தலைமுறை இடைவெளி - பாகம் 1

மேகலா : Hi கிருஷ்ணா…,

கிருஷ்ணர் : என்னம்மா…, வந்துட்டியா… இன்னும் கொஞ்ச நாள் லீவ் எடுப்பன்னு நெனச்சேன்… சரி, ஏதாவது கொண்டு வந்திருக்கயா…

மேகலா : ஐயோ கிருஷ்ணா… எதுவும் எடுத்து வரலயே…

கிருஷ்ணர் : எழுதுவதற்கு தலைப்பு ஏதும் கொண்டு வந்திருக்கயான்னு கேட்டேன்…

மேகலா : ஆமாம் கிருஷ்ணா… சமீபத்தில் நிறைய சமயங்களில், நிறைய இடங்களில், ‘தலைமுறை இடைவெளி’ என்பது அப்பட்டமாகத் தெரிவதாகத் தோன்றியது கிருஷ்ணா… இதை ஏன் நாம் கிருஷ்ணரிடம் விளக்கம் கேட்கக் கூடாது என்று யோசித்தேன்… அதைத்தான் தலைப்பாகக் கொண்டு வந்துள்ளேன் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : நல்ல தலைப்பாக இருக்கிறது மேகலா… துவாபர யுகத்தில் வாழ்ந்த நாங்கள், கலியுகம் ஆரம்பமாவதை உணர்ந்தோம்… மக்களுக்கு தர்ம சிந்தனை, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது… தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டை என்பது போய், நல்லவனுக்கும் தீயவனுக்கும் சண்டை என்பது போய், பங்காளிகளுக்குள், அண்ணன் தம்பிகளுக்குள் சண்டையிடுவதைப் பார்க்க முடிந்தது… பரம்பொருளை நேரில் சந்தித்துப் பேசியது ஒரு காலம்… பரம்பொருளே நேரில் வந்து விஸ்வரூபம் காட்டினாலும்…, இது மாயை என்று சொல்லியது கலிகாலம்… நாத்திகம் பேசுவது இன்று சாதாரணமாகப் போயிற்று… இதெல்லாம், தலைமுறை இடைவெளிதானே… பேசலாம்; நிறைய பேசலாம்…

மேகலா : கிருஷ்ணா…, நீ சொல்லச் சொல்ல, எனக்கு நிறைய points மண்டையில ஓடுது கிருஷ்ணா…

கிருஷ்ணர் : சரி…, தெளிவா யோசித்து, கட்டுரைய நல்லா ஆரம்பி…

மேகலா : Okay கிருஷ்ணா…

கிருஷ்ணர் : சரி…, தலைமுறை இடைவெளியை எதில் பார்த்தாய்…

மேகலா : கிருஷ்ணா…, நிறைய பார்த்திருக்கிறேன் கிருஷ்ணா… இப்போ…, உலகம் digital மயமாகி விட்டது இல்லையா… வயசானவங்க, middle age people, இல்லத்தரசி, வேலை செய்வோர் என்று எல்லா தரப்பு மக்களுக்கும், இந்த smart phone, google, whatsapp, Amazon, Online purchase, Google Pay, PhonePe, Debit Card…, இதெல்லாம், அத்யாவசியமாகி விட்டது… இனி மேல், இந்த comforts இல்லாமல் மக்களால் வாழ முடியாது என்ற நிலை வந்து விட்டது… ஆனாலும், இந்த technology-யில், புதிதாய் ஒரு வசதி வரும் போது…, அல்லது 4G, 5G என்று launch பண்ணும் போது, முதியவர்கள் எதுவும் புரியாமல், ‘திருதிரு’ன்னு முழிப்பது சர்வ சாதாரணம்… எந்த ஒரு சமையலும் அசால்ட்டாக செய்து முடிக்கும், அல்லது இன்றைய சமுதாய நிகழ்விலிருந்து, ஆதி மனிதன் இயற்கையுடன் போராடிய போராட்டம் வரை எந்த தலைப்பு கொடுத்தாலும், சுவாரஸ்யமாக எழுதத் தெரிந்த எனக்கு, இந்த phone technologyங்கிறது, மலையைப் புரட்டும் சவால்தான்… கார்த்தியிடம் தான் doubt கேட்பேன்… அவன் என்ன சொல்வான் தெரியுமா…? ’இது கூடத் தெரியலயா ஐயாமா’ என்பான்…

கிருஷ்ணர் : ஹஹ்ஹா…, சரியா வச்சான் ஆப்பு….

மேகலா : என்ன கிருஷ்ணா சிரிக்கிற…

கிருஷ்ணர் : பின்னே என்ன… Phone-ல், settings column போய், அந்தந்த category-யில், press பண்ணா, என்ன solutionன்னு போட்டிருக்கப் போறான்…

மேகலா : இன்றைய தலைமுறைக்கு அது நல்லா புரியுது… நேற்றைய தலைமுறைக்கு, திருதிருன்னு முழிக்கத்தான் தெரியுது… நாம கற்ற கல்வி முழுசா…, கார்த்தியிடம் மண்டி போடுது கிருஷ்ணா…

கிருஷ்ணர் : இடைவெளி ரொம்ப பெருசா இருக்கே…

மேகலா : கிருஷ்ணா…, கிண்டல் பண்ணாத கிருஷ்ணா… ஏன் எனக்கு இந்த technology புரிய மாட்டேங்குது…

கிருஷ்ணர் : சரி…, இந்த technology புறக்கணிப்பு முடிஞ்சிருச்சா…, இன்னும் இருக்கா… மொத்தமா பதில் சொல்றேன்…

மேகலா : இருக்கு கிருஷ்ணா… இந்த internet connection, நிறைய smart phone, robot, laptop அப்படீன்னு எல்லா விஷயத்துலயும், பஞ்சாயத்து நாட்டாமை மாதிரி நடுவுல நின்னு அதிகாரம் பண்ணுது… எங்கிட்ட வீடு clean பண்ண, robot இருக்கு… அது…, washing machine மதிரி current -ல மட்டும் ஓடாது. Internet connection குடுத்து, அப்புறம் தான் ஓட்ட முடியும். சில சமயங்களில், internet-டோட, robot connection ஆகாது… அந்த மாதிரி சமயங்களில், எங்களுக்கு என்ன செஞ்சி, connection கொடுப்பதுன்னே புரியாது… இதை எனக்கு வாங்கிக் கொடுத்த துளசியிடம் தான் கொண்டு செல்வோம்… அவள், இதை அதை மாற்றிப் போட்டு, connect பண்ணிருவா… இந்தத் தலைமுறைக்கு, மாற்றிப் போட்டு, internet-ஐ விடாது துரத்திப் பிடிக்கத் தெரியுது. எனக்கு அவள், என்ன செய்றாங்கிறது கூட புரியாது… ஆனால், robot இல்லாம, என்னால இனிமே இயங்கக் கூட முடியாது… இதுக்கெல்லாம் என்ன காரணம் கிருஷ்ணா….?

(தொடரும்)

Comments

Popular posts from this blog

கதை கதையாம் காரணமாம் - பாகம் 12

கதை கதையாம் காரணமாம் - பாகம் 11

பேச்சுத்தமிழ் - பாகம் 5