ஆளுமை - பாகம் 9
மேகலா : கிருஷ்ணா…, நாம் கடந்து வந்த பாதைகள், நம் மனதில் பட்டா போட்டு உட்கார்ந்து விடும் என்று சொன்னாயே…, அது great கிருஷ்ணா… இன்னும் ஒரு psychology இருக்கு கிருஷ்ணா… நம் மனசை முழுசாக ஆக்ரமித்தவர்கள், கோபப்பட்டால் கூட, அந்தக் கோபம் நம்மையும் தொற்றி விடும் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : எப்படிச் சொல்லுகிறாய்…
மேகலா : இப்போ…, அரசியலில் நாம் ரசிக்கும் ஒருவர்…, இவர்களால் நம்ம நாடு வளர்ச்சியுறும் என்று யாரை நம்புகிறோமோ…, அவர்கள் கோபப்பட்டு, எதிர்க்கட்சியினர் செய்த தவறை சுட்டிக் காட்டும் போது, அந்தக் கோபம் சாதாரணமாகவே நம்மையும் தொற்றிக் கொள்ளும் கிருஷ்ணா… அதிலும், சமீபத்தில், பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர், ஒரு protest-ல் பங்கு கொண்டு, காவல் அதிகாரியால் சிறை பிடிக்கப்பட்டு, காவலதிகாரியிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது பத்திரிகையாளர் ஒருவர், மாநிலத் தலைவரிடம், ‘உங்கள் போராட்டமே ஒரு நாடகம்’ என்று இன்னொரு தலைவர் சொல்கிறாரே’ என்று கேட்கிறார். அதற்கு, B. J. P. மாநிலத் தலைவர், ‘அவர் ‘work from home’ politics பண்ணுகிறார்… கோடிக் கணக்கில் ஊழல் நடந்து, அதை எதிர்த்து, முன்னாள் கவர்னர் முதற்கொண்டு, அடிமட்டத் தொண்டன் வரை, போலீசாரால் கைது பண்ணப்பட்டு துன்பப்படுகிறார்கள். இரவு 7 மணியாகி விட்டது. இன்னும் பெண்களை விடுவிக்கவில்லை… சாதாரணமாக, A. C. ரூமில் இட்கார்ந்து, twitter போட்டு, politics பண்ணுகிறவர்களுக்கு, களத்தில் நடக்கும் சம்பவத்தைப் பற்றி என்ன தெரியும்’ என்று நெருப்பாய் எரிந்து போனார். அவர் அப்படிப் பேசியதைக் கேட்ட எனக்கு மட்டுமல்ல, லட்சக்கணக்கானோர், B. J. P. மாநிலத்தலைவருக்காக கொந்தளித்து விட்டனர். இந்த ஆளுமை நெருப்பு, ஒரு நாளல்ல…, ஒரு வாரம் பற்றி எரிந்தது கிருஷ்ணா….
கிருஷ்ணர் : விடு மேகலா… எரியும் நெருப்பில், உண்மையான அக்கறை எது…, ச்சும்மா politics எது என்பது புரிந்து விடும்… நமக்குத் தேவை அதுதானே….
மேகலா : என்னமோ நீ சொல்ற… நீ பரம்பொருள்… சகலமும் அறிந்தவன்… வரப் போவதை முன்கூட்டியே கணிப்பவன். எனக்கு என்னவோ, நடக்கப் போவதை குறிப்பால சொல்றன்னு எடுத்துக்கிறேன்…
கிருஷ்ணர் : இப்போ…, நாம ஆளுமையைப் பற்றிப் பேசுறோமா…, அருள்வாக்கு சொல்றோமா…. தலைப்பின் track-க மாத்தாத…
மேகலா : Yes, boss…
கிருஷ்ணர் : நீ சொல்லும் போது தான் எனக்கு ஒண்ணு ஞாபகம் வருகிறது. ஆளுமையாளர்களின் கோபம், கேட்கும் நமக்குள்ளும் தீயாய் பரவும் என்பது ரொம்ப உண்மை மேகலா… பாரதியாரின் பாடல்களில், இந்தத் தீ, வாசிக்கும் நம்மையும் சுட்டு எரிக்கும்…
‘பாதகஞ் செய்பவரைக் கண்டால் நாம்
பயங்கொள்ளலாகாது பாப்பா!
மோதி மிதித்து விடு பாப்பா! – அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா! –
என்ற பாடலை வாசிக்கும் பொழுது, நமக்கும், பாதகம் செய்பவரைப் பார்த்து, முகத்திலே ‘கும்மு கும்முனு’ குத்தணும்னு தோணும்… அதே மாதிரி, ஒரு மழைப்பாட்டு கேட்டிருக்காயா… பாட்டை வாசிக்கும் போதே… கேட்கும் போதே, மழை ‘சோவென்று’ பெய்வது போலவே இருக்கும்… அந்தப் பாட்டு உனக்குத் தெரியுமா…
மேகலா : இதோ கிருஷ்ணா…
‘திக்குகள் எட்டும் சிதறி – தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்கமலைகள் உடைந்து – வெள்ளம்
பாயுது பாயுது பாயுது – தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம் – அண்டம்
சாயுது சாயுது சாயுது – பேய் கொண்டு
தக்கை யடிக்குது காற்று – தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட
தாம்தரிகிட…
கிருஷ்ணர் : என்ன சேலையைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய்…
மேகலா : காற்றும் மழையும் என்னை அலக்கழிப்பது மாதிரி தோணுது கிருஷ்ணா…
கிருஷ்ணர் : அதுதான் பாரதியாரின் ஆளுமை… ‘பாஞ்சாலி சபதத்தில்’, பீமன்,
‘எரிதழல் கொண்டு வா தம்பி
அண்ணன் கைகளை எரித்திட வேண்டும்’ –
என்ற வரிகளைப் படிக்கும் போது, சூதாடி தோற்ற தருமன் மீது நமக்கும் கோபம் வரும்… நிறைய புலவர்கள், பாடல்களில் கனிவையும், கருணையையும் காட்டினாலும், பாரதியார் நமக்குள் வைத்த அக்னிக்குஞ்சு,
‘அக்னிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காடிலோர் பொந்திடை
வைத்தேன்…
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்திற்குஞ்சென்று மூப்பென்று
உண்டோ….
நம்மையே எரித்து விடும் power இருக்கா…, இல்லையா….
மேகலா : பாரதியாரின் கனல் கக்கும் வரிகளைப் படித்த பின், அந்த வார்த்தைகளை விமர்சிக்கும் சக்தி எனக்கு கிடையாது கிருஷ்ணா…
(தொடரும்)
Comments
Post a Comment