கதை கதையாம் காரணமாம் - பாகம் 15

கிருஷ்ணர் : சரி…, ‘ஓம்’ என்ற மந்திரத்தின் அர்த்தத்தைப் பார்க்கலாம்… நான் உன்னிடம் ஒன்று கேட்கிறேன்… மனிதன், பேச முயற்சி செய்யும் போது எழுந்த ஒலி என்னவாக இருக்கும்….

மேகலா : கிருஷ்ணா…, மனிதன், குழந்தையாக பிறந்தவுடன்…, ‘ங்கா’, ‘ங்கா’ என்றுதானே ஒலி எழுப்பி அழுவான்…

கிருஷ்ணர் : நான் கேட்டது, குழந்தையின் முதல் சப்தம் என்ன என்று அல்ல… மனிதனாக வளர்ந்த பின்னே, ஏதாவது ஒரு உணர்வை வெளிப்படுத்த முயற்சி செய்வான் இல்லையா… அப்படி முயற்சி செய்யும் போது, எழுப்பும் முதல் ஒலி…, ஓ…, ஓம் என்றுதான் இருக்கும்… இது மனிதனின் உயிர் எழுப்பும் ஒலி… இதை படைத்தல் என்று வைத்துக் கொள்ளலாம்… அடுத்து, ‘ஓம்’ என்ற ஒலி வடிவத்தை, உன் மூச்சை நிறுத்தி ஒழுங்குபடுத்தி சொல்லிப்பார். அது உன் உயிரையும் ஒழுங்குபடுத்தும்… உன் மூச்சை நிறுத்தி சுத்தப்படுத்தவும் செய்யும். அதனால்தான், எந்த மந்திரம் சொல்லும் போதும், ‘ஓம்’ என்ற ஒலியை ஒலிக்கிறோம்… ‘ஓம் நமச்சிவாய’ என்னும் போது, ‘ஓம்’ என்ற மந்திரம், உன் மனதை சுத்தப்படுத்தி, சமநிலையில் வைத்து, ‘நமச்சிவாயம்’ என்று கணீரென்று ஒலிக்க உதவுகிறது… அது இறைவனின் காதில் விழுகிறது… ‘ஓம் நாராயண நமஹ!’, ‘ஓம் கணேசாய நமஹ’ என்ற நாமங்களை, ‘ஓம்’ என்ற மந்திரத்தை சேர்த்து சொல்லும் போது, நாமத்தின் புனிதம், மனசை சுத்தப்படுத்துகிறது. ‘ஓம்’ என்பது, காக்கும் தொழிலைப் பண்ணுகிறது…. யாகம் செய்யும் போது, ‘ஓம்’, ‘க்ரீம்’, ‘ஹ்ரீம்’ என்று உச்சரித்து யாகத்தை வளர்க்கிறார்கள். அந்த யாகத்தின் பலனாக, நல்லவர்கள் காக்கப்படுகிறார்கள்… தீமைகள் அழிக்கப்படுகின்றன. சத்ருநாசம் செய்வதற்கு ப்ரயோகிக்கும் மந்திரத்தில், ‘ஓம்’ மந்திரம், வலிமை கூட்டுகிறது. இதனால், தீமைகளை அழிக்கவும் மந்திரம் கையாளப்படுகிறது… மழைக்காக யாகம் செய்யப்படும் போது…, மந்திரத்தின் வலிமையால், மழை பெய்து வளம் பெறுகிறது. வறுமை ஒழிகிறது… ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரம், நம் உயிர் சக்தியில் கலந்து, படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று வேலைகளையும் செய்கிறது… மனிதன் எழுப்பிய முதல் ஒலியில், படைக்கும் கடவுள் பிரம்மாவும், காக்கும் கடவுள் விஷ்ணுவும், அழித்தலின் கடவுள் சிவபெருமானும் இருக்கிறார்கள் என்பது உண்மை… தியானம் செய்யும் போது, ‘ஓம்’ என்ற மந்திரத்தை உச்சரித்தால், மூளை அமைதியடைந்து, மனசு ஒருநிலைப்படுகிறது… பிரபஞ்சத்தின் முதல் ஒலி வடிவம். மனிதன் பேச முற்படும் போது, வெளிப்பட்ட முதல் ஒலி வடிவம். இதை உச்சரிக்கும் போது, மனம் அமைதியடைகிறது… அதனால் பரம்பொருளை நெருங்க முடிகிறது…. மொத்தத்தில், ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரம், பரம்பொருளின் ஒலி வடிவம் என்று நீ நினைத்தால்…, அதுதான் உண்மை…

மேகலா : அடேயப்பா…. எத்தனை அருமையான விளக்கத்தை எனக்கும் எடுத்துச் சொன்ன ஸ்ரீகிருஷ்ணருக்கு என் பணிவான வணக்கங்கள்…. கிருஷ்ணா…, எனக்கு ஒண்ணு தோணுது கிருஷ்ணா… தமிழில், ‘ஓம்’ என்ற சொல்லை சேர்த்துச் சொல்லும் போது, ஒரு positive எண்ணம் நமக்குள் தோணும் கிருஷ்ணா…. இணைவோம் – ஒற்றுமை; அறிவோம் – தெரிந்து கொள்ளுதல்; உழைப்போம் – உழைப்பு; வருவோம்…, வெல்வோம்…, என்று unanimous என்ற சித்தாந்தத்தை இந்த ‘ஓம்’ என்ற சொல், பலமாக பலருக்கு பாலமாக இணைக்கிறது என்று தோணுது கிருஷ்ணா. Correct-ஆ….

கிருஷ்ணர் : நீ சொல்லும் பொழுது, ஒற்றுமையின் பலமாக இந்த சொல் விளங்குவதை நான் பார்க்கிறேன். தமிழ் மொழியின் அழகே, ‘ஓம்’ என்ற சொல்லால், இன்னும் அழகாக மிளிர்கிறது என்றுதான் பார்க்கிறேன்….

மேகலா : Yes, Krishna…

கிருஷ்ணர் : சரி…, அடுத்த கதையைப் பார்க்கலாம்… கதையென்ன யோசித்திருக்கிறாய்….

மேகலா : ‘தர்மவியாதர்’ கதை கிருஷ்ணா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

கதை கதையாம் காரணமாம் - பாகம் 12

பக்குவம் - பாகம் 8