கதை கதையாம் காரணமாம் - பாகம் 1
மேகலா : கிருஷ்ணா…, என்னைப் பார்க்க வர மாட்டியா கிருஷ்ணா… எனக்கு உங்கிட்ட பேசணும் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : அப்படியா…, என்ன பேசப் போற… வேற யாராவது, ஏதாவது தலைப்பு கொடுத்து, உன்னை கிறுகிறுக்க வச்சாங்களா….
மேகலா : ஐயோ கிருஷ்ணா…, அதெல்லாம் ஒண்ணுமில்ல… எனக்கு ஒரு ஆசை இருக்கு கிருஷ்ணா…
கிருஷ்ணர் : ஆசையா…; ஏதாவது சேலைக்கடைக்குப் போயி, சேலை எடுக்கணுமா… இல்லை…, பரோட்டா சாப்பிடணுமா…, இல்லை…, எங்காவது இமயமலையிலிருக்கும் கோயிலுக்குப் போகணுமா… என்ன ஆசை….
மேகலா : ஏன் கிருஷ்ணா…, பரோட்டா சாப்பிடுவதெற்கெல்லாம் உன்னைக் கூப்பிடுவனா… நானே செஞ்சு சாப்பிட்டுப் போறேன்… இமயமலையிலிருக்கும் கோயிலுக்குச் செல்ல நான் ஆசைப்பட்டாலும், என் வயது ஒத்துழைக்காது போல கிருஷ்ணா… இது, அதெல்லாம் இல்ல… இது வேற… எங்க…, நீ என் மனசுக்குள் குடியிருப்பவன்… என் ஆசை என்னன்னு சொல்லு பார்ப்போம்…
கிருஷ்ணர் : பேனாவும், diary-யுமாக வந்து உட்கார்ந்து, அசட்டுச் சிரிப்போட சொல்ற…, அதுவும் ஆசைப்பட்டது என்னன்னு கேக்குற… ஏதாவது exclusive topic-ல எழுதணும்னு ஆசைப்படுறியா….
மேகலா : ரொம்ப கிட்ட வந்துட்ட கிருஷ்ணா…
கிருஷ்ணர் : உனக்கு கதை சொல்லவும் ரொம்பப் பிடிக்கும்… இந்தக் கதையையெல்லாம்…, ஏன், எப்படி என்று ஆராயப் போகிறாயா….
மேகலா : Excellent கிருஷ்ணா… எனக்கு மிகவும் பிடித்த கதைகளை, காரண காரியத்தோடு விளக்கலாமா என்று ஆசைப்படுகிறேன் கிருஷ்ணா… நீ என்ன சொல்கிறாய்….
கிருஷ்ணர் : நல்ல விஷயம் தான்… என்னிடம் எதுவும் விளக்கம் வேணுமானாலும் கேள். எனக்குத் தெரிந்த வரையில் சொல்கிறேன்…
மேகலா : ரொம்ப thanks கிருஷ்ணா… நீயாக மனமுவந்து, என்னிடம் விளக்கம் கேட்டால் நான் விளக்குகிறேன் என்று சொன்னாயே… இதுவே எனக்கு நீ தரும் மிகப் பெரிய வரமாக நினைக்கிறேன் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : சரி…, ஆரம்பிக்கலாமா… முதல் கதை என்ன சொல்லப் போகிறாய்…
மேகலா : பிள்ளையார், முருகன் கதைதான் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : Super… பிள்ளையார் சுழி போட்டுட்ட…. அந்தப் பிள்ளையாரும், உன்னை வாழ்த்தட்டும்… முருகனும் உற்ற துணையாகட்டும்….
மேகலா : கிருஷ்ணா…, நம்ம புராணங்கள் சொல்லும் கதைகளை, மேலோட்டமாய் படிக்கும் போது…, ஏதோ மனிதர்களின் சாதாரண குடும்பங்களில் நடப்பது போல, அம்மா, அப்பா…, பிள்ளைகள்…, என்று சொல்வது போல தெரியும்… அது பலருக்கு நம்ப முடியாததாகக் கூட இருக்கலாம்… இல்லையென்றால்…, இவ்வளவுதான் உங்க கடவுளா என்று ஏளனம் செய்யக் கூடிய அளவில் கூட இருக்கலாம்… ஆனால், ஒரு முறையல்ல, இரு முறையல்ல…, பல முறை இந்தக் கதையை, நாம் பிறருக்கு எடுத்துச் சொல்ல, எடுத்துச் சொல்ல…, அந்தக் கதையில் ஒளிந்திருக்கும் தர்மம், சூரிய ஒளி போல வெளிப்படும்… கடவுளே…, இந்தத் தருணத்திற்குத்தான் காத்திருந்தது போல…, அந்த தர்மத்தை முழுதாக நமக்கு விளங்க வைத்து விடுவார்… இல்லையா, கிருஷ்ணா….
மேகலா : கிருஷ்ணா…, கதையை அப்படியே தமிழ் மக்கள் மனசுல பதிந்த படியே, திருவிளையாடல் படத்தில் சொல்லப்பட்டது போலவே சொல்லுகிறேன் கிருஷ்ணா….
(தொடரும்)
Comments
Post a Comment