வலிமை - பாகம் 1

மேகலா : ஹாய் கிருஷ்ணா!

கிருஷ்ணர் : என்னம்மா உன்னை, கொஞ்ச நாளாக இந்தப் பக்கமே காணலியே… அரட்டை அடிப்பதையே நிறுத்தி விட்டாயோ என்று கூட யோசித்தேன். வாயத் திறந்தால், நிறுத்தாமல் பேசுவாயே…, எங்க ஆளையே காணோமே என்று கூட நினைக்க ஆரம்பிச்சுட்டேன்…

மேகலா : எப்படி கிருஷ்ணா…. நான் சும்மா அரட்டை அடிப்பதாகவெல்லாம் நினைக்கவில்லை…. என் ஆச்சாரியனும், குருவுமாகிய ஸ்ரீகிருஷ்ணர்…, பல தகவல்களை எனக்கு எடுத்துச் சொல்லி, அதன் விளக்கங்களைத் தருவதாகத்தான் எடுத்துக் கொள்கிறேன். நான் கொஞ்ச நாள் diary-யைத் தூக்காததற்குக் காரணம்…, அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்ததும்…, அதனையொட்டிய செய்திகள், social media-க்களில் பரபரப்பாகப் பேசப்படுவதும் ஒரு காரணம் தான் கிருஷ்ணா…. ஜெய்…, ஸ்ரீராம்….

கிருஷ்ணர் : ஓ! கும்பாபிஷேகத்தை live telecat-ல் பார்த்தாயா….

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. சீக்கிரமே வேலையை முடித்து விட்டு, T. V. முன் அமர்ந்து…., full-ஆ பார்த்தேன் கிருஷ்ணா… ‘பாலக ராமன்’ நின்ற தோற்றத்தில், மிக அழகாக…, சர்வ அலங்காரத்துடன் இருக்க…, உணர்ச்சி வெள்ளத்தில்…, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற மக்களின் முழக்கத்தோடு, பாரதப் பிரதமரின் தீபாரதனையோடு, கும்பாபிஷேக கோலாகலம், மிகச் சிறப்பாக நடந்தது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : வாவ்…, சிறப்பு…, சிறப்பு…, சரி… இன்று என்ன தலைப்பு யோசித்திருக்கிறாய்…

மேகலா : என்ன தலைப்பில் பேசலாம் என்று….

கிருஷ்ணர் : யோசிக்கிறாயாக்கும்…… ‘வலிமை’யைப் பேசலாமா… ‘வலிமைதான் வலிமையை எதிர்கொள்ள முடியும்’…. என்று நம்ம ‘ஏவுகணைகளின் தந்தை’ honorable அப்துல் கலாம் சும்மா சொல்லவில்லை….

மேகலா : கிருஷ்ணா…. தலைப்பு மட்டும் சொல்லல…, அதை எப்படி…, எதிலிருந்து ஆரம்பிப்பது என்ற குறிப்பையும் கொடுத்து மீண்டும்…, ஸ்ரீகிருஷ்ணர், ‘என் ஆச்சார்யன்’ என்று நிரூபித்திருக்கிறாய் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : சரி…, ‘வலிமை’யை, ‘பலம்’ பார்க்கலாமா… ‘வலிமை’யைப் பற்றி நீ சொல்லு…

மேகலா : ‘தாதா’வா இருக்கிறவங்களும், வலியவர்கள் தான் கிருஷ்ணா… புத்திசாலிகளும் வலியவர்கள் தான் கிருஷ்ணா… உண்மையுடன், தைரியம் உள்ளவர்கள், தங்கள் பெருமைகளைத் தாங்களே சொல்ல மாட்டார்கள் கிருஷ்ணா.. எனக்கு, ‘வலிமையானவர்கள்’ யார் என்பதில் ஒரு doubt இருக்கு கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Doubt-ஆ…. ‘வலிமை’…, அப்படின்னா…, strength தானே… இதில் என்ன doubt உனக்கு….?

மேகலா : கிருஷ்ணா…, சினிமால காட்டுற வலிமையானவர்கள்…, பரட்டைத் தலையும், முரட்டு மீசையுமாக இருப்பாங்க… குளிச்சு 10 நாள் ஆனது போல இருப்பாங்க…. பல்லே விளக்க மாட்டங்களோ…, என்பது போல இருக்கும்….

கிருஷ்ணர் : பல்லை எப்படிப் பார்த்த….

மேகலா : அடிக்கடி சிரிப்பாங்கல்ல கிருஷ்ணா…. சிரிச்சா…, பாக்குறவங்க பயந்திரணும்னு நினைச்சு சிரிப்பாங்க….

கிருஷ்ணர் : நீ சொல்ற மாதிரி இருக்கிறவங்களை, திருப்பி ரெண்டு தட்டு தட்டிப் பாரு…, தட்டுனவனைப் பாத்து சலாம் போடுவான்….

மேகலா : அதுலதான் எனக்கு doubt வருது கிருஷ்ணா…. rowdy மாதிரி இருக்கிறவங்க, வலிமையானவங்க கிடையாது… அப்படீன்னா…, வலிமையானவர்களின் அடையாளம் என்ன கிருஷ்ணா….

கிருஷ்ணர் : நீ யாரையெல்லாம் பார்த்து, ‘யப்பா…, எப்படித்தான் இவர்களால் இப்பேர்ப்பட்ட வேலையைச் செய்ய முடிகிறதோ’…, என்று பிரமிப்பு அடைகிறாயோ…, அவர்கள் வலிமையானவர்கள். அவன், சுமை தூக்கும் கூலியாளாகவும் இருக்கலாம். அணுகுண்டு சோதனையை நடத்திக் காட்டி, இந்த நாட்டையே வல்லரசாக்கும் முயற்சியில் ஜெயிக்கும் வல்லவனாக இருக்கட்டும்… தன்னுடைய முயற்சியில் திரும்பத் திரும்ப எதிர்ப்பையோ, அல்லது தடைகளையோ சந்தித்து, மறுபடியும் முயற்சி செய்யும் சாமான்யனாக இருக்கட்டும்…. யாராக இருந்தாலும், பிறருடைய கவனத்தை ஈர்க்கும் உழைப்பு, முயற்சி, திறமை…, பொறுமை கூட, strong ஆனவர்களை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி விடும்…

மேகலா : ஓ! மொத்தத்தில், பிறர் நலனில் அக்கறையுள்ள நல்லவன், வல்லவன் தான் வலிமையானவன்…. இல்லையா கிருஷ்ணா…. நான், இப்போ சில நாட்களாக, ‘ஒரு இல்.., ஒரு சொல்.., ஒரு வில்’ என்ற இந்த தாரக மந்திரத்தை போற்றிப் பேசும் போது, அடிக்கடி கேட்கிறேன் கிருஷ்ணா… இல்லற வாழ்க்கை சுத்தம்…, வாக்கு சுத்தம்…, பராக்கிரம சுத்தம்…, என்ற இந்த மந்திரமாய் நின்று வாழ்ந்த ‘ராமர்’ வலிமையானவர்… ஆஹா! இதைச் சொல்லும் போதே…, மனசும்…, மெய்யும் ஒத்துப் போகுது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ராமர் வலிமையானவர் என்பதை யாரால் மறுக்க முடியும்… எதையும், மென்மையாய் எதிர்கொள்ளும் பண்பு…, எல்லோரிடமும் இனிமையாகப் பழகும் நற்குணம்…, ஆச்சாரியரிடம் பணிவு…, தந்தை சொல் மறுக்காத தன்மை…, கற்றுக் கொள்ளும் பவ்யம்…, வீரம் காட்டும் தோள் வலிமை…, துணிவு…, தைரியம்…, தெளிவு…, அமைதி…, முடிவு எடுக்கும் உறுதி…, என்று எல்லா நற்குணங்களும்…, ராமரை வலிமையானவர் என்று காட்டுவதில் போட்டி போடுகின்றன….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2