிவிலிகள் வசம் ஒப்படைத்த வேலைகள் சின்னாபின்னமாவதைக் கண்டு, மனம் நொந்து போய் சொன்னதுதான் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : அதில் ஒன்று கவனத்தில் கொள்ள வேண்டும் மேகலா… கோபத்தினால், தாங்கள் செய்ய வந்த வேலையைச் செய்து முடிக்காமல், கபில முனிவரின் சாபத்திற்கு ஆளானாலும், அடுத்து நடக்க வேண்டிய மிகப் பெரிய வேலை நடந்து முடிந்ததல்லவா… காணாமல் போன ஸகர மன்னனின் புதல்வர்களைத் தேடி அம்சுமான் வந்தது… கபிலரின் கோபத்தினால், ஸகரனின் புதல்வர்கள் எரிந்து சாம்பலானது…, அவர்களின் சாம்பல் பரப்பின் மீது கங்கை பாய்ந்தாலொழிய அவர்கள் பாவம் தீராது என்பதை அறிந்தது…, அதன் பிறகு அவர்கள் வம்சத்தில் வந்த பகீரதனின் அரும் பெரும் முயற்சியாலும், பரமசிவனாரின் அருளினாலும், ‘ஆகாய கங்கை’, பூலோக கங்கையாக, வற்றாத ஜீவநதியாக பாரதத்தில் பாய்ந்தது…, என்ற இந்த மிகப் பெரிய சாதனை நடைபெறுவதற்கு, ஸகரனின் புதல்வர்களின் கோபமும், அகம்பாவமும், அவர்களின் செயலும் ஒரு காரணம் தானே… ஒருவரின் தவறு, அடுத்தவருக்கு, அந்தத் தவறைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பு… ஒருவரின் கோபம், இன்னொருவருக்கு நிதானமாகிறது… ஒருவரின் அறியாமை, மற்றொருவருக்கு, எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்ற படிப்பினை….

மேகலா : Super கிருஷ்ணா…. நீ சொல்லச் சொல்ல…, ‘ஆமாம்’, ‘ஆமாம்’ என்று சொல்லத் தோணுது கிருஷ்ணா…. அதே போல, maturity-யாக இருப்பவர்கள், ஒரு வேலை தனக்குத் தெரியாதென்றால், அதைத் தெரியாது என்று சொல்வதில் எந்த பதற்றமும் பட மாட்டார்கள்… ‘ஐயோ, நமக்குத் தெரியவில்லை என்றால் அசிங்கமே’ என்று கொஞ்சம் கூட பிகு பண்ண மாட்டார்கள். தெரியாத காரியம் ஒன்று செய்ய வேண்டிய அவசியம் வந்து விட்டால்…, முதலில் அதைத் தெரிந்து கொள்ள என்ன செய்யணுமோ, அதைச் செய்வார்கள். நம்மால் இதைச் செய்து விட முடியும் என்ற நம்பிக்கை வந்தவுடன், ரொம்ப கவனமாக, சொதப்பல் இல்லாமல் செய்ய வேண்டும் என்று முனைப்புடன் நிதானமாக செய்து முடிப்பார்கள் கிருஷ்ணா….

எங்களுடைய சமையல் channel-ல், அன்றாட traditional cooking நன்றாகச் செய்கிறோம் என்ற நினைப்பில் தான், channel ஆரம்பித்து, cooking varieties-களை செய்து காண்பித்தோம். இப்படிச் செய்யும் போது, street food items எல்லாம் செய்து காட்டவும் நாங்கள் ஆசைப்பட்டோம்…. அப்போ, frankie என்ற ஒரு பரோட்டா item, பரவலாக, youngsters இடையே விரும்பிச் சாப்பிடப்படும் உணவாக இருந்தது. நாங்கள், Bangalore-ல் Commercial Street-க்கு shopping போயிருந்த போது, , அங்கு platform கடை ஒன்றில் chef ஒருவர் frankie செய்து விற்றுக் கொண்டிருந்தார்…. Sheethal, உடனே, ’இந்த frankie எப்படிச் செய்கிறார் என்று பாருங்கம்மா… நாளை, நாம இதைத்தான் செய்யப் போகிறோம்’ என்று சொன்னாள். உடனே order பண்ணி wait பண்ணினோம். நானும், அவர் சப்பாத்தி உருட்டி, egg மேல் பரப்பி, திருப்பிப் போட்டு, mustard sauce, tomato sauce, chilli sauce என்று மாற்றி spray பண்ணுவதை உற்றுக் கவனித்து, பன்னீர், capsicum, mushroom கலந்த side dish-ஐ, egg சப்பாத்தியில் பரப்பி, roll பண்ணி, அதன் மேல் ‘மயோனைஸை’ spray பண்ணி கொடுத்ததை மனசுக்குள் எழுதிக் கொண்டேன் கிருஷ்ணா…. சமையல் எனக்கு ஆகி வந்த வேலையாகப் போனதால், சப்பாத்தியும் egg-ம் சேர்ந்தால் நல்லாத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில், மறுநாள் நாங்கள், successful-ஆக, frankie-யை எங்கள் channel-லில் செய்து காட்டினோம் கிருஷ்ணா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2