வலிமை - பாகம் 5

மேகலா : கிழக்கிந்திய கம்பெனியர்களை எதிர்த்து, பாரத மக்கள், ‘மகாத்மா காந்தி’ என்ற ஒற்றை மனிதர் பின் அணி திரண்டதால் தானே, பாரதம் சுதந்திரம் பெற்றது... அவ்வை பிராட்டி சொன்ன, ‘ஒற்றுமை என்றும் பலமாம்’ என்ற ஆத்திசூடி பொன்மொழி எவ்வளவு அழுத்தமான உண்மை கிருஷ்ணா.... பெரிய பெரிய corporate company-களில், வேறு வேறு திசைகளில் படித்த இளைஞர்கள் தங்கள் திறமையை நிரூபித்து, வேலைக்கு சேர்கிறார்கள். இவர்களில், project எடுத்து செய்பவர்..., ஒரு குழுவாக உருவாகித்தான் project-ஐ செய்து முடிப்பார்கள். இவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். இந்த குழுவுக்கு ஒரு head இருப்பார். இவர் ‘team leader' என்று அழைக்கப்படுவார். குறிப்பிட்ட தினத்துக்குள் project-ஐ செய்து முடிக்க வேண்டும் என்று target நிர்ணயிக்கப்படும்... Group discussion என்ற முறையில் அவர்களுக்குள் கலந்து ஆலோசனை செய்து..., சிறந்த கருத்தை unanimous ஆக முடிவு செய்து, வெற்றிகரமாக project-ஐ செய்து முடிப்பார்கள். அப்போ, ஓர் அணியில் திரண்டாலும், கருத்து வேற்றுமைகளைக் களைந்து விட்டு, அதில், சிறப்பான project-க்குத் தேவையான முடிவினை, ஒருமனதாக தேர்ந்தெடுப்பது என்பது..., ஒரு செயல் உருவாவதற்கு வலுவான காரணமாகிறது. கருத்து ஒற்றுமை, வலிமைக்கு எவ்வளவு முக்கியமோ..., அதை விட, நம் கருத்து ஒத்துப் போகாவிட்டால் கூட, பெரும்பாலானோர்களின் (majority) ஒருமித்த கருத்தும், ஒத்துழைப்பும் வலுவான செயலுக்கு ரொம்ப முக்கியம். நிஜம் தானே கிருஷ்ணா....

கிருஷ்ணர் : நிச்சயமாக... Company project மட்டுமில்லை மேகலா.... ஒவ்வொரு செயலிலும், நம்ம கருத்து எடுபடாவிட்டால் கூட, அந்த செயல் வெற்றி பெறுவதற்கு எல்லோருடைய ஒத்துழைப்பும் அவசியம் தேவை..... வண்டி மாடுகள், வண்டியை இழுக்கும் போது, ஒரு மாடு சண்டித்தனம் பண்ணினால், வண்டி எப்படி இலக்கைச் சென்றடையும்....

மேகலா : அதானே.... ஒரு செயல் வலுப் பெறுவதற்கு, ஒருமித்த கருத்தும், ஒற்றுமையும் மிக அவசியம் தான்... அதே போல, trading-ல் alertness-ம், புத்திக் கூர்மையும் ரொம்ப அவசியம் என்றும் பார்த்தோம்... பல சந்தர்ப்பங்களில், புத்திசாலித்தனம் என்பது எவ்வளவு வலுவானது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். குஸ்தி, மல்யுத்தம் போன்ற உடல் வலுப்பெறும் கலைகளை கற்றுக் கொடுக்கும் ஒரு ஆசானிடம், ஒரு சாமான்யன் மல்யுத்தம் கற்க வந்தான். வந்தவனுக்கு, தான் கற்ற கலையனைத்தையும் கற்றுத் தந்தார் வாத்தியார்... வீரன், இளைஞன். குஸ்தியை வெகு சிரத்தையாகக் கற்றுக் கொண்டான். ஒரு காலக்கட்டத்தில், இளைஞன் எல்லக் கலைகளையும் கற்றுத் தெளிந்து, குஸ்தி வாத்தியாரை விட ஆற்றல் மிக்க மல்யுத்த வீரனானான்... அதனால், அவனுக்கு அகம்பாவம் ஏற்பட்டது.... திமிரினால், வாத்தியாரையே குஸ்திக்கு அழைத்தான். அதிர்ந்து போனார் வாத்தியார். குஸ்திக்கு கூப்பிட்டது மட்டுமல்ல... நடக்க இருக்கும் வீர விளையாட்டில் யார் ஜெயிக்கிறார்களோ..., அவரே குஸ்தி வாத்தியாராவார் என்றும் பந்தயம் வைக்கிறான். வாத்தியாருக்கு, வயது ஆகி விட்டதுதான். அதற்காக அவருடைய அறிவுக்குமா வயசாகி விட்டது.... தன் சிஷ்யனைத் தட்டிக் கொடுத்து, போட்டிக்குத் தயாரானார். ஆனால், ஒரு கையில் ஒரு அகப்பையும் இன்னொரு கையில் கேடயமும் வைத்துக் கொண்டார். சிஷ்யனோ குழம்பிப் போனான்... என்ன குருவே..., வித்தியாசமாக ‘அகப்பையும், கேடயமும்’ என்று கேட்டான். குரு சொன்னார், ‘எந்த ஒரு குருவும், தன்னிடம் கற்றுக் கொள்ள வரும் சிஷ்யனுக்கு பூரணமாக எல்லாக் கலையும் கற்றுத் தருவதில்லை. ஏன் தெரியுமா...? ஏதாவது ஒரு சமயத்தில் எதிர்த்து நிற்கும் துணிச்சல் வந்தால், அப்போ, ரகசிய முறை ஒன்றை பயன்படுத்தி எதிர்ப்பவரை வீழ்த்த வேண்டும்... குருவும், மாணவனும் என்றாலும்..., தானும் குருவாக வேண்டும் என்ற நினைப்பு, சிஷ்யனுக்கு வந்து விட்டால், கற்றுக் கொடுத்த இந்தக் கலையே நமக்கு எதிரியாகி விடும். என்னதான் பலசாலியாக இருந்தாலும், புத்திசாலித்தனமே நம்மைக் காப்பாற்றும் என்பதால், இந்தக் கலையை நான் உனக்குக் கற்றுத் தரவில்லை’ என்று சொன்னதும், சிஷ்யன், குருவின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான் கிருஷ்ணா...

கிருஷ்ணர் : ஓ! கதை நல்லா இருக்கு மேகலா... அசுர பலம் என்பது..., உடல் பலத்தை மட்டுமே சொல்வது கிடையாது... புத்தி பலம் சிறப்பானது. இந்த ’வலிமை’க்கு இன்னும் ஒரு சிறப்பு இருக்குது... அது என்ன தெரியுமா....?

மேகலா : வலிமைன்னாலே, சிறப்புதானே கிருஷ்ணா...?

கிருஷ்ணர் : சிறப்புதான்... ஒரு சாதாரண மனிதனுக்கு எப்படி ‘வலிமை’ பெருகுகிறது தெரியுமா.... ‘தைரியம்’ என்பது..., ஒரு விஷயத்தை, அல்லது ஒரு செயலை கற்றுக் கொள்ளும் போது, கொஞ்சம் கொஞ்சமாக நாமும் இதைச் செய்யலாம் என்று மனசுக்குள் உட்கார்ந்து வலுப் பெறும் அந்த செயல், முற்றிலும் அறியப் படும் போது, எதிரிகளின் சவாலை ஏற்றுக் கொள்ளும் தைரியம் வர ஆரம்பிக்கிறது. உண்மையைச் சொல்லணும்னா, ‘வலிமை’ என்ற வண்டிக்கு எஞ்ஜினே இந்த ‘தைரியம்’ தான். அப்புறம் என்ன..., தைரியம் வலுப் பெற்றதும், ‘வலிமை’, செயலை அட்டகாசமாய் செயல்படுத்தி விடும். அந்த செயலின் அற்புதத்தைப் பார்த்து..., உலகமே வியந்து பார்க்கும்... ‘ஏவுகணைகளின் தந்தை’ என்ற அடைமொழியை அடைவதற்கு, டாக்டர் கலாம், எத்தனை நிலைகளைக் கடந்து வந்திருக்கிறார். இன்று, இந்தியாவை ’வலிமையான நாடு’ என்று உலகமே வியந்து போற்றுகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் தைரியம், நேர்மை..., அதனாலே விளையும் ஆக்கபூர்வமான செயல்கள்..., அதனால் கிடைக்கும் பாராட்டுக்கள்.... வலிமையை மிளிரச் செய்யும், நம்முடைய பலத்தை உலகத்துக்கே எடுத்துக் காட்டும். இந்த வலிமை, அதர்மத்தைப் பார்த்து..., அநியாயத்தைப் பார்த்து, அச்சம் கொள்ளாது. அண்டை நாட்டுக்காரர்களின் அத்துமீறலை அடக்கி ஆளும். ஒரு நாட்டின் status, இப்பேர்ப்பட்ட நேர்மைத் திறன் கொண்ட ’வலிமை’யால் உயர்வு பெறும் மேகலா....

மேகலா : வாவ்! சூப்பர் கிருஷ்ணா.... என் கண் முன்னே..., டாக்டர் A. P. J. அப்துல் கலாம் அவர்களும், பாரதப் பிரதமர் Honorable நரேந்திர மோடி அவர்களுமே தெரிகிறார்கள் கிருஷ்ணா.... தைரியம் தான் வலிமைக்கு முதற்காரணம்... பல தடைகளைக் கடந்து ஜெயித்த வலிமையுடையவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையெல்லாம் நாம் பேசப் பேசத்தான் தெரிகிறது கிருஷ்ணா.... திருவள்ளுவர், வலிமைக்கு இன்னொரு முக்கிய பரிமாணத்தைக் காட்டுகிறார் கிருஷ்ணா....

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2