Maturity - பாகம் 5

மேகலா : ராமாயணத்தில், ராமரும் சீதையும், லக்ஷ்மணன் உடன் வர, வனவாசம் அனுப்பப்பட்டனர். நாட்டை இழந்து, அரசுரிமை இழந்து, தாய் தந்தையரை விட்டு விலகி, காட்டு விலங்குகள் நிறைந்திருக்கும் வனத்திற்கு ராமர் வந்திருக்கும் சூழலில், அங்கு ராக்ஷசர்களின் தொல்லை தாங்க முடியாத முனிவர்கள், ராமரிடம் அடைக்கலம் ஆனார்கள். அந்த சூழலிலும், முனிவர்களைக் காக்கும் பொறுப்பை ஏற்ற ராமர், ஜனஸ்தானத்தில், முனிவர்களைத் துன்புறுத்திய கரனையும், தூஷணனையும் வதம் செய்தார். இதைக் கண்ட முனிவர்கள், ‘நல்லது நடந்தது, நல்லது நடந்தது’ என்று வாழ்த்தி, ‘ராக்ஷசர்களின் தலைவனான ராவணன் அழிந்தான்’ என்று, சீதை கடத்தப்படாத நிலையிலும் நிம்மதி அடைந்தனர். இந்தக் காட்சியில், ராமர் வனவாசம் வந்ததன் காரணம் எதுவாக இருந்தாலும், அதன் முடிவு, உலக நன்மையைத் தரும் என்ற நிம்மதி, முனிவர்களின் நிம்மதிக்கு காரணமாகியது அல்லவா…. சக்கரவர்த்தித் திருமகன், மரவுரி அணிந்து , காட்டுக்கு, ஒரு துறவி போல வந்ததற்காக கவலைப்பட்டு அழுது புலம்பியிருந்தால்…, அவர்கள் எப்படி மகான்களாக, முக்காலம் உணர்ந்தவர்களாக இருக்க முடியும்… எப்படி ஒரு செயல் நடப்பதற்கு பொறுமை மிக அவசியமோ, அதே போல, மிகப் பெரிய செயல் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், செயலைச் செய்பவர்களுக்கு, எத்தனை துன்பம் நேரிட்டாலும்…, சோதனைகள் எதிர்ப்பட்டாலும், சோதனைகளையெல்லாம் முறியடிக்கக் கூடிய ஆற்றல் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துச் சொல்லும் மனநிலையைக் கொண்டிருப்பார்கள் என்பது ராமாயணம் கூறும் உண்மை…. Maturity என்பது, தெளிவான நம்பிக்கை, மற்றும் நிதானம் இழக்காத சமயோசிதம்…

மேகலா : Great கிருஷ்ணா…. இப்பத்தான் புரியுது கிருஷ்ணா…. Maturity என்பது எவ்வளவு அற்புதமான குணம்…. உலகத்திற்கே வேதம் எடுத்துரைத்த எம்பெருமான் ஸ்ரீகிருஷ்ணர் போற்றும் ஒரு குணம்…. அடேயப்பா…, பல மஹரிஷிகளின் நிதானம்… ஆனால், எங்களைப் போன்றோர்களால் எட்ட முடியாத உயர்ந்த குணம்…

கிருஷ்ணர் : ஏன் எட்ட முடியாது என்கிறாய்… முனிவர்கள் மட்டும் தான் நிதானமாகவும், தெளிவாகவும் யோசிக்க முடியும் என்று நினைக்கிறாயா…; அப்படியில்லை. எல்லா மக்களும், தான் செய்ய முடியாத காரியத்தை, அதை செய்து முடிக்கக் கூடிய ஒருவர் செய்ய முயலும் போது…, இவர் நினைத்தால் நிச்சயம் இந்தக் காரியம் வெற்றிகரமாக முடியும் என்று நினைப்பதில்லையா…. நான், இப்போ சமீபத்தில் நடந்த ஒரு அணுமின்நிலைய பிர்ச்னையையே சொல்கிறேன். இந்த 21-ம் நூற்றாண்டில் atomic energy-யைக் கொண்ட அணு மின்நிலையம், 1000 மெகாவாட் திறனுடைய 4 அலகுகளின் கட்டுமானம் கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ளது. அணுசக்தி என்பது எவ்வளவு ஆற்றல் உடையதோ…, அதை விட, அதில் கசிவு ஏற்படுமானால், நிறுவப்பட்ட இடத்தைச் சுற்றி ஆபத்தும் உருவாகும் என்பது உலகறிந்த உண்மை. அதனால், கூடங்குளத்தில் அணுமின்நிலையத்தை நிறுவும் போது, ரஷ்ய விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியால், கசிவு ஏற்படாத வகையில் பாதுகாப்பு கொடுத்து நிறுவப்பட்டது. மக்கள் தொகை பெருக்கம் விரிவடைந்து கொண்டே செல்லும் நம் நாட்டில், அணுசக்தியால் மின்சாரம் பெற வேண்டும் என்பது கட்டாயமாகிப் போனது… ஆனால், சிலர் இந்த அணுமின்நிலையத்திற்கு எதிராக…, அதாவது, அணுமின்நிலையம் தேவையில்லை என்று குரல் கொடுத்து போராட்டம் நடத்தினார்களே…, உனக்கு ஞாபகம் இருக்கிறதா….

மேகலா : மறக்க முடியுமா கிருஷ்ணா…. அணுமின்நிலையத்தை open பண்ண முடியாமல் அரசாங்கம் திகைத்துப் போனதே… மறக்க முடியுமா கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ம்… ஆமாம்…., இந்தப் பிரச்னையில், திரைமறைவில், பல politics ஓடினாலும், எல்லோர் மனதிலும், ‘இவர்’…, ‘இவர்’ எடுத்துச் சொன்னால்…, மக்கள் நம்புவார்கள் என்று ஒருவர் மட்டுமே நிறைந்து நின்றார்… அவர் யார் தெரியுமா….?

மேகலா : ஏன் தெரியாது… ஏவுகணங்களையும், ஏவுகலங்களையும் வானில் பறக்க விட்டு, உலகளவில் பாரதத்தின் பெருமையைத் தெறிக்க விட்ட, என் மனம் கவர்ந்த டாக்டர் A. P. J. அப்துல் கலாம் என்ற ’மகான்’ கிருஷ்ணா… இந்த விஷயத்தில், அரசாங்கம் தெளிவாக யோசித்து, முதல்வரும், காலத்தின் தேவையை நன்குணர்ந்து, டாக்டர் கலாம் மட்டுமே…, சொல்லாலும், விளக்கத்தாலும், அக்கறையாலும், மக்களின் பயத்தைப் போக்குவார் என்று நம்பவில்லையா… அரசாங்கத்தைச் சேர்ந்த முதலமைச்சர், பிரதான் மந்திரி என்று எல்லோரும் நம்பியது அவரை மட்டும் தானே…. அணுமின்சக்தியின் செயல்பாடுகளை, அதன் மூல காரணத்திலிருந்து, சகல விதமாகவும், சாதக பாதகங்களைக் கூட, விளக்கம் கொடுத்து, கதிர் வீச்சுக்கு வழியே கிடையாது என்று மக்களிடம் எடுத்துச் சொன்னார்… அவரை நம்பியவர்கள் நிம்மதியானார்களா…., இல்லையா…. இன்றும், நிதானம், தெளிவாக முடிவெடுத்தல், உண்மையை அலசி ஆராய்தல் என்ற maturity குணம் கொண்ட, மனிதர்களில் மேம்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்… அரசியலிலும் சரி.., அதைச் சார்ந்த பிற துறைகளிலும் சரி… என்ன.., இப்படிப்பட்டவர்கள் celebrity ஆகி விடுகிறார்கள்… அதனால்தான், நீ சாதாரண மனிதர்களுக்கு, maturity எட்டாத குணம் என்கிறாய்…. எந்த ஒரு செயலுக்கான காரணத்தையும் நிதானமாக, அலசி ஆராய்ந்து, தெளிவாக உண்மையைக் கண்டறிய வேண்டும்… அந்த செயலைச் செய்யும் திறன் இல்லாதவர்கள் கூட…, நிதானமாக யோசிக்கும் போது…, அதனால் விளையக்கூடிய பலன்களைத் தெரிந்து கொள்ள முடியும்…. ஒரு விஷயத்தைப் பற்றி முழுவதும் தெரிந்து கொண்டுதான் maturity வரணும் என்பதில்லை….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2