Maturity - பாகம் 7
கிருஷ்ணர் : ‘வெற்றிப் படிக்கட்டு’ என்ற தலைப்பில், வசந்த்குமார் அண்ணாச்சி என்ன சொல்கிறார். தோல்விகள் எப்படி நம்மை வெற்றியை நோக்கிச் செல்லும் பாடத்தைச் சொல்லிக் கொடுக்கிறதோ…, அதே மாதிரி, அடுத்தவர்களின் கேலியும் கிண்டலும் கூட, நமக்கு சிறந்த பாடம் தான். பிறத்தியாரின் பொறாமை நமக்கு motivation மட்டுமல்ல…, நம்முடைய அறிவைத் தெளிவாக்கி, நம்மை பக்குவமடையச் செய்யும் மிகச் சிறந்த ‘கிரியாஊக்கி’…. மகாபாரதத்தில் நீ பார்த்திருக்கலாம்… குருக்ஷேத்திரப் போரில், துரியோதனன், பீமனை, ‘பீமா, அடுப்படியில் இருக்க வேண்டிய நீ இங்கு எதற்கு வந்திருக்கிறாய்… இது போர்க்களம்…. சாப்பாட்டு ராமனாகிய உனக்கு இங்கு என்ன வேலை’…. என்று கேலி பேசுவான்… இறுதியில், பீமனால்தான் துரியோதனன் வதம் செய்யப்படுவான்… கேலி பேசுபவர்களினால், நம்முடைய தெளிவு என்றும் தடை படாது… தடை படக் கூடாது….
மேகலா : Yes, boss….! இப்படி கேலிகளாலும், அவமானங்களாலும் பாதிக்கப்பட்ட திறமைசாலிகள், தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டு பக்குவம் அடைகிறார்கள்…, இல்லையா கிருஷ்ணா…. அவர்களுக்கு, நம்மைச் சுற்றியிருப்பவர்களை விட…, நாமதான் ‘திறமைசாலி’ என்ற கர்வம் வந்து விடுமோ…. அது தப்புதான கிருஷ்ணா…..
கிருஷ்ணர் : நீ கேட்பது சரியான கேள்விதான்…. இங்கு தன்னை கேலி பேசுபவர்களை, ignore பண்ண வேண்டும்…. Ignore பண்ணுவதற்கும் கூட, ’ஒரு தைரியம்’, ‘கெத்து’ என்றிருக்க வேண்டும். இந்த இடத்தில், கர்வமாய் ஒரு பார்வை, சின்னதாய் நக்கல் சிரிப்பு ஒன்று சிரித்து விலகிச் செல்வது, கேலி பேசியவர்களின் முகத்தில், ‘கும்மு கும்முனு குத்தியது’ போல இருக்கும்… இந்த நக்கல், கெத்து, தைரியம்…, இவையெல்லாம், நாளடைவில், நிதானமாக வேண்டும்…. கேலி பேசியவர்களே பிரமித்துப் போற அளவுக்கு நீ சாதித்துக் காட்டினால், கேலி பேசியவர்களே, உன்னைப் பாராட்ட வேண்டிய நிலைமை வரலாம்… தெளிந்த அறிவும், திறமையும், நம் மனதில் தைரியத்தை வரவழைத்து, மனசார கடவுளைக் கும்பிடச் சொல்லும்…. படிக்கட்டாய் நின்ற கர்வம் கூட, கடவுள் நம்பிக்கையில் மறைந்து போகும்… அப்புறம் என்ன… கேலி பேசுபவர்களை, easy-யாகக் கடந்து போகும் பக்குவத்தை அடைந்து விடுவாய்… இன்னும் சொல்லப் போனால், ஒரு பாராட்டு கிடைக்கும் போதே, கேலியையும் சேர்ந்தே எதிர்பார்க்கும் குணம் கூட உன்னிடம் வந்து விடும்…. கொஞ்ச நாளில், ‘இவன் இப்படித்தான் எப்பவும் பேசுவான்’ என்று comedy-யாகக் கூட நினைக்க ஆரம்பித்து விடுவாய்…..
மேகலா : எப்படி கிருஷ்ணா…, மனிதர்களின் போக்குகளை நன்றாக அளவெடுத்து வைத்திருக்கிறாயே….
கிருஷ்ணர் : உன்னிடம் ஒரு உண்மை சொல்லட்டுமா…. மண்ணில் பிறந்த மனிதர்கள் அத்தனை பேரின் bio-data-வும் என்னிடம் இருக்கிறது…
மேகலா : ஏ…. யப்பா…. நான் நட்பு பாராட்டி பேசுவது…, எம்பெருமான் ஸ்ரீகிருஷ்ணரிடம்… சரி…, அப்போ…, நமக்கு maturity வருவதற்கு, கடவுள் நம்பிக்கையும் ஒரு காரணமாகிறது. வாவ்…, நம்ம வாழ்க்கையில் நடக்கிற அத்தனை சம்பவங்களையும் கடவுள் கண்காணிக்கிறார்… அவனன்றி ஓரணுவும் அசையாது என்று, என்னைக்கு முழுசாக நம்புகிறோமோ…, அன்னைக்கு நம்ம மனசுலயும், புத்தியிலயும் maturity…., கர்வமின்மை…, நம்பிக்கை…, முக்கியமாக ‘திருப்தி’ என்று எல்லாமே வருகிறது… நீ சொல்வது உண்மைதான் கிருஷ்ணா… பக்குவமில்லாத காலங்களில், யாராவது அவமானப்படுத்தினால் உடைந்து போகும் மனசு…, பக்குவமடைந்த போது…, அப்படிப்பட்ட சம்பவங்கள் வரவே முடியாத அளவு நடவடிக்கைகளும் ரொம்ப matured ஆக மாறி விடுகிறது…. வழக்கமாக கேலி பேசுபவர்களும் என்ன பேசுவது என்று தெரியாமல் விலகிப் போய் விடுகிறார்கள்….
கிருஷ்ணர் : எப்படிச் சொல்லுகிறாய்…. கொஞ்சம் விளக்கிச் சொல்லு….
மேகலா : கிருஷ்ணா! கேலி பேசுபவர்கள் யார்? மனசு முழுசும் எதிர்மறையான சிந்தனை உடையவர்கள்தான், எந்த செயலையும்…, தனக்கே உரித்தான பாணியில் விமர்சனம் பண்ணுவார்கள்… அதிலும், திறமைசாலிகளைத் தன்னோடு compare பண்ணிப் பேசி, ‘என்ன நான் செய்யல…, அவள் செய்து காட்டி விட்டாள்’ என்று ஏதோ சாதனையைச் செய்ய மறந்தது போல பேசுவார்கள்… அப்போ matured person என்ன சொல்லுவார்கள் தெரியுமா கிருஷ்ணா… ஒண்ணா, இதுக்கு பதில் ஏதும் சொல்லாமல் விட்டு விடுவார்கள்… இல்லையா, ‘நானே உன்னிடம் இருந்துதானே கற்றுக் கொண்டேன்…, நமக்கு இதெல்லாம் ரொம்பப் பழக்கமான காரியம் தானே’ – என்று சொல்லி, அந்த சூழ்நிலையையே கலகலப்பாக்கி விடுவார்கள்…. எனக்கு இப்பத்தான் ஒண்ணு தெளிவாகப் புரிகிறது… ‘கடவுள் நம்பிக்கை’, ‘தன்னம்பிக்கை’, ‘திறமை’ இவையெல்லாம், நாளாக, நாளாக, மனிதனுக்குள் positive ஆக யோசிக்கவும், செயல்படவும் வைக்கிறது… Positive சிந்தனை கூட, மனிதனை maturity அடைய ஒரு காரணமாகிறது… நான் சொல்றது correct-தான கிருஷ்ணா….
கிருஷ்ணர் : சரியாகச் சொன்னாய் மேகலா….
மேகலா : இப்பத்தான் புரியுது கிருஷ்ணா…. மனிதன் பக்குவம் அடைய வேண்டும் என்று நீ ஏன் இவ்வளவு வலியுறுத்தினாய் என்று…. சாதாரண மக்கள் கூட, கடவுள் நம்பிக்கையைக் கைப்பிடித்து, positive சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள முடியும்…. Positive சிந்தனை உடையவர்கள், எந்தத் தடைகளையும், சோதனைகளையும் எதிர்கொள்ளும் தைரியத்தை வளர்த்துக் கொள்வார்கள். இதுவே அவர்களுக்கு, நிதானத்தையும், பக்குவத்தையும் கொடுக்கும்….So, சாதாரண மக்கள் கூட, அவர்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களினால் maturity அடைவதுண்டு… மனிதர்களின் சோதனைகள் அவனைப் பக்குவப்படுத்துகிறது…. Great கிருஷ்ணா….
கிருஷ்ணர் : நீ இன்னொன்றும் யோசிக்கணும் மேகலா….
(தொடரும்)
Comments
Post a Comment