பேச்சுத்தமிழ் - பாகம் 18 (நிறைவுப் பகுதி)

கிருஷ்ணர் : வாவ்! உங்க அம்மா எவ்வளவு அழகா உங்கள கணிச்சி வச்சிருக்காங்க… Correct-ஆ சொல்லியிருக்காங்களே….

மேகலா : நீ என்னை எப்படினாலும் கலாய்க்கலாம் கிருஷ்ணா… உனக்கு என் மேல் எத்தனை பிரியம் இருந்தா இப்படிச் சொல்லுவ… எங்க அம்மாவுக்கும் எங்க மேல ரொம்பப் பாசம் உண்டு… அவங்க மாதிரிதான் நீயும்…

கிருஷ்ணர் : என்னைய உங்க அம்மா மாதிரினு சொல்றயா… சொல்லிட்டுப் போ… ஆனா, பழமொழி ரொம்பப் பொருத்தமானது….

மேகலா : உன்னோட அன்பால், என்னை திக்குமுக்காடச் செய்து விட்டாய் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ‘திக்குமுக்காட’ன்னா என்ன…?

மேகலா : சந்தோஷத்துல, திகைப்படையச் செய்தல் கிருஷ்ணா…. சந்தோஷத்தை எப்படிச் சொல்லுவோம் தெரியுமா கிருஷ்ணா… ஆனா, இது பேச்சுத்தமிழ் கிடையாது… ‘திக்குமுக்காட’ன்னு சொன்னதால, மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : என்னம்மா இது… திடீரென்று சுத்தத்தமிழில் பேசி, என்னை திக்குமுக்காடச் செய்கிறாயா… இந்த சந்தோஷம், கோபம், திட்டு, வாழ்த்து, பெருமை, பாராட்டு…, என்ற ஒவ்வொரு உணர்வுக்கும்…, ‘இயல் தமிழை’ விட…, பேச்சுத்தமிழ், அதன் உணர்வை ரொம்ப அழகாக வெளிப்படுத்துகிறது… சொல்லப் போனால், நாட்டுப்புறப் பாடல்களும், பேச்சுத்தமிழில் இயல்பாக சொல்லப்பட்ட பழமொழிகளும், தமிழர்களின் பெருமை மிகு வாழ்க்க்கையைச் சொல்லுவதாக இருக்கிறது… ‘காத்துவாக்குல சேதி வந்தது’ – என்று தகவல் தொழில்நுட்பத்தைக் கூட அசால்டா சொல்லிட்டுப் போயிர்ராங்கல்ல… Open-ஆப் பார்க்கும் போது, வெள்ளந்தியான கிராமவாசியின் நக்கலான பேச்சு மாதிரி தெரிஞ்சாலும்…, ஒவ்வொரு பழமொழியும், அழகான கருத்தை எடுத்துச் சொல்லுது… ‘கரும்புக் காட்டுக்குள்ள ஆனை புகுந்த மாதிரி’…, ‘பூனைய மடியில கட்டிக்கிட்டு சகுனம் பார்த்த மாதிரி’..., அப்படீன்னு ஒரு வார்த்தையச் சொல்லி…, சம்பந்தப்பட்ட சூழ்நிலையின் தன்மையை விளக்குற கூர்த்த மதி…, பழமொழியைக் கேட்கும் ஒவ்வொரு பாமரனும், ‘ஓ…, அப்படியா’ – அப்படீன்னு easy-யாப் புரிஞ்சிக்கிற மாதிரின்னு சொல்வதற்கு, தன்னைச் சுற்றி நடப்பதை கூர்ந்து கவனிக்கும் அறிவு இருக்கணும்….

மேகலா : நெசந்தான் கிருஷ்ணா… நீ பேசுவதைப் பார்த்தால், நம்ம topic-அ முடிக்கப் போறயா கிருஷ்ணா…

கிருஷ்ணர் : சரி…, ஏதாவது கூட்டம் நடந்து முடிஞ்சா…, இல்ல…, கலவரம் நடந்து முடிஞ்சா…, நீ என்ன பண்ணுவ….

மேகலா : ‘துண்டக் காணோம்’…, ‘துணியக் காணோம்’னு ஓடியே போயிருவேன் கிருஷ்ணா… ஆமாம்…, கலவரம் நடந்ததுன்னு சொன்னயே… எங்க கிருஷ்ணா….

கிருஷ்ணர் : நீ பேசுனாலே…, கலவரம் தானே… அதான் சொன்னேன்… நானும் துண்டக் காணோம்…, துணியக் காணோம்னு ஓடிப் போகப் போறேன்… கூட்டம் முடிஞ்சி போச்சி…, கதையும் முடிஞ்சி போச்சி…, கத்தரிக்காயும் வெளஞ்சி போச்சி… போயி வெள்ளாமயப் பாரு… அடுத்த முறை வேற topic-ல பேசலாம்…, வரட்டா….

மேகலா : கிருஷ்ணா…, கிருஷ்ணா…, இதையே continue பண்ணுவோம் கிருஷ்ணா… எங்க போன கிருஷ்ணா…., கிருஷ்ணா….

(நிறைவு பெற்றது)

Comments

Popular posts from this blog

பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

பக்குவம் - பாகம் 8

ஆளுமை - பாகம் 5